செவ்வாய், 10 செப்டம்பர், 2024

முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள். அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள். அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள். அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

தமிழக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் இன்று தொடங்கியது. சேலம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்கி வரும் இருபதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியின் துவக்க விழா சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது சேலம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பிருந்தா தேவி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா அருள் மற்றும்  மாநகர மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து கூடைப்பந்து மேசைப்பந்து செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமில்லாமல் தடகள போட்டிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலும், 
சேலம் ஒய் எம் சி ஏ அரங்கில் கேரம் விளையாட்டுப் போட்டியும் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் மொத்தமாக கேரம் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 457 மாணவர்களும் இரட்டையர் பிரிவில் 111 மாணவர்களின் மொத்தம் 768 பேர்கள் விண்ணப்பம்  செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக ஒற்றைய பிரிவில் 84 மாணவர்களும் 2000 பிரிவில் 39 மாணவர்களும் என சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அகில இந்திய கேரம் கழக துணைத் தலைவரும், தமிழ்நாடு கேரம் கழக தலைவருமான ஆமாம் துவக்க வைத்த இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி கேரம் போட்டிகளின் விதிமுறைகளை பின்பற்றி விளையாடியது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. 
இந்த போட்டிக்கான துவக்க நிகழ்ச்சியில் ஒய் எம் சி ஏ அரங்கத்தின் ஜோஷ், சேலம் மாவட்ட கேரம் கழக செயலாளர் டானியல், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் உட்பட உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஹாக்கி போட்டி சிறுமலர் மேல்நிலைப் பள்ளியிலும் இறகுப்பந்து போட்டி சேலம் மாநகராட்சி கிளப் கோட்டையிலும், கைப்பந்து ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கால்பந்து போட்டியில் சென் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கிரிக்கெட் போட்டி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதற்கான முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகைகளுடன் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளை  தேர்ந்தெடுத்து ஒரு நல்ல ஒரு அணியை சேலம் மாவட்டத்தில் உருவாக்கவும் இந்த சேலம் மாவட்ட அணி விரைவில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 9 செப்டம்பர், 2024

ஈரோடு மாநகரில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம்

ஈரோடு மாநகரில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம்

ஈரோடு மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடந்த 7ம் தேதி இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 134 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு 3 நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று (10ம் தேதி) செவ்வாய்க்கிழமை மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
ஈரோடு சம்பத் நகர் நால்ரோட்டில் இருந்து விநாயகர் ஊர்வலம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது. பின்னர், பெரியவலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர். கே.வி சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், கருங்கல் பாளையம் போலீஸ் சோதனை சாவடி வழியே காவிரி ஆற்றின் பழைய பாலம் பகுதிக்கு சென்றடைகிறது. அதன் பின்னர் அங்கு ஒவ்வொரு சிலையாக ஆற்றில் கரைக்கப்படுகிறது.

மேலும், இந்த ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. ஊர்வலத்தின் போது மட்டும் சில மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்று பாதையில் திருப்பி விடப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.11) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.11) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், மேட்டுக்கடை, சூரியம்பாளையம் மற்றும் பவானிசாகர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்.11) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையம்:- 

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- காந்திநகர், பழனியப்பாவீதி, ஈ.பி.காலனி, பெருந்துறை மெயின் ரோடு, பாலசுப்பிரமணியன் நகர் மற்றும் சின்னமுத்து வீதி.

மேட்டுக்கடை துணை மின் நிலையம்:- 

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு மேல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம்நகர், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லசரம்பட்டி நால்ரோடு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி. நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர் ரோடு, தொட்டிபாளையம், ராயபாளையம் மற்றும் சிந்தன் குட்டை.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தோடு, சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, அரசு பொறியியல் கல்லூரி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர், பாலாஜிநகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன்நகர், ஊத்துகாடு, பெரியபுலியூர் மற்றும் சேவாக்கவுண்டனூர்.

பவானிசாகர் துணை மின் நிலையம்:- 

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சாத்தரக்கோம்பை, ராமபைனூர், புதுப்பீர்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டடூர் மற்றும் பகுத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக கேர்மாளம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று இன்று மாலை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தியாகராஜ் என்பவர் ஓட்டினார்.
இந்நிலையில், கேர்மாளம் அருகே உள்ள வைத்தியநாதபுரம் புதுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்தும், எதிரே கேர்மாளம் செக்போஸ்ட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி பயணிகளுடன் கவின்குமார் என்பவர் ஓட்டி வந்த அரசுப் பேருந்தும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், சத்தியமங்கலம் நோக்கி வந்த அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியும், கேர்மாளம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க முகப்பு விளக்குகளும் உடைந்து சேதமடைந்தது. விபத்தில் இரண்டு பேருந்து ஓட்டுநர்களுக்கோ, பயணம் செய்த பயணிகளுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை.
ஈரோட்டில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஜெம் மருத்துவமனை திறப்பு

ஈரோட்டில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஜெம் மருத்துவமனை திறப்பு



காஸ்ட்ரோஎன்ட்ராலஜி மற்றும் அதிநவீன லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கான ஆசியாவின் முதல் பிரத்தியேக டெரிசியரி ஹெல்த் கேர் மையமாக விளங்கும் ஜெம் மருத்துவமனை நேற்று ஈரோட்டில் அமைந்துள்ள அதன் புதிதாக மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தை திறந்தது.

நம்பர். 5. முத்து கருப்பன் தெரு, காந்தி நகர், ஈரோடு, தமிழ்நாடு 638009 என்ற முகவரியில் உள்ள இந்த புது மருத்துவமனையை ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.சி.பழனிவேலு நேற்று நடைபெற்ற நிகழ்வில் திறந்து வைத்தார்.

காஸ்ட்ரோ என்ட்ராலஜி மற்றும் அதிநவீன லேப்ராஸ்கோபிக்கான இந்தப் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பல நவீன வசதிகளை கொண்டது. ஜீரண மண்டல ஆரோகியம் சம்மந்தப்பட்ட அனைத்து மருத்துவப்பிரிவுகளிலும் ஒரு புதிய முத்திரையை பதிக்கும் வண்ணம் இம்மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.சி.பழனிவேலுவுடன் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.எஸ்.அசோகன், இயக்குநர்கள் டாக்டர்.பி.செந்தில்நாதன் மற்றும் டாக்டர்.பி.பிரவீன் ராஜ் மற்றும் எக்ஸ்சிகியூடிவ் இயக்குனர் பிரியா செந்தில்நாதன் அவர்களும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அதன் முன்னோடி முயற்சிகளினால் பேரியாட்ரிக் ஹெபடோபிலியரி, அப்பர் ஜி.ஐ. கோலோரெக்டல் மற்றும் ஜி.ஐ. புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளில் சப் ஸ்பெஷாலிட்டியை கொண்ட இந்தியாவின் ஒரே மையமாக உள்ளது.பின்னர் இதனுடன் சிறுநீரகவியல், கைனகாலஜி துறைகளும் சேர்க்கப்பட்டன.

இதுவரை 10,000 துக்கும் அதிகமான லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது ஜெம் மருத்துவமனை. அத்துடன் 36,000துக்கும் அதிகமான நபர்களுக்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சைகளை செய்துள்ளது. இந்நாள் வரை 75,000துக்கும் அதிகமான மக்களின் நல்வாழ்வுக்கு தேவைப்படும் சிகிச்சைகள் வழங்கி அவர்களின் வாழ்க்கையில் நல்லதொரு தாக்கத்தை ஜெம் மருத்துவமனை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புது மருத்துவமனையின் திறப்பு விழாவின் போது பேசிய ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, நோயாளிகளை முன்னிலை படுத்தி வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவத்துறையில் செய்யவேண்டிய புது புது கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
 தொடர்ந்து அவர் பேசுகையில்

புதிதாக மேம்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நோய் கண்டறியும் மருத்துவ கட்டமைப்புகள், சிறப்பு சிகிச்சை கட்டமைப்புகள் மற்றும் நோயாளிகளை முன்னிலை படுத்தி இயங்கும் வசதிகள் என அனைத்தும் உள்ளது.

