திங்கள், 17 ஜூன், 2024

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள 100க்கும் பள்ளிவாசல்களில் மாவட்டம் முழுவதும் வசிக்கும் இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் முக்கிய மான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடைகளை அணிந்து மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதில், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில், ஈரோடு மாவட்ட காஜி முகம்மத் கிஃபயத்துல்லா தலைமையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஈரோடு பெரியார் நகரில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பெரிய மசூதி, காவேரி சாலையில் உள்ள கப்ரஸ்தான் மசூதி, புது மஜீத் வீதியில் உள்ள சுல்தான்பேட்டை மசூதி மற்றும் பெரிய அக்ர ஹாரம் தாவூதிய்யா மசூதி, காளைமாட்டு சிலை ஜாமியா மசூதி, காவேரி ரோடு ஜன்னத்பிர்தவ்ஸ் மசூதி, கிருஷ்ணம்பாளையம் ஆயிஷா மசூதி,ஓடை ப்பள்ளம் காமலிய்யா மசூதி, வெண்டிபாளையம் பிலால் மசூதி, கனிராவுத்தர்குளம் ஜாமியா மசூதி, திருநகர் காலனி, வளையக்கார வீதி, சாஸ்திரி நகர், வளையக்கார வீதி, சங்குநகர், நாடார்மேடு, புதுமை காலனி, மாணிக்கம்பாளையம், சம்பத்நகர், கே.ஏ.எஸ். நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

அந்தியூர் பர்கூர் சாலை யில் உள்ள மஜித் தேனூர்பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல் ஹமீத் தலைமையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலை சிறப்பு தொழுகை நடை பெற்றது

இதில் சுன்னத் ஜமாத் செயலாளர் ஷனவாஸ், கமிட்டி உறுப்பினர் கதர் ஹைதர் கான் மற்றும் சுன்னத் ஜமாத்தார்கள் பலர் கலந்து கொணடனர். இந்த தொழுகையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்பின்பு பள்ளிவாசல் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி கறி வழங்கப்பட்டது.

இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், பவானி, அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் 91 மசூதிகளிலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்ரீத் பண்டிகை ஒட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.18) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், கேசரிமங்கலம், பூதப்பாடி, குட்டைமுனியப்பன் கோவில், சிங்கம்பேட்டை, எஸ்.பி.கவுண்டனூர், கல்பாவி, காடப்பநல்லூர், சின்னப்பள்ளம், குறிச்சி மற்றும் ஆனந்தம்பாளையம்.

நஞ்சை ஊத்துக்குளி, செட்டிபாளையம் மின் பாதை :- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெரியசெட்டிபாளையம், சின்ன செட்டிபாளையம், நல்லம்மாள்நகர், பரணி கார்டன், சக்தி கார்டன், நொச்சிக்காட்டுவலசு, கருக்கம்பாளையம் வி.ஐ.பி. கார்டன் வரை, 46 புதூர் லட்சுமி கார்டன் வரை, செக்குமேடு, ஆனைக்கல்பாளையம், கரும்பாறை, செங்கரபாளையம் மற்றும் விநாயக கார்டன்.

பாசூர் மின் பாதை:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பாசூர், உத்தண்டிபாளையம், பச்சாம்பாளையம், வேங்கியம்பாளையம், முனியப்பம்பாளையம், பழனிகவுண்டம்பாளையம், சாக்கவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி.புதூர் மற்றும் மன்னாதம்பாளையம்.

கனகபுரம் மின் பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- செங்கோடம்பாளையம், பி.கணபதிபாளையம், குமாரவலசு, பெருமாபாளையம், கனகபுரம் மற்றும் வேலம்பாளையம்.

சென்னிபாளி, வடுகப்பட்டி மின் பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சென்னி பாளி, ஞானிபாளையம், அஞ்சுராம்பாளையம், ஊஞ்சப்பாளையம், சின்னதொட்டிபாளையம், தேவனாம்பாளையம், ராயபாளையம், உலகபுரம், மைலாடி, வெங்கிட்டியாம்பாளையம், பண்ணைகிணறு, வடுகபட்டி, உத்திரங்காட்டுபுதூர், ஆர்.கே.புதூர் மற்றும் அமராவதிபாளையம்.

