செவ்வாய், 5 நவம்பர், 2024

சேலம் தலைவாசலில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் டாக்டர் சுந்தர் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரனிடம் வழங்கினார்.

சேலம் தலைவாசலில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் டாக்டர் சுந்தர் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரனிடம் வழங்கினார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் தலைவாசலில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் டாக்டர் சுந்தர் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரனிடம் வழங்கினார். 

தமிழக அரசின் சார்பில் மாவட்டங்கள் தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பெறப்படும் பொது மக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்த மனுக்களை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினர். இதே போல சேலம்  மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் டாக்டர் சுந்தர் சேலம் தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வழங்கினார்.
அந்த கோரிக்கை மனுவில், தொலைந்து போன மற்றும் காணாமல் போன வீட்டு மனை பட்டாக்கள் குறித்து விண்ணப்பிப்பவர்களுக்கு கிராம கணக்குகளின் அடிப்படையில் உடனடியாக அவர்களுக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தோராய பட்டாக்களுக்கு பதிலாக தூய வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், கிராம கணக்குகளில் உள்ள குளறிப் படிகளை சரி செய்து அதனை கணனியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் நீண்ட நெடுங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு இருக்கும் இடத்தினை அளவீடு செய்து அவர்களுக்கான வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என் மனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். மனுவினை பெற்றுக் கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் டாக்டர் சுந்தர் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தபோது, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், விசிக கெங்கவல்லி தொகுதி  செயலாளர் முருகேசன், மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், வீரகனூர் நகர பொறுப்பாளர்கள் ரமேஷ் இளையராஜா,  அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த முருகேசன் மற்றும் நத்த கரை பெரியசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கோபிசெட்டிப்பாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்

கோபிசெட்டிப்பாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரி சென்றாயம்பாளையத்தைச் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். நத்தம் அரசு புறம் போக்கு நிலத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த பகுதி மக்கள் அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் வெளியூரைச் சேர்ந்த சிலர் சாலையை வழிமறித்து ஆக்கிரமிப்பு செய்து குடிசைகள் அமைத்து உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து பெரியகொடிவேரி சென்றாயம்பாளையத்தைச் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கோபி சார் ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர்.

இதை தொடர்ந்து அவர்கள் அத்துமீறி செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோபி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதையும், ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4 பகுதியில் மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் வார்டு எண் 53, ரயில்வே காலனி உயர்நிலைப்பள்ளியில் மேற்கு பக்க கட்டிடத்தின் முதல் தளத்தில் ரூ.60.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வார்டு எண்.56 ரங்கம்பாளையம் பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியினையும், வைராபாளையம் குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.200.07 கோடி மதிப்பீட்டில் பெரும்பள்ளம் ஓடை தூர்வாரி பக்க சுவர்கள் பலப்படுத்தப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு 63 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பிச்சாண்டிபாளையம் ஊராட்சி சாலப்பாளையம் மேடு கிராமத்தில் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும். புதுப்பாளையம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊரக குடியிருப்புகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு சீரமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் புத்தூர்புதுப்பாளையம் பகுதியில் சிதம்பரம் என்பவர் திசுவாழை பரப்பு விரிவாக்கத்தில் ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் 2 ஹெக்டேர் பரப்பளவில் 6,200 கதளி ரக வாழை கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், மாநகர பொறியாளர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், விஜயலட்சுமி, மாநகர பொறியாளர் விஜயகுமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரியா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தாளவாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தினர்

தாளவாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தினர்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் இன்று (நவ.5) முற்றுகையிட்டனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று (நவ.5) செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். இதையடுத்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் வழங்கினர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தாளவாடி வட்டத்தில் உள்ள வனப்பகுதியின் எல்லை முழுவதும் போர்க்கால அடிப்படையில் பழைய ரயில்வே தண்டவாளத்தில் வேலி அமைக்கும் பணியை தொடங்கி விரைவாக நிறைவு செய்ய வேண்டும். தாளவாடி, ராமபுரம் பகுதியை ஒட்டிய கர்நாடக வனப்பகுதிக்கு ரயில்வே தண்டவாளத்தில் வேலி அமைக்கும் பணியை கர்நாடக வனத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

