திங்கள், 21 செப்டம்பர், 2026

டெங்கு பரவலை கட்டுப்படுத்த சேலம் மாநகராட்சியில் தீவிர நடவடிக்கை. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்து பொருட்களும் தேவையான அளவில் உள்ளன. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தகவல்.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த சேலம் மாநகராட்சியில் தீவிர நடவடிக்கை. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்து பொருட்களும் தேவையான அளவில் உள்ளன. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தகவல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த சேலம் மாநகராட்சியில் தீவிர நடவடிக்கை. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்து பொருட்களும் தேவையான அளவில் உள்ளன. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தகவல்.

தமிழகத்தில் தற்போது அதி தீவிரமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 60 கோட்டங்களை  உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கூறுகையில், சேலம்  கார்ப்பரேஷன் சார்பா 200 பேர் டிபிசி பணியாளர்கள்  இருக்காங்க ஒரு நாளைக்கு ஒரு ஆள் 50 வீடு பாக்குறாங்க எதுக்கு காய்ச்சல் இருக்கா இல்லையா அப்படின்னு டெஸ்ட் பண்றதுக்கு ஒரு ஆள் அத நான் 200 பேர் நாங்க நியமித்திருக்கிறோம் அதுல ஒரு நாளைக்கு ஒரு ஆள் வந்து 50 வீடு பார்ப்பாங்க பார்த்துட்டு இருக்காங்க அது இல்லாம ஹாஸ்பிடல்ல தயார் நிலையில் டாக்டர்ஸ் இருக்காங்க. அடுத்து இந்த கொசு ஒழிப்புக்கு மருந்து அடிச்சிட்டு இருக்கோம் ஒவ்வொரு இடத்துக்கும் மருந்து அடிக்கிறோம், 
தற்பொழுது டெங்குவை கட்டுப்படுத்தும் விதமாக இப்ப கொஞ்சம் எக்ஸ்ட்ரா அடிக்கிறாங்க.  இன்னொன்னு என்னன்னா தண்ணி இப்ப வந்து நீங்கள் பாத்தீங்கன்னா தேங்கி இருக்கிற இடம் தண்ணி இருக்கும் இந்த தொட்டி அது மாதிரி இடமெல்லாம் ரப்பர் டயர் இந்த மாதிரி எல்லாம் தண்ணி தேங்கி இருக்கும் அதுக்கும் வந்து சரியான ஆள போட்டு பார்த்துட்டு இருக்கிறோம். அது எல்லா வகையிலுமே அது ப்ராப்பரா நடந்துட்டு இருக்குது.  டாக்டர்களும் தயார் நிலையில் இருக்கிறாங்க. மருந்தெல்லாம் எல்லா வகையிலும் இருக்கு பொதுமக்கள் வந்து கடைபிடிக்கிறது. நாள்தோறும் மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும்  50 வீட்டுக்கு போய் பாக்குறாங்க. 
ஒரு நாளைக்கு ஒரு நபர் மட்டும் 50 பேர் போய் பார்த்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் போதுமான விழிப்புணர்வு அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா. 1088 மாணவ மாணவிகளுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா. 1088 மாணவ மாணவிகளுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு.

சேலம், 
S.K.சுரேஷ்பாபு.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா. 1088 மாணவ மாணவிகளுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு.

