வியாழன், 26 செப்டம்பர், 2024

சேலம் கொண்டலாம்பட்டி திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் பகுதியில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் தொட்டி அமைப்பதை கைவிட வேண்டும். விவசாயிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

சேலம் கொண்டலாம்பட்டி திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் பகுதியில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் தொட்டி அமைப்பதை கைவிட வேண்டும். விவசாயிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சேலம் கொண்டலாம்பட்டி திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் பகுதியில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் தொட்டி அமைப்பதை கைவிட வேண்டும். விவசாயிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு. 


தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் சிலர்,  கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினர். அந்த மனுவில்  திருமணிமுத்தார் ராஜவாய்க்கால் அம்மணி கொண்டலாம்பட்டி வாய்க்கால் கரை பகுதியில் கரை ஓரங்களில் கொண்டலாம்பட்டி , மாநகராட்சிஜாரி கொண்டலாம்பட்டி 50வது டிவிஷன், கல்லங்காடு, தானம் கரடு, சின்ன கொண்டலாம்பட்டி, என பத்தாயிரம் குடும்பங்களுக்கு மேல் வாய்க்கால் கரை ஓரங்களில் மயானமாக பயன்படுத்தி வருகிறார்கள் இந்த இடத்தை விட்டால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வேறு இடம் மயானத்திற்கு கிடையாது இந்த நிலையில்இந்த பகுதியில் சேலம் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் தொட்டி கட்டுவதாக அறிவிப்பு வந்தது இது சம்பந்தமாக 13 .0 5 .2024 யில் இந்த இடம் இந்த பகுதியில் உள்ள பத்தாயிரம் குடும்பத்தில் மேல் உள்ளவர்களுக்கு மயானமாக உள்ளதால் இங்கு கழிவுநீர் தொட்டி கட்டினால் பாதிக்கப்படும் மற்றும் இந்த இடம் திருமணிமுத்தாறு சொந்தமான இடம் நீர்வழிப் பாதையில் எந்த ஒரு கட்டிடமும்  கட்டக் கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது ஆகையால் மாற்று இடத்திற்கு கழிவு நீர் தொட்டி  கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கையும், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் அவர்களிடம் கோரிக்கையும், அந்த தேதியில் தேர்தல் விதிமுறை இருந்ததால் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் அவர்களுடைய அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் புகார் மனு போடப்பட்டது.
அதற்கு பிறகு நான்கு மாதங்களாக எந்த ஒரு அறிவிப்பு அறிவிக்கப்படவில்லை நேற்று மீண்டும் கழிவு நீர் தொட்டி கட்டுவதாக சேலம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது ஒட்டுமொத்த ஊர்களில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தெரிவிக்கப்பட்ட அதிகாரியிடம் இந்த இடம் எங்களுக்கு மயானமாக காலகாலமாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம் இங்கு கழிவுநீர்தொட்டி கட்டினால் எங்களுக்கு மயானம் இல்லாமல் போய்விடும்  அதனால் கைவிட வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது கோரிக்கையை ஏற்ற வந்த அதிகாரி நீங்கள் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது எங்களுடைய கவனத்திற்கு வரவில்லை மீண்டும் ஒரு முறை நீங்கள் மாநகராட்சி நிர்வாகத்தை சந்தித்து கோரிக்கை கொடுங்கள் நான் கைவிட்டு விடுகிறோம் நேற்று தெரிவித்தனர் அதன்படி  இன்று  தமிழக முதலமைச்சர் ,மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர் , அவர்கள் அலுவலகத்திலும் சேலம் மேயர்அவர்களிடம் சந்தித்து அவர்கள் அலுவலகத்தில் கோரிக்கை மனு பத்தாயிரம் குடும்பங்கள் சார்பில் கழிவு நீர் தொட்டி மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டி  ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆறுகள், ஏரி ,குளம், குட்டைகள் தூர்வாரி மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டி மாண்புமிக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது உடன் சேலம் மாவட்டத் தலைவர் தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையத்தில் நாளை (செப்.27) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி அளுக்குளி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடை புதூர், ஒட்டகரட்டு பாளையம், வெங்கமேட்டு புதூர் சத்தி பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூல வாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் மற்றும் போடிசின்னாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா பதிவிறக்கம் செய்வதில் குளறுபடி: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு

பட்டா பதிவிறக்கம் செய்வதில் குளறுபடி: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு

ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் திருச்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மாவட்ட முன்னாள் தலைவர் ராஜேந்திரன், விவசாய அணி பெரியசாமி, சிறுபான்மை பிரிவு ஜாபர் அலி உள்பட பலர் இன்று (26ம் தேதி) ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வதில் உள்ள குளறுபடிகளால் நிறைய பத்திரங்கள் கிரயம் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இடம் வாங்குபவர்களும், விற்பவர்களும் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கல்யாணம், மருத்துவ செலவு ஆகியவற்றிக்காக இடம் விற்பவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யாததால் தன் தேவைக்கு பட்டா பணம் கிடைக்காமல் மாதக் கணக்கில் சிரமப்படுகின்றனர்.

மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

புதன், 25 செப்டம்பர், 2024

மொடக்குறிச்சி அருகே வீட்டில் 9 பவுன் நகை திருடிய கூரியர் ஊழியர் கைது: பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் திருடியதாக வாக்குமூலம்

மொடக்குறிச்சி அருகே வீட்டில் 9 பவுன் நகை திருடிய கூரியர் ஊழியர் கைது: பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் திருடியதாக வாக்குமூலம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி தலைவர் நகர் 2 -வது தளத்தில் வசித்து வருபவர் மதன் (31). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவிக்கு திருச்செங்கோட்டில் வளைகாப்பு விழா நடந்தது. வளைகாப்பு விழாவில் பங்கேற்று மதன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
பின்னர் வீட்டுக்குள்ள சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த இரு தங்க வளையல்கள், தங்க நெக்லஸ் என 9 பவுன் நகை திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

இந்த திருட்டு வழக்கு தொடர்பாக 46 புதூர் நொச்சிபாளையத்தை சேர்ந்த அருண் (26) கூரியர் ஊழியரை கைது செய்தனர். போலீசாரிடம் அருண் கூறும் போது, பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அவரிடமிருந்து 9 பவுன் நகை, மோட்டார் சைக்கிளில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபரின் உடலால் பரபரப்பு

ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபரின் உடலால் பரபரப்பு

ஈரோடு வ.உ.சி பார்க் அருகே சரக்கு வாகனத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ...  சடலத்தை மீட்ட ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை ..!
ஈரோடு வ.உ.சி பூங்கா பெரிய காய்கறி மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி லோடுகளை ஏற்றி வருகின்றன. பின்னர் லோடுகளை இறக்கி விட்டு, வாகனத்தில் வருபவர்கள் வ.உ.சி பூங்கா பின்புறம் உள்ள சாலையோரம் வாகனங்களை நிறுத்தி தூங்குவது வழக்கம்.

அதைப்போல் நேற்று இரவு கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து ஒரு மினி சரக்கு வாகனம் தக்காளி லோடுகளை  ஏற்றிக்கொண்டு, ஈரோடு வ.உ.சி பூங்கா பெரிய மார்க்கெட்டிற்கு வந்தது. மினி சரக்கு வாகனத்தை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (32) என்பவர் ஓட்டி வந்தார். 

பின்னர் அவர் தக்காளி லோடுகளை மார்க்கெட்டில் இறக்கிவிட்டு வ உ சி பூங்கா பின்புறம் உள்ள சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்தி, வாகனத்தின் முன் பகுதியில் தூங்கினார். 

இன்று காலை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர், மனோஜை எழுப்பி உன் வாகனத்தின் பின்பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக கூறினார். 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனோஜ் பின்னால் சென்று பார்த்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய  போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

வ உ சி பூங்காவில் நடை பயிற்சி சென்றவர்கள், காய்கறி வாங்க சென்றவர்கள் அந்த மினி சரக்கு வாகனத்தின் அருகே குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு  வைத்தனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. கழுத்து அறுபட்ட நிலையில் இருப்பதால் அவரை மர்ம கும்ப கும்பல் கொலை செய்து வாகனத்தில் போட்டு சென்றதா? அல்லது அந்த நபர் தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? எனவும் ஈரோடு வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஈரோட்டில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பிரதான பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மக்கள் கூட்டம் கூடி பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை

ஈரோடு அரசு மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை

ஈரோடு மாவட்டம் பாரதிநகர் பி.பெ.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பிரியா. இவருக்கு கடந்த 7ம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவில் (8 மாதம்) குறைமாதத்தில் 2.250 கிலோ கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தைக்கு முதலில் நுரையீரல் வளர்ச்சி குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அதற்கான குழந்தை செயற்கை சுவாசம் மற்றும் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான நுரையீரல் வளர்ச்சி மருந்து அளிக்கப்பட்டது.

சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுவாசக்குழாய் மற்றும் உணவுக்குழாய் இணைந்து இருந்ததை 2வது நாளில் கண்டறியப்பட்டது. மேலும், 3வது நாளில் அதற்கான அறுவை சிகிச்சை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. மேலும் குழந்தைக்கு இரத்த போக்கினை ஈடு செய்யும் வகையில் குழந்தைக்கு தேவையான இரத்தம் செலுத்தப்பட்டது. ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் மூலம் உணவு குழாய் உரிய முறையில் செயல்படுவதை எட்டாவது நாள் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அக்குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டு தற்போது குழந்தை நல்ல முறையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் குழந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை பராமரிப்பு அரசுத்துறையில் முதல் முதலாக ஈரோடு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ரூ.8 லட்சம் வரை செலவாகும். இச்சிகிச்சையானது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இச்சிகிச்சை முற்றிலும் இலவசமாகவும் நல்ல முறையிலும் செய்யப்பட்டுள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது குழந்தை நல அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் குழுவினர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் நடைபெற்றது.

இதுகுறித்து, குழந்தையின் தாயார் பிரியா கூறுகையில் நாங்கள் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் கூலி வேலை (பெயிண்டர்) செய்து வருகிறார். எனக்கு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 2வது நாளில் மருத்துவர்கள் பரிசோதித்து, குழந்தைக்கு சுவாச பிரச்சனை உள்ளதாக தெரிவித்தனர்.

உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, குறைபாட்டினை சரி செய்து, என் குழந்தையின் உயிரை காப்பாற்றினார்கள். இது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நிகழ்வாகும். அரசு மருத்துவமனையில் என் குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளித்து, மற்ற குழந்தைகளை போலவே, என் குழந்தையையும் ஆரோக்கியமான குழந்தையாக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மருத்துவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஈரோட்டில் காதில் பூ வைத்து நூதனமான முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் காதில் பூ வைத்து நூதனமான முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது.
இதனால், கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படாத நிலையில், இந்த நியமன தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடந்த 11 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமன தேர்வு அரசாணை 149ஐ ரத்து செய்து, திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த 177ஐ நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகத்தில் மண்டல வாரியாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று (25ம் தேதி) ஈரோட்டில் காளைமாட்டு சிலை அருகில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் காதுகளில் பூ வைத்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்வாதாரத்தை காக்க நியமன தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக அறிவித்த அரசாணை 177ஐ நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.