செவ்வாய், 6 மே, 2025

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழாவையொட்டி 108 பால்குட ஊர்வலம். அம்மனுக்கு விசேஷ  அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழாவையொட்டி 108 பால்குட ஊர்வலம். அம்மனுக்கு விசேஷ அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழாவையொட்டி 108 பால்குட ஊர்வலம். அம்மனுக்கு விசேஷ  அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆர்ய வைஸ்ய மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் ஜெயந்தி விழாவையொட்டி, ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்கார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சேலம் சின்ன கடைவீதியில் உள்ள ஸ்ரீ  வேணுகோபால சாமி திருக்கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் நிறுவனரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவருமான டாக்டர் நாகா. அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ய வைஸ்ய  பெண்கள் கலந்து கொண்ட இந்த பால்குட ஊர்வலத்தினை சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதா தேவி மற்றும் சின்னத்திரை நடிகை அர்ச்சனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். 
கடைவீதி மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் வழியாக அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தை அடைந்தது. தொடர்ந்து, மூலவரான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றன. இந்த ஜெயந்தி விழா சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டது மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இதனை அடுத்து விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை நிர்வாகிகளும் தேவஸ்தான நிர்வாகிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.
ஈரோட்டில் 1,072 தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு!

ஈரோட்டில் 1,072 தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு!

ஈரோடு பவளத்தான்பாளையத்தில் 1,072 தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையம், ஏஈடி பள்ளி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 103 பள்ளிகளைச் சேர்ந்த 1,072 வாகனங்களில் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. மேலும், இதில் குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் ஒரு வாரத்திற்குள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பதுவைநாதன் ஈரோடு மேற்கு (ம) ஈரோடு கிழக்கு (பொ), மாதவன் (பெருந்துறை), மோட்டர் வாகன ஆய்வாளர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு: தம்பதியை கொன்றவர்களை கைது செய்யாவிட்டால் சிவகிரியில் 20ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்; அண்ணாமலை அறிவிப்பு!

ஈரோடு: தம்பதியை கொன்றவர்களை கைது செய்யாவிட்டால் சிவகிரியில் 20ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்; அண்ணாமலை அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தம்பதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று மாலை சிவகிரியில் பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். 
அப்போது, அவர் கூறியதாவது, சிவகிரியில் நடந்திருப்பது கொலையல்ல மிருகங்கள் நடத்திய வேட்டை, கொலை செய்யப்பட்டவர்கள் யாரோ அல்ல. நம்முடைய தாய், தந்தை போன்றவர்கள். பாக்கியம்மாள் காதில் இருந்த கம்மலை அறுத்து எடுத்துள்ளார்கள். வளையல்களை பறிக்க கையை வெட்டியுள்ளனர். இதுபோன்ற கோர சம்பவங்கள் கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், குப்பிச்சிபாளையம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்று தொடர்கிறது. இதில் ஈடுபட்ட கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. பல்லடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டனர். அதை கண்டித்து பா.ஜனதா அப்போதே போராட்டம் நடத்தியது. இதுவரை கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை.

சிவகிரிக்கு இதுவரை பல நல்ல நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளேன். இப்போது வந்துள்ளது மனதை வருத்தமடைய செய்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட வயதான தம்பதியின் பேரன், பேத்திகள் சம்பவம் நடப்பதற்கு முதல்நாளில் கூட வந்து தாத்தா, பாட்டியுடன் விடுமுறையை கழித்துள்ளனர். இப்போது அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்வது?.

வருகிற 19ம் தேதிக்குள் அதாவது இன்னும் 2 வாரங்கள் தமிழக காவல்துறைக்கு அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதியை கொலை செய்தவர்களை கைது செய்யவேண்டும். இல்லை என்றால் 20ம் தேதி முதல் சிவகிரியில் எனது தலைமையில் பா.ஜனதா கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்.

தமிழக காவல்துறையால் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை என்றால் வழக்கை உடனே சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடவேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கை சி.பி.ஐ. நினைத்தால் எடுத்துக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. தி.மு.க. அரசு செந்தில்பாலாஜிக்காக இதில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. தற்போது தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்தால்தான் வழக்கை சி.பி.ஐ. வசம் கொண்டு செல்ல முடியும்.

கொங்கு மண்டல மக்கள் தமிழக போலீசார் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் விரைந்து கொலையாளிகளை பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் 20ம் தேதி நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி உண்ணாவிரதம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.
பவானியில் பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: முகத்தை தலையணையால் அழுத்தி கணவன் கொலை செய்தது அம்பலம்!

பவானியில் பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: முகத்தை தலையணையால் அழுத்தி கணவன் கொலை செய்தது அம்பலம்!

ஈரோடு மாவட்டம் பவானி கல்தொழிலாளர் 2-வது வீதியை சேர்ந்தவர் செல்வம் மகன் கார்த்தி (வயது 23). லாரி கிளீனர், இவர் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரபா (38) என்ப வரை காதலித்தார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்கள் 2 பேரும் பவானி மேற்கு தெரு 2வது வீதியில் வசித்து வந்தனர். திருமணத் துக்கு பின்னர் கார்த்தி கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த 3ம் தேதி இரவு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சூரிய பிரபாவை கார்த்தி தாக்கியதாக தெரிகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் காலை எழுந்திருக்காததால் சூரியபிரபாவை தூக்கிக்கொண்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கார்த்தி சென்று உள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சூரிய பிரபா இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். மேலும் சூரிய பிரபாவின் உடலில் காயங்கள் இருந்ததால் இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சூரிய பிரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்ததுடன், கார்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், கார்த்தி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு, சூரிய பிரபா என்னை விட 15 வயது அதிகமானவர். ஏற்கனவே திருமணமாகி அவர் விவாகரத்து செய்த வர். ஆனால் இதை மறைத்து என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் என் மீது சந்தேகப்பட்டு ஒவ்வொரு முறையும் என்னுடைய செல்போனை வாங்கி பார்ப்பார். அப்போது நான் பல பெண்களுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து தினமும் சண்டை போட்டு வந்தார். இதனால் ஆத்திரத்தில் மனைவியை தாக்கியதுடன், அவருடைய முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றியதுடன் கார்த்தியையும் கைது செய்தனர்.

திங்கள், 5 மே, 2025

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்!

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கத்திரிமலையில் மின் இணைப்பு வழங்குதல் மற்றும் சாலை தொடர்பு இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதிகள் அமைப்பது தொடர்பாகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிதாக அனுமதிக்கப்பட்ட சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது மற்றும் பிறப்பு, இறப்பு பதிவில் பெற்றோரின் ஆதார் விபரங்கள் மென்பொருளில் பதிவு செய்து இணைப்பது தொடர்பாகவும், பேரூராட்சிகள் துறை, வனத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஊராட்சிகளில் மின் கட்டண நிலுவையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஈரோடு-கரூர் சாலை அகலப்படுத்துதல் மற்றும் வெள்ளகோயில்-சங்ககிரி சாலை அகலப்படுத்துதல் தொடர்பாகவும் என பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.6) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.6) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.6) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (மே.6) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது