வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

ஈரோட்டில் உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

ஈரோடு வீரப்பன்சத்திரம், ஜான்சி நகர், குமரன் வீதியை சேர்ந்த குமார் என்பவர் சாலை விபத்தில் இறந்தார். இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. 

குமார் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யும் பொருட்டு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராஜகோபால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
நசியனூரில் ரூ.2.24 கோடியில் 158 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

நசியனூரில் ரூ.2.24 கோடியில் 158 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை நசியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ.3.48 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 158 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டம், நசியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நடைபெறும் விழாவில், நசியனூர் புதிய கிளை அலுவலகம் மற்றும் இருட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு குன்றி என்ற இடத்தில் புதிய கிளை அலுவலகம், ரூ.25.96 லட்சம் மதிப்பில் நவீன மயமாக்கப்பட்ட மலையப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலகம், ரூ.66 லட்சம் மதிப்பில் அயலூர், மாணிக்கம்பாளையம் மற்றும் சத்தி கொமரபாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தலா 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 3 சேமிப்பு கிடங்குகள், சத்தியமங்கலம் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.8.74 லட்சம் மதிப்பில் சிறுவனப் பொருட்கள் உலர்களம், தூக்கநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.23.24 லட்சம் மதிப்பில் வேளாண் விற்பனையகம், குடுமியாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் குடுமியாம்பாளையம் கடையில் இருந்து ஓம்சக்தி நகர் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை, தானத்தம்பாளையம் புதிய நியாய விலைக்கடை, காடையம்பட்டி நியாய விலைக்கடைக்கு புதிய கட்டிடம் என கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு மொத்தம் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


மேலும், 28 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், 12 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகைக் கடன், 24 பயனாளிகளுக்கு ரூ.11.90 லட்சம் மதிப்பீட்டில் சுய உதவி குழுக் கடன், 2 பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் நடைமுறை மூலதனக் கடன், 22 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர வைப்பு நிதி, 70 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் என மொத்தம் 158 பயனாளிகளுக்கு ரூ.2.24 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப்பதிவாளர் காளிதாபானு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சேலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய முடிவுகள்....

சேலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய முடிவுகள்....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் கலந்து கொண்ட  கூட்டத்தில், சேலம் கட்சி அலுவலகத்தில் முக்கிய முடிவுகள். 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்வு நடைபெற்றது. சேலம் முள்ளு வாடி கேட் பகுதியில் உள்ள சில மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். 
சேலம் மண்டல நிர்வாகிகள் அனைவரும் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஆரிப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும் என்றும் இந்த மோடி அரசின் அராஜக போக்கினை வீழ்த்தும் விதமாக எதிர்வரும் தேர்தலில் முனைப்புடன் செயல்பட்டு மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இந்தியாவில் அமைய ஒருவரும் பொறுப்புடனும் கண் துஞ்சாமலும் பணியாற்ற வேண்டும் என்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் உள்ளிட்டு பல்வேறு முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
சேலத்தை சேர்ந்த இரண்டு அரசு ஓய்வூதியர்கள் இடம் 10 லட்சம் ரூபாய் மோசடி. பணத்தைப் பற்றி ஒரு வருடம் ஆகியும் பெருக்கிக் கொடுக்காத நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இருசக்கர வாகன விற்பனை மையத் தொழிலதிபர்.

சேலத்தை சேர்ந்த இரண்டு அரசு ஓய்வூதியர்கள் இடம் 10 லட்சம் ரூபாய் மோசடி. பணத்தைப் பற்றி ஒரு வருடம் ஆகியும் பெருக்கிக் கொடுக்காத நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இருசக்கர வாகன விற்பனை மையத் தொழிலதிபர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

நாமக்கல் அருகே இரண்டு ஓய்வு ஊதியர்கள் இடம் 10 லட்ச ரூபாய் கடன் பெற்று ஏமாற்றி வரும் இருசக்கர வாகன பிரமுகர் மோகன்ராஜ்.

நாமக்கல் மாவட்டம் -பெரியமணலி  பகுதியில் அம்மன்  TVS ஏஜன்ஸி நடத்தி வரும் மோகன்ராஜ்  என்பவர் சேலம் மாநகரை சார்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களான *அண்ணாதுரை மற்றும் சிங்காரம்* ஆகியோரிடம் தலா 5 லட்சம் கடன் பெற்று ஒரு வருடம் கடந்தும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகின்றார்.
கொடுத்த கடனை ரூ 10 லட்சத்தை திருப்பி கொடுக்க மறுத்து வரும் அம்மன் TVS ஏஜன்சி உரிமையாளர்  மோகன்ராஜ்  ஓய்வு பெற்ற இரண்டு  ஊழியர்களையும் மிரட்டியதோடு பணத்தை திருப்பி கேட்க கூடாது என்று அச்சுறுத்தி  வருவது கண்டனத்திற்கு உரியது.

இதனிடையே பாதிக்கப்பட்ட அந்த இரண்டு ஓய்வூதியர்களும் சேலத்தில் உள்ள தமிழ்நாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளரும், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி அவர்களை சந்தித்தபோது, 
இந்த அச்சுறுத்தல், பண மோசடி குறித்து பாதிக்கபட்ட இரண்டு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களும் காவல் துறையின் உதவியை நாடி புகார் அளித்துள்ளனர் என்றும், இந்த புகார் மனு குறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணம்  ரூ 10 லட்சத்தை     பெரியமணலியை சார்ந்த அம்மன் TVS ஏஜன்சி உரிமையாளர் மோகன்ராஜ் மீது வழக்கு பதிவு  செய்து நீதி வழங்கிட வலியுறுத்துவதாக கேட்டுக் கொண்டுள்ளார் சரஸ்ராம் ரவி.
த.வே.க கட்சிக் கொடியில் இடம் பெற்றுள்ள யானை சின்னம் தொடர்பாக சென்னையை தொடர்ந்து சேலத்திலும் கடும் எதிர்ப்பு. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைமை எதிர்ப்பை வெளிப்படுத்திய பிறகும் அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருக்கின்ற நடிகர் விஜய்க்கு கடும் கண்டனம்.

த.வே.க கட்சிக் கொடியில் இடம் பெற்றுள்ள யானை சின்னம் தொடர்பாக சென்னையை தொடர்ந்து சேலத்திலும் கடும் எதிர்ப்பு. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைமை எதிர்ப்பை வெளிப்படுத்திய பிறகும் அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருக்கின்ற நடிகர் விஜய்க்கு கடும் கண்டனம்.

சேலம்
S.K. சுரேஷ்பாபு.

திரைப்பட நட்சத்திர நடிகர் விஜய் நேற்று கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். சென்னையை தொடர்ந்து தற்பொழுது சேலத்திலும் கட்சி கொடிக்கு எதிரான எதிர்ப்பு வலுத்துள்ளது.

