திங்கள், 2 செப்டம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (3ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (3ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் கோபி துணை மின் நிலையத்தில் நாளை (3ம் தேதி) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோபி துணை மின் நிலையம்:- 

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- கோபி பேருந்து நிலைய பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன்கோவில், நாகதேவன்பாளையம், கொரவம்பாளையம், பழையூர், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உச்ச கட்ட பரபரப்பு

ஈரோட்டில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உச்ச கட்ட பரபரப்பு

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், விடுமுறை அளித்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 
ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்து பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியது.

2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவைச் சேர்ந்த போலீசார், அதிவிரைவு படை போலீசார் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பள்ளியில் 9 மணி நேரம் தீவிர சோதனை செய்தனர்.

பின்னர் அது புரளி என தெரிய வந்தது. இதன் பின்னரே ஆசிரியர்கள், பெற்றோர்கள் போலீசார் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை காலை மீண்டும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த விவரம், ஈரோடு, பூந்துறை ரோடு செட்டிபாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர். அப்போது மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு வந்து விட்டனர். அவர்களை உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றி அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதேபோல் ஆசிரியர்கள் , ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர்.

மேலும் மாணவ ,மாணவிகளின் பெற்றோர்களின் செல்போனுக்கு இது தொடர்பாக ஒரு குறுந்தகவலையும் அனுப்பினார். இதை பார்த்து பெற்றோர்கள் இன்று எதற்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று குழம்பியவாறு பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த பிறகு தான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன், டி.எஸ்.பி முத்துக்குமரன் ஆகியோர் தலைமையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு, கோவையிலிருந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் படையைச் சேர்ந்த போலீசார், அதிவிரைவு படை போலீசார் என நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பள்ளிக்குள் சென்று ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு வகுப்பறையாக அங்குல அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

தொடர்ந்து இச்சம்பவம் 2வது முறையாக ஈரோட்டில் நிகழ்ந்திருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம்

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம்

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம்

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவல்பூந்துறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவல்பூந்துறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டி . சச்சிதானந்தம், மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி, மாநில வழக்கறிஞர் அணி ராதாகிருஷ்ணன், மொடக்குறிச்சி தேர்தல் பார்வையாளர் தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா என்கிற ஆசைத்தம்பி கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார்.
இக்கூட்டத்தில் ஈரோடு எம்பி., பிரகாஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு விஜயகுமார், சென்னிமலை செங்கோட்டையன், பெருந்துறை கேபி.சாமி, சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், கொண்டசாமி, கதிர்வேல் மற்றும் பேரூர் செயலாளர்கள் அவல்பூந்துறை சாமியப்பன் என்கிற சண்முகசுந்தரம், மொடக்குறிச்சி சரவணன், அரச்சலூர் கோவிந்தசாமி, வடுகபட்டி விஸ்வநாதன் உள்ளிட்ட மாவட்ட மாநகர ஒன்றிய பேரூர் கழக அனைத்து நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் கூலி பிரச்சனையால் தகராறு: விசைத்தறி தொழிலாளியை கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி

ஈரோட்டில் கூலி பிரச்சனையால் தகராறு: விசைத்தறி தொழிலாளியை கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி

ஈரோட்டில் கூலி பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் விசைத்தறி தொழிலாளியை தலையில் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொத்துகார தோட்டம் பகுதியில் ஏராளமான விசைத்தறி பற்றையானது இயங்கி வருகிறது. அதே பகுதியில் நந்தகுமார் என்பவர் காமாட்சி அம்மன் டெக்ஸ் என்ற பெயரில் விசைத்தறி பட்டறை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பள்ளிபாளையத்தை சேர்ந்த தனியார் டெக்ஸ் (சிவன்) உரிமையாளர்களான குமார் மற்றும் அவரது மகன் விக்ரம் ஆகியோர் பாவு நூல்களை நெசவு செய்து தருவதற்காக நந்தகுமாரிடம் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று மாத காலமாக நந்தகுமார், தனியார் டெக்ஸ் உரிமையாளர் ,குமார் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு பாவு நூல்களை பெற்று நெசவு செய்து தந்துள்ளார்.

இந்நிலையில் நெசவு செய்ததற்கான 25000 ரூபாய் கூலியை நந்தகுமார் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் உரிமையாளர் குமார் மற்றும் அவரது மகன் விக்ரம் ஆகிய இருவரும் நந்தகுமாரிடம் நீங்கள் தான் எங்களுக்கு பணம் தர வேண்டி பாக்கி உள்ளது என்று கூறியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் நான் இனிமேல் உங்களுக்கு நெசவு செய்து தரமாட்டேன் நீங்கள் கொடுத்த பாவு நூல்களை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 
இதில் நந்தகுமார் மற்றும் விக்ரம் அவரது தந்தை குமார் ஆகிய இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் விக்ரம் மற்றும் அவரது தந்தை குமார் ஆட்களுடன் நந்தகுமாரின் விசைத்தறிப்பட்டறைக்கு சென்று மீதமுள்ள பாவு மற்றும் நூல் போன்ற பொருட்களை லோடு ஏத்தி உள்ளனர். பின்பு நெசவு செய்ததற்கான கூலியை நந்தகுமார் கேட்டுள்ளார், குமார் மற்றும் அவரது மகன் விக்ரம் நந்தகுமாரிடம் பணம் தர முடியாது என தகராறு ஈடுபட்டத்துடன் ஆபாசமாக பேசி,கொலை மிரட்டல் விடுத்ததாக நந்தகுமார் தரப்பில் கூறப்படுகிறது .

வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறி கையில் உள்ள கட்டையால் விக்ரம், நந்தகுமாரின் தலையில் பலமாக தாக்கி உள்ளார் இதில் நந்தகுமார் படுகாயம் அடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  
நந்தகுமாரை தாக்கும் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கூலி பிரச்சனையால் விசைத்தறி தொழிலாளி நந்தகுமாரை கட்டையால் தலையில் பலமாக தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நந்தகுமார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா மரணம் அடைந்ததை அடுத்து குடும்ப  நல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தொகையைமாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு முன்னிலையில் குடும்பத்தாருக்கு வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா மரணம் அடைந்ததை அடுத்து குடும்ப நல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தொகையைமாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு முன்னிலையில் குடும்பத்தாருக்கு வழங்கினார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா மரணம் அடைந்ததை அடுத்து 
குடும்ப  நல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தொகையை
மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு முன்னிலையில் குடும்பத்தாருக்கு வழங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா அவர்கள் சமீபத்தில் மறைந்தார்
இதனை அடுத்து அவர் குடும்பம் மிகவும் துண்பம் பட்டிருந்தது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தது இதனை அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்திரி. சேலத்தில் ஒருங்கிணைந்து மாவட்ட கூட்டத்திற்கு பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு அவர்களின் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா குடும்பத்தினரை மேடைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தார் 
அவர்களுக்கு மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி ஒரு லட்சம் ரூபாய் காண தொகையை வழங்கினார். இதை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் 50 ஆயிரம் ரூபாய் காண காசோலையும் வழங்கப்பட்டது. அவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியும் செய்வதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது . ஜங்ஷன் சிவா குடும்பத்தினர்
மாநகர மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி அவர்களுக்கும் மற்றும் துணைச் செயலாளர் வன்னியரசு அவர்களுக்கு 
ஜங்ஷன் சிவா குடும்பத்தினர்  சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
OCT-2, காந்தி பிறந்தநாள் அன்று விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது ஒழிப்புக்கு எதிரான பெண்கள் மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்வது. சேலத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தகவல்.

OCT-2, காந்தி பிறந்தநாள் அன்று விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது ஒழிப்புக்கு எதிரான பெண்கள் மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்வது. சேலத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தகவல்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

அக்டோபர் 2, காந்தி பிறந்தநாள் அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மாநாட்டில் 10 லட்சம் பெண்களை பங்கேற்க செய்வது.... சேலத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியிலன் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கூட்டத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தகவல். 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மகளிர் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஜான்சன் பேட்டை பகுதியில் உள்ள சுனில் மைத்ரா ஹாலில் நடைபெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகியும் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளருமான நாவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அனைவரும் குறிப்பாக காஜா மைதீன், மொழி அரசு உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் அவர்கள் அத்தனை பேரும் காந்தி பிறந்த நாளன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை பொருட்கள் எதிரான மாநாடு முழுக்க முழுக்க பெண்களை பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை வெளிப்படையாக தெளிவுபடுத்தினர். ஒரு சிலர் கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதையே தெரியாமல் தங்களது அரசியல் அனுபவத்தை கூட்டத்தில் பேசியது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. 
என்றாலும் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு நம்மிடையே கூறுகையில், கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று அதாவது விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை போன்று அவர்களது குடும்பத்தினர் தற்பொழுது வரை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் உட்பட நாடு முழுவதும் இனி இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தனது பிறந்தநாள் அன்று தெரிவித்த அக்டோபர் இரண்டு அதாவது காந்தி பிறந்தநாள் அன்று தமிழகத்தையே உலுக்கிய அந்த சம்பவத்திற்கு தொடர்புடைய கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான பெண்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெறும் கள்ளக்குறிச்சி பெண்கள் மாநாடு சிறப்பாக அமைய வேண்டும் என்றும் இதற்காக சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் 25 லட்சம் பெண்களை கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தில் முதலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றுள்ளது  என்றும், இனி தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்றும் வன்னியரசு தெரிவித்தார். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், செப்டம்பர் 1 இன்றை தமிழ்நாடு விடுதலை படை உடைய தோழர் தமிழரசன் உடைய நினைவு நாள். இந்த நினைவு நாளில் அவருக்கு மதத்தூவி விடுதலை சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா மரணம் அடைந்ததை அடுத்து 
குடும்ப  நல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தொகையை
மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு முன்னிலையில் குடும்பத்தாருக்கு வழங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சனி, 31 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் முன்னாள் ஆட்சியர்கள் சந்திப்பு

ஈரோட்டில் முன்னாள் ஆட்சியர்கள் சந்திப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் ஆட்சியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (31ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர்களாக இருந்தவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (31ம் தேதி) நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஒருங்கிணைத்து நடத்தினார். இதில், ஈரோடு மாவட்டத்தின் 7வது ஆட்சியர் ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி, 8வது ஆட்சியர் வி.கே.சுப்புராஜ், 9வது ஆட்சியர் ரா.கண்ணன், 32வது ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஆட்சியர்கள் தாங்கள் ஈரோட்டில் பணிபுரிந்த காலத்தை நினைவு கூர்ந்து, அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் சதீஸ் (வளர்ச்சி), ஈரோடு மாநகராட்சி ஆணையர் டாக்டர் மனிஷ், பயிற்சி ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, ஈரோடு மாநகரின் முக்கிய தொழில் அதிபர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, யு.ஆர்.சி.தேவராஜன், அக்னி எம்.சின்னசாமி மற்றும் ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.