நெய்த்தாளபுரத்தில் இருந்து தலைமலை வரை மற்றும் மாவள்ளத்திலிருந்து குழியாடா பகுதி வரை உடனடியாக கேபிள் மூலம் மின்சாரத்தை கடத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவள்ளம், தேவர்நத்தம், குழியாடா பகுதி மக்கள் 24 மணி நேரமும் குழியாடா திம்பம் மலை பாதையை பயன்படுத்த வனத்துறை இடையூறு செய்யக்கூடாது. வனப்பகுதியில் உள்ள அனைத்து பாரம்பரிய கோயில்களும் வளமையாக உள்ள கோயில் நடைமுறையை தொடர்ந்து பயன்படுத்த வனத்துறை இடையூறு செய்யக்கூடாது.

திகனாரை பகுதியில் உள்ள ஜோரைக்காடு பகுதியை மாதிரி வேளாண் பகுதியாக அறிவித்து உடனடியாக செயல்படுத்த வேண்டும். வனப்பகுதிக்கு தண்டவாளத்தில் முழுமையாக வேலி அமைத்த பிறகு தண்டவாள வேலிக்கு வெளியே விவசாயிகள் பகுதிக்குள் வனத்துறையினர் எந்தவித செயலையும் மேற்கொள்ளக் கூடாது. முதியனூர் சிக்கராமன் யானையால் கொல்லப்பட்டதற்கு இழப்பீடாக வழங்குவதாக அரசு தரப்பில் உறுதி அளித்த 15 லட்சம் ரூபாய் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும்.

சிக்கராமன் மனைவிக்கு அரசு தரப்பில் உறுதி அளித்தபடி அரசு பணியை உடனடியாக வழங்க வேண்டும். வனவிலங்குகள் மனிதர்கள் மோதலின் போது உயிரிழக்கும் மக்களுக்கு கர்நாடகாவில் வழங்குவது போல 15 லட்சம் ரூபாயை தமிழக வனத்துறை வழங்க வேண்டும். வனப்பகுதிக்குள் உள்ள இடுகாட்டில் காலங்காலமாக நடைமுறைபடுத்தப்படும் உடல்கள் அடக்கம் செய்யும் பணிக்கு எக்காரணம் கொண்டும் வனத்துறை இடையூறு செய்யக்கூடாது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல தாளவாடி வட்ட விவசாயிகள் 24 மணி நேரமும் மலைப்பாதையை பயன்படுத்திக் கொள்ள உடனடியாக பாஸ் வழங்க வேண்டும். காலங்காலமாக பழங்குடி மக்கள் வனத்துறை சென்று சேகரித்து வந்து அனைத்து பொருட்களையும் தொடர்ந்து வனத்துக்குள் சென்று சேகரிப்பதற்கு வனத்துறை இடையூறு செய்யக்கூடாது.

தாளவாடி வட்டத்தில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல தாளவாடி வட்ட விவசாயிகள் 24 மணி நேரமும் மலைப்பாதையை பயன்படுத்திக் கொள்ள உடனடியாக பாஸ் வழங்க வேண்டும். காலங்காலமாக பழங்குடி மக்கள் வனத்துறை சென்று சேகரித்து வந்து அனைத்து பொருட்களையும் தொடர்ந்து வனத்துக்குள் சென்று சேகரிப்பதற்கு வனத்துறை இடையூறு செய்யக்கூடாது. தாளவாடி வட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் கூட எக்காரணம் கொண்டும் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 4 நவம்பர், 2024

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அசிங்கமாக பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரியை கைது செய்ய டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும். கஸ்தூரி அவர்கள் பொதுமனிப்பு கேட்க வேண்டும் என்றும் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் வலியுறுத்தல்.

