சனி, 24 அக்டோபர், 2026

சேலத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான தமிழன்னை விருதுகள் வழங்கும் விழா. ஆன்மீகப் பணியில் சிறந்த சேவை ஆற்றியதற்காக சேலத்தை சேர்ந்த தெய்வத்திருநங்கை மதுரா ஸ்ரீ அவர்களுக்கு தமிழன்னை விருது வழங்கி கௌரவிப்பு.

சேலத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான தமிழன்னை விருதுகள் வழங்கும் விழா. ஆன்மீகப் பணியில் சிறந்த சேவை ஆற்றியதற்காக சேலத்தை சேர்ந்த தெய்வத்திருநங்கை மதுரா ஸ்ரீ அவர்களுக்கு தமிழன்னை விருது வழங்கி கௌரவிப்பு.

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

சேலத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான தமிழன்னை விருதுகள் வழங்கும் விழா. ஆன்மீகப் பணியில் சிறந்த சேவை ஆற்றியதற்காக சேலத்தை சேர்ந்த தெய்வத்திருநங்கை மதுரா ஸ்ரீ அவர்களுக்கு தமிழன்னை விருது வழங்கி கௌரவிப்பு.

சேலத்தில், JJ.NEWS.தமிழ்
நேரலை உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில், 4-வது ஆண்டாக, உலகெங்கும் வாழும் தமிழர்களின் அடையாளமாகதமிழ் அன்னை விருது 2026 விருது வழங்கும் விழா சேலத்தை அடுத்துள்ள ஆவின் பால் பண்ணை அருகே நடைபெற்றது. திருமதி லலிதா அதவ் குமார், வாரிய உறுப்பினர், ஜே.ஜே. நியூஸ் தமிழ் JJ News Tamil குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த விழாவில், விருதுப் பட்டியல் குறித்த விளக்க உரையை பி.வி. சங்கர் வழங்க, 
தலைமை விருந்தினர்களாக ஜே.எஸ். இளையராஜா, சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன. பின்னர் விழாவின் பிரதான நிகழ்வான 2026 ஆம் ஆண்டிற்கான தமிழன்னை விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து செயலாற்றிய நபர்கள் சுமார் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதுகள் வழங்கி விழாவின்போது கௌரவிக்கப்பட்டது.
குறிப்பாக சேலத்தைச் சேர்ந்த தெய்வத்திருணங்கள் மதுராஸ்ரீ  ஆன்மீகப் பணியில் சிறந்த சேவையாற்றிய இமையை பாராட்டும் விதமாக தமிழன்னை விருது வழங்கி விழாவின்போது கௌரவிக்கப்பட்டார். இந்த போட்டி மிகுந்த சமுதாயத்தில் பல்வேறு தொழில்துறைகளில் சிறந்த விளங்கும் ஆண் பெண் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருத்தாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தாலுமே கூட, மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவரான தெய்வத் திருநங்கை விழாவில் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றே கூறலாம். 
விழாவிற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வெள்ளி, 23 அக்டோபர், 2026

சோனா கல்லூரியின் ( சோனா சேம்ப்ஸ்’26)சோனா மாநில பள்ளி மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா. போட்டியில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீலான பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

சோனா கல்லூரியின் ( சோனா சேம்ப்ஸ்’26)சோனா மாநில பள்ளி மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா. போட்டியில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீலான பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சோனா கல்லூரியின் ( சோனா சேம்ப்ஸ்’26)சோனா மாநில பள்ளி மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா. போட்டியில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீலான பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. 

சோனா கல்லூரியின் சார்பில் நடத்தப்படும் இந்த திறன் மேம்பாட்டு விழா குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா (சோனா சேம்ப்ஸ்' 26) வருகின்ற நவம்பர் 5ம் தேதி கல்லூரியின் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான போஸ்டர் வெளியீட்டு விழா கல்லூரி நூலக அரங்கில் நடைப்பெற்றது. இந்த விழாவில் அறிவியல் கண்காட்சி, கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், வினாடி வினா, பாடல் மற்றும் இசை, பேச்சு போட்டி, பழம்/காய்கறி செதுக்குதல், மைம், நடனம் ( குழு மற்றும் தனி ), வேடிக்கை விளையாட்டுகள் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அழைப்புகள் விடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேலம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து பங்கேற்க உள்ளனர்.  பள்ளி மாணவர்களின் தனி திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், எனவே பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களது தனித்திறமைகளை திறம்பட வெளிப்படுத்த வேண்டும் என சோனா கல்லூரியின் முதல்வர் முனைவர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது துறைத்தலைவர் முனைவர் ரேணுகா, விழாவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்  செந்தில்வடிவு மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ரமேஷ் உட்பட மாணவர்கள்  உடனிருந்தனர்.