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  ஐந்தாவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. சொ .வள்ளியப்பா அவர்கள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா, திரு.தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை காதர் நவாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் விஜய் ஆனந்த் அவர்கள் 2022-2025 ஆம்  கல்வியாண்டில் பயின்ற 1088 மாணவர்களுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது "மனிதனின் அறிவை வளர்த்து அவனுக்கு நல்ல ஒழுக்கத்தையும், திறமையையும் தந்து முழுமையான மனிதனாக மாற்றும் ஒரு அரும்பெரும் கருவி கல்வி ஆகும்" அந்த கல்வியை நன்முறையில் பயன்படுத்தி நல்சமுதாயத்தை உருவாக்க காத்திருக்கும்  மாணவர்களுக்கு வாழ்த்துகள் என வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல் மதிப்பெண் பெற்ற 6 மாணவர்களுக்கு தலா ரூ.10000/- இரண்டாம் இடம் பெற்ற 9  மாணவர்களுக்கு தலா ரூ.5000/- மூன்றாம் இடம் பெற்ற 6  மாணவர்களுக்கு தலா ரூ.4000/- மற்ற தர வரிசை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3000/-  என மொத்தம் ரூபாய் 2,25,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக அளவில்   உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் காட்சித்தொடர்பியல், உளவியல், கணக்கியல் மற்றும் நிதியியல், வணிகவியல், வணிக மேலாண்மை, ஆகிய துறை மாணவர்கள் என மொத்தம் 6 தங்கப்பதக்கங்கள்  பெற்று சாதனை படைத்தனர். தொடர்ந்து ஐந்தாவது முறையும் உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த மாணவர்கள் , காட்சித்தொடர்பியல்  மாணவர்கள்  தங்கப்பதக்கம் மற்றும் முதல் பத்து இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற 53  மாணவர்களுக்கு சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில்   தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் தர வரிசையில் இடம் பெற ஊன்றுகோலாய் இருந்த  துறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
2022-2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற  மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றதுடன் பட்டம் பெற்ற  மாணவர்களும் தனிச்சிறப்புடன் கூடிய முதல்நிலை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது போற்றுதலுக்குரியது. பட்டமளிப்பு விழாவின் நிறைவாக கல்லூரியின் முதல்வர் உறுதிமொழி வாசிக்க தாங்கள் கற்ற கல்வி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் என்றும் உறுதியுடன் செயல்படுவோம் என்று மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

சனி, 19 செப்டம்பர், 2026

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவித்து 18 நாட்கள் ஆகியும் அமல்படுத்தாத தமிழக அரசு. தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு  தமிழக விவசாயிகள் ஒருபோதும் காரணம் அல்ல. அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவித்து 18 நாட்கள் ஆகியும் அமல்படுத்தாத தமிழக அரசு. தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு தமிழக விவசாயிகள் ஒருபோதும் காரணம் அல்ல. அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவித்து 18 நாட்கள் ஆகியும் அமல்படுத்தாத தமிழக அரசு. தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு  தமிழக விவசாயிகள் ஒருபோதும் காரணம் அல்ல. அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை. 

தமிழக விவசாயிகளை பொருத்தவரை அவர்களுக்கு  நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் பல இருந்தாலும் கூட,  பால் மற்றும் எருமை பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்  என்பதும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றே. பால் உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பால் கொள்முதல் விலை உயர்வை அறிவித்தார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு 18 நாட்கள் ஆகியும் தற்போது வரை விவசாயிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பது தமிழக விவசாயிகளின் குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களின் குற்றச்சாட்டு. பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதாகவும், இது தொடர்பாக தங்களுக்கு எந்த விதமான உத்தரவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என்பது பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவு ஒன்றிய அதிகாரிகளின்  தகவலாக உள்ளது. ஆவின் ஒன்றியத்திற்கு பால் கொடுக்காமல் வெளியே சென்ற விவசாயிகளையும் மீண்டும் அழைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் தமிழகத்தில் தற்போது ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு விவசாயிகளாக ஆவின் ஒன்றியத்திற்கு பால் வழங்காமல் தனியாருக்கு பால் வினியோகித்தால் எதிர்காலத்தில் ஆவின் நிறுவனம் என்று ஒன்று இருந்ததே அழிந்து விடும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக விவசாயிகளின் கனவு திட்டமான பால் கொள்முதல் விலை உயர்வு என்பதனை 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது அறிவிப்பாகவே மட்டும் இல்லாமல் இதனை உடனடியாக செயல்படுத்த தமிழக முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பால் கொள்முதல் விலை உயர்வு கிடைக்கவில்லை என்பதால் தனியாருக்கு பால் உற்பத்தியாளர்கள் செல்வதை தடுக்க அதிகாரிகள் மட்டத்தில் ஒரு குழுவை அமைத்து ஆவின் நிறுவனத்திற்கு பால் வரத்தை  அதிகரிக்கவும், ஆவின் நிறுவனத்தை லாபகரமாக நடத்திடவும் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 
மேலும் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆவின் நிறுவனமும் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பால்வளத்துறை மூலமாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் இருப்பு வைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பொருத்தவரை உரிய நேரத்தில் உரிய காலகட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை அறிவித்து இருந்திருந்தால் இதுபோன்று பால் தட்டுப்பாடு வந்து இருக்காது.  விவசாயிகளிடம் கலந்து பேசி பால் கொள்முதல் விலை உயர்வை உயர்த்தாததால் தான் இந்த தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் தற்பொழுது நிலவுகிறது என்றும் உற்பத்தியாளர்களை பொறுத்த வரை எங்கு லாபம் கிடைக்கிறது அங்குதான் செல்வார்கள் என்றும் அரசு தான் இதற்கு முழு முதற் காரணம் என்றும் தமிழக விவசாயிகள் ஒருபோதும் காரணம் அல்ல என்றும் தனது செய்தி குறிப்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