தமிழ் திரைப்பட நடிகரும் தமிழக  வெற்றி கழகத்தின் தலைவருமான வி விஜய் அவர்கள் நேற்று தமிழக வெற்றிகழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். அவரது கட்சிக் கொடியில் இடம் பெற்றிருந்த யானை சின்னம் தொடர்பாக நேற்று முதலே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பல்வேறு கண்டனங்களும் எதிர்ப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையை தொடர்ந்து தற்பொழுது சேலத்திலும் அதற்கான எதிர்ப்பு வெடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் நம்முடைய கூறுகையில், தமிழக வெற்றி கழகம் வெளிப்படுத்தியுள்ள அந்த கொடியில் இருக்கின்ற சின்னமான யானை சின்னம் ஏற்கனவே நாங்கள் இருக்கின்ற பகுஜன் சமாஜ் கட்சி சின்னமாக பயன்படுத்தி வருகின்றோம். தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் போட்டியிட்டு ஏற்கனவே உத்திரப்பிரதேசத்தில் நான்கு முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் தங்களது கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி அவர்கள். தவேக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தி உள்ளது என்பது இது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிரானது என்று சொன்னால் ஏற்கனவே ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை எந்த விதத்திலும் மற்ற கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று தெரிந்திருந்தும், தலைமை தேர்தல்   ஆணையத்தின் விதிமுறைகள் இருந்த பின்பு கூட அதை அவர்களுக்கு யாரும் தெரியவில்லையான்னு தெரியல,  அல்லது அது அவங்களுக்கு அது குறித்து யாரும் தெரிவிக்கலையா என்று தெரியவில்லை. தங்களது  சின்னத்தை அவங்க கொடியில பயன்படுத்தி இருக்காங்க. இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை ஏற்கனவே கண்டனம்  தெரிவித்து இருக்கிறார்கள்.  இந்த நிலையில் இது மக்கள் மத்தியிலே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
அதனால் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இருக்கின்ற அந்த யானை சின்னத்தை அவர்கள் மாற்ற வேண்டும்,  மாற்றமில்லை என்று சொன்னால் மாநில தலைமை அதற்கு உகந்த சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்து அதனை மாற்ற வைப்போம் என்பதை நாங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கும் விஜய் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி அறிமுகப்படுத்திய அன்றே தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் மாநில கமிட்டி தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இருக்கின்ற யானையை மாற்ற வேண்டும் என்று கண்டனத்தையும் அதற்கான அறிவிப்பும் அறிவித்த பின்பு கூட இன்னமும் விஜய் தரப்பிலிருந்து அதற்கான விளக்கங்களோ அல்லது அது எப்போது நீக்கப்படும் அல்லது எதற்காக பயன்படுத்தப்படுகின்றன அந்த விவரத்தை  தெரிவிக்காமல் உள்ளார்கள். இதை பார்க்கின்ற போது அரசியல் கத்துக் குட்டியாக இருக்கின்ற விஜய் அவர்களுடைய அந்த தனத்தை தான் இந்த நிலை காண்பிக்கின்றது என்றும் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் தமிழக வெற்றிக் கழக தலைமைக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தங்களுக்கு சொந்தமான யானை சின்னத்தை தமிழக வெற்றிக்கழகம் பயன்படுத்துவது தவறு என்பதை சுட்டி காண்பித்து உடனடியாக அந்த யானையை நீக்க வேண்டும் என்பது நாங்கள் கோரிக்க வைக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.


வியாழன், 22 ஆகஸ்ட், 2024

நாமக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். யாதவ மக்கள் இயக்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.

நாமக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். யாதவ மக்கள் இயக்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நாமக்கல் மாவட்டம் சத்திய நாயகன் பாளையம் பகுதியை சேர்ந்த தஷ்மிதா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக அல்ல.... யாதவ மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிக்கை.

நாமக்கல் மாவட்டம் சத்தியநாயகன் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமி தஷ்மிதாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை முயற்சி செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சேலத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் இறந்து போன சிறுமி தஷ்மிதாவிற்கு மூன்று லட்ச ரூபாய் எனவும், மற்றவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் எனவும் நிவாரணம் அறிவித்தார். இது போதுமானது அல்ல. சிறுமி தஸ்மிதா சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு 10 லட்ச ரூபாய் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. 
குழந்தையின் பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். அன்றாடம் கட்டிட வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருபவர்கள். ஆகவே தமிழக முதலமைச்சர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தஷ்மிதா என்ற சிறுமிக்கு நிவாரணத் தொகையாக 25 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் எந்த விதத்திலும் தப்பிவிடக் கூடாது. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை தமிழகத்தில் இனி எந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இந்த நிலை வந்து விடக்கூடாது என யாதவ மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிக்கை வாயிலாக தமிழக முதல்வரை கேட்டுக்  கொள்வதாக கோரிக்கை வைத்துள்ளார்.
ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன், நவரத்தின மாலை திருடியவர் கைது

ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன், நவரத்தின மாலை திருடியவர் கைது

கோவை மாவட்டம் ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 51). இவர், கடந்த 29ம் தேதி மன்னார்குடி- கோயமுத்தூர் செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். ரயில் ஈரோடு ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அவருடைய இரண்டு செல்போன்கள், நவரத்தின மாலை, நவரத்தின கற்கள் வைத்த மோதிரம் ஆகிய திருட்டு போனது.

இதுகுறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஈரோடு ரயில் நிலைய நடைமேடை மற்றும் ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள பூங்கா அருகில் ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார்.

அவரைப் பிடித்து விசாரித்த போது அவர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், 2வது தெருவைச் சேர்ந்த சங்கர் பாண்டியன் (வயது 48) என்பதும், சண்முகவேலிடம் இருந்து செல்போன்கள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 செல்போன்கள், நவரத்தின மாலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், சங்கர பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சிறையில் அடைத்தனர்.