திங்கள், 28 ஏப்ரல், 2025

ஈரோடு: சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி!

ஈரோடு: சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி!

சென்னிமலை அருகே சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டம் அம்மாபாளையம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன், இவரது மனைவி ராஜம்மாள் இவர்களது மகன் சீனிவாசன்.  இவர்கள் அனைவரும் நெசவு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே தனியார் நபர் பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஸ்பின்னிங் மில்லை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் செயல்பட துவங்கியது.

இங்கிருந்து வெளியேறும் பஞ்சு கழிவுகளால்,அருகில் வசிக்கும் இந்த குடும்பத்தாருக்கு மூச்சு திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை போன்றவர்கள் ஏற்பட்டதால் இந்த ஆலையை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு, இந்த ஸ்பின்னி மில் தொடர்பாக ஆய்வு நடத்தவேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர். 

பின்னர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்பின்னிங் மில்லில் ஆய்வு மேற்கொண்டு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று பாதிப்பு உள்ளது என்று தகவலை மாவட்ட நிர்வாகத்தில் வழங்கினர். 

இதனையெடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி அன்று ஸ்பின்னிங மில்லை மூட வேண்டும் என உத்தரவிட்டார்.  

இதனை பொருட்படுத்தாத ஸ்பின்னிங் மில் ஆலை உரிமையாளர் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் இரவு பகல் பார்க்காமல் 24 மணி நேரம் ஆலையை செயல்படுத்தி வருகிறார். 

இதனால் மீண்டும் தங்களுக்கு உடல் உபாதை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரான ராமநாதன்அவரது மனைவி ராஜமாள், மகன் சீனிவாசன் ஆகியோர் விஷம் அருந்தி தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்வதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில், அவர்கள் தடுக்கப்பட்டு முறைப்படி ஆட்சியரிடம், இது சம்பந்தமாக தெரிவித்து, அந்த ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் காமராசர் பேச்சுவார்த்தை நடத்தியதால், ராமநாதன் குடும்பத்தினர் திரும்பச் சென்றனர், இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைப்பிதழ்களை வழங்கிய பாமக மாணவர் சங்கத்தினர்.

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைப்பிதழ்களை வழங்கிய பாமக மாணவர் சங்கத்தினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு

மே 11 சித்திரைமுழுநிலவு. 
வன்னியர்இளைஞர்பெருவிழா
பாட்டாளி மக்கள் கட்சியினர் பிரச்சாரம்

வருகின்ற 11.5.2025 அன்று மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநாட்டு குழு தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையிலும்    பாமக நிறுவனர்  சமூகநீதி காவலர் மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்கள் சிறப்புரையிலும் நடைபெற இருக்கின்ற , பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் .சமூக  நீதி, சாதிவாரி கணக்கெடுப்பிற்கான  மாநாட்டிற்க்கு பெருந்திரளான பொதுமக்களை குடும்பத்தோடு பங்கேற்க செய்திட  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  அயோத்தியாபட்டணம் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வணிகர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்த கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்களுக்கு, பாட்டாளி மக்கள்கட்சின் மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா,சேலம்  வடக்குமாவட்ட துணைத் தலைவர் குமாரசாமி,நிர்வாகிகள் வெங்கடாசலம், கிருஷ்ணன், ராகுல்,சேட்டு ஆகியோர் அயோத்தியாபட்டணம் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வணிகர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்த கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்களுக்கு,  வழங்கி மாநாட்டின் நோக்கத்தை விளக்கி அழைத்தனர்.








ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

காஷ்மீர் பகல்கம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு SDCBA சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

காஷ்மீர் பகல்கம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு SDCBA சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

காஷ்மீர் பகல்கம் 
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு SDCBA சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி. 

காஷ்மிர் மாநிலம் பகல்கம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில்,
தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகை படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி தலைவர் இமயவரம்பன் உட்பட நிர்வாகிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் SDCBA நிர்வாகிகள் உட்பட குற்றவியல் வழக்கறிஞர்கள் என திராளானோர் கலந்து கொண்டனர்.