ஞாயிறு, 13 அக்டோபர், 2024

செங்குந்த மகாஜன மாணவ மாணவிகள் 440 பேருக்கு சுமார் 9 லட்சம் ரூபாய் அளவில் கல்வி ஊக்கத்தொகை.

செங்குந்த மகாஜன மாணவ மாணவிகள் 440 பேருக்கு சுமார் 9 லட்சம் ரூபாய் அளவில் கல்வி ஊக்கத்தொகை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

செங்குந்த மகாஜன மாணவ மாணவிகள் 440 பேருக்கு சுமார் 9 லட்சம் ரூபாய் அளவில் கல்வி ஊக்கத்தொகை. 

தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சேலம் மாவட்டத்தின் சார்பாக செங்குந்த மகாஜனத்தை சேர்ந்த கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை மற்றும் ஊக்க பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 35 ஆவது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 
சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் சடையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட நிர்வாகிகள் ராஜகோபால் நக்கீரன் மற்றும் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் செல்வராஜ் மற்றும், சேலம் ஸ்ரீ சண்முகா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பன்னீர்செல்வம், தியாகச் செம்மல் தாரை குமரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கடந்தாண்டு மற்றும் நடப்பு ஆண்டுகளில் கல்வியில் சிறந்து விளங்கும் செங்குந்த மகாஜனத்தை சார்ந்து மாணவ மாணவிகள் 440 பேருக்கு சுமார் 9 லட்சம் ரூபாய் அளவிற்கு கல்வி ஊக்க தொகையும் உதவித்தொகையும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 
இந்த விழாவில் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் அம்மாபேட்டையில் ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு திருக்கல்யாண வைபவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம் அம்மாபேட்டையில் ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு திருக்கல்யாண வைபவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அம்மாபேட்டையில் ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு திருக்கல்யாண வைபவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். 

சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் புதூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பரிமள ரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு திருக்கல்யாண வைபவம், திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நான்காம் ஆண்டு வைபவமாக இன்று நடைபெற்றது. ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருக்கல்யாண வைபாபு குழுவில் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கௌரவ தலைவர் ஜெயபிரகாசம் தலைமை தாங்கினார். இன்று அதிகாலை முதல் கால யாக பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில், யாகசாலை பூஜை மற்றும் திருமாங்கல்ய பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு மங்கள சீர்வரிசை புறப்பாடும் தொடர்ந்து திவ்ய தம்பதிகளான ஸ்ரீ ரங்கநாயகி தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் பெருமானுக்கு சத்துருவேத மந்திர புஷ்ப விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. 
மேலும் திருக்கல்யாண மாங்கல்ய தாரணம் பச்ச கோலம் சற்று முறை தீர்த்த பிரசாதம் ஆகியவை நடைபெற்றது அடுத்து, விழாவில் கலந்துகொண்டு சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருக்கல்யாண வைபாவுக்கு குழுவின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டன தொடர்ந்து இன்று மாலை ஸ்ரீ ரங்கநாயகி தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் திருவீதி புறப்பாடும் பின்னர் ரங்கநாயகி தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் விசேஷமான ஏகாந்த சேவையும் நடைபெற உள்ளன. 
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கல்யாண வைபவ குழுவின் நிர்வாகிகள் கருணாநிதி மாசிலாமணி துரைசாமி சண்முகம் கண்ணன் பச்சையப்பன் மற்றும் செந்தில்குமார் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

சனி, 12 அக்டோபர், 2024

மத்திய பா ஜ.க ஆட்சியில் சாதாரணமானதாக நடக்கும் ரயில் விபத்துகள்: ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை கண்டனம்!

மத்திய பா ஜ.க ஆட்சியில் சாதாரணமானதாக நடக்கும் ரயில் விபத்துகள்: ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை கண்டனம்!

தென்னக ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினரும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவருமான கே.என்.பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
மத்திய அரசின் ரயில்வே துறையில் அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே நீடிக்கிறது. உலக அளவில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தும் ரயில் விபத்துகளை தடுக்கும் தொழில்நுட்பங்களை பல நாடுகள்
நடைமுறைக்கு கொண்டு வந்தும், இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மட்டும்
கடந்த 10 ஆண்டுகளாக பின்ளோக்கியதாக இருப்பதற்கு நிர்வாக
திறன்யின்மையே காரணம் அதன் வெளிபாடு தான் இந்த விபத்தும் என்னவோ.

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளுடன் பாக்மதி எஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தின் பெரம்பூரில் இருந்து 744 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது. 

அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக பாக்மதி எஸ்பிரஸ் வந்து மோதியதில் விபத்து
ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் மீது வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. அப்போது பாக்மதி எஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் திடீரென எரிந்தன. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில், அதில் இருந்த பயணிகளின் உடமைகள் சிதறின. இரவு நேரம் என்பதால் பயணிகளை சிலர் இரவு உணவு முடித்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் விபத்து காரணமாக அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சில பயணிகள் ரயிலில் இருந்து திடீரென வெளிய குதித்து தப்ப முயன்றனர் தொடர்ந்து காயம் அடைந்த
பயணிகள் அலறிய நிலையில் அருகில் வசித்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். மத்திய
அரசின் ரயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு இந்த ரயில் விபத்து மற்றுமொரு உதாரணம்.
 
