புதன், 18 டிசம்பர், 2024

சேலத்தில் ஆமை வேகத்தில் கூட நடைபெறாது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள். விரைந்து முடிக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என  அம்பேத்கர் மக்கள் இயக்கம் கடும் எச்சரிக்கை....

சேலத்தில் ஆமை வேகத்தில் கூட நடைபெறாது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள். விரைந்து முடிக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் கடும் எச்சரிக்கை....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் ஆமை வேகத்தில் கூட நடைபெறாது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள். விரைந்து முடிக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என  அம்பேத்கர் மக்கள் இயக்கம் கடும் எச்சரிக்கை....

சேலம் மாநகராட்சியின் 45 வது கோட்டத்திற்கு உட்பட்டது குகை நேரு நகர் மற்றும் காந்தி நகர். கடந்த 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தினால் குடியிருப்புகளை சரி செய்து தருமாறு குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியர் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளை காலி செய்து தருமாறும், புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 18 மாதங்களில் மீண்டும் அதே இடத்தில் அதே இடத்தில் மீண்டும் குடி அமர்த்த அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை எடுத்துக் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியிருப்புகளை காலி செய்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் வீட்டு மனைகளை குடியிருப்பு வாசிகள் ஒப்படைத்தனர். குடியிருப்புகளை காலி செய்து கொடுத்தும் 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை வேலை நிறைவு பெறாமல் ஆமை வேகத்தில் கூட நடைபெறாமல் இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளின் குற்றச்சாட்டாகவே உள்ளது. இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்த அனைத்து ஏழைகள் அதிலும் பெரும்பாலும் அருந்ததியர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் சேலம் மாநகரில் சாலை ஓரங்களில் செருப்பு விற்கும் தொழில் செய்பவர்கள் மேலும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவரும் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்த பொதுமக்களுடன் இணைந்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.டி.ஆர். சந்திரன், அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரதாபன்,  தமிழ்நாடு தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூ மொழி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் கூட நடைபெறாமல் இருக்கும் நேரு நகர் மற்றும் காந்திநகர் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைந்து கட்டி முடித்து ஏற்கனவே குடியிருந்த அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என் மனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இனியும் காலம் தாழ்த்தாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைந்து கட்டி முடிக்க தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் குடியிருப்பு வாசிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 17 டிசம்பர், 2024

முதல்வர் ஸ்டாலின் வரும் 19ல் ஈரோடு வருகை: 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்

முதல்வர் ஸ்டாலின் வரும் 19ல் ஈரோடு வருகை: 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்

ஈரோட்டில் வரும் 20ம் தேதி நடக்கும் அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள நிலையில், 19ம் தேதி மதியம் ஈரோடு வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற டிசம்பர் 19ம் தேதி, 20ம் தேதி என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, 19ம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் அங்கிருந்து சாலை வழியாக ஈரோட்டுக்கு வருகிறார்.
அங்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு அவர் ஈரோடு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 5 மணி அளவில் மேட்டுக்கடை பகுதியில் தங்கம் மகாலில் நடக்கும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

மாலை 6 மணி அளவில் திமுக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரக்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். இரவில் ஈரோடு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட 6 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிக்கு திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம், நான்கு வழிச் சாலையாக விரிவு படுத்தப்பட்ட வெளிவட்ட சுற்றுச்சாலை (ரிங்ரோடு), ஈரோடு வைராபாளையத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் உரக்கிடங்கு, சென்னிமலையில் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அதிகாரிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
தமிழக அரசின் சட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் உள்ள விழிப்புணர்வு நாடக நடன நிகழ்ச்சியில் பங்குபெறும் மேடை நடன கலைஞர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை, மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழக அரசின் சட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் உள்ள விழிப்புணர்வு நாடக நடன நிகழ்ச்சியில் பங்குபெறும் மேடை நடன கலைஞர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை, மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக அரசின் சட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் உள்ள விழிப்புணர்வு நாடக நடன நிகழ்ச்சியில் பங்குபெறும் மேடை நடன கலைஞர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை, மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம். 

தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்களும் அடச்சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் சேலம் கருங்கல்பட்டி பகுதியில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் விஜய், உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை நடன கலைஞர்கள் ஆகியோருக்கு காவல்துறையினிடம் இருந்து கிடைக்கப்பெற வேண்டிய முறையான அனுமதி பெற்றவுடன் நிகழ்வில் ஏற்படும் தங்களைப் போன்ற நடன கலைஞர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில், கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்,  சங்கத்தில் பயணிக்கும் உறுப்பினர்கள் திருவிழாக்களின் பொழுது பொதுமக்கள் முகம் சுளிக்காத வகையில் மேடை நடனம் ஆட வேண்டும்,, , தமிழக அரசு சட்ட திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் உள்ள விழிப்புணர்வு நாடக நடன நிகழ்ச்சியில் பங்கு பெறும் மேடை நடன நிகழ்ச்சியில் பங்கு பெரும் கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடன கலைஞர்கள் அவர்களுக்கு உண்டான குறைகளை உரிய லெட்டர் பேடு மூலம் ரப்பர் முத்திரையீட்டு நேரடியாக வழங்க வேண்டும்., , அந்த நகலை கலை பண்பாட்டுத்துறை மண்டல இயக்குனரிடமும் முதலமைச்சர் எண் தனிப்பிரிவு ஆகியோருக்கு முறையாக பதிவு தபால் மூலம் அனுப்பி அதற்கான ஒப்புதல் சீடை பெற்று பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.,
, கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்களும் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், நழிவடைந்து வரும் இதுப கிராமிய மேடை நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தற்பொழுது சேலத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றுமா அல்லது நிராகரிக்குமா காலம் பதில் சொல்லும்.

