செவ்வாய், 3 டிசம்பர், 2024

சேலம் கொண்டலாம்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததை திருமணிமுத்தாற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு  தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ்....பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரயில் ரோடு வரை சுமார் 500 மீட்டர் வரை தடுப்பு சுவர் எழுப்பி கொடுத்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை

சேலம் கொண்டலாம்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததை திருமணிமுத்தாற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ்....பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரயில் ரோடு வரை சுமார் 500 மீட்டர் வரை தடுப்பு சுவர் எழுப்பி கொடுத்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததை திருமணிமுத்தாற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு  தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ்....பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரயில் ரோடு வரை சுமார் 500 மீட்டர் வரை தடுப்பு சுவர் எழுப்பி கொடுத்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை

சேலம் திருமணிமுத்தாற்றில் இருந்து  வரும் மழைநீரானது ராஜ வாய்க்கால் ஜாரி கொண்டலாம்பட்டி வயக்காடு பாசனப்பகுதி வாய்க்கால்கரை நேற்று கனத்த மழை பெய்ததில் மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததை திருமணிமுத்தாற்றுப் பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு  தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ் அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆய்வு செய்தார்.  ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த கரையை சுமார் 40 நாட்களுக்கு முன்பு எம்சன் மூட்டை போட்டு நீர் வளம் ஆதார அமைப்பு சார்பில் உடைந்த கரையை சரி செய்து கொடுக்கப்பட்டது மீண்டும் அதே இடத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எம் சென்ட்மூட்டைகள் வெள்ளத்தால் தள்ளப்பட்டு விவசாய நிலங்களில் இரண்டு நாட்களாக தண்ணீர் சென்று கொண்டுள்ளது. மழை நீர் சூழ்ந்துள்ளதால்  சுமார் 60 ஏக்கருக்கு மேல் உள்ள பயிர்கள், கால்நடை தீவனங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. 
இது சம்பந்தமாக நீர்வள ஆதாரம் அமைப்பு  அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளோம், அவர்கள் இன்றுநேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக சரி செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இந்த வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில் கோரிக்கையாக இந்த பாதிக்கப்பட்ட பகுதியில் அடிக்கடி மழை வந்தால் கரை உடைவதால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரயில் ரோடு வரை சுமார் 500 மீட்டர் வரை தடுப்பு சுவர் எழுப்பி கொடுத்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டி விவசாயிகள் சார்பில் உள்ள கோரிக்கையை திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள்  சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி  தங்கராஜ் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்குபதிவு தபால் அனுப்பி வைக்கப்பட்டது.  ஆய்வின் போது ஜாரி கொண்டலாம்பட்டி கிளை துணைத் தலைவர் கந்தையன், துணைச செயலாளர் கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மழைநீரில் மூழ்கிய 150 ஏக்கர் கரும்பு நெல் பாக்கு... திருமணிமுத்தாறு மற்றும் ராஜ வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் அடித்து செல்லப்பட்டது. அரசு கணக்கீடு செய்து ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை ...

மழைநீரில் மூழ்கிய 150 ஏக்கர் கரும்பு நெல் பாக்கு... திருமணிமுத்தாறு மற்றும் ராஜ வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் அடித்து செல்லப்பட்டது. அரசு கணக்கீடு செய்து ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை ...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மழைநீரில் மூழ்கிய 150 ஏக்கர் கரும்பு நெல் பாக்கு... திருமணிமுத்தாறு மற்றும் 
ராஜ வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் அடித்து செல்லப்பட்டது. அரசு கணக்கீடு செய்து ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை ...

