புதன், 27 நவம்பர், 2024

தமிழக துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா. சேலம் கோட்டை பகுதியில் ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி வழங்கி உற்சாக கொண்டாடி மகிழ்ந்த திமுகவினர்.0

தமிழக துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா. சேலம் கோட்டை பகுதியில் ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி வழங்கி உற்சாக கொண்டாடி மகிழ்ந்த திமுகவினர்.0

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தமிழக துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா. சேலம் கோட்டை பகுதியில் ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி வழங்கி உற்சாக கொண்டாடி மகிழ்ந்த திமுகவினர்.

திமுக இளைஞரணி தலைவரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை 31 வது கோட்டை திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவையொட்டி ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். 
31 வது கோட்டை திமுக செயலாளர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சேலம் ஜாமியா மசூதியின் முன்னாள் மூத்தவல்லியும், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசர் கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் உட்பட மத பேதமின்றி சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். 
இந்த நிகழ்வில், திமுக நிர்வாகிகள் அஸ்மத் கான், சிவா முத்து நகை முரளி செந்தில் சரவணன் யாகூப் பாலாஜி பைதுல்லா பாசில் ரஹ்மத்துல்லாஹ் இப்ராஹிம் ரசாக் ஜாபர் நியாசுதீன் உன்னிடம் பலர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 26 நவம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நவ.29ம் தேதி கடையடைப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் நவ.29ம் தேதி கடையடைப்பு போராட்டம்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று (நவ.26) நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வணிக வாடகை கட்டங்களுக்கு வாடகைக்கு 18 சதவீதம் வரி விதிப்பு, தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து நவ.29ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒருநாள் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப் படும் என்றும், தொழில் நிறுவனங்களில் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு ஜவுளிக்கடை உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதேபோல், ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பிலும், நவ.29ம் தேதி கடையடைப்பு நடைபெறுகிறது. ஈரோடு பகுதியில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்க உள்ளன. இதில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கம், ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம், இப்போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி: டிச.4ல் துவக்கம்

ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி: டிச.4ல் துவக்கம்

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில், சணல் பை கைப்பை, பெண்களுக்கான கைப்பை மற்றும் பணப்பை தயாரித்தல் தொடர்பான இலவசப் பயிற்சி வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை உணவு உள்பட அனைத்தும் இலவசம். இப்பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2வது தளம், ஆஸ்ரம் வளாகம் கொல்லம்பாளையம் புறவழிச் சாலை, ஈரோடு 638002 எனும் முகவரியில் நடக்க உள்ளது.
பயிற்சி மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களுக்கு 0424-2400338, 8778323213 மற்றும் 7200650604 என்ற எண்களில் கொள்ளலாம் என்று கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் சாலையோரம் வீசப்பட்டு கிடந்த தரமான அரசு மருத்துவமனை மாத்திரைகள்

ஈரோட்டில் சாலையோரம் வீசப்பட்டு கிடந்த தரமான அரசு மருத்துவமனை மாத்திரைகள்

ஈரோடு தில்லை நகர் தெப்பக்குளம் வீதியில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் சாலையோரத்தில் நேற்று வீசப்பட்டுக் கிடந்தன. இந்த மாத்திரைகள் அனைத்தும் 2025ம் ஆண்டு வரை காலாவதி உள்ளவை ஆகும்.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த மாத்திரைகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து, இந்த மாத்திரையில் குறித்து மருத்துவரிடம் விசாரிக்கையில், அந்த மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகள் என்பது தெரிய வந்தது.

மாத்திரைகள் ஏன் அங்கு வீசப்பட்டது? அவை ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட வேண்டிய மாத்திரைகளா? அல்லது அரசு மருத்துவா்களோ? மருந்தக பணியாளர்களோ, இந்தப் பகுதியில் வீசி சென்றனாரா? என்பது குறித்து ஈரோடு மாநகராட்சி நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் நிலையை பாதுகாத்திட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு செய்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (நவ.26) ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் உட்பட 10 வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் என 400-க்கும் மேற்பட்ட வருவாய் ஊழியர்கள் பணியை புறக்கணித்து அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 2 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பு ஆண்டு மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை வெளியிட வேண்டும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் 5 சதவீதத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கிடையே வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு உதவித்தொகை வேண்டி வருபவர்கள், ஜாதி சான்றிதழ் போன்ற பல்வேறு அரசு ஆவணங்கள் பெறுவதற்காக வந்த பொது மக்கள் அலுவலர்களை சந்திக்க முடியாமல் திரும்பி சென்றதால் அவதியடைந்தனர். வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தை அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம்: காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்

அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம்: காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்

அந்தியூர் அருகே பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (நவ.26) திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில், அந்தியூர் பெரிய ஏரியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு குழாம் என்று அழைக்கப்படும் படகு இல்லம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று (நவ.26) நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக படகு இல்லத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் பெரிய ஏரி படகு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் படகில் சவாரி செய்தனர்.
சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கத்திற்கும், எதிர்க்கட்சித் தலைவருமான யாதவ மூர்த்தி கும் இடையே கடும் வாதத்தினால் மாமன்ற இயல்பு கூட்டத்தில் கடுமையான பரபரப்பு.

சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கத்திற்கும், எதிர்க்கட்சித் தலைவருமான யாதவ மூர்த்தி கும் இடையே கடும் வாதத்தினால் மாமன்ற இயல்பு கூட்டத்தில் கடுமையான பரபரப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கத்திற்கும், எதிர்க்கட்சித் தலைவருமான யாதவ மூர்த்தி கும் இடையே கடும் வாதத்தினால் மாமன்ற இயல்பு கூட்டத்தில் கடுமையான பரபரப்பு. 

சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ரஞ்சித் சிங் மற்றும் துணை மேயர் திருமதி சாரதாதேவி ஆகியோரது முன்னிலையில்  நடைபெற்றது. 
60 கூட்டங்களை உள்ளடக்கிய மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்ட பிரச்சனைகள் குறித்து ஒவ்வொருவராக தங்களது ஆதங்கங்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் பதிவு செய்த வண்ணம் இருந்தனர். 
அப்பொழுது சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும்,  வழக்கறிஞருமான தெய்வ லிங்கம் தனது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் செய்ய தவறிய சில கருத்துக்களை வெளிப்படுத்தக் கொண்டிருக்கும்போது, அதாவது சேலம் பழைய பேருந்து நிலையம் அகற்றப்பட்டு புதிய இரண்டு அடுக்கு அடுக்கு பழைய பேருந்து நிலையமாக அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு உண்டான உரிமையாளர்களும் தொழிலாளர்களும் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு உண்டான வசதி இல்லை என்று குறிப்பிட்டு பேசும்போது, திடீரென்று குறிக்கிட்டு பேசிய சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவை சேர்ந்த யாதவமூர்த்தி கடும் கண்டனத்தை தெரிவித்தார். காரணம் பழைய பேருந்து நிலையம் ஈரடுக்கு பேருந்து நிலையமாக உருவாக்க திட்டமிட்டு அதற்கான பூமி பூஜையை போட்டவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதற்காக குறை கூறி பேசுவதா என்று பேசும்போது சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக கடும் அமளி ஏற்பட்டது. 
கடுமையான அமலுக்கும் இடையே மாமன்ற உறுப்பினர் தயவலிங்கம் தனது கோரிக்கைகளை முன்வைத்து மாநகராட்சி மேயர் ஆணையாளர் மற்றும் துணை மேயர் ஆகியோரிடம் ஒப்புதலை பெற்று இடம் அமர்ந்தார். 
இது சேலம் மாமன்ற கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.  என்றாலும் கூட வழக்கம் போல அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.