செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

சேலத்தில் நடைபெற்ற மாநகர மைய தடகளப் போட்டியில் கலந்து கொண்டேன் ஈட்டி எரிந்து சாதனை படைத்த வீராங்கனை.... சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படிக்கும் இந்த வீராங்கனைக்கு விரைவில் அதற்கான பயிற்சி பெற்று ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வாங்கித் தருவது மட்டுமே எனது குறிக்கோள் என்று காவல்துறை பெண் அதிகாரியின் மகள் சூளுரை சேலத்தில்.

சேலத்தில் நடைபெற்ற மாநகர மைய தடகளப் போட்டியில் கலந்து கொண்டேன் ஈட்டி எரிந்து சாதனை படைத்த வீராங்கனை.... சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படிக்கும் இந்த வீராங்கனைக்கு விரைவில் அதற்கான பயிற்சி பெற்று ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வாங்கித் தருவது மட்டுமே எனது குறிக்கோள் என்று காவல்துறை பெண் அதிகாரியின் மகள் சூளுரை சேலத்தில்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் நகர்புற மைய தடகள போட்டிகள். 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஈட்டியர்கள் போட்டியில் மாவட்ட மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ள நான் விரைவில் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு இந்தியாவிற்கு நடைபெற உள்ளது ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற்று தருவேன். தமிழக காவல்துறை பெண் அதிகாரியின் சூளுரை.....

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சேலம் கல்வி மாவட்ட நகர் புற மைய தடகள போட்டிகள் சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது. 

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நகர்ப்புற மைய தளங்களை போட்டியில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களுக்கு மூன்றாயிரம் மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் ஹிட்டல்ஸ் ஓட்டம், ஹிட்டல்ஸ் ஓட்டம், இது தவிர நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 
இதில் பங்கேற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிக்காக முயற்சித்தனர். இந்த போட்டிகளைத் தவிர வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தடகள போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்று போட்டி அமைப்பாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொண்டது குறித்து சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி வீராங்கனை ரித்திகா கூறுகையில் மாவட்ட மாநில அளவில் பல்வேறு சாதனைகளை இந்த ஈட்டி எறிதல் போட்டியில் நான் பல்வேறு சாதனைகளை படைத்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளேன் என்றும் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றுள்ள இந்த குறுமையை போட்டியில் கலந்து கொண்டது நான் பெருமையாக கருதுகிறேன் என்றும், விரைவில் அதற்கான அனைத்து பயிற்சிகளையும் எடுத்து விரைவில் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் சேர்ப்பது மட்டுமே எனது குறிக்கோள் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் வீராங்கனை ரித்திகா.
இந்த போட்டியில் நகர்ப்புற மைய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் உட்பட சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் உட்பட ஒவ்வொரு பள்ளியின் உடற்கல்வி இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.



திங்கள், 26 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ஈரோட்டில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). இவர், ஈரோடு அருகே உள்ள பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் பேரில், போலீசார் சுந்தரமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (28ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (28ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28ம் தேதி) புதன்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி புதிய, பழைய பேருந்து நிலைய பகுதிகள், ரோஜா நகர், எஸ்.என்.பி. நகர் மற்றும் காங்கேயம் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

ஈரோடு தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டைசுற்றிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி மாத முதல் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று (26ம் தேதி) நடந்தது.
இதையொட்டி, கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆண், பெண் பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று தங்கள் கைகளாலேயே ஸ்வர்ண லிங்கத்துக்கும், பைரவருக்கும் பாலாபிஷேகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில், பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. அதேபோல், 39 அடி உயரம் கொண்ட கால பைரவர் சிலைக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடுமுடியில் 80 பேரிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன மேலாளர்

கொடுமுடியில் 80 பேரிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன மேலாளர்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடக்கு புது மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கிரெடிட் அக்சஸ் கிராம் லிமிடெட் நிறுவனத்தின் கோட்ட மேலாளர் பன்னீர்செல்வம் (வயது 38) என்பவர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் எங்கள் நிறுவனத்தில் ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொடுமுடியில் இயங்கிய மதுரா மைக்ரோ நிதி நிறுவனம் எங்கள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் கொடுமுடி கிளை மேலாளர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோகுல் (வயது 27) இணைப்புக்கு பிறகும் பணியில் தொடர்ந்தார்.

