புதன், 4 டிசம்பர், 2024

சேலத்தில் காவல்துறையினரின் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச இந்து உரிமை மீட்பு குழுவினர் 250 பேர் கைது. சுமார் 100 பேர் மட்டுமே அமரக்கூடிய சிறிய அளவிலான மண்டபத்தில் 250 பேர் அடைக்கப்பட்டது மனித உரிமை மீறிய செயல் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

வங்கதேசத்தில் இந்துக்களையும் இந்து கோயில்களையும் பாதுகாக்க வலியுறுத்தி சேலம் மரவனேரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் முன்பு சேலம் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. காவல்துறையினரின் அனுமதி இன்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கதேச இந்து உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் சிவ காளிதாஸ் தலைமை தாங்கினார். 
ஆர் எஸ் எஸ் அமைப்பின் சேலம் கோட்டை அமைப்பாளர் காமராஜ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில்,  தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கண்டனகோசங்கள் எழுப்பினர். அனுமதி என்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் அனைவரையும் கைது செய்து சேலம் சின்ன திருப்பதி திருக்கோவில் தேவஸ்தான மண்டபத்தில் அடைத்தனர்.
சுமார் நூறு பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த சிறிய அளவிலான மண்டபத்தில் அனுமதி மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250 நபர்களை கைது செய்து அந்த சிறிய மண்டபத்தில் காவல்துறையினர் அடைத்தது வங்கதேச இந்து உரிமை மீட்பு குழுவினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் கழிப்பிட வசதி ஏதும் இல்லாமல் இருக்கும் அந்த தேவஸ்தான மண்டபத்தில் 250 நபர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டது எந்த விதத்தில் நியாயம் என்றும், இயற்கை உபாதைகள் கழிக்க கூட இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் ஒவ்வொருவரும் வெட்ட வெளியில் சென்று கழிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர். தற்பொழுது மழைக்காலம் என்பதால் தற்பொழுது சேலம் மாநகரம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பதும் ஒருவேளை மதிய உணவு காவல்துறையினரால் வழங்கப்படும் போது அந்த உணவினை 250 நபர்கள் இந்த சிறிய மண்டபத்தில் எப்படி அமர்ந்து உட்கொள்வது அது மட்டுமல்லாமல் போதிய இடம் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் பாதுகாப்பில் ஆங்காங்கே அமர்ந்திருப்பதாகவும் ஒருவேளை மலை குறிக்கும் பட்சத்தில் இந்த 250 நபர்களும் எப்படி இந்த சிறிய அளவிலான மண்டபத்தில் அமர்ந்து உணவை உட்கொள்ள முடியும் என்று கேள்வியையும் அவர்கள் எழுப்பி உள்ளதோடு, இது மனித உரிமை மீறிய செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். 
யார் பாட்டத்தில் பாஜக ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

செவ்வாய், 3 டிசம்பர், 2024

தமிழக முன்னாள் ஆளுனர் தோசையா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம். தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி.

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுனரும், ஆந்திராவின் முன்னாள் மாநில முதலமைச்சருமான ரோசய்யா தனது 88 வயதில், கடந்த 2021ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்தவர் ரோசய்யா. கடந்த  2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை ஆந்திர முதலமைச்சராகவும், அதுமட்டுமல்லாமல் கடந்த 2014ஆம் ஆண்டு கர்நாடக பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார். தனது எளிமையால் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டப்பட்ட  கோனிஜெட்டி ரோசையா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. 
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பில் அவருடைய நினைவு தினம் சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோவில் பகுதியில் நடைபெற்றது. தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் பேரவையின் நிறுவனரும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் டாக்டர் நாகா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோசையா அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.