புதன், 23 அக்டோபர், 2024

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: ஒருவர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயற்சி: ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் ஒரு கும்பல் சுற்றித்திரிவதாக சத்தியமங்கலம் வனத்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், வனத்துறையினர் தனிக்குழு அமைத்து கொண்டப்பநாய்க்கன்பாளையம் காவல் சுற்று குத்தியாலத்தூர் காப்புக்காடு பிசில் மாரியம்மன் கோவில் சரகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, சத்தியமங்கலம் புளியங்கோம்பை பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 32) என்பவர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, வனத்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, அரிவாள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், நாராயணனுடன் வேட்டையாட வந்த மூன்று பேர் வனத்துறையினரைக் கண்டதும் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
கோபி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோபி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொலவகாளிபாளையம், சவுண்டப்பூர், மேவாணி கிராம ஊராட்சிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் அலுவலகத்தின் சுற்றுப்புறங்களில் தூய்மையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 193 கடைகளுடன் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் தினசரி அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் செயல்படும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, லக்கம்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் சார்பில் அம்ரூத் 2.0, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தரைமட்ட தொட்டி மற்றும் மின்மோட்டார் அறையினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் புனரமைக்கப்பட்டு வருவதையும், சவுண்டப்பூர் ஊராட்சி, எஸ்.கணபதிபாளையம் அருகில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பொவலவகாளிபாளையம் ஊராட்சி, தாசம்பாளையத்தில் 15-வது நிதிக்குழு மான்யத்தின் கீழ் ரூ.78 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்து, தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும், தூய்மை பாரத இயக்கம், திரவக்கழிவு மேலாண்மை மற்றும் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் மேவானியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலின் முடிவுப் பகுதியில் கிடைமட்ட வடிகட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, கோபிசெட்டிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) சக்திவேல், பிரேம்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோட்டில் அக்.25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோட்டில் அக்.25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோட்டில் அக்.,25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இம்மாதம் அக்டோபர் 25ம் தேதி (நாளை மறுநாள்) வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான இரும்பு திருடியவர் கைது

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான இரும்பு திருடியவர் கைது

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் அருகே வரக்குட்டைபுதூரைச் சேர்ந்தவர் ஹரிசந்திரன் (வயது 36). இவர் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில்லில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோடு பகுதியில் உள்ள இடத்தில் சைசிங் மில்லில் பயன்படுத்தப்படும் சுமார் 1,000 பீம்கள் (இரும்பு உருளை) அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு நேற்று காலை ஹரிசந்திரன் சென்று பார்வையிட்டார். அப்போது 30 பீம்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஹரிசந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு பெரியசேமூர் கொத்துகாரர்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நந்தீஸ்வரன் (வயது 24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் சரக்கு வாகனத்தை வாட கைக்கு எடுத்து வந்து 30 பீம்களை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நந்தீஸ்வரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 30 பீம்களை மீட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.24) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.24) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் பெரியகொடிவேரி, பெரும்பள்ளம், வரதம்பாளையம் மற்றும் மாக்கினாங்கோம்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 24) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரியகொடிவேரி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கொடிவேரி, டி.ஜி.புதூர், சின்னட்டிபாளையம், ஏழூர், கொமரபாளையம், கொண்டப்பநாய்க்கன்பாளையம், ஆலத்துக்கோம்பை மற்றும் மலையடிப்புதூர்.

பெரும்பள்ளம் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கெம்பநாய்க்கன்பாளையம், கடம்பூர், குன்றி, ஏ.ஜி.புதூர், மாக்கம்பாளையம், சின்னக்குளம், தாசரிபாளையம், காடகநல்லி, செல்லிபாளையம் மற்றும்அத்தியூர்.

வரதம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்: வடக்குப்பேட்டை, வரதம்பாளையம், புளியங்கோம்பை, ஜெ.ஜெ.நகர், சந்தைக்கடை, கோம்புபள்ளம், மணிக்கூண்டு, கோட்டுவீராம் பாளையம், கடைவீதி, கொங்குநகர், பெரியகுளம் மற்றும் பாசக்குட்டை. 

மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அக்கரை கொடிவேரி, காசிபாளையம் மற்றும் சிங்கிரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியாக உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணைக்கு முக்கிய நீர்வரத்தாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறும் உள்ளன.