புதன், 21 அக்டோபர், 2026

விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தின் எதிரொலி. மூன்று புதிய வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற்றது என்பது வரலாறு. விவசாய கடன் முழுமையான தள்ளுபடி தொடர்பாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தவெக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு பணிய வைப்போம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி சூசக  எச்சரிக்கை

விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தின் எதிரொலி. மூன்று புதிய வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற்றது என்பது வரலாறு. விவசாய கடன் முழுமையான தள்ளுபடி தொடர்பாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தவெக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு பணிய வைப்போம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி சூசக எச்சரிக்கை

நாமக்கல்,
S.K. சுரேஷ் பாபு.

விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தின் எதிரொலி. மூன்று புதிய வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற்றது என்பது வரலாறு. விவசாய கடன் முழுமையான தள்ளுபடி தொடர்பாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தவெக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு பணிய வைப்போம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி சூசக  எச்சரிக்கை

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். மத்திய அரசை ஒப்பிட்டு தமிழக த.வெ.க அரசுக்கு எதிராக சூசகமான முறையில்,  எச்சரிக்கை ஒன்றினை வெளிப்படுத்தி உள்ளார். அதில், 
தவெக  கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியில், தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் பரப்புரையில் தெள்ளத் தெளிவாக மேடையில் பேசிவிட்டு, தமிழகத்தில் தவெக கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. தேர்தல் வாக்குறுதியை முறையாக நிறைவேற்றாததை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழக அரசின் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு செல்ல தினந்தோறும் போராட்டம் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக உள்ள, மிக முக்கியமான தொழில் விவசாயத் தொழில், அப்படிப்பட்ட முதல் முக்கிய தொழிலை மேற்கொண்டுள்ள   விவசாயிகளுக்கு
தவெக அரசு  தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால், தமிழக விவசாயிகள் ரோட்டில் இறங்கி போராடுவது தவெக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்வதற்கு அழகல்ல. தவெக அரசின் நிர்வாகம் தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வெறுப்பை  ஏற்படுத்தி உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் மத்திய  பாஜக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக 3 புதிய வேளாண் திருத்த சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை வஞ்சிக்க முற்பட்டது புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஒன்று திரண்டு ஒட்டு மொத்த குரலாக ஒலித்துக் கொண்டு தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர். 
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் உச்ச கட்டம் செல்வதை அறிந்த மத்திய பாஜக அரசு மூன்று புதிய வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற்றது. விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவு தான் மத்திய பாஜக அரசே பணிந்தது என்ற வரலாறு உள்ளதை நினைவு படுத்திய தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, 
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தவெக அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல், தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி உடனடியாக பயிர் கடன் தள்ளுபடி செய்யாமல்  காலதாமதம் செய்தால் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஒன்று திரண்டு  தவெக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்  நடத்தி தவெக அரசை பணிய வைப்போம் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் சூசகமான முறையில் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 20 அக்டோபர், 2026

குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் வித்யா ரம்பம்...சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் வித்யா ரம்பம்...சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கப்பட்டது.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் வித்யா ரம்பம்...
சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கப்பட்டது. 

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ற வகையில் கஷ்டங்கள் துன்பங்கள் மறந்து வாழ்க்கையில் நன்மை பெறுக ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று ஆயுத பூஜை விழாவை தொடர்ந்து இன்று சரஸ்வதி பூஜை எனப்படும் விஜயதசமி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கல்வி கடவுளான சரஸ்வதிக்கு உகந்த தினமான இந்த நாளில் குழந்தைகளுக்கு கல்வி அறிவிக்கும் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 
அதனடிப்படையில் சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா நகர் ஐயப்பன் ஆலயத்தில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வித்யா ரம்பம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் கோவில் குருக்கள் குழந்தைகளுக்கு நாவில் பச்சரிசி தேன் போன்றவற்றை தடவி அ ஆ வண்ணா போன்ற எழுத்துக்களை எழுதி கல்வியின் முதற்கட்ட நாளை தொடங்கி வைத்தனர். 
இன்று முதல் குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்க சிறப்பு சேர்க்கையும் நடைபெறுகிறது. இதனால் கோவில்களில் குழந்தைகளுக்கு நாவில் எழுதிவிட்டு தொடர்ந்து பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு கல்வியின் பயணம் தொடர பெற்றோர்கள் வழி வகுக்கின்றனர். இதன்படி சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இன்று எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளுக்கு நாவில் தாய்த் தமிழின் முதல் வார்த்தைகளை எழுதி கல்வியை தொடங்கி வைத்தனர். இதனை ஒட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று அலங்காரங்கள் செய்யப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிபாடு செய்தனர். வித்யாரம்பம் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரமத்தின் தலைவர் கே.பி. நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 

ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சேலத்தில் சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு கல்வி பரிசளித்து மகிழ்ந்த குலாலர் மண்பாண்ட தொழிலாளர் சங்க விழா.

சேலத்தில் சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு கல்வி பரிசளித்து மகிழ்ந்த குலாலர் மண்பாண்ட தொழிலாளர் சங்க விழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு கல்வி பரிசளித்து மகிழ்ந்த குலாலர் மண்பாண்ட தொழிலாளர் சங்க விழா. 

சேலம் மாவட்டம் மண்பாண்டத் தொழிலாளர் ( குலாலர் ) சங்கம் மற்றும் N. கலைச்செல்விநினைவு அறக்கட்டளை ஆகியவற்றில் சார்பில் 3-வது கல்வி விருது வழங்கும் விழா
மற்றும் நான்காம் ஆண்டு தொடக்க விழா ஆகியவை சேலம் பால் பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் சேலம் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளரும் மாநில தலைவருமான ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில பொதுச் செயலாளர் பொறியாளர் ராஜா மற்றும் பொருளாளர் கிருஷ்ணன் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். தொடர்ந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்ட கூட்டத்தில் சங்கத்திற்கான வரவு செலவு கணக்குகள் முன் வைக்கப்பட்டன. 
விழாவின் சிறப்பம்சங்கள் மண்பாண்ட தொழிலாளர்களின் முன்னேற்றம் குறித்தும் அவர்களது பிள்ளைகள் இந்த போட்டி மிகுந்த சமுதாயத்தில் எவ்வாறெல்லாம் முன்னேறுவது என்பது குறித்து சிறப்பு விருந்தினர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை எடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான குலாலர் சமுதாயத்தைச் சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. 
70 வயதிற்கு மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்களைக் கௌரவித்தல், நல்லாசிரியர் விருது பெற்ற சிறந்த ஆசிரியர்களைக் கௌரவித்தல் மற்றும் கிளைச் சங்கங்களைத் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. 
இந்த விழாவில் குலாலர் இளைஞர் சங்க நிர்வாகி சிமெண்ட் கார்த்தி உட்பட  அனைத்துச் மாவட்ட நிர்வாகிகள், கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் குலாலர்  பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 15 அக்டோபர், 2026

