புதன், 19 ஜூன், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.20) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.20) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.20) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காம ராஜன் வீதி 1 முதல் 3, நேரு வீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி 1 முதல் 3, சாஸ்திரி சாலை 1, 2, ரயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரிய சடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதிபதிபாளையம், தொழிற்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம் பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், காந்திஜி சாலை, ஈவி என் சாலை, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜி நகர், ஜீவானந்தம் சாலை, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு மற்றும் பழைய ரயில் நிலையம்.

சிப்காட் -I துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர் மற்றும் மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்த மோசடி வழக்கில் 3 பேர் கைது

ஈரோட்டில் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்த மோசடி வழக்கில் 3 பேர் கைது

ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த 2023ல் ஈரோடு கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்த சண்முக ராமசாமி (வயது 72) என்பவரிடம் ரூ.3 கோடி கடனாக பெற்றார். 

இதற்கு ஈடாக தன்னிடம் மொடக்குறிச்சியில் இருந்த 9 ஏக்கர் 66 சென்ட் மற்றும் 95 சென்ட் நிலத்தை சண்முக ராமசாமிக்கு கிரயம் மற்றும் வெள்ளோடு கனகபுரத்தை சேர்ந்த சிவசம்பு (வயது 64) என்பவருக்கு பொது அதிகாரம் அளித்துள்ளார்.  துவக்கத்தில் வாங்கிய கடனுக்கு முறையாக ரத்தினசாமி கடன் செலுத்தினார். 

தேர்தல் நேரத்தில் சரிவர கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் 95 சென்ட் நிலத்தை சிவசம்புவின் மனைவி நாகேஸ்வரி மற்றும் சண்முக ராமசாமி பெயரில் கிரயம் செய்தது தெரியவந்தது. 

தன்னிடம் தெரிவிக்காமல் போலியாக வாழ்நாள் சான்று கொடுத்து கிரயம் செய்தது உறுதியானது. இதில் 30 சென்ட் நிலத்தை சக்தி கணேஷ், சண்முக ராமசாமி மகன் யோக மூர்த்தி பெயரில் கிரயம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ரத்தினசாமி,ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் அளித்தார். 

இப்புகாரை, தொடர்ந்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோசடி செய்ததாக சண்முக ராமசாமி, சிவ சம்பு, நாகேஸ்வரி, சக்தி கணேஷ், யோகமூர்த்தி, அவல் பூந்துறையை சேர்ந்த பத்திர எழுத்தர் சங்கர நாராயணன் உள்ளிட்ட 8 பேர் மீது ஏமாற்றி மோசடி செய்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதில், நேற்று சண்முக ராமசாமி, சிவசம்பு மற்றும் சங்க நாராயணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏமாற்றி மோசடி செய்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும்  தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைதான சங்கர நாராயணன் மீது ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு நிலுவை யில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 18 ஜூன், 2024

விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு: ஈரோடு ஆட்சியர் தகவல்

விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு: ஈரோடு ஆட்சியர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு, இணையதளம் வாயிலாக வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் தகுதியுடையவர்கள் ஆவார்.

கல்வித்தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது அதற்கு இணையான தொழிற்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஜூலை 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும், தகவல்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது 0424-2275860, 94990559431 என்ற எண்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபி அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோபி அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

 ஈரோடு மாவட்டம் கோபி கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை ஊராட்சி கரும்பாறை வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயத் தோட்டம் அருகே ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து, அங்கு தோட்டத்து வேலைக்கு வந்தவர்கள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், உயிரிழந்து கிடந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, உயிரிழந்த யானைக்கு சுமார் 12 வயது இருக்கும் எனத் தெரியவந்தது. 

மேலும், கரும்பாறை வனப்பகுதி அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் வாழை, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க மின்வேலி அமைந்திருந்தனர். அதில், யானை சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த யானையை உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பிறகே யானையின் உயிரிழப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 
ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது

ஈரோடு வி.வி.சி.ஆர்.நகர் 2வது வீதியில் உள்ள ஒரு காலி இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 3 வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 3 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களில் போலீசார் சோதனை நடத்தியபோது, அதில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக ஈரோடு பாலுசாமி வீதியைச் சேர்ந்த தண்டபாணி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 69½ கிலோ புகையிலை பொருட்களையும், பதுக்கலுக்கு பயன்படுத்திய 3 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், புகையிலை பொருட்கள் விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி காட்சி

ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி காட்சி

ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 49). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சாமியானா எனப்படும் பந்தல் அமைக்கும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி பந்தல் அமைக்கும் பணியினை முடித்துவிட்டு, கடைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஈரோடு நொச்சுக்காட்டுவலசு பகுதியில் வளைவில், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் மோதியதில், சசிகுமார் தூக்கி வீசப்பட்டார்.

இதனையடுத்து, அவர் படுகாயத்துடன் ஈரோடு தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல்துறையினர், சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிகுமார் மீது மோதிவிட்டு மர்மமான முறையில் மீண்டும் அதே அசுர வேகத்தில் சென்ற சென்னை பதிவெண் கொண்ட அந்தக் காரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.19) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு பாரதியார் நகர், வீரப்பம்பாளையம், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன்நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள்கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னைசத்யா நகர், முதலிதோட்டம், மல்லிநகர், ஈ.பி.பி.நகர், கந்தையன்தோட்டம், வி.ஜி.பி.நகர், தென்றல்நகர், பொன்னிநகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகர், ரோஜாநகர், அருள்வேலன்நகர் மற்றும் எஸ்.வி.ஆர். காலனி.

ஈரோடு தெற்கு கோட்ட சின்னியம்பாளையம், நகராட்சி நகர், அவல்பூந்துறை, தண்ணீர்பந்தல், பாரபாளையம், ஓலப்பாளையம், எம்.கே.புதூர் மின் பாதைகள்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வீரப்பம்பாளையம், நாதகவுண்டன்பாளையம், வாவிக்காட்டுவலசு, எல்லைநகர், ஆலாங்காட்டுவலசு, பாலுசாமிநகர், சி.எஸ்.ஐ.காலனி, போக்குவரத்துநகர், பேரேஜ்ரோடு, கிரீன் பார்க், ஜல்லகிருஷ்ணன் நகர், சோலார்புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, சுருக்கம்பாளையம், குதிரைப்பாளி, தீரன்நகர், 46 புதூர், அவல்பூந்துறை, செங்காட் டுவலசு, சோளிபாளையம், சுள்ளிக்காடு. கவசபாளி, உலகபுரம். எல்லக்கடை, குமாரவலசு, முத்தையன்வலசு, பாரக்காட் டுவலசு, விளக்கேத்தி, எல்லக்காட்டுபுதூர், ஞானபுரம், எலவநத்தம், வினோபாகிராமம், ஓலப்பாளையம், கூத்தம்பட்டி, நாச்சிவலக, குள்ளரங்கம்பாளையம், ஜெ.ஜெ.நகர், காசிபாளையம், ஊஞ்சலூர், கொல்லுக்காட்டுவலசு, தாமரைபாளை யம், பனப்பாளையம், ஆராம்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், கருக்கம்பாளையம் மற்றும் கொம்பனைபுதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.