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நடப்பாண்டில் முதல் முறையாக ஜூலை 30ம் தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்தது. இதனிடையே, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக சரிந்ததாலும் 57 நாள்களுக்கு பிறகு செப்டம்பர்  25ம் தேதி அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு கீழே சரிந்தது.

தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து 29 நாட்களுக்கு பிறகு இன்று (23ம் தேதி)  நடப்பாண்டில் 2வது முறையாக மீண்டும் 90 அடியை எட்டியது. 

இன்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.64 அடியில் இருந்து 90.09 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணைக்கு வரும் நீரின் அளவு 2,649 கன அடியில் இருந்து 7,222 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 21.64 டிஎம்சியாக உள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும் பொழுது வருகை தரும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க வேண் டிதமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சால்வை கொடுத்து கோரிக்கை மனு.

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும் பொழுது வருகை தரும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க வேண் டிதமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சால்வை கொடுத்து கோரிக்கை மனு.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும் பொழுது வருகை தரும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க வேண் டிதமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சால்வை கொடுத்து கோரிக்கை மனு.

நாமக்கல் மாவட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்க மாண்பு மிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சேலம் இன்று 12 மணி அளவில்வருகைதந்து கொண்டலாம்பட்டி பைபாஸ்வழியாக வருகை தந்த போது முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம், திருமணிமுத்தாற்று பாசனம் விவசாயிகள் சங்கம் சார்பில் சால்வை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும் பொழுது வருகை தரும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டி எங்களுடைய சங்கம் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று மதிய மாதம் மாதம் மதிய உணவு வணங்குவதற்கும் திருமணிமுத்தார் ராஜவாய்க்கால் கரை உடைந்து வயல்களில் முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் விவசாயம் பாதிப்பு  கரையை சீரமைக்க வேண்டிய தங்களுடைய முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதப்பட்டது கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக கரையை சீரமைத்து கொடுத்ததற்கும் திருமணிமுத்தாற்று ராஜ வாய்க்கால் விவசாயிகள் சார்பில் நன்றி கடிதம் கொடுக்கப்பட்டது,  மற்றும் சேலம் மாவட்டம், மாநில கோரிக்கைகள் 16 அம்சம் அடங்கிய கோரிக்கை மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது கோரிக்கைகள் திருமணிமுத்தாறு செவ்வாபேட்டை அணையில் இருந்து நாமக்கல் மாவட்டம் நஞ்சை இடையர் காவேரி கலக்கும் வரை தூர்வாரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து சுத்திகரிக்கப்படாத சாய ஆலைகளால்  வெளியேற்றப்படும் சாய கழிவுகள் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கோரிக்கை மற்றும் திருமணிமுத்தாறு செவ்வாய்பேட்டை அணை திருமணிமுத்தார் அழகுபடுத்து திட்டத்தின் பொழுது சேலம் மாநகராட்சி உடைக்கப்பட்டது இதனால் ஏரிக்கு வரும் மழைக்காலத்தில் வரும் மழைநீர் வருவதில்லை ஏறி முழுவதும் கழிவு நீரால் தேங்கி இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் மாசையடிந்துள்ளது உடைக்கப்பட்ட அணையை சீரமைத்து செவ்வாபேட்டை  அணையில் இருந்து  கொட்டணத்தம் ஏரி வரை இருபுற ஆக்கிருப்புங்களை  அகற்றி  தூர்வாரி இரு புறமும்வாய்க்கால் கரைகளில்சாலை அமைத்து கொடுத்து தூர்வாருவதற்கு ஏதுவாக இருக்கும் ராஜவாய்க்கால் ,ஏரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை, நாட்டிலே அதிகளவு சேலம் மாவட்டத்தில் தான் மரவள்ளி சாகுபடி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது உரிய விலை கிடைக்காதால் 15 ஆண்டுகளாக மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் சத்துணவு  