மருத்துவ அறிவியல் துறையில் தற்போது உள்ள எல்லைகளை கடந்து மக்களுக்கு உயர்ந்த தரம் கொண்ட சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் விளங்கும்.

ஜெம் மருத்துவமனையின் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் நோயாளிகள் மீதான அதன் அக்கறை கலந்த அணுகுமுறை இரண்டுமே மருத்துவத்துறையில் அதற்கிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைகிறது .


தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ள இந்த புது மருத்துவமனை நோயாளிகளுக்கு உயர்ந்த தரம் கொண்ட மருத்துவ சேவைகளை வழங்குவதுடன் ஜெம் மருத்துவமனையை காஸ்ட்ரோஎன்டேரோலாஜி துறையில் தொடர்ந்து ஒரு முன்னணி மருத்துவமனையாக நிலைக்க வழிவகுக்கும். 
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் 10,308 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.79.95 கோடி வங்கி கடன் வழங்கிய அமைச்சர்

ஈரோடு மாவட்டத்தில் 10,308 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.79.95 கோடி வங்கி கடன் வழங்கிய அமைச்சர்

ஈரோடு மாவட்டத்தில் 10,308 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.79.95 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை அமைச்சர் முத்துசாமி இன்று (9ம் தேதி) வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரம், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 881 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.79.95 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்தார். 


அதனைத் தொடர்ந்து, இன்று (9ம் தேதி) ஈரோடு மாவட்டத்தில் 881 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 10,308 உறுப்பினர்களுக்கு ரூ.79.95 கோடி மதிப்பீட்டிலும், தனிநபர் தொழில் முனைவோர் கடனாக 20 நபர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 23 உறுப்பினர்களுக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.80.36 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில், ஊரக பகுதிகளில், 8,670 சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 6,105 சுய உதவிக் குழுக்களும் என மொத்தம் 14,775 சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதில் 2021-2022 ஆம் ஆண்டில் 8,051 சுய உதவிக் குழுக்களை சார்ந்த 88,561 உறுப்பினர்களுக்கு ரூ.495.19 கோடியும், 2022-2023 ஆம் ஆண்டில் 11,769 சுய உதவிக் குழுக்களை சார்ந்த 1,39,120 உறுப்பினர்களுக்கு ரூ.751.36 கோடியும், 2023-2024 ஆம் ஆண்டில் 14,315 சுய உதவிக் குழுக்களை சார்ந்த 1,68,545 உறுப்பினர்களுக்கு ரூ.844.11 கோடியும் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.


2024-2025 ஆம் ஆண்டில் 15,034 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1109.00 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 7,476 சுய உதவிக் குழுக்களை சார்ந்த 76,175 உறுப்பினர்களுக்கு ரூ.500.53 கோடியும் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 2021 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.2591.19 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

வங்கி கடனுதவிகள் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வங்கி கடனுதவிகள் பெற்ற மகளிர் தொழில் முனைவோராக செயல்பட்டு, வாழ்வாதார மேம்பாடு அடைவதுடன், குடும்பத்தின் வருமானத்தினையும், நாட்டின் வருமானத்தினையம் உயர்த்தக்கூடிய வகையில் செயல்பட வேண்டும்.

மேலும், அரசு செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்து மகளிர் வாழ்வு முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு, கடன் இணைப்புகள் வழங்கிய வங்கியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரிய அலுவலர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 11 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு சுமார் ரூ.4,000 கோடி முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5,000 நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு பெறவுள்ளனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, விழா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்பு பொருட்களை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரகாஷ், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, நகராட்சித் தலைவர்கள் சிந்தூரி இளங்கோவன் (பவானி), ஜானகி ராமசாமி (சத்தியமங்கலம்), ஜனார்த்தனன் (புன்செய் புளியம்பட்டி), பேரூராட்சி தலைவர்கள் திலகவதி (கொடுமுடி), ஜெயலட்சுமி (கூகலூர்), ராதாமணி பாலசுப்பிரமணி (அவல் பூந்துறை), உதவி திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.