வியாழன், 17 செப்டம்பர், 2026

 சேலம் குமரகிரி அருள்மிகு ஸ்ரீ பூரணி ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம் குமரகிரி அருள்மிகு ஸ்ரீ பூரணி ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

 
சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் குமரகிரி அருள்மிகு ஸ்ரீ பூரணி ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

எல்லாம் வல்ல 'உமையொருபாகன்' அருளால், சேலம் மாவட்டம் குமாரகிரி பைபாஸ் சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில், பக்தி, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் 'அம்மாபேட்டை ஊர் உடையார்' மற்றும் பிற சமுதாயத்தினரின் துணையோடு, வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களையும் அருளையும் வழங்கி நம் அனைவரையும் காத்து அருளும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மங்களகரமான ஸ்ரீ சுபமங்கள விநாயகர், ராகு, கேது மற்றும் மதிப்பிற்குரிய ஸ்ரீ பூரணி புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி திருக்கோயில், சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வேத சிவாகம முறைப்படி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தெய்வீக அருளாற்றல் திரட்டப்பட்டு இந்நிகழ்வு மங்களகரமான 'பராபவ' ஆண்டில் நடைபெற்றது. 
சஷ்டி திதி, அனுஷம் நட்சத்திரம் மற்றும் சித்த யோகம் கூடிய நன்னாளில், காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள், துலாம் லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி கடந்த 15ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்ய கவஜனம், பஞ்சகவ்யம், அனுமதி பெறுதல், ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி ஹோமம் நடைபெற்றன.
இரண்டாம் கால யாகவேள்வி, நாடிசந்தானம், திருவ்யாஹுதி, பூர்ணாஹுதி, விமான கோபுர கலசப் பிரதிஷ்டை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்த அருள்பாலிக்கும் ஸ்ரீ சுபமங்கள விநாயகர், ராகு, கேது சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாகவும் வெகு விமர்சையாகவும் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ பூரணி மற்றும் ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்ப சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மாணிக்கம், விஜயகுமார்,  சுரேஷ்குமார், பரமசிவம், டாக்டர்.மோகன்ராஜ், ஸ்ரீதரன், ஸ்ரீஷாந்த்,   அருணாசலம் உள்ளிட்டோர்  மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீர் கடை மடையான மயிலாடுதுறையை அடைந்தது. குருவை சாகுபடி பொய்த்த நிலையில் 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது போதுமானதாக இருக்காது என்பதால், காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகாவிடம் முறையாக பேசி தமிழக முதலமைச்சர் பெற்று தர வேண்டும். மயிலாடுதுறையில் காவிரி நீரை வரவேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை....

