திங்கள், 11 நவம்பர், 2024

ஈரோட்டில் நவ.15ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் நவ.15ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, இம்மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 86754 12356, 94990 55942 மின்னஞ்சல் முகவரி erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவரை தாக்கிய 20 மாணவர்கள்

ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவரை தாக்கிய 20 மாணவர்கள்

ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவரை 20 மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு சேனாபதிபாளையத்தில் மொடக்குறிச்சி எம்எல்ஏவுக்கு சொந்தமான தனியார் இயங்கி வருகிறது. அங்கு, ஈரோடு அசோகபுரத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அண்மையில் பள்ளி விடுதியில் சேர்ந்துள்ளார். 

இந்நிலையில், விடுதியில் படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் கூட்டாக சேர்ந்து அந்த 10 வகுப்பு மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அந்த மாணவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இச்சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து மாணவரை பார்க்க சென்ற பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவனை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், மாணவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

பின்னர், இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், விடுதியில் ராக்கிங் எதுவும் நடக்கவில்லை. மாணவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையிட்டுக் கொண்டதாகவும், இது தொடர்பாக 4 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. 

மேலும், இதுகுறித்து 10ம் வகுப்பு மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.12) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.12) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் கோபி, விஜயமங்கலம் மற்றும் புன்செய் புளியம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.12) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கீழ்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கோபி பேருந்து நிலைய பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சக்கவுண்டன் பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம், கொரவம்பாளையம்,பழையூர், பாரியூர், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம்.

விஜயமங்கலம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பெரியவீரசங்கிலி, பச்சாகவுண்டன்பாளையம், சின்ன வீரசங்கிலி, வைக்கோலபாளையம், வடமலை கவுண்டன் பாளையம், கினிப்பாளையம், கிரே நகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம்.

புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- புன்செய்புளியம்பட்டி, மாதம்பாளையம், நல்லூர், கள்ளிப்பாளையம், செல்லம்பாளையம், டாணாபுதூர், தாசம்பாளையம், ஆலத்தூர், ஆலாம்பாளையம், காராப்பாடி, பொன்னம்பாளையம், கணுவக்கரை, வெங்கநாயக்கன் பாளையம் மற்றும் ஆம்போதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் சிறந்த பள்ளிகளாக மாவட்டத்துக்கு 3 பள்ளிக்கூடங்கள் வீதம் 38 மாவட்டங்களிலும் மொத்தம் 114 பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை அருகே நத்தமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மொடக்குறிச்சி அருகே சாமிநாதபுரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறாக தேர்வு செய்யப்பட்ட 3 பள்ளிகளுக்கும் சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் வருகிற 14ம் தேதி நடக்கும் விழாவில் பாராட்டு கேடயம் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு

ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் 76 வணிக சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டமைப்பின் வெள்ளி விழா ஆண்டையொட்டி ஈரோடு நசியனூர் ரோடு வீரப் பம்பாளையம் விவேகானந்தா வீதியில் 2 மாடிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துரைசாமி. இயக்குனர் சாந்தி துரைசாமி ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேட்டியா சக்தி மசாலா அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கே.எஸ்.தென்னரசு அரங்கை முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 உணவு அரங்கத்தை ஈரோடு இந்து கல்வி நிலையத் தின் தாளாளர் கே.கே.பாலுசாமியும், வெள்ளி விழா ஆண்டு கூட்டரங்கை ஒளிரும் ஈரோடு தலைவர் எம்.சின்னசாமி, கூட்டமைப்பு அலுவலகத்தை எம்.சி.ஆர். நிர்வாக இயக்குனர் எம்.சி.ராபின் ஆகியோர் திறந்து வைத்தனர். 

கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடை வழங்கிய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் கூட்டமைப்பு நிர்வாகிகள். முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக இளைஞரணியில் 25 லட்சம் உறுப்பினர்கள்: ஈரோடு எம்பி பிரகாஷ்

திமுக இளைஞரணியில் 25 லட்சம் உறுப்பினர்கள்: ஈரோடு எம்பி பிரகாஷ்

திமுக இளைஞரணி மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற மாநில துணை செயலாளரும், ஈரோடு எம்பியுமான பிரகாஷ் கூறியதாவது, கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக உருவெடுத்துள்ளது. இங்கு 61 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.
 
இவை அனைத்திலும் வெற்றி உறுதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவற்றில் அமைச்சர் உதயநிதி போட்டியிட்டால் அனைத்து கொங்கு மண்டல இளைஞர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றார்.

விஜய் கட்சி பற்றிய கேள்விக்கு, சினிமா மோகத்தில் தான் போகின்றனர். திமுக இளைஞர் அணி மாநாடு சுமார் 25 லட்சம் பேரை ஈர்த்திருக்கிறது. எங்களது இலக்கு 50 லட்சத்தை தாண்டுவது. 

தமிழ்நாட்டில் புதிய கட்சிகள் முன்னெடுத்து வர முடியாது. திமுகவின் சாதனைகள் கிட்ட வர முடியாத அளவிற்கு உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மூலம் அறிவை வளர்க்கும் பணியை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 9 நவம்பர், 2024

இட ஒதுக்கீடு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டு பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

இட ஒதுக்கீடு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டு பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இட ஒதுக்கீடு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டு பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டு பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறிவுச்சங்கம் அமைப்பின் தலைவர் தமிழ் முதல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி மற்றும் மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் சார்ப் முரளி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் சமூக அதிகாரிகள் பதவி இறக்கம்  செய்யப்படுவதை பட்டியல் சமூகங்களின் இட ஒதுக்கீட்டை  பாதுகாக்கும் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
மேலும்  பட்டியல் சமூக முன்னேற்றம் உரிமை எனும் நோக்கில் இது மிக முக்கியமான போராட்டம் என்றும்  அரசின் ஊழியர்களானாலும் பட்டியல் சமூகமெனில் அவர்கள் பதவியால் உயர்ந்து விடக்கூடாது என்று  அரசாலேயே புறக்கணிக்கப்படுவதை உணர்த்தும், எதிர்க்கும் போராட்டம் என்றும் அரசு ஊழியர்கள் நலனுக்கானது என்பதைத் தாண்டி,  பட்டியல் சமூகத்தின் முன்னேற்றத்தின் அடிப்படையை உரிமையை வலியுறுத்தும் போராட்டம் என்றும் வலியுறுத்தப்பட்டது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் அமைப்பின் செயலாளர் செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவைச் சார்ந்த மணி உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் திரளானூர் கலந்து கொண்டனர்.