திங்கள், 7 அக்டோபர், 2024

ஈரோட்டில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 இளம் பெண்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 இளம் பெண்கள் உயிரிழப்பு

ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 26). இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், இன்று அதிகாலை அவரது காரில் 2 இளம்பெண்களை ஏற்றிக்கொண்டு கோவை செல்வதற்காக நசியனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார், ஈரோடு வில்லரம்சம்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி சாலையோர புதரில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 2 இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய காரை கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கலைச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த 2 இளம்பெண்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்த ஒரு பெண் அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த கணபதி மனைவி சவுந்தர்யா என்பது தெரியவந்தது. மற்றொருவர் கோவையைச் சேர்ந்த ரிச்வானா என தெரியவந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவர் பற்றிய முழு விவரம் தெரியவில்லை.

கலைச்செல்வனும், இரு இளம் பெண்களும் இன்ஸ்டா நண்பர்கள் என கூறப்படுகிறது. எனினும் விசாரணைக்கு பிறகு முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பூலாம்பட்டி ஏரியில் இருந்து 300 கோடியில் தனிக்குழாய் அமைத்து கொண்டுவரப்பட்ட தண்ணீரை கால்நடை பூங்காவிற்கு பயன்படுத்தாமல்  திட்டத்தை கிடப்பில் போட்டதற்கு எதிர்ப்பு. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்  சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

பூலாம்பட்டி ஏரியில் இருந்து 300 கோடியில் தனிக்குழாய் அமைத்து கொண்டுவரப்பட்ட தண்ணீரை கால்நடை பூங்காவிற்கு பயன்படுத்தாமல் திட்டத்தை கிடப்பில் போட்டதற்கு எதிர்ப்பு. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பூலாம்பட்டி ஏரியில் இருந்து 300 கோடியில் தனிக்குழாய் அமைத்து கொண்டுவரப்பட்ட தண்ணீரை கால்நடை பூங்காவிற்கு பயன்படுத்தாமல்  திட்டத்தை கிடப்பில் போட்டதற்கு எதிர்ப்பு. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்  சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வி. கூட்டு ரோடு  பகுதியில் ஆயிரம் ஏக்கரில் சுமார் 1000 கோடி செலவில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு எடப்பாடி தொகுதி பூலாம்பட்டி ஏரியிலிருந்து சுமார் 300 கோடியில் தனிக்குழாய் அமைத்து கொண்டுவரப்பட்ட தண்ணீரை கால்நடை பூங்காவிற்கு பயன்படுத்தாமல்   திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு  இந்த தண்ணீரை முழுவதும் எடுத்துச் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டதை கண்டித்தும், மேற்படி கால்நடை பூங்கா முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வராத கண்டித்தும்  கால்நடை பூங்கா எதிரில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்  சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றதில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்  சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில பொருளாளர் கொண்டலாம்பட்டி எம்‌ தங்கராஜ்,மண்டல செயலாளர் புளியங்குறிச்சி பெருமாள், சேலம் மாவட்ட செயலாளர் தங்கவேல் மற்றும் அனைத்து விவசாயிகள்  சங்கங்கள், விவசாயிகள் கலந்து  கொண்டனர்.
சேலம் கொங்கணாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள அரசு கல்வி இயல் கல்லூரியை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு.

சேலம் கொங்கணாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள அரசு கல்வி இயல் கல்லூரியை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் கொங்கணாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள அரசு கல்வி இயல் கல்லூரியை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு. 