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீர் கடை மடையான மயிலாடுதுறையை அடைந்தது. குருவை சாகுபடி பொய்த்த நிலையில் 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது போதுமானதாக இருக்காது என்பதால், காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகாவிடம் முறையாக பேசி தமிழக முதலமைச்சர் பெற்று தர வேண்டும். மயிலாடுதுறையில் காவிரி நீரை வரவேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை....

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீர் கடை மடையான மயிலாடுதுறையை அடைந்தது. குருவை சாகுபடி பொய்த்த நிலையில் 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது போதுமானதாக இருக்காது என்பதால், காவிரி பங்கீட்டு நீரை கர்நாடகாவிடம் முறையாக பேசி தமிழக முதலமைச்சர் பெற்று தர வேண்டும். மயிலாடுதுறையில் காவிரி நீரை வரவேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை....

தமிழகத்தின் பாசன பகுதிகளான டெல்டா மாவட்டங்களின் விவசாய  தேவையை பூர்த்தி செய்யும் அணையாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. அதன் அடிப்படையில் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ந் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட விதி. மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கும் நிலையில் ஜூன் 12க்கு முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்படுவதும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் மேலாக இருக்கும் போது நீர்வரத்து என்பது அதிகமாக உள்ள நிலையில் நிர்ணயிக்கப்பட்ட தேவையான ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பதும், இதே போல அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் நீர்வரத்து என்பது குறைந்து காணப்படும் நிலையில் காலம் தாழ்த்தி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது தற்பொழுது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் 2026 ஆவது நடப்பாண்டான கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து இருந்த நிலையில் நீர்வரத்து என்பது மிக மிக குறைந்த அளவில் இருந்ததாலும், இதனிடையே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக ‌ வழங்காததாலும் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பது தள்ளிப்போனது. இதனை அடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதும்,
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகளில் சங்கம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், தமிழக அரசின் முயற்சியாலும், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல் ஆகியவற்றின் பெயரில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறக்க வேண்டிய முழுமையான நீரை திறக்காவிட்டாலும் குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட்டது. இதனை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில், தமிழக முதலமைச்சர் மேட்டூர் அணைக்கு நேரில் சென்று கடந்த 1.9.2026 அன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அனையை டெல்டா பாசத்திற்கு திறந்துவிட்ட நிலையில், காவிரியின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை பகுதிக்கு வந்தடைந்தது.  14.9.2026 அன்று விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. 
இதனை 15.9.2026 ஆன இன்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுசாமி பார்வையிட்டு வணங்கினார். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பாசனத்திற்கு ஜூன் 12 தண்ணீர் திறக்கப்பட வேண்டும் ஆனால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறப்பு என்பது கடந்த செப்டம்பர் 1 - ம் தேதி காலம் தாழ்த்தி திறக்கப்பட்டது.  இதன் காரணமாக முப்போக விளைச்சல் மேற்கொள்ளப்படும் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி என்பது முற்றிலும் பொய்த்து போன நிலையில்,  எஞ்சியுள்ள சம்பா மற்றும் தாளடி போகங்களை விவசாயிகள் உற்சாகமாக மேற்கொள்ளலாம் என்ற கனவு நிறைவேறுமா என்பதன் அடிப்படையில் தொடர்ந்து 45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்து இருந்தார். 
ஏற்கனவே குருவை பொய்த்து போன நிலையில், எச்சியுள்ள சம்பா மற்றும் தாளடி ஆகிய போகங்களை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் தமிழக விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்டது. 45 நாள் தண்ணீர் தரப்பு என்பது எஞ்சியுள்ள இரண்டு பாகங்களுக்கு போதுமானதாக இருக்காது என்பதாலும், ஏற்கனவே தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக வழங்காமல் ஏமாற்றி வருவதாலும் தமிழக முதலமைச்சர் விரைவில் கர்நாடக முதல்வரிடம் பேசி காவிரி பங்கீட்டு தண்ணீரை முறையாக பெற்றால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும் என்பதும் எஞ்சியுள்ள இரண்டு போக விளைச்சலையும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெறுவார்கள் என்றும் கூறிய உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி,
தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு,  எஞ்சியுள்ள இரண்டு போக விளைச்சல் முழுமை அடைய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திங்கள், 14 செப்டம்பர், 2026

