புதன், 4 டிசம்பர், 2024

மாவீரர் திப்பு சுல்தானுக்கு சத்தியமங்கலத்தில் அரசு சார்பில் மணிமண்டபம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்

மாவீரர் திப்பு சுல்தானுக்கு சத்தியமங்கலத்தில் அரசு சார்பில் மணிமண்டபம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்

மாவீரர் திப்பு சுல்தானுக்கு சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் பிறை கொடி ஏற்று விழா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அஸ்கர் அலி தலைமையில் மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.முஹம்மது தாஜ் முஹைதீன் முன்னிலையில் நடைபெற்றது. 

கூட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் எடுத்துரைத்தார், மாவட்ட துணைத் தலைவர்கள் ஹாஜி சான் பாஷா, அலாவுதீன் சேட் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது கான், அசன்கான் மாவட்ட பொருளாளர் இ.கே.எம்.முஹம்மது கலில், விவசாய அணி, மாவட்ட செயலாளர் பெருந்துறை சான் பாஷா, எஸ்.டி.யூ மாவட்ட செயலாளர் சேக் தாவூத், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சத்தியமங்கலம் முஸ்தாக் அகமது, சத்தியமங்கலம் நகரத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்.

கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி விழா மற்றும் சமூக நல்லிணக்க விருது வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்த இயக்கத் தோழர்களுக்கும் மேலும் அதற்கு பொருளாதார உதவி செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட தலைமை அலுவலகம் மற்றும் காயிதே மில்லத் சேவை மையம் திறப்பு விழா எதிர்வரும் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ஏற்பாடு செய்வது எனவும்,அது சமயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகளை அழைத்து வக்ஃபு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது. 

 இந்நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவரும்,ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும்,தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே.நவாஸ் கனி எம்.பி அழைப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது, மாவட்ட அளவில் இயக்கத்தை பலப்படுத்தக்கூடிய நோக்கத்தில் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 11 நபர்கள் கொண்ட அமைப்புக்குழுவை நியமிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை நடைபெற்ற இயக்க கூட்டங்களிலும், கட்சியின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத மாவட்ட நிர்வாகிகளிடம் முறையான விளக்கம் கேட்டு இயக்கத்தின் எதிர்கால நலன் கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடி பார்போற்றும் சமூக நல்லிணக்க நாயகர் மாவீரர் திப்பு சுல்தானுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இக்கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை எடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியை மனு

தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியை மனு

வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை புகார் மனு அளித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகர்பாளையம், நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் பிரபா. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இன்று (டிச.4) புகார் மனு ஒன்றை அளித்தார். 

அந்த மனுவில், ஈரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் வி.எஸ்.முத்துராமசாமி என்பவர் கடந்த 16-11-2024 அன்று 100 அடியாட்களுடன், 3 லாரிகளில் வந்து, எனது வீட்டில் உள்ள பொருள்கள் மற்றும் நகைகளையும் எடுத்து சென்று விட்டார்.

அப்போது அதை தடுத்த எனது மகள் மற்றும் தாயாரையும் தாக்கியதுடன், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியும், தகாத வார்த்தைகளால் பேசினார். இதையடுத்து, நான் கோபி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். அதன்பேரில் காவல்துறையினர் முத்துராமசாமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், வழக்குப் பதிவு செய்து 17 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், முத்துராமசாமி இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்து எனக்கு தகுந்த நீதி வழங்கிட வேண்டும்.

மேலும், முத்துராமசாமி எடுத்துச் சென்ற எனக்கு சொந்தமான பொருள்களை மீட்டுத் தரவும், எங்களது குடும்பத்தினர் உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.
தனது மகன் தனுஷ் ராஜ் என்பவரை தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதோடு தன்னை பேசவிடாமல் தடுக்கும் பிரேமலதா மற்றும் சந்திரன் ஆகியோரிடம் இருந்து தனது மகனை மீட்டு தர வேண்டும். இளைஞரின் பெற்றோர் தமிழ்ச்செல்வி மற்றும் ஞானசேகரன் மற்றும் அவரது உறவினர்களுடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு.

