வெள்ளி, 28 மார்ச், 2025

சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இரு வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இரு வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இரு வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு வாரம் வாரம் வழங்கக்கூடிய ஊதியத்தை கடந்த ஆறு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை, மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணிகள் முடித்து பத்து மாதங்களாகியும் நிதி வழங்கப்படவில்லை. இதனால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களும் ஏழை எளிய மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  மத்திய அரசை கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சேலத்தை அடுத்துள்ள காரிப்பட்டி தபால் நிலைய முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மத்திய அரசால் தமிழக அரசுக்கு விளைவித்து வரும் துரோகங்கள் குறித்தும் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய அரசின் போக்கை குறித்து பட்டியலிட்டார். 
அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் இருந்து தேசியஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் திட்ட பணிகள் செய்த பணியாளர்கள் திட்ட பணிகளுக்கு செங்கல் சிமெண்ட் ஜல்லி கற்கள் எம் சென்ட் திட்டப் பணிகள் செய்து பணம் வழங்காமல் நிலுவையில் நடைபெற்ற இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட விவசாய அணியின் துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஒன்றிய துணை செயலாளர் ஹரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தின் விரைவில் மத்திய அரசு தங்களுக்கு கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் வஞ்சித்து வந்த நிலையிலும் தங்களது கஷ்டங்களை மறந்து 100 நாள் வேலைத்திட்ட கூலித் தொழிலாளர்கள் தங்களது சோகத்தை மறந்து நடனம் ஆடியது அந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. 
இதே போல சேலம் கிழக்கு மாவட்ட தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அயோத்தியாபட்டினம் திமுக ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் ஹரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் தீன தயாளன் மணி வெங்கடேஷ் குமார் பிரபாகரன் மணி அம்மாள் செந்தில் சகாயராஜ் மாசி நாயக்கன்பட்டி சங்கர் சுந்தர் ராமச்சந்திரன் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தியின் நெசவுக் கூலியை 10 சதவீதம் உயர்வு: முதலமைச்சருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து தீர்மானம்

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தியின் நெசவுக் கூலியை 10 சதவீதம் உயர்வு: முதலமைச்சருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து தீர்மானம்

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தியின் நெசவுக் கூலியை 10 சதவீதம் உயர்வு: முதலமைச்சருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து தீர்மானம்
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எல்கேஎம். சுரேஷ், செயலாளர் 
இரா.வேலுச்சாமி, பொருளாளர் கே.பாலசுப்பிரமணியம், மற்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

இக்கூட்டத்தில்,
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு (மார்ச் 18) செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில், நிதிநிலை அறிக்கையின் வரலாற்றில் முதல்முறையாக, விசைத்தறிக்கென நிதி ஒதுக்கியதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்த பொழுது, விலையில்லா வேட்டி சேலை ரகங்களுக்கு கூலி உயர்வு செய்து தர வேண்டி கோரிக்கை வைத்ததோடு, கைத்தறித்துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை முதன்மைச் செயலாளருடன், விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் 20 நிமிடங்களுக்கு மேல் நடத்தப்பட்ட ஆலோசனையில், 
விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்திக்கான, கூலி உயர்வை, நடப்பு நிதிநிலை அறிக்கையின், கைத்தறித்துறை மானிய கோரிக்கையில், அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்ததற்கு, இன்று கைத்தறித்துறை மானிய கோரிக்கையில், விலையில்லா வேஷ்டி உற்பத்திக்கான கூலியை 24 ரூபாயிலிருந்து 26.40 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கியதற்கும், சேலை உற்பத்திக்கான கூலியை ரூபாய் 43.01 இல் இருந்து 46.75 பைசாவாக உயர்த்தி வழங்கி பல லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு வழி வகுத்து கொடுத்ததற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கைத்தறி துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளர், கைத்தறித்துறை ஆணையர், மற்றும் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த செயல்பாட்டின் போது கூட்டமைப்பின் கோரிக்கையை அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் எடுத்துரைப்பதற்கு உறுதுணையாக இருந்த வீட்டு வசதி துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், செய்தி தொடர்பு துறை அமைச்சர், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெருந்துறை அருகே பள்ளி சிறுவன் மீது போக்சோ வழக்கு

பெருந்துறை அருகே பள்ளி சிறுவன் மீது போக்சோ வழக்கு

பெருந்துறை அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 17 வயது பள்ளி மாணவன் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில், 17 வயது சிறுவன் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் இருசக்கர வாகனத்தில் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காஞ்சிக்கோவில் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மேற்கு மலைப்பகுதி வேலம்பட்டி பகுதியில் தட்டகரை வனச்சரகர் ராமலிங்கம் தலைமையில் வனத்துறையினர் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் இருந்து புகை வந்தது.

உடனே அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் மரங்களுக்கு தீ வைத்து கொண்டிருந்தார். அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேவன் (வயது 38) என்பதும், விவசாயியான அவர் வனப்பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள மரங்களுக்கு தீ வைத்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவருக்கு 8½ ஆண்டு சிறை: ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவருக்கு 8½ ஆண்டு சிறை: ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவருக்கு 8½ ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 42). லாரி டிரைவரான இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2ம் தேதி பொது இடத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 37 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

மேலும் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை முடித்து, மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், குற்றவாளி தனபாலுக்கு மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அந்த பெண்ணை தாக்கியதற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், காயங்கள் ஏற்படுத்தியதற்கு 6 மாத சிறை தண்டனையும் என மொத்தம் 8½ ஆண்டு சிறை தண்டனையும், 3 பிரிவுகளிலும் அபராத தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 75 மனுக்கள்!

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 75 மனுக்கள்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28ம் தேதி) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 75 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (28ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2025 வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, நீர் வள ஆதாரத்துறையின் சார்பாக நிதிநிலை அறிக்கையில் ஈரோடு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரங்களை கோட்டம் வாரியாக எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வேளாண் விற்பனைக் குழுவின் செயல்பாடுகள், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு மற்றும் உலர் கலன் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து 75 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். முன்னதாக, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையின் சார்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், செயலாளர் மற்றும் துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி, தோட்டக்கலை உதவி இயக்குநர் நக்கீரன் உட்பட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் ரசாயனம் தெளித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 டன் வாழைத்தார்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரசாயனம் தெளித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 டன் வாழைத்தார்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரசாயனம் தெளித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 1 டன் வாழைத்தார்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி வணிக வளாகத்தில், செயற்கை முறையில் ரசாயனங்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார், எழில் ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.


இந்த ஆய்வின் போது, வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள், மாம்பழங்கள், மற்றும் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இடங்களில் இன்று (மார்ச் 28) அதிகாலை இரண்டு மணி முதல் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது, ரசாயனம் கலந்த கலவையை தெளித்து பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடை கொண்ட வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெண்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி உரக்கிடங்கில் அழிக்கப்பட்டது.


இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது, எந்த ஒரு ரசாயனத்தைக் கொண்டும் உணவுப் பொருட்கள் மீது படும் படி அல்லது தெளித்த வகையில் பழுக்க வைப்பது என்பது முற்றிலும் தவறானது.

இதனால் வயிற்றுக் கோளாறு, ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தற்போது தவறு புரிந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், மாவட்ட வருவாய் அலுவலர் முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ல் அபராதம் விதிக்கப்படும், மாவட்டம் முழுவதும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

மேலும், பழ குடோன்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் விரைவில் நடத்தப்படும். பொதுமக்கள் உணவு சம்பந்தப்பட்ட புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.