சேலம் மாநகராட்சியின் துணை மேயர் இருக்கை அகற்றி காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய மேயர் விவகாரம். சேலம் மாநகராட்சி உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி ஆணையர்களுக்கு தமிழக அரசு துணை மேயர் இருக்கை இருப்பது தொடர்பாக விளக்கு அறிக்கை. சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சேலம் மாநகராட்சியின் துணை மேயர் இருக்கை அகற்றி காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய மேயர் விவகாரம். சேலம் மாநகராட்சி உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி ஆணையர்களுக்கு தமிழக அரசு துணை மேயர் இருக்கை இருப்பது தொடர்பாக விளக்கு அறிக்கை. சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாநகராட்சியின் துணை மேயர் இருக்கை அகற்றி காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய மேயர் விவகாரம். சேலம் மாநகராட்சி உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி ஆணையர்களுக்கு தமிழக அரசு துணை மேயர் இருக்கை இருப்பது தொடர்பாக விளக்கு அறிக்கை. சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சேலம் மாநகர திமுக மேயர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் அவர்களுக்கும் இருக்கும் பனிப்போரின் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ப்ரோடகால் என்பதை மீறி தன்னிச்சையாக முடிவெடுத்து சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் துணை மேயரின் இருக்கையை மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும் இடத்திற்கு மாற்றினார். இதனால் கடந்த மூன்று மாதங்களாக மாதம் ஒரு முறை நடைபெறும் மாதாந்திர இயல்பு கூட்டம் முறையாக நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாநகராட்சி துணை மேயர் ஒரு பெண்மணி என்பதை மறந்து பெண் சமுதாயத்திற்கு இழிவுபடுத்தும் நோக்குடன் செயல்பட்ட சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டன அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேல்நிலைப் பொறுப்பாளர் சிவராஜ் சேகர் ஆகியோர், இந்த பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் மேட்டூர் அணையை டெல்டா பாசனத்திற்கு திறந்து விடுவதற்காக சேலம் மேட்டூர் அணைக்கு வந்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றினை வழங்கினார் சேலம் மாநகர மேயரின் செயலை கண்டிக்கும் விதமாக. புகார் மனுவினை பெற்றுக்கொண்ட தமிழக முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி கூட்ட அரங்குகளில் இருக்கைகள் எவ்வாறு அமைக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவான விளக்க உரை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து சேலம் மாநகராட்சி துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் நம்மிடையே கூறுகையில், 
அன்று இருந்த தமிழக அரசில் இருந்த சேலம் மாநகர மேயர், துணை மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் மேலே தான் அமர்ந்து  இருந்தோம். கடந்த மூன்று மாதங்களாக அந்த நாற்காலியை கீழே இறக்கி போட்ட பிறகு தான் கூட்டத்தை நடத்துவேன் என்று தொடர்ந்து அதை செய்தவர் சேலம் மாநகர மேயர். மக்களுடைய பிரச்சனை மக்களுடைய தேவைகள் குறித்துப் பேசுவதற்கு  மாமன்ற உறுப்பினர்களுக்கான கேள்விக்கு பதில் கொடுக்கிற அந்த இடத்துல நாம் இருந்து கொண்டு, இந்த நாற்காலி எடுத்தால் தான் கூட்டத்தை நடத்துவேன்னு சொல்லிட்டு கூட்டமே நடத்தாமல், கூச்சல் குழப்பமாகவே இருந்து வந்தது. சேலம் மாநகராட்சி மேயரால் பெண் துணை மேயருக்கு ஏற்பட்டுள்ள அநீதி குறித்து மேட்டூர் அணையை திறப்பதற்காக சேலம் வந்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேல்நிலைப் பொறுப்பாளர் சிவராஜ் சேகர் மற்றும் அவருடன் இணைந்து தானும் தமிழக முதலமைச்சரை சந்தித்து புகார் மனு சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் அவர்களின் செயலை கண்டிக்கும் விதமாக வழங்கினேன் என்றும், மனுவை பெற்றுக் கொண்ட அவர், விரைவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்று இருந்தார். இந்த நிலையில், சேலம் மாநகராட்சி உட்பட தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சிகள் நகராட்சிகளில் இருக்கைகள் இப்படித்தான் அமைக்க வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு தெளிவான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் அதன்படி இனி வரும் காலங்களில் மேயர், துணை மேயர், ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  பத்திரிகையாளர்கள் மற்றும்  பொதுமக்கள் எங்கு அமர வேண்டும் அவர்களுக்கான இருக்கை வசதி எப்படி செய்து தர வேண்டும் முழுமையான விளக்க அறிக்கையை தமிழக முழுவதும் உள்ள அனைத்து ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறிய திருமதி சாரதாதேவி மாணிக்கம், 
இதற்கு முதல் கட்டமாக தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து பேசிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள்,  சேலம் மாநகர மக்கள் சேலம் மாநகர பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்கி கொள்வதாகவும் தெரிவித்த அவர், சேலம் மாநகராட்சியை போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இதே நிலை நீடிப்பது குறித்தும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளதற்கு முதற்கண் தனது சகோதரியாக பாவிக்கும் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பெர்ட், சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ் குமார் உட்பட, அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும்,  முன்னோடிகளுக்கும் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சகோதர சகோதரிகளுக்கும், இந்த தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக  இணையதளங்களில் தனக்காக குரல் கொடுத்து அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இனிவரும் காலங்களில் மக்கள் பிரச்சினையை குறித்து பேசும் பொழுது இது போன்ற நாற்காலி பிரச்சனை இருக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தெளிவான விளக்கம் அளித்த தமிழக முதலமைச்சருக்கு மேலும் மேலும் தனது நன்றியை உரித்தாக்கி கொள்வதாக சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் தெரிவித்தார். சேலத்தில் ஏற்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முழுவதும் இதற்கான தெளிவான விளக்கு கடிதம் தமிழக அரசு அனுப்பி உள்ளதற்கு சேலம் மாநகராட்சியின் துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் அவர்களை மட்டுமே சாரும் என்பது மட்டும் நிதர்சனம். உடன் சேலம் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் திருமதி கிரிஜா குமரேசனும் உடன் இருந்தார்.