தனது மகன் தனுஷ் ராஜ் என்பவரை தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதோடு தன்னை பேசவிடாமல் தடுக்கும் பிரேமலதா மற்றும் சந்திரன் ஆகியோரிடம் இருந்து தனது மகனை மீட்டு தர வேண்டும். இளைஞரின் பெற்றோர் தமிழ்ச்செல்வி மற்றும் ஞானசேகரன் மற்றும் அவரது உறவினர்களுடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தனது மகன் தனுஷ் ராஜ் என்பவரை தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதோடு தன்னை பேசவிடாமல் தடுக்கும் பிரேமலதா மற்றும் சந்திரன் ஆகியோரிடம் இருந்து தனது மகனை மீட்டு தர வேண்டும். இளைஞரின் பெற்றோர் தமிழ்ச்செல்வி மற்றும் ஞானசேகரன் மற்றும் அவரது உறவினர்களுடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எம்பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசேகரின் தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்கள் தனது உற்றார் உறவினர்கள் திரளானவர்களுடன் புகார் அளிப்பதற்காக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்திருந்தனர். அந்த புகார் மனுவில் இவர்களது மூத்த மகன் தனுஷ்ராஜ். இவரை அதே பகுதியைச் சேர்ந்த பிரேமலதா மற்றும் அவரது கணவர் தூண்டுதலின் பேரில், அதே போரை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர் என்று பிரேமலதா மற்றும் அவரது கணவர் சந்திரன் மற்றும் அவரது தம்பி சேட்டு ஆகியவர் சேர்ந்து பொய்யான புகார் செய்வதற்காக தனது மகன் தனுசுராஜை இவர்களே அடித்து அவனை காயப்படுத்தி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்றும் தகவல் அறிந்து தங்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தங்களது மகனை பார்க்க சென்றபோது கூட அவனிடம் பேச விடாமல் பிரேமலதாவும் அவரது கணவரும் தங்களை தடுத்து வருகின்றனர் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் தனது மகன் தங்களுக்கு வேண்டும் இது சம்பந்தமாக கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட பிரேமலதா மற்றும் அவரது கணவர் சந்திரன் ஆகியோர் மீது எடுக்கப்படவில்லை என்றும் எனவே சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தனது மகனை அவர்களிடமிருந்து காப்பாற்றி என்னுடன் ஒப்படைக்க வேண்டிய தனது மகனை கடத்தி வைத்து துன்புறுத்தியுள்ள பிரேமலதா, சந்திரன் மற்றும் சேட்டு ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 
இதே போல சம்பந்தப்பட்ட பிரேமலதா, சந்திரன் மற்றும் சேட்டு ஆகியோர் மீது எம் பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கடந்த 28ஆம் தேதி சேலம் வாழப்பாடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், தங்களது பகுதியைச் சேர்ந்த பிரேமலதா, சந்திரன் மற்றும் சேட்டு ஆகியோர் தங்களது ஊரில் உள்ள இளைஞர்களை சீரழிக்கும் வகையில் கஞ்சா விநியோகம் செய்து வருகிறார்கள் என்றும் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கஞ்சா பிடிப்பதை கண்டு எங்கள் ஊரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து தவறான பாதையில் செல்லும்  இளைஞர்களை தடுத்து நிறுத்தும் வகையில் சில வேலைகளை செய்ததால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட மூன்று பேர் சேர்ந்து வெளியூரைச் சார்ந்த இருபதுக்கு மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து எங்கள் ஊரில் உள்ள முத்து என்பவரை தாக்கி விட்டு அந்த ரவுடிகளிடம் கடுமையான இரும்பு ஆயுதம் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு இருந்த அவர்கள் கடுமையான தகாத வார்த்தைகளை திட்டியதோடு மட்டுமல்லாமல் எங்கள் ஊருக்குள் வந்தார்கள். ஊரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அந்த வெளியூர் ரவுடிகளை விரட்டி அடித்ததாகவும் இது சம்பந்தமாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் நல்ல முறையில் படித்து வளர வேண்டும் என்பதற்காக கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்தி எங்களை காக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்த அவர்கள் சம்பந்தப்பட்ட மூவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 
அதுமட்டுமல்லாமல் அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அங்கு படித்த இளைஞர்களின் தடை முடிகளை வெட்டி அவமானப்படுத்தியதோடு அவர்களை தாக்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டிற்கு திட்டவட்டமாக மறுத்த தனுஷின் தாயார், தங்களது அனுமதி யோடு மட்டுமே அவர்கள் தனது மகனின் தலை முடியை வெட்டினார்கள் என்றும் குறிப்பிட்டார். இதன் காரணமாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் சிறிது நேரம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது. 
கோபி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம்

