புதன், 18 செப்டம்பர், 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுகிறது: ஈரோட்டில் திருமாவளவன் பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுகிறது: ஈரோட்டில் திருமாவளவன் பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுகிறது என்று ஈரோட்டில் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம் சாதிக் தாயார் சேதியா பேகம் நினைவேந்தல் கூட்டம் ஈரோடு விநாயகா கார்டனில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார், 

இத

னைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுகிறது. இது அதிபர் ஆட்சிக்கு வழி வகுத்து விடும் என்பதால் ஏற்கனவே எங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம்.

ஒருமித்த கருத்து உள்ள இயக்கங்களுடன் சேர்ந்து மேலும் வலுவாக குரல் கொடுப்போம். கோயில்களில் இருந்து இந்து அறநிலையைத் துறை வெளியேற வேண்டும் என்று பாஜக நீண்ட நாட்களாக தெரிவித்து வருகிறது. இந்துக்களின் நலனுக்காகவும் இந்து கோவில்களை நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்காகவும், கோவில்களுக்கு வரும் நிதி முறையாக செலவு செய்யப்படுவதற்காக கோயிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

எனவே, இந்து சமூகத்திற்கு எதிரானது அல்ல. வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக கூறி வருகின்றனர். மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக பொதுவான அறை கூவல் அழைப்பு விடுத்தோம்.‌ இது பொதுவான மக்கள் கோரிக்கை தனிப்பட்ட முறையில் இதுவரை யாருக்கும் கடிதம் எழுதி அழைப்பு விடுக்கவில்லை.

கட்சியில் உயர் நிலையில் உள்ள முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசியதில் திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு அவர்களை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

ஈரோட்டில் வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் வரும் 21ம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வழங்கிடும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ரங்கம்பாளையம், டாக்டர் . ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து இளைஞர்களும் (ஆண், பெண் இருபாலரும்) கலந்துகொண்டு பயன்பெறலாம். இதர விவரங்கள் குறித்து அறிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் தளம்,பூமாலை வணிக வளாகம், குமலன் குட்டை,பெருந்துறை சாலை, ஈரோடு - 638011 என்ற முகவரியிலும், 94440 94274 என்ற கைப்பேசி எண்ணிலும், dpiu_erod@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.19) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.19) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தண்ணீர்பந்தல், நடுப்பாளையம், கணபதிபாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட்-II மற்றும் காவிலிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.19) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலைபாளையம், சங்கராங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல் லாம்பாளையம், பூவாண்டிவலசு மற்றும் புதுப்பாளையம்.

நடுப்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- நடுப்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, மலையம்பாளையம், வடுகனூர், வட்டக்கல்வலசு, கோம்புப்பாளையம், கருமாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், வேலப்பம்பாளையம், குட்டப்பாளையம், கொளாநல்லி, ஆராம்பாளையம், தேவம்பாளையம், கொம்பனைப்புதூர், பனப்பாளையம், கரட்டுப்பாளையம், தாமரைப்பாளையம், காளிபாளையம், மாரியம்மன் கோவில் புதூர், கருத்திபாளையம் மற்றும் கொளத்துப்பாளையம்.

கணபதிபாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஆயிக்கவுண்டம்பாளையம், சாணார்பாளையம், சின்னம்மாபுரம். பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கேயம்பாளையம், பாசூர், பச்சாம்பாளையம், சோளங்கபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்தி காடு வலசு, கொமரம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுரம், களத்துமின்னப்பாளையம், பழனிகவுண்டம்பாளையம், முனியப்பம்பாளையம், வேங்கியம்பாளையம், உத்தண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், மன்னாதம்பாளையம். முத்துக்கவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி. புதூர், கிளாம்பாடி, செட்டிகுட்டைவலசு மற்றும் கணபதிபாளையம். 

பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஊத்துக்குளி ரோடு, எளையாம்பாளையம், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, துளுக்கம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ், மேலப்பாளையம், பி.கே.புதூர், வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம் மற்றும் மாடுகட்டிபாளையம்,

சிப்காட்-II துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, காசிபில்லாம்பாளையம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம் மற்றும் புளியம்பாளையம்.

காவிலிபாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, வடுகம்பாளையம், குப்பன்துறை, லாகம்பாளையம் மற்றும் இருகாலூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

அந்தியூரில் ராட்டின உரிமையாளரிடம் ரூ.15.89 லட்சம் மோசடி செய்தவர் கைது

அந்தியூரில் ராட்டின உரிமையாளரிடம் ரூ.15.89 லட்சம் மோசடி செய்தவர் கைது

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபி (வயது 42). ராட்டின உரிமையாளர். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் ராட்டினம் அமைக்க வந்துள்ளார். அப்போது, கெட்டிசத்திரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 34) என்பவர் ராட்டினத்திற்கு இடம் பிடித்து கொடுத்துள்ளார். 
பின்னர், சபியும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த பிரபாகரனும் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை ராட்டினத்தை நடத்தினர். இதனிடையே, தினமும் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் மாடசாமி ஆகியோர் வந்து சபியிடம் ராட்டினத்தில் வசூலான தொகையை வாங்கிச் சென்றுள்ளனர். 

இந்நிலையில், 11ம் தேதி இரவு கார்த்திகேயன் வந்து வசூலான தொகையை எண்ணி பார்க்கையில் ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 830 ரூபாய் இருந்துள்ளது. இதனையடுத்து, கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக சபியிடம் கூறிவிட்டு சென்றவர் வரவில்லை. இதனால், சபி கார்த்திகேயனை தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச்-ஆப் என்று வந்தது. இதனையடுத்து , கார்த்திகேயன் தலைமறைவானதும், ரூ.15.89 லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, பணம் மோசடி செய்த கார்த்திகேயன் மீது நடவடிக்கை கோரி சபி, அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனை தேடி வந்தனர். இந்த நிலையில், வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை அந்தியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


செப்டம்பர்-17, வன்னிய சமுதாய இட ஒதுக்கீட்டு போராளிகள் நினைவாக தியாகிகள் தினம் அனுசரிப்பு. சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பங்கேற்பு.

செப்டம்பர்-17, வன்னிய சமுதாய இட ஒதுக்கீட்டு போராளிகள் நினைவாக தியாகிகள் தினம் அனுசரிப்பு. சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பங்கேற்பு.

சேலம். 
S.K சுரேஷ் பாபு. 

செப்டம்பர்-17, வன்னிய சமுதாய இட ஒதுக்கீட்டு போராளிகள் நினைவாக தியாகிகள் தினம் அனுசரிப்பு. சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பங்கேற்பு.

வன்னியர் சமுதாய இட ஒதுக்கீட்டு போராளிகள் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அனைத்து நிர்வாகிகளும் தங்களது இளங்கல் முன்பு வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் என்ற பதாகைகள் வைத்து குடும்பத்தினருடன் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இன்று தியாகிகள் தினத்தை ஒட்டி சேலம் மாநகர பாமக செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா.அருள் தனது இல்ல முன்பாக வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் என்ற பதாகையை வைத்து அஞ்சலி செலுத்தினார். 
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தலைமையில் சேலம் நான்கு ரோடு, பெரிய புதூர், சாமிநாதபுரம், சூரமங்கலம் உழவர் சந்தை அருகே, குரங்கு சாவடி, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிகளில் பாமக சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், பசுமைத்தாயக இணை செயலாளர் சத்திரிய சேகர், அருள் பூமாலை மாணிக்கம் கோவிந்தராஜ் திரிசங்கு நடராஜ் மோகன் குமார் வேலாயுதம் வைரவேல் மதி முனியப்பன் கேபிள் மாணிக்கம் பூபதி விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மிலாது நபியையொட்டி சேலத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க பேரணியில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

மிலாது நபியையொட்டி சேலத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க பேரணியில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மிலாது நபியையொட்டி சேலத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க பேரணியில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

மிலாது நபியை முன்னிட்டு சேலத்தில் தன்ஜிமே அஹ்லே சுன்னத் வல் ஜமாத் சார்பில் மத நல்லிணக்க பேரணி நடைபெற்றது. உலக மக்கள் பாகுபாடுகள் ஏதும் இன்றி நல்லிணக்கத்துடன் வாழவும், சாதி மத பேதம் இன்றி, ஏழை பணக்கார பாகுபாடின்றி அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தியும் இந்த பேரணியானது நடைபெற்றது. கோட்டை மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி நாசர்கான் தலைமையில் திரளானோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை ரவுண்டானா வழியாக சென்று முஸ்லீம் கல்விச் சங்கத்தில் நிறைவு பெற்றது.
சேலத்தில் பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் நிறுவனர் டாக்டர் நாகா. அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை.

சேலத்தில் பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் நிறுவனர் டாக்டர் நாகா. அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் நிறுவனர் டாக்டர் நாகா. அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை. 

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள பகுத்தறிவு பகலபர் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு அதிமுக, திமுக, பாமக உட்பட தந்தை பெரியார் பெயரில் செயல்படும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை நிறுவனரும், தேசிய தெலுங்கு சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவருமான டாக்டர் நாக அரவிந்தன் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.