திங்கள், 9 செப்டம்பர், 2024

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76 ஆவது மகா சபைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா புதிய நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76 ஆவது மகா சபைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா புதிய நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76 ஆவது மகா சபைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா புதிய நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76 ஆவது மகா சபைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா புதிய நிர்வாகிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய அளவில் உள்ள 937 சுங்கச்சாவடிகளில் 486 சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளும் காலாவதியானவை என்றும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் கூறினார். இதனால் 2036 ஆம் ஆண்டு வரை சுங்க கட்டணம் வசூல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் எனவே ஆண்டுக்கு 5 முதல் 7 சதவகிதம் வரை சுங்க கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருக்கும் லாரிகள் பத்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால் வட மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவே நியாயமான போராட்டத்தை முன்னெடுக்க லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சண்முகப்பா கேட்டுக்கொண்டார். 
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டாலும் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று தெரிவித்த சண்முகப்பா இந்த விஷயத்தில் இனி மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றார். காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என சட்டமன்றத்தில் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் சுங்கச்சாவடிகள் மற்றும் டீசல் விலை நிர்ணய விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் லாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து செயல்பட்டால் தமிழகம் இந்திய அளவில் முன்மாதிரியான மாநிலமாக திகழும் என்றும் சண்முகப்பா தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தான் அரசின் கடமை என சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தான் அரசின் கடமை என சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுதான் அரசின் கடமை என சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

சேலம் ரெட்டியூர் நரசோதிபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவில் மற்றும் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் மற்றும் ராஜ கணபதி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். 

இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுதான் அரசின் கடமை என்றார். பரந்தூர் விமான நிலைய  பணிகள் துவங்கி விட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்று கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக   தீர்வு காண வேண்டும் என்றார்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாங்கள் சுட்டிக் காட்டியும் குறைகளை ஆய்வு செய்து சரி செய்வதை விட்டுவிட்டு, எனக்கு எதிராக குறை சொல்லி வருகிறார்கள் என்ற அவர்,  செஞ்சி ராமச்சந்திரன் அ.தி.மு.கவிலிருந்து த.வெ.க விற்கு செல்கிறார் என கூறப்படுகிறது என்ற கேள்விக்கு. அவர் சொன்னாரா? இது வதந்தி. அதிமுக மிகப்பெரிய கடல், ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

வரும் 16ம் தேதி சுங்கச்சாவடி முற்றுகை: மமக ஈரோடு மாவட்ட தலைவர் அறிவிப்பு

வரும் 16ம் தேதி சுங்கச்சாவடி முற்றுகை: மமக ஈரோடு மாவட்ட தலைவர் அறிவிப்பு

வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி கோவையில் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடக்கிறது என மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு மாவட்ட தலைவர் ஏ.சித்தீக் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் சாலை சேவை கட்டணம் என்ற போர்வையில் வழிப்பறி கொள்ளை நடத்திக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. 

அதில் ஒரு பகுதியாக, அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியளவில் கொங்கு மண்டலத்தில் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், மமக நிர்வாகிகள், தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு என்று தெரிவித்துள்ளார்.
சென்னிமலை அருகே தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்த மூகமுடி கொள்ளையர்கள்

சென்னிமலை அருகே தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்த மூகமுடி கொள்ளையர்கள்

சென்னிமலை அருகே தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை சென்னிமலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் - சின்னம்மாள் தம்பதி. இவர்களுக்கு, கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் ரம்யா என்ற மகளும் உள்ளனர். மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அந்தத் திருமணத்தின் ஒரு பகுதியாக இன்று (செப்.8) திருமண பத்திரிகைகள் தயாரான நிலையில், அருகில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று முதல் பத்திரிக்கையை சாமிக்கு வைத்து தரிசனம் செய்து விட்டு வரலாம் என தாயார் சின்னமாளுடன் மகன் கோகுலகிருஷ்ணன் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

தந்தை விஸ்வநாதனும், மகள் ரம்யா ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு, வீட்டிற்குள் நுழைந்து விஸ்வநாதன் அய்யையும் ரம்யாவையும் கத்தி காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாக கூறி பணம் நகைகளை எங்கு வைத்துள்ளீர்கள் என கேட்டு மிரட்டி உள்ளனர்.

உடல் நலம் சரியில்லாத விஸ்வநாதனும், உயிருக்கு பயந்த ரம்யாவும் பணம் பீரோவில் உள்ளது என கூறினர். இதனையடுத்து பீரோவிலிருந்த 5 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கோயிலுக்கு சென்று இருந்த கோகுலகிருஷ்ணனும் தாயார் சின்னம்மாளும் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, தந்தை கோகுல கிருஷ்ணனும் மகள் ரம்யாவும் கட்டிப்போட்டு விட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளிட்டவர்களின் உதவியுடன் சென்னிமலை காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் தந்தை, மகளைக் கட்டிப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் 5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சென்ற சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றி கழகம் எதிர்காலத்தில் மிகப்பெரிய நல்லாட்சியாக தமிழக மக்களுக்கு திகழும். சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர் தமிழில் பார்த்திபன் சூளுரை.

தமிழக வெற்றி கழகம் எதிர்காலத்தில் மிகப்பெரிய நல்லாட்சியாக தமிழக மக்களுக்கு திகழும். சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர் தமிழில் பார்த்திபன் சூளுரை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக வெற்றி கழகம் எதிர்காலத்தில் மிகப்பெரிய நல்லாட்சியாக தமிழக மக்களுக்கு திகழும். சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர் தமிழில் பார்த்திபன் சூளுரை. 

தமிழக வெற்றி கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தும் மாநாடு நடத்துவதற்கான அனுமதியை விழுப்புரம் காவல்துறையினர் வழங்கி நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி  வணிகவளாகம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு உற்சாகமாக கொண்டாடினர். அப்போது பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொண்டாட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கட்சியின் பெயரையும் கட்சிக் கொடியையும் அறிவித்த பிறகு, கட்சியின் பொதுச் செயலாளர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தங்களது கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று விண்ணப்பத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் கூறியதை தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக சேலத்தில் நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் இந்த 2024 ஆம் ஆண்டு தங்களுக்கு முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறோம் என்றும் காரணம் தலைவர் கட்சியை அறிவித்தது, கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது விழுப்புரத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியது என முப்பெரும் விழாவாக கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் தங்களது கட்சி தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நல்லாட்சியாக அமைவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறிய தமிழன் பார்த்திபன் இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக உள்ளார் என்றும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 
இந்த  நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.