கோபி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு கைதிகளை விசாரணைக்காக அழைத்து செல்ல சேலம் மாவட்ட போலீசார் 4 பேர் கோபி வந்துள்ளனர்.
பின்னர், கோபி கச்சேரிமேட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகளை அழைத்துக்கொண்டு சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற பாயிண்ட் டூ பாயிண்ட் அரசு பேருந்தில் போலீசார் ஏறி உள்ளனர்.

அப்போது, பேருந்தில் நடத்துநராக இருந்த கவுந்தப்பாடியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர், பேருந்து பாயிண்ட் டூ பாயிண்ட் என்பதால், 2 விசாரணை கைதிகளுக்கு மட்டும் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு கூறி உள்ளார்.

மேலும், இடையில் நிறுத்தம் இல்லாததால் சத்தியமங்கலத்தில் இருந்து கோபிக்கு வழங்கப்படும் முழு பயண சீட்டு மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேலம் மாவட்ட போலீசார் பேருந்து நடத்துநர் சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்து உள்ளனர்.

இதை தட்டி கேட்ட ஓட்டுநர் அசோக்கிடமும் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்குள் பேருந்து கோபி பேருந்து நிலையம் வரவே, மற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போலீசார் தகராறில் ஈடுபட்டது தெரிய வரவே ஆத்திரமடைந்த 15க்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் பேருந்து நிலையம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். கோபி பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தினால் சுமார் 15 நிமிடம் பயணிகள் அவதிப்பட்டனர்.
பவானியில் நாளை (டிச.5) முதல் டிச.8ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

பவானியில் நாளை (டிச.5) முதல் டிச.8ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள செல்லியாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (டிச.5) முதல் டிச.8ம் தேதி வரை பவானி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மேட்டூரில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பவானி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள புது பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும். கோயிலுக்கு வரும் 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

கோயிலுக்கு வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தேர் வீதியில் உள்ள கான்கிரீட் ரோட்டின் இடதுபுறமாக நிறுத்த வேண்டும். 4 சக்கர வாகனங்களை பண்டாரபுச்சி கோயில் முன்புறமுள்ள காலி இடத்தில் நிறுத்த வேண்டும்.

அந்தியூர் மற்றும் ஆப்பக்கூடல் சாலை வழியாக ஈரோடு, கோவை மற்றும் சேலம் செல்லும் அனைத்து வாகனங்களும் தளவாய்ப்பேட்டை வழியாக காளிங்கராயன்பாளையம் செல்ல வேண்டும்.

ஈரோடு, கோவை மற்றும் சேலம் ஆகிய ஊர்களில் இருந்து பவானி நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் குமாரபாளையத்தின் வழியாக பவானி நகருக்குள் வந்து மேட்டூர் ரோட்டில் செல்ல வேண்டும்.

கோயிலுக்கு வரும் 4 சக்கர வாகனங்கள் சங்கமேஸ்வரர் கோயில் ஆர்ச் வழியாக கோயில் வளாகத்திலும், மேலும், அதிகப்படியான வாகனங்கள் வந்தால்க காளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள காலி இடத்தில் நிறுத்த வேண்டும் என்று பவானி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 25 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து!

ஈரோட்டில் 25 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து!

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கடந்த மாதம் பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஆட்சியர் அலுவலகம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்றதாக 163 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 1,481 வழக்குகள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 87 வழக்குகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 263 பேர் மீது, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், வாகன உரிமையாளர்களுக்கு ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர். அதேசமயம், குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்வதற்காக போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி, கடந்த மாதத்தில் 25 பேரின் ஓட்டுநர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.