திங்கள், 16 டிசம்பர், 2024

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

16 வயது சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (எ) சிவா (22). இவர் சிப்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி, சித்தூரை பூர்விகமாக கொண்ட 16 வயது சிறுமி தன் பெற்றோருடன் ஈரோட்டில் வசித்தார்.

ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமியை தொடர்ந்து, பேசி பழக்கப்படுத்திய தங்கவேல் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, ஆசை வார்த்தை கூறி பைக்கில் கடத்திச் சென்று, ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருக்கும் நண்பரின் அண்ணன் வீட்டுக்கும் அழைத்துச் சென்று, அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீண்டும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், சாமி படத்தின் முன்பாக அந்தச் சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்.

இந்த நிலையில், சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2019, ஜூலை 14ம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த தங்கவேல் (எ) சிவாவை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் அளித்த தகவலில் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, அவர் சிறுமி என தெரிந்தும் அவருக்கு தாலி கட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, இறுதிக் கட்ட விசாரணை முடிந்து, ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், தங்கவேல் (எ) சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கறிஞர் ஜெயந்தி ஆஜரானார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு ஜனவரி இறுதியில் இடைத்தேர்தல்.?: 3வது முறையாக வாக்களிக்க தயாராகும் வாக்காளர்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு ஜனவரி இறுதியில் இடைத்தேர்தல்.?: 3வது முறையாக வாக்களிக்க தயாராகும் வாக்காளர்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையடுத்து அத்தொகுதிக்கு ஜனவரி இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14ம் தேதி காலை மரணம் அடைந்தார்.

அவரது மறைவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2வது முறையாக இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இன்னும் ஓரிரு வாரத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக முறைப்படி சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

டெல்லி சட்டசபை தேர்தல் ஜனவரி இறுதியில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான அறிவிப்பும் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம்: மத்திய அமைச்சரிடம் எம்பி மனு

ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம்: மத்திய அமைச்சரிடம் எம்பி மனு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள பர்கூர், கடம்பூர் மலைப்பகுதிகளில் மலையாளி இன மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் உறவினர்கள் சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி மாவட்டங்களில் உள்ளனர் . இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதர பிரிவில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இம்மக்களின் பண்பாடு, கலாச்சார பழக்க வழக்கங்கள் போன்றவை பிற மாவட்டங்களில் உள்ள மலையாளி மக்களையே ஒத்திருக்கின்றன. பெண் கொடுத்தல்-எடுத்தலும் இவர்களுக்குள் நிலவி வருகிறது. சென்னைப் பல்ககை்கழகத்தின் மாணுடவியல் துறை, உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் ஆகியவை இம்மக்களின் பண்பாடு-பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து இவர்களும் பழங்குடியினர் தான் என பல முறை அறிக்கைகளை அளித்துள்ளன.

இருந்தபோதிலும், ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்கள் இதர பிரிவில் உள்ளதால் இம்மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் பிபின்தங்கியுள்ளனர். பழங்குடியினருக்கான சலுகைகள் எதனையும் பெற முடிவதில்லை. ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமானால், மாநில அரசின் முன் மொழிவைப் பெற்று, மத்திய அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக தமிழ்நாடு அரசு பல முறை முன் மொழிவுகளை அனுப்பியும் மத்திய அரசு அதனை ஏற்று சட்ட திருத்தம் செய்யாமல் காலந்தாழ்த்தி வந்தது. கடந்த ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பலமுறை நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையைப் பற்றி பேசி அரசினை வலியுறுத்தி வந்தார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசும் ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மீண்டும் முன்மொழிவினை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

மத்திய அரசு அதனை ஏற்று சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் வைத்து சட்டத்திருத்தம் செய்யாமல், திரும்பவும் பல நியாயமற்ற சந்தேகங்களை எழுப்பி தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு வந்தது. இந்நிலையில், டெல்லியில் மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஸ்ரீ ஜுவல் ஓரம்-வை திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் நேரில் சந்தித்து, விரைவாக சட்டத் திருத்தத்தினை மேற்கொண்டு ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். மத்திய அமைச்சரும் விரைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் டிச.20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் டிச.20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிச.20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இம்காமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.