கொளாநல்லி குடிநீர் மின் பாதை :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வள்ளியம்பாளையம், கொளாநல்லி, வெள்ளோட்டம்பரப்பு, கொம்பனை புதூர், ஜேடர்பாளையம் நீரேற்று நிலையம், சத்திரம்பட்டி, சத்திரம், கருவேலம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

மேட்டுக்கடை துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மேல்திண்டல், கீழ் திண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன்நகர், லட்சுமிகார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி, கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குபுதூர், எஸ்.எஸ்.பி.நகர் மற்றும் கருவில்பாறை குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு... விரைந்து முடிக்காவிட்டால் தனது தலைமையில்  போராட்டம் என எச்சரிக்கை.

சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு... விரைந்து முடிக்காவிட்டால் தனது தலைமையில் போராட்டம் என எச்சரிக்கை.

 
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிவதாபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்..... சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் எச்சரிக்கை. 

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட சிவதாபுரம் பகுதி சிறு மழை ஏற்பட்டாலும் மழைநீர் அந்த பகுதியில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், சிவதாபுரம் பகுதியை நேரில் மூழ்கும் நிலையில் இருந்து வருகிறது. மேலும் மழை நீரில் செல்லும் வாகனங்கள் மிதந்து தான் செல்ல வேண்டி இருக்கும். இப்படி வருடத்தில் நான்கு மாதங்கள் இந்த நிலையை தொடர்ந்து வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது வேட்பாளராக போட்டியிட்ட இரா. அருள் அவர்களிடம்  மழைநீர் செல்ல ஏதுவாக மழை நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தான் வெற்றி பெற்றவுடன் மழைநீர் கால்வாய் அமைத்து தருவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆடுகளாக சட்டமன்றத்தில் தொடர்ந்துவலியுறுத்தி, இரண்டு கட்டங்களாக செஞ்சிக்கோட்டை ஆறு கோடி ரூபாயும், சிவதாபுரம் பகுதிக்கு எட்டு கோடி ரூபாய் நிதியைப் பெற்று தந்து தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. 
நடைபெறும் பணிகள் அனைத்தும் தரமற்றதாகவும் காலதாமதமாகவும் நடைபெறுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.  அருள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, அதிகாரிகளிடமும் பேசி பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். செஞ்சி கோட்டை பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை செய்யவிடாமல் தடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஓடையை உறைந்து கையகப்படுத்தி தரவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடத்திலும் பேசினார். நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மழைக்காலம் தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் போராட்டத்தில் மக்களுடன் இணைந்து மேற்கொள்வேன் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு பணியின் போது, பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் சேகர், இளைஞர் சங்கத் துணைச் செயலாளர் சிவதாபுரம் அருண், பகுதி செயலாளர் அமையவேல், டிவிஷன் செயலாளர் குமார், கோவிந்தன், சஞ்சய், கார்த்தி ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஞாயிறு, 16 ஜூன், 2024

வளர்பிறை அஷ்டமியையொட்டி தென்னக காசி பைரவர் கோவிலில் மகாலட்சுமி யாகம்

வளர்பிறை அஷ்டமியையொட்டி தென்னக காசி பைரவர் கோவிலில் மகாலட்சுமி யாகம்

ஈரோடு அருகே உள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியில் மஹாலட்சுமி யாகம்... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.
வளர்பிறை அஷ்டமி தினமான இன்று கோவில் வளாகத்தில் மஹாலட்சுமி யாகம் நடைபெற்றது. அஷ்டமி மஹாலட்சுமி யாகத்தில் கலந்து கொண்டால் இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மூலவர் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பல்வேறு திரவியங்களால் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி கொலை

பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி கொலை

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் சேது வெங்கட்ராமன் (வயது 23). 12ம் வகுப்பு படித்துள்ள இவர் வெல்டிங் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார். பவானி செங்காடு கோட்டை நகரைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் மகன் லோகநாதன் (26). குமாரபாளையத்தில் தள்ளுவண்டி பீசா, பர்கர் கடை வைத்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சேது வெங்கட்ராமன்.

