சனி, 21 செப்டம்பர், 2024

புரட்டாசி முதல் சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு தங்க கவசம்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு தங்க கவசம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

புரட்டாசி முதல் சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு தங்க கவசம். 

தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி மாதம் திருவேங்கடமுடையானுக்கு உகந்த மாதம் ஆக கருதப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ் மாதங்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆனது என்று சேலம் அருகே உள்ள பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி முதல் வார சிறப்பு பூஜைகள் பக்த கோடிகள் ஆசீர்வாதத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
முதல் சனிக்கிழமையை  ஒட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உற்சவருக்கு மங்களப் பொருட்களைக் கொண்டு அதிகாலை முதலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் வெங்கடேச பெருமாள் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையில் பெரிய புதூர் சின்ன புதூர் அழகாபுரம் நான்கு ரோடு 5 ரோடு உள்ளிட்ட சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இது குறித்து திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் கூறுகையில் இரண்டாவது வாரம் சிறப்பு அலங்காரமும், மூன்றாவது வாரம் திருவேங்கடமுடியானுக்கு வைரமுடி தரிசனமும், நான்காவது வாரம் சிறப்பு அலங்காரம் அதை தொடர்ந்து ஐந்தாவது வாரம் கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளதாகவும், இந்த விழாக்களில் பக்த கோடிகள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சேலம் பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற இந்த முதல் சனிவார பூஜையில் டிரஸ்ட் நிர்வாகிகள், சிறப்பாக செய்திருந்தனர்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

ஈரோட்டில் வரும் 24ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் வரும் 24ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையத்துடன் இணைந்து சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற‌ 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அரங்கில் நடைபெற உள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் பின்வரும் கல்வி 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, தொழிற்பயிற்சி கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை வரை படித்துள்ள நபர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 94999-33475 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கோபி குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

கோபி குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைக்கு கடம்பூர் குன்றி, விளாங்கோம்பை, மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர் காட்டாறுகள் வழியாக அணையில் தேக்கி வைக்கப்படும்.
இந்த அணையில் மூலம் குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, இன்று (20ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர்.

இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் என்றும் வலது கரையில் 8 கன அடி தண்ணீரும் இடது கரையில் 16 கன அடி தண்ணீரும், 46 நாட்களில் 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டு மொத்தம் 36 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.