சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 90 - வது நினைவு தினம். சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெரு குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் அனுஷ்டிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தவர் வ.உ.சி. வழக்கறிஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், எளிய மக்களுக்காகவும் நீதிக்கும் குரல் கொடுத்தவர். தேசிய இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு, பாலகங்காதர திலகரின் சீடராகவும் பிற்காலத்தில் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகக் களமிறங்கினார். இவ்வாறு போற்றப்படும் வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினம். இந்திய விடுதலைப் போரில் தன் இன்னுயிரையும் சொத்துக்களையும் நாட்டுக்காக அர்ப்பணித்த தியாகச் செம்மல், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஆவார். வள்ளியூர் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை 90 வது நினைவு நாள். அவரை நினைவு கூறுவோம். ஒரு நாட்டின் மிகப் பெரிய ஆயுதம் ஒற்றுமை ஒன்றே என்பதனை வலியுறுத்தும் விதமாக,
வ.உ.சி அவர்களின் 90 வது நினைவு தினம் முன்னிட்டு சேலம் தாதகாப்பட்டியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவு அஞ்சலியில் சீரங்கன் தெரு குடியிருப்போர் சங்க தலைவர் சேகோ. தாதை.ரவிகுமார், வ.உ.சி மக்கள் மன்றம் மணிகண்டன்,
நைனா சந்திரன், எல்.ஐ.சி. தனசேகரன்,
மக்கள் சிந்தனையாளர் மன்றம் O.S. கணேசன்,
இந்திய மக்கள் நற்பணி மன்றம் திருப்பதி,
உலக தமிழ் கழகம் சந்தோஷ், வாள் அறிவன்
காந்தி, காமராஜர் நற்பணி மன்றம் மான் பாண்டியன்,
மாநகர சிவாஜி சமூக நல பேரவை சிவாஜி, பிரபு
மற்றும் வெள்ளி ஜெகன்,
டி.பி.ஆர் பழனிசாமி
ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



0 coment rios: