வெள்ளி, 6 செப்டம்பர், 2024

சேலத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் பூவுலகின் மேல் ஸ்ரீ சிவசக்தி கணபதி அலங்காரம்.....

சேலத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் பூவுலகின் மேல் ஸ்ரீ சிவசக்தி கணபதி அலங்காரம்.....

 சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் பூவுலகின் மேல் ஸ்ரீ சிவசக்தி கணபதி அலங்காரம்.....வின்னுலக்தில் விநாயக பெருமான் தனது தாய் தந்தையருடன் நடனம் ஆடுவது  போல தத்ருபமாக அமைக்கப்பட்டு இருந்த அலங்காரம்  பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம்.....

இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி, இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள அணைத்து இந்துக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக வட மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்களுக்கு மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது, எலைட் அசோசியேஷன் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 40  ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடி வருகின்றனர், ஒவொரு ஆண்டும் பல்வேறு வடிவங்களில் புராண இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபட்டு கொண்டாடி வருகின்றனர் குறிப்பகாக கைலாச கணபதி, செல்வகணபதி கண்ணாடி கணபதி, சங்கு கணபதி, பனிலிங்க கணபதி என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை பல லட்ச ருபாய் மதிப்பில் அமைக்கபட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக மூன்று நாட்கள் வைக்கபடுகிறது, அதே போல இந்த ஆண்டும் 44ம் ஆண்டை முன்னிட்டு, இந்த பிரபச்சத்தில் தலைவனான சூரிய பகவானை சுற்றி நவகிரகங்கள் கோள்களாக இருக்கின்றன. இந்த கோள்களில் மனிதர்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பூவுலகும் ஒன்று. நமது பூவுலகமானது வெப்பமானதால் இயற்கை பேரிடர் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.  ஆகையால் அனைத்து தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து கோள்களின் தலைவனாகிய விநாயகப் பெருமானே அணுகி அவர் அனைத்து கோள்களையும் சாந்தப்படுத்தும் வகையில் விநாயகர் தனது பிறந்தநாளில் விண்ணுலகில் பூவுலகின் மேல் தனது தாய் தந்தையுடன் சேர்ந்து நடனமாடி அனைத்து கோள்களையும் சாந்தப்படுத்தி பூமியை வெப்பமயமாக்குதலில் இருந்து தடுத்து பூமியில் உள்ள மக்களை பேரிடர்களில் இருந்து காப்பாற்ற வேண்டி இந்த செயலை நினைவு கூறும் வகையில் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சேலம் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் இன்று மாலை பூவுலகின் மேல் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் தாய் தந்தையுடன் நடனமாடும் சிலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் நடைபெற இந்த சிறப்பு தரிசனத்தை பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் பெற வேண்டுமாய் அந்த சங்கத்தின் செயலாளர் சுவாதி சேகர் கேட்டுக் கொண்டுள்ளார் 
ஆண்டுதோறும் ஒவ்வொரு தலைப்பில் மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விடப்படும் இது போன்ற நிகழ்வு அந்த பகுதி மக்கள் இடையே மட்டுமல்லாமல் சேரமானவரின் பெரும்பாலான பகுதி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. 

சுவாதி சேகர் பேட்டி உள்ளது....

இதுகுறித்து நிகழ்ச்சி அமைப்பாளர் சேகர் கூறும்போது கடந்த மூப்பதி ஏழாம் ஆண்டு  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகிறோம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபடும் அதே போல இந்த ஆண்டும் அமைச்சர்கள் முனிவர்கள் நடுவே ராஜ தர்பார் ஆட்சி செய்வது போல கணபதி அமர்திருபப்து போன்று ராஜாவிடம் யார் கேட்டாலும் குறைவில்லாமல் செய்திருந்தது விண்ணுலகில் நடப்பது போலவே அமைந்திருந்தது. மேலும் வினாயகரே அமைச்சர்களும், முனிவர்களும் போல அமர்ந்திருந்து ஆட்சி புரிவது மண்ணுலகில் அமைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பாக்கியமாக் உள்ளது என்றும் செல்வங்களை வழங்கக்கூடிய விநாயகரை குறிப்பாக ராஜா வேடத்தில் அமர்ந்திருந்து வேண்டிய செல்வங்களை வழங்க கூடிய ராஜாவாக உள்ள கணபதியை பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்று செல்ல வேண்டும் என கேட்டுகொண்டார்.


ஈரோடு: விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல்

ஈரோடு: விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல்

விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என ஒன்றிய அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்று ஈரோட்டில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறினார்.

 ஈரோட்டில் இன்று (6ம் தேதி) சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட குழு அலுவலக திறப்பு விழா வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கட்சியின் அகில இந்திய தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார்.

மேலும், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி குறித்து ஊடகங்களில் குறிப்பிடுவது போல அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைந்து கட்சிப் பணிகளுக்கு திரும்புவார்.

வன வளத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க, புலிகள் காப்பக பகுதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களை வெளியேற்றும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் சரணாலயத்தில் வசிக்கும் 25 ஆயிரம் மலைவாழ் மக்களை வெளியேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் கடிதம் அனுப்பி உள்ளது. வனத்தின் உள்பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு மக்களற்ற காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இதனை செய்து வருகிறது.

இதற்காக, வன பாதுகாப்பு திருத்த சட்டம் 2023ஐ கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக கனிம வளம் மற்றும் வன வளம் பெரிய நிறுவனங்களுக்கு வழங்க வழிவகை செய்கிறது. எனவே, புலிகள் காப்பகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். காலம் காலமாக அங்கு வசித்த மக்களை வெளியேற்றுவது சட்டவிரோதமானது.

மேலும், இது வன உரிமை சட்டம் 2006க்கு எதிரானதாகும். 1972 வனச் சட்டத்தின் படி அந்த மக்களின் ஒப்புதல் பெறாமல் அவர்களை வெளியேற்றுவது தவறான நடவடிக்கையுமாகும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும், இதற்காக ரூ. 14 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.

இதற்காக, சில நாட்களுக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவையில் 7 புதிய திட்டங்களை அறிவித்திருப்பதும், விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என்பது சாத்தியமற்றது. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும். அதைத் தவிர்த்து இது மாதிரியான செயல்கள் அவர்களை ஏமாற்றும் செயலேயாகும்.

ஏற்கனவே, ஒன்றிய அரசு நிறைய அறிவிப்புகளை இதுபோல் வெளியிட்டுள்ளது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போதைய அறிவிப்பும் அதுபோலத் தான் இருக்கும். தமிழ்நாட்டில், காலாவதியான சுங்கச்சாவடிகள் விதிமுறைகளுக்கு மாறாக இயங்கி வருகின்றன. அவற்றை ஒன்றிய அரசு அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு புதிய வனக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், அதில் மலைவாழ் மக்கள் நலனை முன் வத்து செயல்படும் அமைப்பினரை இடம் பெறச் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் அதில் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வனக் கொள்கையை உருவாக்குவதில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை இடம்பெறச் செய்யும் வகையில் மலைவாழ் மக்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளுக்கு அதில் உரிய இடத்தை அரசு தர வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை அரசு நிச்சயம் பரிசீலனை செய்ய வேண்டும்.