செவ்வாய், 13 அக்டோபர், 2026

நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை. சாதனை படைக்க துடிக்கும் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி சேலத்தில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ராகுல் இளையோர் விளையாட்டு மையத்தின் தேசியத் தலைவர் விஜயலட்சுமணன் தகவல்.

நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை. சாதனை படைக்க துடிக்கும் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி சேலத்தில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ராகுல் இளையோர் விளையாட்டு மையத்தின் தேசியத் தலைவர் விஜயலட்சுமணன் தகவல்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை. சாதனை படைக்க துடிக்கும் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி சேலத்தில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ராகுல் இளையோர் விளையாட்டு மையத்தின் தேசியத் தலைவர் விஜயலட்சுமணன் தகவல். 

பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைக்க துடிக்கும் இளைய விளையாட்டு வீரர்களின் நலனுக்காக, ராகுல் இளையோர் விளையாட்டு மையம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் தேசிய தலைவராக இருந்து வருபவர் சேலத்தை சேர்ந்த விஜயலக்ஷ்மன். நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களை தனது விளையாட்டு மைதான மையத்தின் சார்பாக மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச் செய்து அவர்களை வெற்றியாளராக உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இவர் தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கலந்து கொண்டு தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து சேலத்தில் அவர் நம்மிடம் கூறுகையில், நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக பங்கேற்ற வீரர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது தனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது என்றும் இது போன்று ராகுல் இளையோர் விளையாட்டு மையத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு போட்டிகளுக்கு சென்று வருகின்றனர் என்றும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது முயற்சிக்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் தொடர்ச்சியாக செய்து வருவதாக குறிப்பிட்டார். இதேபோல கிராமப்புற விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக சேலத்தில் ஏற்கனவே அறிவித்ததை போன்று மிகப் பெரிய ஒரு விளையாட்டு மைதானம் அமைத்து அது பல்வேறு விளையாட்டுகளில் தனிச்சிறப்பு பெற்று வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான முழு பயிற்சியும் அளித்து அவர்களின் எதிர்கால கனவை பூர்த்தி செய்வது மட்டுமே தங்களது அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவித்த விஜய லக்ஷ்மன், கிரிக்கெட் வீரர்களைப் போன்று டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர்கள் வாலிபால் விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு மையத்தின் சார்பில்  வாலிபால், டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நுட்பத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை மெருகேற்ற உள்ளதாகவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஊக்குவிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென சேலத்தில் தனியாக ஒரு மைதானம் அமைக்க இன்னும் இரண்டு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைக்க துடிக்கும் இளைய விளையாட்டு வீரர்களின் நலனுக்காக, ராகுல் இளையோர் விளையாட்டு மையம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் தேசிய தலைவராக இருந்து வருபவர் சேலத்தை சேர்ந்த விஜயலக்ஷ்மன். நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களை தனது விளையாட்டு மைதான மையத்தின் சார்பாக மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச் செய்து அவர்களை வெற்றியாளராக உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். 
அந்த வகையில் இவர் தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கலந்து கொண்டு தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 
இதுகுறித்து சேலத்தில் அவர் நம்மிடம் கூறுகையில், நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக பங்கேற்ற வீரர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது தனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது என்றும் இது போன்று ராகுல் இளையோர் விளையாட்டு மையத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு போட்டிகளுக்கு சென்று வருகின்றனர் என்றும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது முயற்சிக்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் தொடர்ச்சியாக செய்து வருவதாக குறிப்பிட்டார். இதேபோல கிராமப்புற விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக சேலத்தில் ஏற்கனவே அறிவித்ததை போன்று மிகப் பெரிய ஒரு விளையாட்டு மைதானம் அமைத்து அது பல்வேறு விளையாட்டுகளில் தனிச்சிறப்பு பெற்று வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான முழு பயிற்சியும் அளித்து அவர்களின் எதிர்கால கனவை பூர்த்தி செய்வது மட்டுமே தங்களது அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவித்த விஜய லக்ஷ்மன், கிரிக்கெட் வீரர்களைப் போன்று டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர்கள் வாலிபால் விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு மையத்தின் சார்பில்  வாலிபால், டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நுட்பத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை மெருகேற்ற உள்ளதாகவும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஊக்குவிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென சேலத்தில் தனியாக ஒரு மைதானம் அமைக்க இன்னும் இரண்டு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.