சேலத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பாக ஏற்காடு மலைப்பகுதியில் அதிகளவில் மழை பொலிவு ஏற்பட்டது இதனை அடுத்து அங்கிருந்து மழை நீர் முழுமையாக வெளியேறி திருமணிமுத்தாறு ராஜவாய்க்கால் ஓடையில் சென்றது இந்த திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் ஓடை செல்லும் 
கந்தம்பட்டி 
புத்தூர் அக்ரஹரம் பகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்தது குறிப்பாக அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு நெல், சோளம் பாக்கு உள்ளிட்ட 150 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்ததால் முழுமையாக அழியும் சூழல் உருவாகியுள்ளது.
மழைநீர் விவசாய நிலங்களுக்குள் ஆர்ப்பரித்து செல்லும் பொழுது பயிரிடப்பட்டிருந்த பாக்கு சோளம் பருத்தி உள்ளிட்ட செடிகளும் அடித்து செல்லப்பட்டது அரசு உடனடியாக 
ராஜ வாய்க்காலை தூர்வார வேண்டும் திருமணிமுத்தாறு கரையை பலப்படுத்த வேண்டும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருமணிமுத்தாற்று பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ் உட்பட ஆற்றுப் பாசன  விவசாயிகள்  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் கடத்திய 1,075 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோட்டில் சரக்கு வாகனத்தில் கடத்திய 1,075 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோடு -காங்கேயம் சாலையில் மூலப்பாளையம் அருகே ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி செல்வதாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சுதா, உதவி ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 1,075 கிலோ ரேஷன் அரிசி விற்பனைக்காக கடத்தி செல்லப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு அருகே வெண்டிபாளையத்தைச் சேர்ந்த அர்த்த நாரீஸ்வரன் (வயது 40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். பின்னர் அர்த்த நாரீஸ்வரனிடம் இருந்து 1,075 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதி சாலை சேற்றில் சிக்கிய அரசு பேருந்து

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதி சாலை சேற்றில் சிக்கிய அரசு பேருந்து

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக் கிராமத்தில் 34 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

மேற்கு மலை, கிழக்கு மலை என இரு பிரிவுகளாக உள்ள மலைப்பகுதிகளில் மேற்கு மலைப் பகுதிகளுக்கு மினி பேருந்துகள் கொங்காடை வரை இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கிழக்கு மலை பகுதிகளுக்கு மடம் வரை செல்லக்கூடிய பேருந்துகள் செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதனிடையே, அந்தியூர் மற்றும் பர்கூர், தாளக்கடை, தட்டக்கரை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், வனச்சாலைகள் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்து வருகிறது.

இந்நிலையில், மடத்தில் தேவர்மலை, இருட்டி வழியாக அந்தியூர் நோக்கி ஒரு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது,ஈரொட்டி பகுதியில் வனச்சாலையில் வந்தபோது, பேருந்து திடீரென சேற்றில் சிக்கி நகர முடியாமல் நின்றது.

இதையடுத்து, தகவலறிந்து வந்த அரசு போக்குவரத்துக் கழக அந்தியூர் கிளை மேலாளர் ரமேஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பவானி கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி பொறியாளர் பாபு சரவணன், சாலை ஆய்வாளர் கிருஷ்ணசாமி உள்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு அந்த இயந்திரத்தின் மூலம் ரோப் கட்டி இழுக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சிரமப்பட்டு பேருந்தை மேலே கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மாவட்டத்தில் 8,260 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.15 கோடியில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 8,260 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.15 கோடியில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2023-2024ம் ஆண்டில் 8,260 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கூரப்பாளையம், நந்தா இயன்முறை கல்லூரியில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று (டிச.3) நடைபெற்றது. இந்த விழாவினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது, உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், 10 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டதில், 240 மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2023-2024ம் ஆண்டில் 8260 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் அனைத்தும் இணையதளம் மூலம் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள், உதவித்தொகை உள்ளிட்ட சேவைகளை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தினை அணுகி விண்ணப்பித்து, பயன்பெறலாம்.

3 சக்கர வாகனங்கள் வழங்குவதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு, மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் 50 நபர்களுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்குதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பாக, செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பொருட்டு, இ - சேவை மையத்தில் PARIVAHAN என்ற இணையதளத்தில் வழியாக பதிவேற்றம் செய்திட சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.


ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு துறையின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தெரிவு செய்யப்பட்ட 42 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு தொகை செலுத்துவதற்கு ஏதுவாக, கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, ஆர்.என்.புதூர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, செங்கோடம்பாளையம் கொங்கு அறிவாலயம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி என மொத்தம் 9 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டதில், முதல் 3 இடங்களை பெற்ற 240 மாணவ, மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

தொடர்ந்து, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் குழந்தைசாமி, நந்தா கல்வி நிறுவன தலைவர் வி.சண்முகன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் ஆகியோர் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் மற்றும் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைத்து நடத்திய விழிப்புணர்வு வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.