வியாழன், 1 ஆகஸ்ட், 2024

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்பி செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்பி செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.  

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்பி செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தல். 


விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விலை பொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விவசாய விலை பொருட்களுக்கு, ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், மரபணு விதைகளை தவிர்த்து, நாட்டு விதைகளை மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் மேட்டூரில் திறக்கப்படுகின்ற காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து ஏரி, குளங்களை நிரப்பி விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும், கோதாவரி காவேரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்  என ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்தினர்.


புதன், 31 ஜூலை, 2024

பவானிசாகர் அருகே ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் செக் பவர் ரத்து: செயலாளர் சஸ்பெண்ட்

பவானிசாகர் அருகே ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் செக் பவர் ரத்து: செயலாளர் சஸ்பெண்ட்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் ஊராட்சித் கொக்கரக்குண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ், ரவிச்சந்திரன். விவசாயிகளான இவர்களிடம் தோட்டத்திற்கு குடிநீர் குழாய் பதிக்க தடையில்லா சான்று வழங்க ரூ.2.40 லஞ்சம் வாங்கும் போது, கொத்தமங்கலம் ஊராட்சித் தலைவர் மல்லிகா (வயது 55), துணைத் தலைவர் சண்முகம் (வயது 44), ஊராட்சி செயலர் ராஜூ (வயது 54) ஆகிய மூன்று பேர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ஊராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். மேலும், லஞ்சம் பெற்ற விவகாரத்தில், ஊராட்சி செயலாளர் ராஜூவை தற்காலிக பணி நீக்கம் செய்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஊராட்சி தலைவருக்கு பதிலாக பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), துணைத் தலைவருக்கு பதிலாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு ஊராட்சி நிர்வாகத்தை கையாளும் அதிகாரம் வழங்கும் உத்தரவை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (1ம் தேதி) மாலை ஈரோடு வருகை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (1ம் தேதி) மாலை ஈரோடு வருகை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கரூர் வழியாக இன்று (1ம் தேதி) மாலை ஈரோடு வருகிறார்.

மாவட்ட எல்லையான கொடுமுடியில் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (2ம் தேதி) காலை 10.20 மணிக்கு ஈரோடு சோலாரில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, காலை 10.45 மணிக்கு ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் ரூ.7.57 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த பின், காலை 11.30 மணிக்கு ஈரோடு அடுத்துள்ள ஆர்.என் புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து, நண்பகல் 12.20 மணிக்கு ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கினை திறந்து வைப்பதோடு, நான் முதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதனையடுத்து, மாலை 4.05 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்.

அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 6.05 மணிக்கு ஈரோடு அடுத்துள்ள மேட்டுக்கடை தங்கம் மஹாலில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 6.50 மணிக்கு ஈரோட்டில் இருந்து கோவை புறப்படும் அமைச்சர் உதயநிதி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி உபரிநீரால் பாதிக்கப்படும் இடங்கள் 41 ஆக கண்டறிவு: அமைச்சர்

ஈரோடு மாவட்டத்தில் காவிரி உபரிநீரால் பாதிக்கப்படும் இடங்கள் 41 ஆக கண்டறிவு: அமைச்சர்

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 41 இடங்கள் உபரிநீரால் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (31ம் தேதி) மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தண்ணீர் அதிகமாக வருதைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணை நிரம்பிய காரணத்தால், தண்ணீர் திறந்து விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கரையோரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, கரையோர பகுதிகள் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், துறையின் அலுவலர்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் நேரடியாக கரையோரப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சுமார் 41 இடங்கள் உபரி நீரால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்படும் பகுதிகளில் முகாம்கள் அமைத்து, பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நர்னவாரே மனிஷ் சங்கர்ராவ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், மாநகர அலுவலர் பிரகாஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஈரோடு மாவட்டத்திற்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்திற்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (31ம் தேதி) மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டம், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு ஆக.3ம் தேதி (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன்கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
ஈரோட்டில் 20வது புத்தகத் திருவிழா நாளை மறுதினம் (2ம் தேதி) தொடங்குகிறது

ஈரோட்டில் 20வது புத்தகத் திருவிழா நாளை மறுதினம் (2ம் தேதி) தொடங்குகிறது

தமிழ்நாடு அரசும் மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா 2024, வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் விமரிசையாக தொடங்குகிறது என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
 ஈரோட்டில் இன்று (31ம் தேதி) மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:- அறிவு, கல்வி மற்றும் சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் மக்கள் சிந்தனைப் பேரவை வெள்ளிவிழா கண்டு இவ்வாண்டு 26ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இப்பேரவையின் சார்பில், ஈரோட்டில் 2005ம் ஆண்டு முதன் முதலாக ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டு இவ்வாண்டு 20ம் ஆண்டை எட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து இந்த ஈரோடு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த 2024ம் ஆண்டுக்கான ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடத்தப்படுகிறது.

இம்முறை ஏறத்தாழ 250 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதில் முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பகங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஸ்டால்கள் அடங்கும். இப்புத்தகத் திருவிழா நாளை மறுதினம் (2ம் தேதி) வெள்ளிக்கிழமை தொடங்கி ஆக.13 வரை நடக்கிறது. தொடக்க விழா 2ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் தொடங்கும்.

இதில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு புத்தக அரங்கை திறந்து வைக்கிறார். விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகிக்கிறார். தமிழக அரசின் பொது நூலகத் துறை இயக்குநர் கே.இளம்பகவத், ஈரோடு மாநகராட்சி ஆணையர் என்.மனிஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இப்புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தமிழர் படைப்பரங்கை ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ., திறந்து வைக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் , ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் , துணைமேயர் வி.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முதல் விற்பனையை எஸ்கேஎம். மயிலானந்தன் தொடங்கி வைக்கிறார்.

இப்புத்தகத் திருவிழா தினசரி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரையிலும் நடைபெறும். நுழைவுக் கட்டணம் இல்லை. அனுமதி இலவசம். தினமும் மாலை சிந்தனை அரங்கில் பிரபல பேச்சாளர்களின் கருத்தாழம் மிக்க சொற்பொழிவுகள் நடைபெறும். ஆக.13ல் நடைபெறும் நிறைவு விழாவில் பிரபல விஞ்ஞானி ஏ.சிவதாணு பிள்ளை கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது, மக்கள் சிந்தனைப் பேரவை பொருளாளர் க.அழகன், பொதுக் குழு உறுப்பினர்கள் எஸ்.சண்முகம் மற்றும் வி.பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.