சேது வெங்கட்ராமன் பவானி காமராஜர் நகரைச் சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இந்த பெண்ணை லோகநாதன் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அவர் கேக் வெட்டிய படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் ஆக லோகநாதன் வைத்திருந்தார். இதைக் கண்ட சேது வெங்கட்ராமன், பவானி அரசு மருத்துவமனை அருகே வருமாறு லோகநாதனிடம் செல்போனில் கூறியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த இருவரும் காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதமாக மாறி, கைகலப்பாக மாறியது.

இதனால், ஆத்திரமடைந்த லோகநாதன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சேது வெங்கட்ராமனை குத்தியுள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் சேது வெங்கட்ராமனை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சேது வெங்கட்ராமன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பெயரில் பவானி போலீசார் வழக்கு பதிவு லோகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பவானி நகர பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதியில் தகன மேடை மற்றும் சுற்று சுவர் கட்டி கொடுத்த இரா. அருள்....

தொகுதி மேம்பாட்டு நிதியில் தகன மேடை மற்றும் சுற்று சுவர் கட்டி கொடுத்த இரா. அருள்....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மயான தகன மேடை மற்றும் சுற்றுச் சுவர்.... தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி கொடுத்த எம் எல் ஏ,. இரா. அருள்.சேலம் மாநகராட்சி 18 வது கோட்டம் காசக்காரனூர், 23-வது கோட்டத்திற்கு உட்பட்ட திருவாக்கவுண்டனூர் காசகாரனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மயானம் இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் பல்வேறு பிரச்சனைக்கு பிறகு வேடிக்கவுண்டர் காலனியில் உள்ள சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தகனமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. 
தற்போது பணிகள் முடிவடைந்து  இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. இதில்  அருள் எம். எல்.ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி தலைவர் கணேசன் திருவாகவுண்டனூர் ஊர் கவுண்டர் ராஜா, கணேசன்,காசக்காரனூர் ஊர் கவுண்டர் வேணு குமார்,அதிமுக 23வது கோட்ட செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கர்ணன்,பகுதி துணைத்தலைவர் தேவேந்திரன், அதிமுக முருகன், ராஜேந்திரன், சிவா, செந்தில், பாலு, ரகு, முருகன், வெள்ளி ரவி, செந்தில்குமார், ஜெயகோபால், ராஜா, குமார், வேலுமணி, பத்தாயிரம், கோவிந்தன், ஜெயகணேஷ், சந்திரன், ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் நாப்கின்களை கொண்டு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி உலக சாதனை

ஈரோட்டில் நாப்கின்களை கொண்டு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி உலக சாதனை

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு, பெமி-9 நடத்தும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படம் அமைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, மகப்பேறு மருத்துவர் டாக்டர் மகாலட்சுமி, ஈரோடு மற்றும் நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர் ஹேமலதா, வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மணியன் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில் குமரன் மற்றும் உள்பட பலர் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோட்டை சார்ந்த 100 தந்தையர்கள், 1000 சதுர அடியில், 3000 மாதவிடாய் சுகாதார நாப்கின்கள் வைத்து விழிப்புணர்வு உருவப்படத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு இடம் பிடித்ததை நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர்கள் முனைவர் சிட்டுகலா, ஜென்சிங் ஜோ மற்றும் வினோதினி ஆகியோர் மேற்பார்வையிட்டு உறுதிப்படுத்தினர்.

இந்நிகழுவுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர் ஹேமலதா ஆகியோர் நிறுவனத்தின் உரிமையாளர் முனைவர் கோமதிக்கு வழங்கினார். இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மகளிர்களுக்கு ஆண்களால் தந்தையர் தினத்தை முன்னிட்டு 5000 மாதவிடாய் சுகாதார நாப்கின்கள் பெமி நிறுவனம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

பெமி நிறுவனத்தின் உரிமையாளர் கோமதி இது பற்றி கறுகையில் ரசாயனம், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட நாப்கின் பயன்படுத்துவதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு மற்றும் குழந்தை இல்லாத பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் திருமணம் ஆன பெண்கள் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஆவதற்கான இடங்களை தேடி சென்று லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள்.

எனவே பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் இல்லாத இயற்கையாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை பெண்கள் பயன்படுத்த வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலந்த நாப்கின்கள் தயாரிக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றார்.