சேலத்தில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் நவீன கால சீர்வரிசைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு..... எலைட் அசோசியேஷன் அமைப்பின் 46 ஆவது ஆண்டு படைப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு.

சேலத்தில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் நவீன கால சீர்வரிசைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு..... எலைட் அசோசியேஷன் அமைப்பின் 46 ஆவது ஆண்டு படைப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் நவீன கால சீர்வரிசைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு..... எலைட் அசோசியேஷன் அமைப்பின் 46 ஆவது ஆண்டு படைப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு.

இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி, இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள அணைத்து இந்துக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக வட மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்களுக்கு மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது, எலைட் அசோசியேஷன் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடி வருகின்றனர், ஒவொரு ஆண்டும் பல்வேறு வடிவங்களில் புராண இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபட்டு கொண்டாடி வருகின்றனர் குறிப்பகாக கைலாச கணபதி, செல்வகணபதி கண்ணாடி கணபதி, சங்கு கணபதி, பனிலிங்க கணபதி என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை பல லட்ச ருபாய் மதிப்பில் அமைக்கபட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக மூன்று நாட்கள் வைக்கபடுகிறது, அதே போல 46வது ஆண்டாக திருமண கோலத்தில் ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் பெருமான் திருமண மணி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாதிப்பது போல அலங்கராம் செய்யப்பட்டு இருந்தது மண்டபத்தின் நுழை வாயிலில் அரண்மனை முகப்பு போன்று அமைக்கபட்டு, பின்னர் உள்ளே நுழையும் போது வண்ணமிகு வரவேற்பு அலங்காரங்களுடன் வடிமைக்கபப்டு இருந்தது. 
காண்பவரை பரவசத்தில் மட்டுமல்லாமல் மகிழ்ச்சியை ஏறபடுத்தி உள்ளது. மேலும் திருமண மணி  மண்டபத்தின்  விநாயகர் திருமண கோலத்தில் அமர்ந்திருந்து  வேண்டியதை அளிக்கும் ராஜாவாக அமர்திருப்பது விண்ணுலகில் நடக்கும் காட்சிபோலவே மண்ணுலகில் அமைக்கபட்டு இருந்தது தத்ருபமாக காட்சி தருவது போல வடிவமைக்கபட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் திருக்கல்யாண வைபவத்தில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்குவதை போன்று தற்காலத்திற்கு ஏற்றார் போன்று ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர், வண்ண தொலைக்காட்சி, நவீனரக மின்விசிறி, வாஷிங் மெஷின், இண்டக்ஷன் ஸ்டவ், பட்டுப்புடவைகள் வேட்டி சேலை, உட்பட தங்க ஆபரணங்கள், புறா தானே உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளும் சீர்வரிசைகளாக அடுக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.
இந்த திருக்கல்யாண உற்சவ வைபவம் முதன்முதலாக விநாயகப் பெருமான் திருமண கோலத்தில் வீற்றிருப்பதை காண ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.  இதுகுறித்து நிகழ்ச்சி அமைப்பாளர் சேகர் கூறும்போது, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு, 46 ஆண்டாக தங்களது எலைட் அசோசியேசன் சார்பில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான புராண விளக்கத்தையும் கூறிய அவர்,  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகிறோம். 
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபடும் அதே போல இந்த ஆண்டும் விண்ணுலகில் நடப்பது போலவே அமைந்திருந்தது. 
பேட்டி: சேகர் எலைட் அசோசியேஷன் தலைவர்

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

இந்தியாவிலேயே முதன்முறையாக ‘FUJIFILM Echelon Smart MRI’ ஜான்சன்ஸ் ஹெல்த்தில் பயன்பாட்டுக்கு வந்தது

இந்தியாவிலேயே முதன்முறையாக ‘FUJIFILM Echelon Smart MRI’ ஜான்சன்ஸ் ஹெல்த்தில் பயன்பாட்டுக்கு வந்தது

ஈரோட்டில் மருத்துவத் துறைக்கு புதிய மைல்கல்..!


