வியாழன், 28 நவம்பர், 2024

ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைய வேண்டிய, ஈரோடு மாநகர் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் சிறப்பு பிரார்த்தனை

ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைய வேண்டிய, ஈரோடு மாநகர் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் சிறப்பு பிரார்த்தனை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான தன்மான தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவர் பூரண குணமடைந்திட வேண்டி இன்று (வியாழக்கிழமை) மாலை
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில், 
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஹஜ்ரத் சேக் அலாவுதீன் பா(து)ஷா அவ்லியா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை (துவா) தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை முதன்மை மாநிலத் துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி தலைமையில் ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது, ஆகியோர் முன்னிலையில் சிறப்பு (துவா) பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களான கே.புனிதன்,அம்மன் மாதேஷ், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை துணைத்தலைவர் கே.என்.பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,ஈரோடு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஈ ஆர் எஸ் பிரகாஷ்,சேவா தள மாவட்ட தலைவர் எஸ்.முகமது யூசுப், ராஜாஜிபுரம் சிவா, வெற்றிச்செல்வன்,கராத்தே அப்துல் காதர் சூரம்பட்டி திமுகவைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு (துவா) பிரார்த்தனை செய்தனர்.
கொடுமுடியில் நூலகம், திறன் மேம்பாட்டு மைய கட்டத்தினை திறந்து வைத்த முன்னாள் அரசு செயலாளர்கள்

கொடுமுடியில் நூலகம், திறன் மேம்பாட்டு மைய கட்டத்தினை திறந்து வைத்த முன்னாள் அரசு செயலாளர்கள்

கொடுமுடி பேரூராட்சியில் மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தினை முன்னாள் அரசு செயலாளர்கள் கே.பி.கிருஷ்ணன், சிவதாஸ்மீனா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி, வடக்கு தெருவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (நவ.28) நடந்தது.

மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், இந்திய அரசின் முன்னாள் அரசு செயலர் கே.பி.கிருஷ்ணன் (ஓய்வு) மற்றும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் தலைவர் சிவதாஸ் மீனா (ஓய்வு) ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சி பகுதியில் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கு இந்திய அரசின் முன்னாள் அரசு செயலர் கிருஷ்ணன் (ஓய்வு) நிலத்தினை வழங்கியுள்ளார்.
மேலும், நூலகம் அமைத்திட நமக்கு நாமே திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீத பங்குத் தொகையாக ரூ.55 லட்சத்தினை ஸ்ரீராம் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்., மற்றும் டாடா கன்சியூமர் உற்பத்தி நிறுவனம் லிமிடெட்., மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நூலகம் ரூ.1.10 கோடி மதிப்பில் தரைதளம், முதல்தளம் என 2060 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கொடுமுடி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கற்றல் மையத்துடன் கூடிய நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்நூலகமானது கொடுமுடி பகுதி மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இதில் அறிவியல், விஞ்ஞானம், இலக்கியம், கதைகள், அறிவியல், ஆளுமை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த நூலகமானது, இளைஞர்களுக்கும். பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்விற்கு தயாராவதற்கு ஏதுவாக அமையும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பெருந்துறை, சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிகளில் அறிவுசார் மையங்கள் கட்டப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.
நூலகங்களாக மட்டுமல்லாமல், திறன் மேம்பாட்டு மையங்களாக அமைந்துள்ளது. எனவே, இளைஞர்கள், பொதுமக்கள். மாணவ, மாணவியர்கள் என அனைவரும் இதுபோன்ற நூலகங்களை பயன்படுத்தி தங்கள் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதோடு. எதிர்காலத்தில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, தொழிலதிபர்கள் போன்ற உயர்ந்த நிலைகளை எட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீராம் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்., நிறுவன செயலர் செந்தில்நாதன், டாடா கன்சியூமர் உற்பத்தி நிறுவனம் லிமிடெட்., நிறுவன செயலர் டெல்னாஸ் ஹர்டா, ஈரோடு யுஆர்சி கட்டுமான நிறுவன மேலாண்மை இயக்குநர் தேவராஜன், கொடுமுடி எஸ்எஸ்வி கல்வி நிறுவனங்கள் தலைவர் அருள், கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) 20 ஆயிரம் கடைகள் அடைப்பு |

ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) 20 ஆயிரம் கடைகள் அடைப்பு |

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வாடகை கட்டிடங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சிறு, குறு தொழில் கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்களும் பாதிக்கும். இந்த வரி உயர்வு என்பது கார்ப்பரேட் மயமாக்கும் சூழலை உருவாக்கும்.
மேலும் இது நம் நாட்டின் பாரம்பரிய கூட்டு குடும்ப தொழில் எனும் கட்டுமானத்தையே சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே இந்த வரி விதிப்பு முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (29ம் தேதி) வெள்ளிக்கிழமை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் வணிக நிறுவனங்களை சேர்ந்த 75 சங்கங்களும் இந்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மஞ்சள் மார்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கனவே சுவாசப் பிரச்சினை உண்டு. மழைக்காலங்களிலும், பனிக் காலங்களிலும் சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்படுவார். வீட்டில் அவ்வப்போது 'நெபுலைசர்' உதவியுடன் சுவாசிப்பார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரல் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் நுரையீரல் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
நேற்று (நவ.27) பகலில் சாதாரணமாக காணப்பட்டார். எழுந்து நடமாடினார். மாலையில் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.28) காலை 11.45 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பெறும் அறைக்கு சென்று அவரை பார்த்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முதல்வர் ஸ்டாலின் டிச.19, 20ல் ஈரோடு வருகை: விழா மேடை அமைக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் டிச.19, 20ல் ஈரோடு வருகை: விழா மேடை அமைக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் டிச.19, 20ல் ஈரோடு வருகை: விழா மேடை அமைக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தருகிறார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் அரசின் திட்டங்களை கள ஆய்வு செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக சோலார் புதிய பேருந்து நிலையம் அருகே விழா அமைக்கும் இடத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில், பொதுமக்கள், பயனாளிகள், வாகன நிறுத்தம், அடிப்படை டை வசதிகள், முதல்வர் வந்து செல்வது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.