இந்நிலையில் எங்கள் குழுவினர் கணபதிபாளையம், எம்.ஜி.ஆர் நகர், ஊஞ்சலூர், சாமிநாதபுரம், கொடுமுடி மையங்களில் தணிக்கை செய்த போது கோகுல் பல்வேறு வகையில் ரூ.27.49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். எனவே கோகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, கோகுல் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 80 பேர் மோசடி புகார் செய்துள்ளனர். 28 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதில் 20 பேரிடம் விசாரித்து ஆவணங்களை பெற்றுள்ளோம்.

மீதி நபர்களிடம் ஆவணங்களை பெறும் பணி நடந்து வருகிறது. ஆவணங்கள் பெற்றவுடன் ஆதாரத்துடன் கோகுலை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (27ம்‌ தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (27ம்‌ தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பெரியாண்டிபாளையம், அளுக்குளி, கொடிவேரி, பெரும்பள்ளம், வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (27ம் தேதி) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை அருகே உள்ள பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ்.

கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடை புதூர், ஒட்டர்கரட்டுபாளையம், வெங்கமேடுபுதூர், சத்தி பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூலவாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் மற்றும் போடிசின்னாம்பாளையம்.

கொடிவேரி, பெரும்பள்ளம், வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிப்புதூர், டி.ஜி.புதூர், கொண்டப்பநாயக்கன்பாளையம், ஏ.ஜி.புதூர், சின்னகுளம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடகனல்லி, அத்தியூர், சந்தைக்கடை, வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசகுட்டை. வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கோட்டுவீராம்பாளையம், கொங்கு நகர், அக்கரைகொடிவேரி, சிங்கிபாளையம் மற்றும் காசிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரோட்டில் பெண் போலீஸ் கணவரை கடத்தி லாட்ஜில் அடைத்து தாக்கிய கும்பல்: ஒருவர் கைது

ஈரோட்டில் பெண் போலீஸ் கணவரை கடத்தி லாட்ஜில் அடைத்து தாக்கிய கும்பல்: ஒருவர் கைது

ஈரோடு ரங்கம்பாளையம் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 53). இவருடைய மனைவி வசந்தி. இவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். சசிகுமாரும், வசந்தியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சசிகுமார் அவசர தேவைக்காக தனது காரை அடமானம் வைத்து பணம் பெற ஈரோடு சோலார் அருகே உள்ள 46 புதூர் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் (வயது 44) என்பவரை அணுகினார். மதன்குமார் தஞ்சாவூரை சேர்ந்த அசரப் என்பவரிடம் அழைத்து சென்று காரை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுத் தந்துள்ளார்.

இதையடுத்து, சசிக்குமார் சில நாட்கள் கழித்து காரை திரும்ப பெறுவதற்கு பணத்துடன் மதன்குமாரை அணுகியுள்ளார். அதற்கு அவர் அசரப்பை நேரில் சந்தித்து காரை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அசரப்பை சசிகுமார் அணுகியபோது அந்த காரை வேறு ஒருவரிடம் அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது.

இதனால் சசிகுமார் தன் காரை பெற்று தருமாறு மதன்குமாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சசிகுமார் நேற்று முன்தினம் ஜீவா நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் மதன்குமார் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் வந்தனர். பின்னர் அவர்கள் சசிகுமாரை காரில் கடத்திக்கொண்டு விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் அவரை ஈரோடு செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து மதுவை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றி குடிக்க வைத்து தாக்கி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிய சசிகுமார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர், இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மதன்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.