புதன், 2 அக்டோபர், 2024

மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் பேப்பர் கோன் விலையை 15 சதவீதம் உயர்த்த முடிவு சங்க கூட்டத்தில் தீர்மானம்

மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் பேப்பர் கோன் விலையை 15 சதவீதம் உயர்த்த முடிவு சங்க கூட்டத்தில் தீர்மானம்

நூற்பாலைகளுக்கு அத்தியாவசிய தேவையான 'பேப்பர் கோன்' மற் றும் ‘பேப்பர் டியூப்ஸ்' உற்பத்திக் கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து பேப்பர் கோன் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

இதுதொடர் பாக ஈரோட்டில் 'தி இன்டஸ்ட்ரி யல் பேப்பர் கோன்ஸ் அண்டு டியூப்ஸ் மேனுபேக்சர்ஸ் அசோசியேசன்' எனப்படும் பேப்பர் கோன் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் சங்கரநாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் பேப்பர் கோன் மற்றும் டியூப்ஸ் விலையை 15 சதவீதம் உயர்த்து வது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் குப்புசாமி கூறும்போது, 'ஈரோடு, நாமக்கல், சேலம், ராஜபாளையம், கோவை, தாராபுரம் பகுதிகளில் மொத்தம் 170 பேப்பர் கோன் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு தினசரி 15 லட்சம் கோன்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது 'பேப்பர் கோன்' செய்வதற்கான 'கிராப்ட்' காகிதத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம் 3 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணமும் பல மடங்கு உயர்ந் துள்ளதால், கோன் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர்.

 இவர்களின் வாழ்வாதாரத்துக்காக 'பேப்பர் கோன் மற்றும் பேப்பர் டியூப்' விலையை 15 சதவீதம் மட் டும் உயர்த்த வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகி உள்ளோம்' என் றார். முடிவில் பொருளாளர் திரு ஞானம் நன்றி கூறினார்.
சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் வாயிலாக நிவர்த்தி செய்து தரப்படும். சேலம் தளவாய்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா பேச்சு.

சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் வாயிலாக நிவர்த்தி செய்து தரப்படும். சேலம் தளவாய்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா பேச்சு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் வாயிலாக நிவர்த்தி செய்து தரப்படும். சேலம் தளவாய்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா பேச்சு. 

காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு சேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சேலம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் பெருந்தலைவர் திருமதி பூங்கொடி ராஜா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். தொடர் நடைபெற்ற கூட்டத்தில் தளவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்து பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தொடர் நடைபெற்ற கூட்டத்தில் தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகளை முன் வைத்தனர். 
குறிப்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தார் சாலை மேல்நிலை நீர் தேக்கு தொட்டி அமைப்பது உள்ளிட்ட பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று சேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் 2024 2025 ஆண்டிற்கான பல்வேறு திட்ட பணிகள் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு  எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகள் அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று தெரிவித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதனை நிவர்த்தி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பெருமையிடம் தெரிவித்த ராஜா, ஒவ்வொரு கூட்டத்திலும் சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குறை என்பதே சொல்ல முடியாத அளவிற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
இந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி செல்வம் ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.