ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டியில் தேங்கி கிடக்கும் புழுக்கள். சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஊர் பொதுமக்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி அரசு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை.

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டியில் தேங்கி கிடக்கும் புழுக்கள். சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஊர் பொதுமக்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி அரசு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டியில் தேங்கி கிடக்கும் புழுக்கள். சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஊர் பொதுமக்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி அரசு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை. 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி, சேலம் மாவட்ட ஆட்சியர், உதவி இயக்குநர் பஞ்சாயத்து, சேலம் வட்டார வளர்ச்சி அதிகாரி- மற்றும் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சேலம் மாவட்டம்- கொண்டப்பநாயக்கன் பஞ்சாயத்துக்குட்பட்ட- டெலிபோன் காலனி, சக்திநகர் பகுதி பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள  மேல்நிலை குடிநீர் தொட்டியில் 
புழக்கள் அதிக அளவில் உள்ளதாலும், மிதந்து வருவதாலும்  குடிப்பதற்கு தகுதியற்ற, சுகாதாரமற்ற குடிநீராக உள்ளது என்றும், இந்த அசுத்தமான குடிநீரின் காரணமாக நோய் கிருமிகள் ஏற்படும்  நிலையில் உள்ளதாகவும் கூறி   பொதுமக்கள்  சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக வார்டு உறுப்பினர் சரவணன் பல முறை பஞ்சாயத்தில் எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்காத கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சுகாதாரமற்ற குடிநீர் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகளும் நோய் தொற்றுகளும் ஏற்பட்டு வருவதாகவும் வருத்தம் தெரிவித்த சரஸ்ராம் ரவி பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் பொதுமக்கள் சார்பாக தெரிவித்துள்ளார்.
கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் எச்சரிக்கை

கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான திட்ட கால்வாயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில், கால்வாயில் திடீரென தண்ணீர் குறைவது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, உயர் அலுவலர்களின் அறிவுரையின்படி, இரவு நேர ஆய்வு பணிகளை உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார் (கவுந்தப்பாடி), தினேஷ் குமார் (கோபிசெட்டிபாளையம்) ஆகியோர் களப்பணியாளர்களுடன் மேற்கொண்டனர். அதன்படி, நேற்று (21ம் தேதி) இரவு 10 மணி முதல் இன்று (22ம் தேதி) மதியம் 1.30 மணி வரை கால்வாயில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளாங்கோவில் கிராமம் அருகில் மழை நீர் வடிகால் குகை வழி பாதையில் சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகள் கால்வாயில் உள்ள தண்ணீரை பிவிசி குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுத்துச் செல்வது கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, பிவிசி குழாய்கள் முழுவதும் அகற்றி, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மொடக்குறிச்சி அருகே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சார்பில் சிறப்பு கூட்டம்

மொடக்குறிச்சி அருகே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சார்பில் சிறப்பு கூட்டம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேரவையின் மாநில பொதுச்செயலாளர் சூரியமூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராாக இருந்தபோது கொண்டு வந்து நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 4 மாவட்ட மக்கள் பயனடையக்கூடிய பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், காவிரி மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

பாசூரில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டால் பாசூர் கதவணை வழியை மட்டும் அல்லாது அந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மின்ம யானம் மற்றும் அந்த வழித்தடத்தை பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாசூர் ரெயில்வே கேட் அருகே உயர்மட்ட பாலம் அமைத்து போக்குவ ரத்தை எளிதாக்க வேண்டும். மொடக்குறிச்சி வழியாக வெள்ளகோயில் வரையில் 4 வழிச்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துத்துள்ளார். 

இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது மொடக்குறிச்சியில் தமிழக அரசு பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் மாவட்டங்கள், ஒன்றியங்கள், நகரங்கள், ஊராட்சிகள், உள்ள கிளைகளை அதிகப்படுத்தி பொறுப்பாளர்களை , நியமிக்க என்பது வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளான பங்கேற்றனர்.
ஈரோட்டில் சலுகை விலையில் ஜவுளி வாங்க குவிந்த இளைஞர்களால் தள்ளுமுள்ளு

ஈரோட்டில் சலுகை விலையில் ஜவுளி வாங்க குவிந்த இளைஞர்களால் தள்ளுமுள்ளு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலையில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் சலுகை விலையில் சட்டை பேண்ட் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த அறிவிப்பின்படி டி ஷர்ட் 50 ரூபாய்க்கும், ஷர்ட் 100 ரூபாய்க்கும், பேன்ட் 250 ரூபாய்க்கும், லேடிஸ் டாப்ஸ் 120 ரூபாய்க்கும் சலுகை விலையில் ஜவுளிகள் விற்பனையானது நடைபெற்றது. 

இந்நிலையில், சலுகை விலையில் விற்கப்படுவதால் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடை முன் குவிந்தனர். மேலும், கடைக்குள் போட்டி போட்டுக் கொண்டு நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு சூழ்நிலை உருவானது. கட்டுக்கடங்காத கூட்டம் ஜவுளிக்கடை முன்பு குவிந்ததால் அங்கு பாதுகாப்பு பணிக்காகவும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும், ஜவுளிக்கடை அமைந்திருக்கக் கூடிய பகுதி பிரதான சாலையாக இருப்பதால் வாகனங்களை சாலையில் நிறுத்தப்பட்டதால் அங்கு பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். சலுகை விலை விற்பனையானது இன்னும் ஒரு வாரம் காலம் கடைபிடிக்கப்படும் என அறிவித்தும் இளைஞர்கள் கடை முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. 


