சனி, 14 செப்டம்பர், 2024

ஈரோடு மாவட்ட காவிரிக்கரை, வாய்க்கால், குளம், ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்ட காவிரிக்கரை, வாய்க்கால், குளம், ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்ட காவிரிக்கரை, வாய்க்கால், குளம், ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் காவிக்கரை, எல்பிபி வாய்க்கால், குளம் மற்றும் ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (14ம் தேதி) தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் குளூர் ஊராட்சி வேலாங்காட்டு வலசு எல்.பி.பி. வாய்க்கால் அருகில் தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம், ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைந்து காவிரிக்கரையில், நீர்நிலைகளில் 1 கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது,

பனை விதைகள் நடும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி குளூர் ஊராட்சியில் இப்பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பனை மரங்கள் அனைத்து காலத்திலும் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும்.


இந்த, பனை விதைகள் அனைத்தும் நாளை மரங்களாகும் போது, இந்த ஊருக்கும். இப்பகுதி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், இன்று விடுமுறையாக இருந்த போதிலும், மாணவ, மாணவியர்கள் பனை விதைகள் நடும் பணிக்கு மிகவும் ஆர்வமாக வந்துள்ளனர். இதில் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.என்.சி.கல்லூரி போன்ற பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பனை விதைகள் நடும் நெடும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை தொடர்ந்து பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக் கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெறுகிறது.

இதில், ஏற்கனவே தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் நம்முடைய மாவட்டத்திலும் இப்பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியினை காவேரி கரையோரம் மட்டுமல்லாது, அனைத்து ஊராட்சிகளிலும் குளம் கரைகளிலும் இந்த பனை விதைகள் நடப்பட உள்ளது. பனை விதைகளை நடுவது மட்டுமல்லாது, இதனை தொடர்ச்சியாக நாம் பாதுகாக்க வேண்டும்.


மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் பனை விதைகள் நடும் பணி நடைபெறுகிறது. எனவே, அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நடப்படும் பனை விதைகள் மரமாகின்ற வரையில் தங்களின் பொறுப்பாக கருதி பாதுகாக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும் பொழுது, பசுமையாக இருக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம், எல்.பி.பி வாய்க்கால், குளம், குட்டை, ஏரி கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் இப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர். ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், உதவி இயக்குநர் (தோட்டக்கலை துறை) சிந்தியா உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள். தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்: ஈரோடு மாவட்டத்தில் 6,532 பேர் ஆப்சென்ட்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்: ஈரோடு மாவட்டத்தில் 6,532 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் - 2 (குரூப் II மற்றும் IIஏ பணிகள்) அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று (14ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. 


அதன்படி, ஈரோடு மாவட்டம் தெற்குப்பள்ளம் தி பாரதி வித்யா பவன் பள்ளியில் (சிபிஎஸ்சி) அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய 3 வட்டங்களில் 87 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இத்தேர்விற்கென 3 கண்காணிப்பு அலுவலர்கள், 3 பறக்கும் படை அலுவலர்கள், 87 ஆய்வு அலுவலர்கள், 19 நடமாடும் குழுக்கள் உட்பட காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 25,475 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 18,943 பேர் (74 சதவீதம்) தேர்வு எழுதினர். 6,532 பேர் (26 சதவீதம்) தேர்வு எழுத வரவில்லை. மேலும், தேர்வு மையங்களில் தேவையான தடையில்லா மின்சாரம், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இவ்வாறு அவர் கூறினார்.


ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் வருகிற 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 மதுபான விடுதிகள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து 17ம் தேதியன்று முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2,எப்.எல்.3 மதுபான உரிம தலங்கள் மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் உருவம் பொம்மை எரிக்கப்பட்ட வழக்கு. 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் 14 காங்கிரஸ் சார் விடுதலை.

கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் உருவம் பொம்மை எரிக்கப்பட்ட வழக்கு. 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் 14 காங்கிரஸ் சார் விடுதலை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் உருவம் பொம்மை எரிக்கப்பட்ட வழக்கு. 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் 14 காங்கிரஸ் சார் விடுதலை.

சேலத்தில் 22-9-2015 அன்று சேலத்தில் மோடியின் உருவ மொம்மையை எரித்தாக 14.நபா்கள் ஆதாவது முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் விஜய் இளஞ் செழியன்.மோகன் குமாரமங்கலம்
மும்பை அபிரகாம்ராய் மணி.தமிழ்நாடு காங்கிரஸ் கமிடடி மாநில பொதுக்குழு உறுப்பினா் பச்சப்பட்டி பழனிசாமி.
முன்னாள் மாவட்ட தலைவா் மேகநாதன்.பூபதி.வெங்கடேஷ்.அழகுவேல் ஆகியோா் மீது சேலம் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு J.M.வது நீதித்துறை குற்றவியல் நடுவா் நீதி மன்றத்தில் கடந்த 9 .ஆண்டுகளாக நடந்து வந்தது.12-9-2024 தேதி விசாரனைக்கு வந்தது நீதியரச்சா் இந்த வழக்கு சம்மந்தமாக சரியான ஆதாரங்கள் கோா்ட்டில் தாக்கல் செய்யதால் இவா்கள் அனைவரையும் இந்த கோா்ட் விடுதலை செய்கிறது என்று மாலை 4.மணியளவில் திா்ப்பு வழங்கினாா். 
அனைவரும் கட்டி தழுவி மகிழ்ச்சிடைந்தோம். குறிப்பு இதே கோா்ட்டில் 3.ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சா் ரஜேந்திர பாலாஜி அவா்கள் உருவ படத்திற்கு நான் செருப்பு மாலை அனிவித்தாக சேலம் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிலும் நான் குற்றவாளி இல்லை என்று தீா்ப்பு வழங்கப்பட்டது
என்று பெருமையோடு தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார் பச்சைப்பட்டி பழனிச்சாமி.
ஈரோட்டில் செப்.20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் செப்.20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும், 3வது வெள்ளிக்கிழமையன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, செப்டம்பர் 2024 மாத தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறைக் நிறுவனங்கள் 300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளன. 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். 

இந்த வேலைவாய்ப்பு முகாம் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ, 86754 12356, 94990 55942 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ அல்லது erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவல், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பை காண கூடை பந்து போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை.

முதலமைச்சர் கோப்பை காண கூடை பந்து போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

முதலமைச்சர் கோப்பை காண கூடை பந்து போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை.

தமிழக முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் கடந்த பத்தாம் தேதி முதல் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. வரும் இருபதாம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கோப்பை காண போட்டிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித் தனியாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியும் இவர்களை எதிர்த்து சேலம் எமரால்டு வேலி சிபிஎஸ்இ பள்ளி அணிகளும் மோதினர். 
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணியினர் 74 க்கு 32 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் வெற்றி வாகை சூடினர். 
வெற்றி பெற்ற அடியினரை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்திரு. செபஸ்டியன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட், பயிற்சியாளர் சகாதேவன் இவர்களைத் தவிர பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் கூடைப்பந்து அணிக்காக பங்கேற்று வெற்றி வாகை சூடிய மாணாக்கர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
செப்.18ம் தேதி பவானி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

செப்.18ம் தேதி பவானி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். 

இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் பவானி வட்டத்தில் வரும் 18ம் தேதியன்று காலை 9 மணி முதல் மறுநாள் (19ம் தேதி) காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட சேவைகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளார். மேலும், 18ம் தேதி மாலை 4.30 மணிமுதல் 6 மணி வரை பவானி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.