ஞாயிறு, 8 டிசம்பர், 2024

சேலத்தில் அகில இந்திய அளவிலான 31,32-வது நாய்கள் கண்காட்சி : 45 வகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நாய்கள் என 400க்கும் அதிகமான அரிய வகை நாய்கள் பங்கேற்பு : இந்திய மற்றும் வெளிநாட்டு அரிய வகை நாய் இனங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து அதன் குணாதிசயங்களை கண்டறிந்தனர்.

சேலத்தில் அகில இந்திய அளவிலான 31,32-வது நாய்கள் கண்காட்சி : 45 வகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நாய்கள் என 400க்கும் அதிகமான அரிய வகை நாய்கள் பங்கேற்பு : இந்திய மற்றும் வெளிநாட்டு அரிய வகை நாய் இனங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து அதன் குணாதிசயங்களை கண்டறிந்தனர்.

சேலம.
S.K. சுரேஷ் பபு
.
சேலத்தில் அகில இந்திய அளவிலான 31,32-வது நாய்கள் கண்காட்சி : 45 வகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நாய்கள் என 400க்கும் அதிகமான அரிய வகை நாய்கள் பங்கேற்பு : இந்திய மற்றும் வெளிநாட்டு அரிய வகை நாய் இனங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து அதன் குணாதிசயங்களை கண்டறிந்தனர்.

 சேலம் அக்மே கேணல் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு அருகே  உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல அரிய வகை நாய்கள் உட்பட, பூனே, கோலாபூர், மஹாராஸ்ட்ரா, கேரளா, சென்னை, பஞ்சாப், போபால் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நமது நாட்டில் வளர்க்கப்படும்  நாய்களுடன் சேலம் மாநகர மற்றும் மாவட்ட காவல் பணியாற்றும் துப்பறியும் உயர் ஜாதி, அதாவது துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஐந்தறிவு கொண்ட ஜீவன்களும் கலந்து கொண்டன.

சேலம் ஆத்மி கேனல் கிளப் தலைவர் விசு காளியப்பா தலைமையில் நடைபெற்ற இந்த 2024 வது ஆண்டுக்கான 31 மற்றும் 32 ஆகிய தேசிய அளவிலான போட்டியினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் மற்றும் சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த தேசிய அளவிலான கண்காட்சியை துவக்கி வைத்தார். 
குறிப்பாக இந்திய வகை நாய்களான ராஜப்பாளையம், சிப்பிப்பாறை, டேஸ்ஹவுன்ட், பீகில், ராட்வீலர், டால்மேசன், கிரேடன், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், மற்றும் மிகவும் அரிய வகை நாய்களான ரோடிசியன் ரிட்ஜ்பேக் புல்டெரியா வகை நாய்கள் என 45 வகையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 400க்கும் அதிகமான நாய்கள் அரிய வகை நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு இந்தியாவில் பராமரிக்கப்படுபவர்களால்  பங்கேற்றன.
குறிப்பாக சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நடுவர்களாக கலந்து கொண்ட இந்த கண்காட்சியில், இனத்திற்கு ஏற்ப அதன் வளர்ச்சி உடல்வாகு, நடை, ஓட்டம் மற்றும் அதன் தோற்றம் என அதன் குணாதிசியங்கள் பொருத்தமாக உள்ள நாய்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட நாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதன் உரிமையாளர்களும் பயிற்சியாளர்களும், நாய்களின் பெயரை சொல்லி கோசங்களை எழுப்பினர். இந்த நாய்களின் தனி திறன்களைbகண்காட்சியில் கண்காட்சியில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.  
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில், சேலம் அக்மே கேணல் கிளப் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் திருமாவளவனும்கிருஷ்ணசாமியும் இரட்டை வேடம். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவை அதியமான் பரபரப்பு குற்றச்சாட்டு.....

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் திருமாவளவனும்கிருஷ்ணசாமியும் இரட்டை வேடம். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவை அதியமான் பரபரப்பு குற்றச்சாட்டு.....


சேலம் 

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் திருமாவளவனும்,
கிருஷ்ணசாமியும் இரட்டை வேடம். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவை அதியமான் பரபரப்பு குற்றச்சாட்டு.....

