சனி, 12 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 423 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 423 மி.மீ மழை பதிவு

தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் அணை, ஏரி மற்றும் குளங்களுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (12ம் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தமாக 423 மி.மீ மழையும், சராசரியாக 24.88 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 68.80 மீ.மீ மழையும், குறைந்தபட்சமாக பெருந்துறை, சென்னிமலை மற்றும் நம்பியூரில் 5 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாநகரில் 77 மி.மீ, மொடக்குறிச்சி 37 மி.மீ, கொடுமுடி 6 மி.மீ, பெருந்துறை 5 மி.மீ, சென்னிமலை 5 மி.மீ, பவானி 38 மி.மீ, கவுந்தப்பாடி 10 மி.மீ, அம்மாபேட்டை 58.40 மி.மீ, வரட்டுப்பள்ளம் அணை 68.80 மி.மீ, கோபிசெட்டிபாளையம் 14.20 மி.மீ, எலந்தகுட்டைமேடு 8.20 மி.மீ, கொடிவேரி அணை 15 மி.மீ, குண்டேரிப்பள்ளம் அணை 25.20 மி.மீ, நம்பியூர் 5 மி.மீ, சத்தியமங்கலம் 16 மி.மீ, பவானிசாகர் அணை 7.80 மி.மீ, தாளவாடி 26.40 மி.மீ மழை பதிவானது. 

வியாழன், 10 அக்டோபர், 2024

ஈரோடு: வாரிசு சான்றிதழ் தர ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

ஈரோடு: வாரிசு சான்றிதழ் தர ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் சீஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). இவர் தனது பெரிய மாமனாரின் இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வன் (வயது 37) என்பவரை அணுகி உள்ளார்.

அதற்கு, ருத்ரசெல்வன், வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தர முடியாது என ஆனந்தன் கூறியுள்ளார். பிறகு, ரூ.50 ஆயிரம் கொடுத்ததால் சான்றிதழ் வழங்குவதாக கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை ஆனந்தன் கடந்த 5ம் தேதி கொடுத்துள்ளார்.

பின்னர், மீதி பணத்தை பிறகு தருவதாக கூறிவிட்டு வந்துள்ளார். இந்த பணத்தை கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, போலீசார் ரசாயனம் தடவிய ரூ. 45 ஆயிரத்தை ஆனந்தனிடம் கொடுத்து அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, ஆனந்தன் மீதி ரூ.45 ஆயிரத்தை கொடுப்பதற்காக நேற்று (10ம் தேதி) ஆசனூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்றுள்ளார். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர், அவரிடம் இருந்த ரூ.45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, போலீசார் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
அந்தியூரில் 2 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூரில் 2 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூரில் 2 புதிய பேருந்துகளின் இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு ஏற்கனவே வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகளுக்கு மாற்றாக இரண்டு புதிய பேருந்துகளை இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அந்தியூர் பேருந்து நிலையத்தில் இன்று (10ம் தேதி) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொது மேலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். ஈரோடு மண்டல துணை மேலாளர் ஜெகதீஸ்வரன், அந்தியூர் கிளை மேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு 2 பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, அந்தியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையின அணி தலைவர் செபஸ்தியான், அமைப்புச் சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் நாகராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), குருசாமி (சங்கரா பாளையம்), மாறன் (கெட்டி சமுத்திரம்), முன்னாள் ஊராட்சி திமுக செயலாளர்கள் தர்மலிங்கம், ராமகிருஷ்ணன், பிரம்மதேசம் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளை ஆயுதபூஜை: ஈரோட்டில் பூக்கள்-பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

நாளை ஆயுதபூஜை: ஈரோட்டில் பூக்கள்-பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் பூக்கள் - பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுத பூஜை பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர், பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், மா, வாழை இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது.


ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் பழங்கள், வாழை தோரணங்கள் உள்ளிட்ட கடைகள் அதிகளவில் வைத்து இருந்தனர். இதேபோல், மா இலைகளை பலர் ரோட்டோரங்களில் விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனர். மேலும் கடை வீதி பகுதி ரோட்டோரங்களில் வியாபாரிகள் பொரி, கடலை மற்றும் வாழை தோரண கடைகளும் வைத்து இருந்தனர். இதனால் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. நேரம் செல்ல, செல்ல பொதுமக்கள் பலர் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி, பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.20-30க்கும், 100படி கொண்ட 1 மூட்டை பொரி ரூ.750-850க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை 1 கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.150-க்கும், அவுல் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மாநகரின் பல பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பழ கடைகள், பொரிகள் தான் அதிகளவில் தென்பட்டது. இதேபோல் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, சென்னிமலை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடை விதி பகுதிகளிலும் இன்று மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் வந்து இருந்தனர். இதனால், இன்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.


மேலும், ஈரோடு பேருந்து நிலைய பகுதியில் உள்ள மொத்த பூக்கடைகள் மற்றும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் அரளி, சம்பங்கி மற்றும் துளசி உள்ளிட்ட பூக்களின் விற்பனை வழக்கத்தை விட அதிகளவில் நடந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
ஈரோட்டில் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் முத்துசாமி


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பல்வேறு துறைகளின் சார்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (10ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மகளிர் திட்டம் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் நேரடிக் கடனுதவியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.13.04 லட்சம் மதிப்பீட்டில் திருமணம், கல்வி, ஓய்வூதியம், மரண நிவாரண நிதி உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கினார்.


தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை 8 பயனாளிகளுக்கு ரூ.3.56 லட்சம் மதிப்பீட்டில் வெங்காய சேமிப்பு கிடங்கு, தென்னை பரப்பு விரிவாக்கம், காய்கறி கல்பந்தல் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.37.96 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணைகளை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், வேளாண்மைப் பொறியியல் துறை 2 பயனாளிகளுக்கு ரூ.64 ஆயிரத்து 450 மதிப்பீட்டில் தீவன புல் வெட்டும் கருவிகளையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 1,742 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.


மேலும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த 32 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.96 ஆயிரம் மதிப்பீட்டில் பரிசு தொகையினையும் என மொத்தம் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் அவர் வழங்கினார்.


இவ்விழாவில், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ். என், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கஸ்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் இளங்கோ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தாட்கோ மேலாளர் அர்ஜுன், உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
சேலத்தில் நேற்று பெய்த கன மழையில் மழை நீரில் மூழ்கியது கந்தம்பட்டி பகுதி. மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

சேலத்தில் நேற்று பெய்த கன மழையில் மழை நீரில் மூழ்கியது கந்தம்பட்டி பகுதி. மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் நேற்று பெய்த கன மழையில் மழை நீரில் மூழ்கியது கந்தம்பட்டி பகுதி. மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

சேலத்தில் கடந்த சில நாட்களாகவே காலையில் வெயில் பாட்டி வதைப்பதும் இரவு நேரங்களில் கன மழை பெய்வதும் வாடிக்கையாகவே உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை வெப்பம் வாட்டி விதைத்த நிலையில் நேற்று இரவு திடீரென சுமார் 10 மணி அளவிற்கு கைய தொடங்கிய மழை கன மழையாக மாறியது. இதனை அடுத்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஏரி உடைந்து ஏரி நீர் ஊருக்குள் புகுந்தது. 
இதன் காரணமாக  நேற்று பெய்த கனமழை காரணத்தினாலும், ஏரி நீர் ஊருக்குள் புகுந்ததாலும்,  சிவதாபுரம் கந்தம்பட்டியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாலத்தில் மழை நீர் முழுவதும் நிரம்பி விட்டது.  நேரில் சென்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் வரவழைத்து ராட்சத மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியே எடுக்கும் நடவடிக்கை ஈடுபட்டார். முல்லை நகர் திருவா கவுண்டனூர் காமராஜர் காலனி புது ரோடு சேலதாம்பட்டி அழகாபுரம் பகுதியில் மழை நீர் புகுந்தது சேலம் மேற்கு தொகுதி இரா. அருள் எம் எல் ஏ பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம்  தகவல் கூறி உடனடியாக மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டார். தொடங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட பதிவு பொதுமக்கள் சில மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றது.

புதன், 9 அக்டோபர், 2024

வேட்டையின் திரைப்படம் திரையிடப்பட்ட சேலம் கௌரி திரையரங்கில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம். பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு கடை வெடிக்கும், கேக் மற்றும் கிடா வெட்டியும் உற்சாகம்.

வேட்டையின் திரைப்படம் திரையிடப்பட்ட சேலம் கௌரி திரையரங்கில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம். பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு கடை வெடிக்கும், கேக் மற்றும் கிடா வெட்டியும் உற்சாகம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வேட்டையின் திரைப்படம் திரையிடப்பட்ட சேலம் கௌரி திரையரங்கில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம். பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு கடை வெடிக்கும், கேக் மற்றும் கிடா வெட்டியும் உற்சாகம். 

தமிழகத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. 
குறிப்பாக சேலம் ஐந்து வருட பகுதியில் உள்ள கௌரி திரையரங்கில் வேட்டையன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. முன்னதாக இன்று காலை 5:00 மணி முதல் திரையரங்கம் முன்பு குவிந்த ரசிகர்கள் 7:00 மணி முதல் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கே கனகராஜ் தலைமையில் திரண்ட ரசிகர்கள், முதற்கட்டமாக திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனருக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  தொடர்ந்து, பேப்பர் வெடிகள் வெடித்தும் உற்சாகமாக நடனமிட்டும் மகிழ்ந்த ரசிகர்கள் வேட்டையின் திரைப்படம் வெற்றி பெறும் விதமாக கேக் வெட்டியும் கிடாவை வெற்றியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வேட்டையின் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் குறித்து பாரப்பட்டி கே. கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தலைவரின் திரைப்படம் தீபாவளிக்கு முன்னதாகவே திரையிடப்பட்டு தங்களது தற்பொழுது தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், உலகம் முழுவதும் இருந்து வரும் செய்திகள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று வருவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும் உலகம் முழுவதும் வேட்டையின் வேட்டையாடி வருவதாக தெரிவித்த கனகராஜ் இன்று திரையிடப்பட்ட திரைப்படத்தின் முதல் காட்சிகளில் 500 ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 
இந்த வெற்றி கொண்டாட்டத்தில், எஸ் கே கணேசன், சுக்கம்பட்டி பிரபு ஷங்கர் உட்பட ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.