வியாழன், 17 ஏப்ரல், 2025

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம். 

அகவை 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கவனியீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யூப் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் முனியப்பன் உள்ளிட்டோர் முன்னில வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராகவன் மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் மாநில மகளிர் அணி அமைப்பாளர் பிரபாவதி ஒலித்து ஒரு கலந்து கொண்டு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 வழங்கிட வேண்டும் மற்றும் மருத்துவ படி ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் தனபால் மேனாள் மாவட்ட தலைவர் மாதவன் மேனன் பொதுச் செயலாளர் கோவிந்தராஜு உட்பட மாவட்ட நிர்வாகிகள் ஓய்வூதியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீர்த்தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீர்த்தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீர்த்தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடந்த 14 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தீ விபத்து இல்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் சேலம் அரசு மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் சிகிச்சையும் ஐயா வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஊழிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் சேலம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சிவகுமார் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர் கலந்து கொண்டு சமையல் செய்தவுடன் கேஸ் அடுப்பின் ரெகுலேட்டரை அனைத்து விட வேண்டும், ஆடையில் தீப்பிடித்துக் கொண்டால் ஓடாமல் நின்று கீழே படுத்து தரையில் உருளுங்கள் பின்னர் குளிர்ந்த நீரை தீக்காயங்களுக்கு ஊற்றுங்கள் மற்றும் பள்ளி நடக்கும்போது நுழைவு வாயில் கதவுகள் மற்றும் அவசர வழிகளை திறந்து வையுங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் வீட்டில் திடீரென தீப்பிடித்தால் அதாவது தீயினால் ஏற்படும் விபத்து, மின்சாரத்தால் ஏற்படும் விபத்து மற்றும் ஆயில் தீயினால் ஏற்படும் விபத்துகளில் இருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பனவற்றை தத்ரூபமாக அதற்கான உபகரணங்களை கொண்டு நிகழ்த்திக் காட்டியது அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு இருந்த அனைத்து நோயாளிகளின் உற்றார் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தீ விபத்து நிகழும் பொழுது மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவமனை காவலர்கள் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் மூலமாகவே நிகழ்த்தி காட்டியது அனைவரின் வரவேற்பினையும் பெற்றது.
இந்தி திணிப்பு, நிதிப்பதிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்யும் மத்திய அரசை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம்..

இந்தி திணிப்பு, நிதிப்பதிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்யும் மத்திய அரசை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம்..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இந்தி திணிப்பு, நிதிப்பதிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்யும் மத்திய அரசை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம்..

சேலம் கிழக்கு மாவட்ட திமுக ஏற்காடு ஒன்றியத்தின் சார்பில் நிதி ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி சீரமைப்பில் தமிழகத்திற்கு அநீதி விளைவிக்கும் மத்திய அரசை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு வரவேற்புரை ஆற்றிய இந்த பொதுக்கூட்டத்திற்கு, தலைமை கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத் மற்றும்கீர்த்திகா, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன், ஏற்காடு தொகுதி இளைஞர் அணி செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு மத்திய அரசு செய்து வரும் துரோகங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினர். 
மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அறிவிக்கப்படாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தற்பொழுது தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள திமுக அரசிற்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி, மாவட்டத் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார், சின்னதுரை, கோமதி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர் என்கின்ற சாமிநாதன் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன் மலர்விழி ராஜா சந்திரமோகன் சோமசுந்தரம் முத்துலிங்கம் கோபால் ராஜா வாழப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ்வரன், அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்னவேல் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் சிவராமன் ஏற்காடு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரூபன் ராஜேஷ்குமார் உட்பட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், ரமேஷ் பாரப்பட்டி மனோஜ் குமார் செல்வம் சுப்பிரமணி செல்வராஜ் கவிதா சக்கரவர்த்தி மற்றும் ஜெய செல்வி பாலாஜி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

புதன், 16 ஏப்ரல், 2025

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு!

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு!

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு திண்டல் வித்யா நகர் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் ஏப்ரல் 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 2013 ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பு பிறந்த பெண்கள் பங்கேற்கலாம்.
இதேபோல், 19 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு ஏப்ரல் 22ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், 2006 செப்டம்பர் 1ம் தேதிக்குப் பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.

இதில், பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் பிறப்புச் சான்று, ஆதார், சீருடை, ஷூ, விளையாட்டு உபகரணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு இணைச் செயலாளர் சண்முகசுந்தரத்தை 94437 28266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ரயிலில் அடிபட்டு மயில் பலி!

ஈரோட்டில் ரயிலில் அடிபட்டு மயில் பலி!

ஈரோடு ரயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், நேற்று மதியம் பெண் மயில் ஒன்று ஈரோடு ரயில் நிலைய பகுதியில் பறந்து சென்றது. அப்போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு மயில் இறந்தது.
இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் இதுகுறித்து ஈரோடு வனத்துறையினருக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் விரைந்து வந்து தண்டவாள பகுதியில் இறந்து கிடந்த மயிலை எடுத்து நடைமேடை பகுதியில் வைத்தனர்.

பின்னர், வனத்துறையினர் அங்கு வந்து, உரிய முறைப்படி அடக்கம் செய்வதற்காக மயிலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.
ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது!

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகளும், குழந்தைகளும் உள்ளனர். இவர் ஈரோட்டில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தார்.
அப்போது, ஈரோட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியை பிரேம்குமார் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம்குமாரை நேற்று கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை; 5 நாட்களில் ரூ.46.50 லட்சம்!

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை; 5 நாட்களில் ரூ.46.50 லட்சம்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் கடந்த 5 நாட்களில் ரூ.46.50 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது‌. இந்த கோவிலில் கடந்த 8ம் தேதி குண்டம் விழா நடைபெற்றது. 

இக்குண்டம் விழாவை தொடர்ந்து, மறுநாளான 9ம் தேதி கோவிலில் உள்ள 20 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ரூ.1.02 கோடி ரூபாய் ரொக்க பணம், 217 கிராம் தங்கம், 839 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மறு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 20 உண்டியல்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.46 லட்சத்து 50 ஆயிரத்து 291 ரூபாய் ரொக்க பணம், 57 கிராம் தங்கம், 479 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.