திட்டத்திலும் ,நியாய விலை கடைகளில் ஜவ்வரிசி பாக்கெட் செய்து விநியோகம் செய்ய வேண்டி கோரிக்கை ,மற்றும் நெல் கரும்பு விவசாயிகள் உரிய விலை கிடைக்காதால் பாதிக்கப்பட்டுள்ளனர் டீசல் உயர்வு ஆட்கள் கூலி உயர்வு ஈடுபொருட்கள் விலை ஏற்றதால் பெரிய அளவு பாதிப்பில் உள்ளனர் நெல் குவிண்டால் ஒன்றுக்கு  3500 ரூபாயும் கரும்பு டன் ஒன்றுக்கு 6000 ரூபாய் வழங்க வேண்டிய நெல், கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கையும் உழவர் சந்தை முன்னாள் முதலமைச்சர் அவர்களால் 2000 ஆண்டு கொண்டுவரப்பட்டது விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைய கொண்டு வந்த திட்டம் மகத்தான திட்டம் ஆனால் தற்போது உழவர் சந்தை எதிரில் தனி நபர்கள்  காய்கறி கடை அதிகரிப்பதால் உழவர் சந்தை கொண்டு வரப்படும்விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் 100 மீட்டர் வரை எந்த ஒரு காய்கறி கடைகளும் உழவர் சந்தையில் சுற்றளவில் இருக்க கூடாது என்று அரசு உத்தரவு தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ளது  தமிழக முழுவதும் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி தமிழ்நாடு உழவர் சந்தை விவசாயிகள் சார்பில் கோரிக்கை,பனமரத்துப்பட்டி ஏரி 15 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடக்கிறது ஏரிக்கு மழை காலத்தில் வரும் மழைநீர் முழுமையாக வரவும் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தவும் கோரிக்கை ,மற்றும் பனமரத்துப்பட்டியில்   அதிகளவு மலர் விவசாயம் செய்யப்படுகிறது இங்குள்ள மலர்கள் கர்நாடகா, கேரளா ,ஆந்திரா பிற மாநிலங்களுக்கு அதிக அளவு கொண்டு செல்லப்படுகிறது 40 ஆண்டுகளாக மலர் விவசாயிகள் சென்ட் ஃபேக்டரி ஒன்று வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது.
பனமரத்துப்பட்டியில் ஒரு சென்ட் பேக்டரி உருவாக்கி தர வேண்டி மலர் விவசாயிகள் சார்பில்  கோரிக்கைமற்றும் ஏற்காடு ஏழையின் ஊட்டிய என அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர வேண்டி கோரிக்கை, மற்றும் சேலம் மாநகர் குகை ரோடு அதிகளவு போக்குவரத்து நெரிசலில்பாதிக்கப்படுகிறது கதம்பட்டி பைபாஸ் இருந்து சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை திருமணிமுத்தாறு கரை இருபுறமும் சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை, கொண்டலாம்பட்டி பைபாஸ் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அதிக நெருசலில் 15 ஆண்டுகளாக உள்ளது பட்டர்பிளை பாலத்தில் இருந்து சீல்நாயக்கன்பட்டி பாலா வரை டபுள் அடுக்கு பாலம் அமைத்து தர வேண்டி சேலம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை, மற்றும் தென்னை விவசாயிகள் உரிய விலை கிடைக்காதால் 15 ஆண்டுகளாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டி தென்னை விவசாயம் சார்பில் கோரிக்கை, மற்றும் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக களலுக்கு தடை இருப்பதால் பனைத், தென்னை விவசாயிகள் பெரிய அளவு பாதிக்கப்படுகின்றன கள் இறக்க அனுமதி வழங்க வேண்டிய கோரிக்கை, கடலில் கலந்த வீணாகும் காவிரி  உபரி நீரை வறண்ட ஏரி குளம் குட்டைகள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை, தமிழ்நாடு ஒரு நீர் பற்றாக்குறை மாநிலம் கோதாவரி- காவிரித் நல்லதிட்டத்தை இணைக்க வேண்டி தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் மாநிலத் தலைவர் கொண்டலாம்பட்டி எம். தங்கராஜ் மாநிலச் செயலாளர் செல்லமுத்து அவர்கள் முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டது மற்றும் முதலமைச்சர் வரவேற்பில் மாநில இணை செயலாளர் நெடுஞ்செழியன், மாநில இளைஞரணி தலைவர் நந்தகுமார், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ,தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு சேலம் மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில இணை செயலாளர் மணிமாறன் ,கொண்டலாம்பட்டி தலைவர் செல்வராஜ் , ஆமணிகொண்டலாம்பட்டி தலைவர் மோகன், செயலாளர் செல்லதுரை ,தமநாயக்கன்பட்டி தலைவர் பிரபு, வீரபாண்டி ஒன்றிய தலைவர் தங்கவேல், பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் சுரேஷ் , புத்தூர் வயக்காடு தலைவர் வெங்கடேஷ் செயலாளர் கந்தையன்மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.