சனி, 6 ஜூலை, 2024

அரசு பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கம் வலியுறுத்தல்....

அரசு பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கம் வலியுறுத்தல்....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அரசு பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் .....
உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும்  இயக்குனர் சங்கம்கண்டன ஆர்ப்பாட்டம்.

அரசு பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தமிழ்நாடு அரசு பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இலவச உடற்கல்வி பாட புத்தகம் விளையாட்டு சீருடை வழங்க வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குனர் பணி வழங்க வேண்டும்.
உடற்கல்வி நிதியை தொடக்கப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகளுக்கு 50,000 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் என ஒதுக்கீடு செய்து தனி நிதியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் எம். மாயகிருஷ்ணன் உள்ளிட்டு சேலம் நாமக்கல் ஈரோடு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கங்கள் பங்கேற்றனர்.

வெள்ளி, 5 ஜூலை, 2024

ஈரோடு மாவட்டத்தில் 12 சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் 12 சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்


ஈரோடு மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வாகன பெருக்கத்திற்கேற்ப சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து கொண்டே வந்தது. சில பெற்றோர்கள் பெருமைக்காக தங்கள் பிள்ளைகளிடம் வாகனத்தைக் கொடுத்து ஓட்ட விட்டனர்.

மாணவர்கள் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 பேரை அமர்த்திக் கொண்டு வேகமாக செல்கின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். மேலும், வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட, வேகமாகச் சென்றனர். இதனால், சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வந்தன.

இதைத் தடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டி வந்த 3 இருசக்கர வாகனங்கள் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 4 இருசக்கர வாகனங்களுக்கு, பவானி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 5 இருசக்கர வாகனங்களுக்கும் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 12 சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை திரும்ப பெற முடியும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் இதுவரை 12 சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர் குருநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா ஏற்பாடு: அதிகாரிகள் ஆய்வு

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா ஏற்பாடு: அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோயில் திருவிழா வரும் ஜூலை 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதையடுத்து, ஜூலை 24ம் தேதி கொடியேற்றமும், ஜூலை 31ம் தேதி முதல் வனபூஜை நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆடிப்பெருந் தேர்த்திருவிழா மற்றும் புகழ்பெற்ற கால்நடை சந்தை, குதிரை சந்தை நடைபெறவுள்ளது. இவ்விழாவில், லட்சக்கணக்கானோர் வந்து சுவாமியை வழிபாட்டு செல்வர்.

இதையொட்டி, பேருந்து வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கால்நடை மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துவது, தற்காலிக மருத்துவ முகாம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர், கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, கோயில் பரம்பரை அறங்காவலர்கள் சாந்தப்பன், குருராஜேஷ், செயல் அலுவலர் மோகனப்பிரியா, பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி, அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


அரசு கலைக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி சேர்க்கை என்பது சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் அணியின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு....

அரசு கலைக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி சேர்க்கை என்பது சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் அணியின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு....

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.


தமிழின போராளி மக்கள் காவலர்  மருத்துவர் அய்யா அவர்கள்பசுமை நாயகர் தன்னிகரில்லா தலைவர் மருத்துவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தல் பேரில் இன்று பாட்டாளி  மாணவர்  சங்கத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக தமிழ்நாடு அரசாணை 161 படி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி சேர்க்கை உரிய விதிமுறைக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என மனு அளிக்கப்பட்டது
 மனு அளித்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா தலைமையில்,மாவட்ட மாணவர் சங்க செயலாளர்கள் எருமாபாளையம் குமார்,தாரை மணி,மேட்டூர் நவீன்,
மாவட்ட மாணவர் சங்க தலைவர்கள் வழக்கறிஞர் மோகன்ராஜ். ,தர்மராஜ், குப்புசாமி.,,
பாமக ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார். மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர்கள் தௌசம்பட்டி V.M.S வேலுசாமி., கண்ணன்,நந்தகுமார்,பவித்ரன்.,கலைசெல்வன், ஆகியோர் மனு அளித்தனர் .....