இந்தியாவிலேயே முதன்முறையாக ‘FUJIFILM Echelon Smart MRI’ — ஜான்சன்ஸ் ஹெல்த்தில் பயன்பாட்டுக்கு வந்தது

ஈரோடு: இந்தியாவிலேயே முதன்முறையாக மேம்பட்ட மருத்துவப் படப்பிடிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘FUJIFILM Echelon Smart MRI’ கருவி ஈரோடு ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டரில் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


FUJIFILM இந்தியா நிறுவனம் மற்றும் ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டர் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சியின் மூலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேம்பட்ட MRI பரிசோதனை வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அதிநவீன MRI
இந்த புதிய MRI கருவியில் Deep Learning Reconstruction (DLR) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. 


இதன் மூலம் மருத்துவப் படங்களில் ஏற்படும் தேவையற்ற சத்தத்தை குறைத்து, தெளிவான மருத்துவப் படங்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவதால் நோயாளிகளின் நேரம் கணிசமாக மிச்சமாகும் என்றும், மருத்துவர்கள் துரிதமாக நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு பயன்பாடு
நரம்பியல், எலும்பு மற்றும் தசை, முதுகெலும்பு, வயிற்றுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த மேம்பட்ட MRI தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.


நோயாளிகளின் வசதியை கருத்தில் கொண்டு, MRI பரிசோதனையின்போது ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜான்சன்ஸ் ஹெல்த்தில் மருத்துவ வசதி மேலும் வலுவடைந்தது

ஜான்சன்ஸ் ஹெல்த்தில் ஏற்கனவே FUJIFILM Supria 32 CT கருவி பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது Echelon Smart MRI நிறுவப்பட்டிருப்பது ஈரோடு பகுதியில் மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை வசதிகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

மேலும், FUJIFILM நிறுவனத்தின் Synapse 3D மேம்பட்ட காட்சிப்படுத்தல் மற்றும் படப்பகுப்பாய்வு தளமும் மருத்துவப் பணிகளுக்கு துணையாக செயல்படுகிறது. 


இதன் மூலம் கதிரியக்கவியல், இதயவியல், அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் உள்ளிட்ட துறைகளில் மருத்துவர்களுக்கு உதவும் வகையில் 3D மாதிரியாக்கம் மற்றும் படப்பகுப்பாய்வு வசதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவக்க விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

இந்த புதிய FUJIFILM Echelon Smart MRI துவக்க விழாவில் ஜான்சன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் நடராஜன், FUJIFILM நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் யோசிடா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் புதிய MRI கருவியின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் அதன் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

“மருத்துவர்களுக்கு துரிதமான நோயறிதல்”

இதுகுறித்து சபா நியூஸ் தமிழுக்கு பேட்டியளித்த ஜான்சன்ஸ் ஹெல்த் சென்டரின் நிர்வாக இயக்குனர் டி.என். திருக்குமார், 


புதிய MRI தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை நேரம் குறைவதுடன், மருத்துவர்கள் துரிதமாக நோயைக் கண்டறிந்து, நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக அமையும் என தெரிவித்தார்.

மேலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் நோயறிதலில் மருத்துவர்களுக்கு கூடுதல் உதவி கிடைப்பதுடன், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அருகிலேயே நவீன மருத்துவப் பரிசோதனை வசதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஈரோட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘FUJIFILM Echelon Smart MRI’, ஈரோட்டின் மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்ப அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.