வாச்சாத்தி வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி ஓராண்டாகியும் அதில் பல அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக பாதிக்கப்பட்ட 18 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை தரப்பட வேண்டும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அந்த கிராம மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும். அப்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி மக்களின்றி, 18 குடும்பத்தினர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இப்பேட்டியின்போது சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி. பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
ஈரோடு மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை : அமைச்சர் தொடங்கி வைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை : அமைச்சர் தொடங்கி வைப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனம் மற்றும் அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 21 வாகனங்களின் சேவையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாம இன்று (6ம் தேதி) தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 2 கால்நடை பன்முக மருத்துவமனைகள், 6 கால்நடை மருத்துவமனைகள், 106 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 24 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 10,52,285 கால்நடைகள் மற்றும் 61,87,054 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டம் கால்நடை பன்முக மருத்துவமனைகள், மொடக்குறிச்சி, பவானி, தாளவாடி, அந்தியூர், பெருந்துறை வட்டம் சென்னிமலை, கொடுமுடி வட்டம் கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவமனைகள் என 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், இன்று (6ம் தேதி) 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்த்திகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனத்திற்கு மருந்துகள், பணியாளர் ஊதியம், தொலைபேசி கட்டணம், எரிபொருள் மற்றும் இதர செலவினங்களுக்காக ஒரு மாதத்திற்கு ரூ.1.63 லட்சம் வீதம் 7 வண்டிகளுக்கு ரூ.11.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளில் தலா 1 கால்நடை உதவி மருத்துவர்,1 கால்நடை உதவியாளர், 1 ஓட்டுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ ஊர்திகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், 1962 அழைப்பு மையம் (கால் சென்டர்) மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் 14 வாகனங்கள் என மொத்தம் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 21 வாகனங்களின் சேவையினை தொடங்கி வைத்து வாகனங்களின் சாவியை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் பழனிவேல், ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கவின் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.1.30 லட்சம் பறிமுதல்

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.1.30 லட்சம் பறிமுதல்

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்தனர். 
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரியாக பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (6ம் தேதி) அவர் வழக்கமான அலுவலக பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இவ்வலுவலகத்திற்குள் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராஜேஸ் மேற்பார்வையில் ஆய்வாளர் ரேகா தலைமையில் ஆய்வுக்குழு ஆய்வாளர் சதீஷ் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென நுழைந்தனர்.

பின்னர், அங்கிருந்த இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேற விடாமல் அமர வைத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பின் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பொறுப்பு மோட்டார் வாகன ஆய்வாளர் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரனின் வலது கரமாகவும், அவரின் தனிப்பட்ட உதவியாளராகவும் செந்தில் என்ற நபர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. 

மேலும், அவரிடம் கத்தை கத்தையாக லஞ்சமாக பெறப்பட்ட ரொக்க பணமும் அந்த பணத்துடன் எந்த வாகனத்திற்கு எவ்வளவு தொகை என்ற விபரம் அடங்கிய ஆவணங்களையும் இருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

இதனையடுத்து பொறுப்பு அதிகாரியான மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர், அங்கிருந்த இடைத்தரகர்களிடம் இருந்து கைப்பற்றிய லஞ்சப் பணத்தை மொத்தமாக எண்ணிப் பார்க்கையில் அதில், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, லஞ்சப் பணமாக பிடிபட்ட தொகையினை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த பணம் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 5 செப்டம்பர், 2024

ஆப்பக்கூடல் அருகே ரூ.15 ஆயிரம் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை

ஆப்பக்கூடல் அருகே ரூ.15 ஆயிரம் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரிச்சேரி இந்திராநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் தமிழ்செல்வன் (வயது 20) என்பவர் பிரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை திருடினார். 

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வீடு புகுந்து திருடிய தமிழ்செல்வனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.

இதைத்தொடர்ந்து, கோவையில் உள்ள மத்திய சிறையில் தமிழ்செல்வன் அடைக்கப்பட்டார்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஈரோட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஈரோட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

இதுதொடர்பாக, அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வருகிற 6ம் தேதி (வெள்ளிகிழமை), 7ம் தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த தினம் ஆகிய நாட்களில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

எனவே, இவ்வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது: ஈரோடு ஆட்சியர்

பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது: ஈரோடு ஆட்சியர்

இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (5ம் தேதி) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் வரப்பெறும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்களை பெறுவதற்கு மறுக்கக் கூடாது. சட்டபூர்வமான நாணயங்களை ஏற்க மறுப்பது சட்டத்திற்கு எதிரானது.

எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் ஆகியோர் தங்களுக்கு எவரிடமிருந்தும் வரப்பெறும் 10 ரூபாய் நாணயங்களைப் மறுக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.