சனி, 21 செப்டம்பர், 2024

அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி விபத்து: 19 பேர் காயம்; எம்எல்ஏ நேரில் ஆறுதல்

அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி விபத்து: 19 பேர் காயம்; எம்எல்ஏ நேரில் ஆறுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் மற்றும் கோவிலூரைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் கூலித் தொழிலாளர்கள் விராலிக்காட்டூர் பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றனர்.

அந்த சரக்கு வாகனம் எண்ணமங்கலம் - மூலக்கடை செல்லும் சாலையில் ஆலயங்கரட்டில் உள்ள குச்சிக்கிழங்கு மில் அருகே வந்த போது, திடீரென சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தென்னை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 19 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வைத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 15க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளிகள் படுகாயமடைந்ததை அறிந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது, அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, சிபிஎம் தாலுக்கா செயலாளர் முருகேசன், காங்கிரஸ் கட்சி முன்னாள் வட்டார தலைவர் நாகராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.23) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.23) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தளவாய்பேட்டை மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (செப்டம்பர் 23) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என பவானி கோட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சுக்காநாயக்கனூர், சின்னாநாயக்கனூர், காட்டூர், கூத்தாண்டிகொட்டாய், காக்காச்சிகரடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரியமேட்டூர், சின்னமேட்டூர், நல்லாநாயக்கனூர், கள்ளியூர், மல்லியூர், நாச்சிமுத்துபுரம், வேலாமரத்துார், கரட்டுப்பாளையம், காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், செங்காடு, கே.ஆர்.பாளையம், எலவமலை, செங்கலாபாறை, அய்யம்பாளையம், மூலப்பாளையம், லட்சுமி நகர், சின்னபுலியூர், பெரியார் நகர், மணக்காட்டூர், தளவாய்பேட்டை, ஒரிச்சேரிப்புதூர், வைரமங்கலம், கவுண்டன்புதுார், குட்டிபாளையம், வெங்கமேடு, சலங்கபாளையம், சிறைமீட்டான்பாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை, பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், சின்னியம்பாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைகரடு, பெரியவடமலைப்பாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகர், சின்னவடமலைபாளையம், கரைஎல்லப்பாளையம், செங்கோடம்பாளையம், சு.பு.வலசு மற்றும் பாலப்பாளையம்.

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, கொமராயனூர், கிட்டம்பட்டி, முரளிப்புதூர், தொட்டிக்கிணறு, வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிக்காடு, குருவரெட்டியூர், ஆலாமரத்துதோட்டம், புரவிபாளையம், ரெட்டிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் ஜி.ஜி.நகர்.
வாருங்கள் அமைதியான  உலகை உருவாக்குவோம். குட் ஷெப்பர்ட் சிஸ்டர்ஸ் மற்றும் சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் சார்பில் சர்வதேச உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.

வாருங்கள் அமைதியான உலகை உருவாக்குவோம். குட் ஷெப்பர்ட் சிஸ்டர்ஸ் மற்றும் சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் சார்பில் சர்வதேச உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

வாருங்கள் அமைதியான  உலகை உருவாக்குவோம். குட் ஷெப்பர்ட் சிஸ்டர்ஸ் மற்றும் சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் சார்பில் சர்வதேச உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது. 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்ற இந்த கருத்துரை கூட்டத்தில், பிஷப் அருள் செல்வம் ராயப்பன், தமிழ்நாடு மாநில இமாம்கள் பேரவை உறுப்பினர் சபியுல்லா மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்து சகோதரி மகேஸ்வரி இதனை எடுத்து, கிருத்துவ அமைப்பை சேர்ந்த சகோதரி ராஜ்குமாரி உள்ளிட்டு ஒரு கலந்து கொண்டு சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துரைகளை எடுத்துரைத்தனர். 
குறிப்பாக, கிருத்துவ அமைப்பைச் சார்ந்த சகோதரி ராஜ்குமாரி நம்முடைய கோரிக்கையில், இந்த உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடையே பல்வேறு போர்கள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், குறிப்பாக ஒவ்வொருவருடைய மனதிலும் அமைதியை உருவாக்க வேண்டும்,  நம்முடைய மனதில் பழிவாங்கும் என்னும் வராமல், நமது மனதில் தீய எண்ணம் இருப்பதினால் மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றோம் என்றும், இந்த சிறப்பு மிகுந்த நாடு மற்றவர்களை துன்புறுத்தாமல் நாமும் சமாதானம் அடைந்து மற்றவர்களையும் சமாதியானப்படுத்தி இருந்தோம் என்றால் இந்த உலகம் அமைதி பூங்காவாக திகழும் என்று வலியுறுத்தினார். 
இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை இணைந்து நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட கல்லூரி மாணவிகள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.