வியாழன், 17 ஏப்ரல், 2025

முதலமைச்சருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி

முதலமைச்சருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி

பொங்கல் 2026 விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணையை வழங்கி பல லட்சம் நெசவாளர்களுக்கு ஆறு மாத வேலை வாய்ப்பை உறுதி செய்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், கைத்தறி துறை அமைச்சரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அதிகாரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் விசைத்தறி நெசவாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் எல்.கே.எம் சுரேஷ் கூறியதாவது, அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளான, நூல் டெண்டர், நூல்களை டையிங் செய்யும் பணிகள் முதலியவற்றை, விரைவாக மேற்கொண்டு, மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் மாத முதல் வாரத்துக்குள், விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தியை துவங்குவதற்கும், கடந்த ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட வேஷ்டி மற்றும் சேலைகளை இந்த ஆண்டு உற்பத்திக்கான அளவீடுகளில் குறைக்காமல் ஒரு கோடியே 77 லட்சம் வேஷ்டி மற்றும் சேலைகளை முழுமையாக உற்பத்தி செய்ய வழி வகுத்து விசைத்தறி நெசவாளர்களுக்கு முழுமையாக ஆறு மாத கால வேலைவாய்ப்பை உறுதி செய்து தரவேண்டும் எனவும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம். 

அகவை 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கவனியீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யூப் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் முனியப்பன் உள்ளிட்டோர் முன்னில வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராகவன் மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் மாநில மகளிர் அணி அமைப்பாளர் பிரபாவதி ஒலித்து ஒரு கலந்து கொண்டு ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 வழங்கிட வேண்டும் மற்றும் மருத்துவ படி ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் தனபால் மேனாள் மாவட்ட தலைவர் மாதவன் மேனன் பொதுச் செயலாளர் கோவிந்தராஜு உட்பட மாவட்ட நிர்வாகிகள் ஓய்வூதியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.