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அசிங்கமாக பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரியை கைது செய்ய டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும். கஸ்தூரி அவர்கள் பொதுமனிப்பு கேட்க வேண்டும் என்றும் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் வலியுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அசிங்கமாக பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரியை கைது செய்ய டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும். கஸ்தூரி அவர்கள் பொதுமனிப்பு கேட்க வேண்டும் என்றும் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் வலியுறுத்தல். 

இதுகுறித்து தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா. அரவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தபோது,  நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் நடைபெற்ற பிராமணர்கள் கூட்டத்தில் திரைப்பட நடிகை கஸ்தூரி அவர்கள் தெலுங்கு மக்கள் வரலாறு தெரியாமல் தெலுங்கு மக்களினுடைய மனதை துன்புறுத்தும் விதமாக மிகவும் மோசமாக பேசியுள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன் மன்னர்களின் அந்தபுரத்து சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் என்று பேசி தெலுங்கு மக்களை மிகவும் கேவலமாக பேசி உள்ளார் அவருடைய பேச்சு தேசிய தெலுங்கர் சிறுபான்மை கூட்டமைப்பு சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நடிகை கஸ்தூரி அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் 
 தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு முதலமைச்சர்கள் வேண்டி கேட்டு கொள்கின்றோம் என்றார். 
மேலும் நேற்றைய தினம் கஸ்தூரி அவர்கள் ஒரு பேட்டி அளித்துள்ளார்.  அந்த பேட்டியிலே நான் தெலுங்கர்களை பற்றி பேசவில்லை தெலுங்கு ஒரு குடும்பத்தை பற்றி தான் பேசுகிறேன் என்று மேலும் அவர்களும் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். மேலும் தமிழக அரசையும் மிக கேவலமாக பேசி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். 
இன்றைய தினம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வரும் தமிழக முதலமைச்சரவர்கள் அனைத்து சமூகத்திற்குமே சரியான சமபங்களித்து அமைச்சரவை மிக விரிவாக நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரை மாற்றத்தில் கூட மிகத் தமிழகத்தில் உயர்ந்த துறையான உயர்கல்வித்துறைக்கு கோவை செழியன் அவர்களை உயர்கல்வித்துறை அமைச்சராக அறிவித்துள்ளார் என்று கூறிய நாகா அரவிந்தன்,  அனைவருக்கும் சமபங்களித்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர் அவர்களையும் மிக அசிங்கமாக பேசி வரும் கஸ்தூரி அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தேசிய தெலுங்கர்  சிறுபான்மை கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்றார். மேலும் கஸ்தூரி அவர்கள் செயலை கண்டித்து சென்னையில் மிக விரைவில் தமிழக டிஜிபி அவர்கள் நேரில் சந்தித்து தெலுங்கர் கூட்டமைப்பு சார்பில் எங்களுடைய கோரிக்கை வைத்து அவர்கள் கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் டிஜிபி அவர்களிடம் மனு அளிக்க உள்ளோம் என்று கூறியதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் பொது மன்னிப்பு கேட்டால் தான் இது இந்த பிரச்சனை தீர்வுக்கு வரும். இங்கு மட்டுமல்லாமல் ஆந்திரா தெலுங்கானா அனைத்து இடத்திலுமே தெலுங்கு பேசக்கூடிய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிக விரைவிலே சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.  நிச்சயமாக  இன்றைய தினம் ஆந்திராவிலே மிக அருமையான ஆட்சி செய்து வரும் சந்திரபாபு நாயுடுக்கும் எங்களுடைய கோரிக்கை வைக்கின்றோம். கஸ்தூரி அவர்கள் ஆந்திராவில் ஹைதராபாத்தில் குடியிருப்பதாக நேற்று பேட்டியில் உள்ளார். அவர் அங்கு நடிப்பதற்கு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஆந்திரா அரசியல் நாங்கள் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம் டாக்டர் நாக அரவிந்தன் தெரிவித்துள்ளார்.  பேட்டியின் போது, கௌரவத் தலைவர் ஆர் கே ஜெயக்குமார்,  செயலாளர் முரளி மற்றும் தொழிலதிபர் லட்சுமண குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.