பாட்டாளி மக்கள் கட்சி மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர் விஜய ராஜா தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினர். அந்த மனதில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் சேதமடைந்து வரும் அரசு கல்வியியல் கல்லூரியை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உறுப்புக்கல்லூறியான அரசு கல்வியின் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதற்கான கட்டமைப்பு வசதிகள் முழு அளவில் இருந்த போதும் கடந்த 2019 இல் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு வராமல் போட்டி கிடப்பதால் இப்பகுதியை சார்ந்த பட்டதாரி மாணவர்கள் இளங்கலை கல்வியியல் பட்டம் மேற்படிப்பிற்காக அருகே உள்ள ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியும் நீண்ட தூரம் பயணம் செய்தும் கல்வி பயில்கின்ற அவல நிலையில் உள்ளனர். எனவே மேற்கொண்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த கல்லூரியை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சி மொசல்மடுவு என்ற இடத்தில் ஒரு தோட்டத்தை சுற்றியுள்ள மின்வேலியில் சிக்கி காட்டு யானை நேற்று (6ம் தேதி) உயிரிழந்து கிடந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் அதைப்பார்த்து உடனே கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வந்த வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் உயிரிழந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் கூறும்போது, உயிரிழந்தது சுமார் 35 வயதுடைய ஆண் யானை. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது, மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விட்டது, என்றார். இதனைத் தொடர்ந்து, யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.

இதுகுறித்து கடம்பூர் வனத்துறையினர் தோட்டத்தில் மின்வேலி அமைத்த விவசாயியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மொசல்மடுவு சுப்பிரமணிக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பட்டகாரர் மணி குத்தகைக்கு எடுத்து சோளம் விதைத்து, காட்டுப்பன்றிகள் நிலத்தில் புகுவதைத் தடுக்க மின்வேலி அமைத்திருந்தார்.

இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, சோளக்காட்டில் புகுந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதனிடையே, கடம்பூர் போலீசில் மணி சரணடைந்த நிலையில், இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் சூரியம்பாளையம், மேட்டுக்கடை, காவிலிபாளையம் மற்றும் தொப்பம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 8) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்புஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐஆர்டிடி பகுதி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கனிராவுத்தர் குளம், காவேரி நகர், பாலாஜி நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர் பகுதி மற்றும் சேவாக்கவுண்டனூர்.

ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், வீரப்பம்பாளையம், மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுபாளையம், இளையகவுண்டன்பாளையம், நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், வள்ளிபுரத்தான்பாளையம், கதிரம்பட்டி, வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி நால்ரோடு, மூலங்களை, வண்ணான்காட்டுவலசு, நசியனுார் - ஈரோடு சாலை, தொட்டிபாளையம், ராயபாளையம் மற்றும் சிந்தன்குட்டை.

சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையம் மற்றும் தொப்பம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகம்பாளையம், குப்பன்துறை, லாகம்பாளையம், இருகாலூர், ஆலம்பாளையம், எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கோடேபாளையம் மற்றும் நால்ரோடு.


சிலம்பம் சுற்றி அசர வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

சிலம்பம் சுற்றி அசர வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி வைரவிழா முதல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று (6ம் தேதி) நடந்தது. இதனை, முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அங்கு சென்று பயிற்சியாளரிடம் விபரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், மாணவர் ஒருவரிடம் கையில் ஒரு கம்பை வாங்கி சிலம்பம் சுற்றி அசத்தினார். அவர் சிலம்பம் சுற்றுவதை பார்த்த பள்ளி மாணவ, மாணவர்கள் கைதட்டி உற்சாகம் அடைந்ததோடு, வியப்படைந்தனர்.

இந்த நிலையில், இதை அங்கு இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மேற்கு தொகுதியில் 21 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் திறந்து வைத்தார்.

சேலம் மேற்கு தொகுதியில் 21 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் திறந்து வைத்தார்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலம் மேற்கு தொகுதியில் 21 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் திறந்து வைத்தார்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி,
அழகுசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பெண்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்று வகையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் அவர்களின் தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிடத்தை திறந்து வைத்து அப்பகுதியில் உள்ள பெண்களிடம் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டு சாவியை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கே.சி ஆறுமுகம், அமைப்புச் தலைவர் சரவணன், கருங்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், ஒன்றிய தலைவர் அருள்மணி,ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி மணி, து தலைவர் கோபால், சின்னதம்பி, பொன். ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் சேட்டு, பிரகாஷ், குமார் நாகராஜ், சுரேஷ், கார்த்தி மற்றும் அப்பகுதியில் உள்ள பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 ...