ஞாயிறு, 24 நவம்பர், 2024

சேலத்தில் அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

சேலத்தில் அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 

சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே அதிநவீன முறையில் ஆகில்ஸ் பிட்னெஸ் என்கின்ற யுனி செக்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடனும் துவக்கப்பட்ட இந்த புதிய அதி நவீன உடற்பயிற்சி  மையத்தில் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தலைமை தாங்கினார். பயிற்சி மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் சேலம் அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய உடற்பயிற்சி மையத்தினை துவக்கி வைத்தனர். 
சேலம் மாநகரில் எத்தனையோ உடற்பயிற்சி நிலையங்கள் இறந்தபோதிலும், தற்பொழுது சேலத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆகில்ஸ் ஃபிட்னெஸ் யூனி செக்ஸ் பயிற்சி மையத்தில், வழக்கமான உடற்பயிற்சிகளுடன், கூடுதலாககொழுப்பு குறைப்பு, கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, தசை பயிற்சி, தனிப்பட்ட பயிற்சி, உணவு திட்டமிடல் ஆகிய பயிற்சிகளும், 
இது போக காயம் மீட்பு, தரமான உபகரணங்கள், சிறந்த பயிற்சி, விளையாட்டு சார்ந்த பயிற்சி, அதிகரித்த உடற்பயிற்சி மற்றும் ஆற்றல் நிலைகள், பாடி பில்டர் & பவர் லிஃப்டிங் பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தெரிவித்தார். 
அதுமட்டுமல்லாமல் அதிகப்படியாக தங்களது உடலை வருத்தி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சூழல் தற்பொழுது எழுந்துள்ள நிலையில், இது போன்ற நிகழ்வு நிகழாமல் இருக்க கூடுதல் பயிற்சியாளர்களை வைத்து உன்னிப்பாக கவனம் செலுத்த உள்ளதாகவும்,  பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி நிலையம் மேற்கொள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த பயிற்சி மையத் துவக்க விழாவில் 31வது வார்டு திமுக  செயலாளர் சையது இப்ராஹிம், 32வது வார்டு செயலாளர் கபிர், திமுக நிர்வாகி வதூது ரஹ்மான், முஹம்மது ஹக்கீம் ஆகியோர் உட்பட திமுக நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என திரளானோர கலந்து கொண்டு பயிற்சி மைய உரிமையாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பவானி அருகே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி

பவானி அருகே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி

தொப்பூர் - பவானி - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் குருப்பநாயக்கன்பாளையம் முதல் கோணவாய்க்கால் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் புறவழிச்சாலை பிரிவில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மின்வாரியத்தின் சார்பில் மின் கம்பம்  அமைத்து டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெற்றது.

பவானி வடக்கு மின்வாரிய உதவி பொறியாளர் லெனின் லிங்கேஸ்வரன் மேற்பார்வையில், மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம் முக்கியமான சந்திப்பு சாலையில் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெறாமல் மின் கம்பம் நடப்பட்டு உள்ளதாகவும், இதனால் வளைவில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறினார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறாமல் நடப்பட்ட மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சதாசிவம் மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார், மின்வாரிய ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்டித்ததோடு மின்கம்பத்தை அகற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிஎஸ்ஐ திருச்சபை நிர்வாகிகள் புகார்.!

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிஎஸ்ஐ திருச்சபை நிர்வாகிகள் புகார்.!

திருச்சபையில் தேர்தலில் தோற்றவர்கள் பணி செய்ய விடாமல் தடையாக இருப்பதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஈரோடு சிஎஸ்ஐ திருச்சபையை நிர்வாகிகள் புகார்.!

சிஎஸ்ஐ தென்னிந்திய திருச்சபையின் 24 மண்டலங்களில் கோவை மண்டலம் பெரியது என்பதால் அதில் இருந்து ஈரோடு, சேலம் பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த, ஆண்டு புதிய திருமண்டலம் உருவாக்கப்பட்டு தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் தடையாணை ஏதும் இல்லாத நிலையில், தேர்தலில் தோற்றவர்கள் தங்களை பணி்செய்ய விடாமல் தடுப்பதாக கூறி திருமண்டல புதிய நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஈரோடு வருவாய் கோட்டாச்சியரை சந்தித்து மனு அளித்த அவர்கள், நிர்வாக ரீதியாக பிரச்சனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன்,
சிஎஸ்ஐ திருமண்டலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களை செயல்பட விடாமல் தோல்வியடைந்தவர்கள் தடுப்பதாகவும், திருச்சபையில் சேவைகள், கல்வி, மருத்துவ பணிகள் நடைபெறுவதால் நிர்வாக ரீதியாக நிறுத்துவதற்கு முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் தேர்தலில் தோற்றவர்கள் சிறு கூட்டமாக கூடி நிர்வாக கூட்டங்களை நடத்த விடாமல் ரகளை செய்கின்றனர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். 

 இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தீர்ப்பு வழங்கியுள்ளார் திருப்பணி ஊழியம் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார் இடையூறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என கோட்டாட்சியர் கூறியுள்ளார் கிறிஸ்துமஸ் புத்தாண்டு நெருங்கும் வேலையில் அவற்றை தடுக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறு அவர்கள் செயல்படுகின்றனர் என கூறினார்.
குழந்தைகள் மத்தியில் ஆண்ட்ராய்டு செல்போன்களின் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி, ஈரோட்டில் மழலைகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி!

குழந்தைகள் மத்தியில் ஆண்ட்ராய்டு செல்போன்களின் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி, ஈரோட்டில் மழலைகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி!


 குழந்தைகள் மத்தியில் ஆண்ட்ராய்டு செல்போன்களின் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலைகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி ..!

குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டியில் பெற்றோர்களும் சேர்ந்து ஓடியதால் பார்ப்போர் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற நிலையில் குழந்தைகளை வெற்றி பெற வைக்க பெற்றோர்களும் இணைந்து ஓடினர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில், செலிப்ரேட்டெக்ஸ் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் ஆண்ட்ராய்டு செல்போன்களின் பயன்பாட்டை குறைக்கவும், பாரம்பரிய விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த்தில் ஊக்குவிக்கும் வகையில்,

2 முதல் 5 வயது குழந்தைகள் 500 மீட்டர் தொலைவும், 6 முதல் 10 வயது வரை 800 மீட்டர் தொலைவில், இறுதியாக 11 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 கிலோ மீட்டர் என பிரிவிற்கு ஏற்றார் போல் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

போட்டியானது டெக்ஸ்வேலி வளாகத்தில் தொடங்கி ஈரோடு கோவை செல்லும் நெடுஞ்சாலை வரை சென்று திரும்பினர், 

போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, பதக்கங்களும் சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கினார். போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற நிலையில், 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளை வெற்றி பெற வைப்பதற்காக பெற்றோர்களும் இணைந்து ஓடியது அனைவரையும் ஆரவாரப்படுத்தியது.