ஒரு மாதத்துக்கு முன்பு சீல்டா அகர்தலா கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதி 11 பேர் உயிரிழந்தனர் அப்போது எதிர்க்கட்சியினர் கண்டனங்களை முன்வைத்தபோது கூட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறு சிறு தவறுகளை அரசியலாக்க வேண்டாம் என்றார். தற்போது என்ன சொல்வாரோ??? மேலும், பல விபத்துகளில் தானியங்கி சமிக்ஞையின் தோல்வி, செயல்பாடுகளை நிர்வகிப்பதில் பல நிலைகளில் குறைபாடுகள், லோகோ பைலட் மற்றும் ரயில் மேலாளருடன் வாக்கி-டாக்கி போன்ற முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் கோளாறு என பல ஆய்வு அறிக்கை மோதலுக்கு காரணங்களாக சொல்லப்பட்டாலும் நிர்வாக திறன்யின்மையே காரணம்.

ஆகவே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் சுய-விளம்பரத்திற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல், இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையின் ஒரே கோரிக்கை என்னவென்றால் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் விபத்துகளைத் தடுப்பதற்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் கவாச் எதிர்ப்பு மோதல் அமைப்பு விரைவாக நிறுவப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பெருந்துறையில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

பெருந்துறையில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெயரில் வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் பெருந்துறையில் தங்கி பணிபுரிந்து வருவதாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில் நேற்று இரவு பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் சோதனை நடத்திய பெருந்துறை போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த 21 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹபிப் உசேன் (வயது 31), ஒலியுல்லா (வயது 28), பாத்திமா (22), பாரூக் உசேன் (வயது 35), மெஸ்டர் அலி (வயது 28), முகமது அன்வர் உசேன் (வயது 42), முகமது மான்டெக்ட் உசேன் (வயது 43) ஆகிய 7 பேரும் வங்காள நாட்டைச் சேர்ந்த அகதிகள் என்பதும் இவர்கள் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணம் எதுவுமின்றி தங்கியிருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து மற்றவர்களை விடுவித்த போலீசார், பிடிபட்ட 7 பேரின் முழு விவரங்களையும் சேகரித்து சென்னை தலைமை காவல்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். உஷா பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பெருந்துறை காவல்துறையினர், இன்று ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய பின்னர் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
புரட்டாசி 4-வது சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம்.

புரட்டாசி 4-வது சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

புரட்டாசி 4-வது சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம்.

தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி மாதம் திருவேங்கடமுடையானுக்கு உகந்த மாதம் ஆக கருதப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ் மாதங்களில் புரட்டாசி 4-வது சனிக்கிழமை ஆனது இன்று  சேலம் அருகே உள்ள பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி 4-ம் வார சிறப்பு பூஜைகள் பக்த கோடிகள் ஆசீர்வாதத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
4-வது சனிக்கிழமையை  ஒட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உற்சவருக்கு மங்களப் பொருட்களைக் கொண்டு அதிகாலை முதலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு  சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை சிறப்பு பூஜையில் பெரிய புதூர் சின்ன புதூர் அழகாபுரம் நான்கு ரோடு 5 ரோடு உள்ளிட்ட சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
புரட்டாசி உற்சவத்தை தொடர்ந்து நாளை கருட சேவை ஊர்வலம் நடைபெற உள்ளதாகவும் அதனை தொடர்ந்து வரும் இருபதாம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளதாகவும் திருக்கோவில் நிர்வாகியும், பட்டாச்சாரியாருமான சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சேலம் பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற இந்த 4-வது சனிவார பூஜையில் டிரஸ்ட் நிர்வாகிகள், சிறப்பாக செய்திருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்

ஈரோடு மாவட்டத்தில் ஆயுதபூஜை விழா கொண்டாடிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்

தமிழகம் முழுவதும் நேற்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வருடம் முழுவதும் தொழிலில் உறுதுணையாக இருக்கக்கூடிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பூஜை மற்றும் வழிபாடு செய்து கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியக் கூடிய ஓட்டுநர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர்கள் தங்களது வாகனத்தை கழுவி சுத்தம் செய்து, அதற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து மாலை அணிவித்து, வாழைமரம் கட்டியும், ஸ்ட்ரெச்சர் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்து தேங்காய் பழம் உடைத்து இறைவனை வேண்டி வழிபாடு செய்தனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தலைமையில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில் ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் வாகனங்களுக்கு பூ மாலை அணிவித்து, பொரி, வாழைப்பழம் படைத்து, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆயுதபூஜை கொண்டாடினர். மேலும், எந்த பிரச்சனையும் இன்றி நாள் தோறும் வாகனங்கள் நன்றாக ஓட வேண்டும் என இறைவனை வேண்டி பூசணிக்காயில் சூடம் ஏற்றி வாகனங்களுக்கு திருஷ்டி கழித்து பூசணிக்காயை உடைத்தனர்.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பர்கூர் மலைப்பாதை சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (12ம்‌ தேதி) வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 68.80 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இந்த கனமழையின் காரணமாக அந்தியூர்-பர்கூர்-கர்நாடக மலைப்பாதை சாலையில் தாமரைக்கரை, நெய்க்கரை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகம்-கர்நாடகம் இடையே அந்தியூர் வழியாக செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டுனர்கள் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரங்கள் மற்றும் மண்ணை அகற்றி இன்று காலை போக்குவரத்தை சீமைத்தனர். பின்னர், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலையில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி மரங்கள் மற்றும் மண் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது என்றனர்.