சென்னையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடுகேட்டு பாதுகாப்பு பேரணி. சேலத்தில் தமிழ்நாடு ஆதித்தமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான் அறிவிப்பு.
ஜனவரி ஆறாம் தேதி சென்னையில் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடைபெறும் என சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவையின் மாநில தலைவர் அதியமான் தெரிவித்தார்.
தமிழ்நாடு அருந்ததியர் அமைப்பு கடந்த மாதத்தில் துவங்கப்பட்டது 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டமைப்பாக இணைந்துள்ளனர். ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பு முழு ஒதுக்கீடு சம்பந்தப்பட்டது.
உள் ஒதுக்கீடு குறித்து வந்த தீர்ப்பு சிறப்பான தீர்ப்பு மாநில அரசு உள்ளது குறித்து முடிவெடுக்கலாம் என அறிவித்திருந்தது பாராட்டுத்தக்கது.  சரியான தரவுகளின் அடிப்படையில் உள்ள ஒதுக்கீடு வழங்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 18 சதவீத இட ஒதுக்கடை பிரித்து 76சாதிகளுக்கும் அவர்களின் பின்னணியான பின் தங்கிய உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எங்கள் கூட்டணியின் நோக்கம் என தெரிவித்தார். அதற்காக தமிழக அரசு ஒரு குழு அமைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒன்றிய அரசிற்கு அதிக அதிகாரம் உள்ளது. அனைத்து கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவித்துள்ளதால் இந்த அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் தான் ஒட்டுமொத்த பிரச்சனையும் சீராகும் எனவும் தெரிவித்தார். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் அவர் இட ஒதுக்கீட்டை பிரிக்கக் கூடாது என பேசி உள்ளார். இட ஒதுக்கீட்டிற்கு ஒரு இடத்தில் ஆதரவு எனவும் சில மேடைகளில் எதிர்ப்பு எனவும் பேசி வருவது நல்லதல்ல. குறிப்பாக இட ஒதுக்கீடு குறித்து மறுசீராய்வு மனு அளித்தது நல்லதல்ல. குறிப்பாக இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வழக்கு போட்டிருப்பது அவரின் இரட்டை வேடத்தை காட்டுவதாக அதியமான் தெரிவித்தார்.
கிருஷ்ணசாமி அவர்களின் கூற்று தவறானது எனவும் தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கக் கூடாது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்கள் முயற்சியின் காரணமாக அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை ஒழித்துக் கட்ட சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என தெரிவித்தார். 70 ஆண்டுகளாக அனுபவித்த சலுகைகளை கிருஷ்ணசாமி திருமாவளவன் இருவரும் தடுத்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணசாமி திருமாவளவன் இருவரும் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வாங்கி கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அருந்ததிய மக்கள்  நன்றி செலுத்துவார்கள் எனவும் தமிழக முதல்வர் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களை பெறுவார் என அறிவித்துள்ளார் அந்த 200 இடங்களிலும் அருந்ததியர் மக்கள் தங்கள் பணியை ஆற்றுவார்கள் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறையை பெயர் மாற்றம் செய்து, சமூக நீதிக்கான துறை என மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் மேற்கு தொகுதியில் அதிகம் அருந்ததியர்கள் இருப்பதால்  மாற்று சாதியினரை வேட்பாளராக  நிறுத்தக்கூடாது.
உள் ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஒரே கூட்டணியில் இருந்தாலும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது எங்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்போம் என தெரிவித்தார். தமிழக அரசு இப்பிரச்சனையில் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார். விஜய் நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் வராதது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தவர் திருமாவளவன் எப்பொழுதும் இரட்டை நிலையில்தான் இருப்பார் என கூறினார். நடைபெற்ற 
செய்தியாளர் சந்திப்பில் சேலம் மாவட்ட செயலாளர் ஏ டி ஆர் சந்திரன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

சனி, 7 டிசம்பர், 2024

ஈரோட்டில் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

ஈரோட்டில் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

பெங்கல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஈடிசியா அறக்கட்டளை, அசோசியேசன் பார் பாலிமர் டிரேடு ஈரோடு, பெருந்துறை பேக்கரி உரிமையாளர்கள் அசோசியேசன், ஈரோடு ரோட்டரி சென்ட்ரல் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய சங்கங்கள் இணைந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், ஈடிசியா தலைவர் ஸ்ரீதர், செயலாளர் சுரேஷ், பொருளாளர் சரவணபாபு, முன்னாள் தலைவர்கள் வெங்கடேஸ், திருமூர்த்தி, துணைத் தலைவர்கள் கந்தசாமி, ராம்பிரகாஷ், இணைச் செயலாளர் கார்த்திகேயன், இணைப்பொருளாளர் ஸரத்மனோ மற்றும் ரோட்டரி க்ளப் ஆப் ஈரோடு சென்ட்ரல் முன்னாள் தலைவர் ராமலிங்கம், செயலாளர் செந்தில்குமார், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொருளாளர் உதயம் ஸ்டோர்ஸ் செல்வம், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.9) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.9) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம், மேட்டுக்கடை, முத்தாம்பாளையம் வீட்டு வசதி வாரியம் மற்றும் அத்தாணி துணை மின் நிலையங்களில் நாளை (டிச.9) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல் பாளை யம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவ பாளையம். சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர், பாலாஜிநகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர் மற்றும் சேவாக்கவுண்டனூர்.

ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை துணை மின் நிலையம்:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஈரோடு மேல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம்நகர், வீரப்பம்பாளையம், நஞ்ச னாபுரம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி நால்ரோடு, மூலக்கரை, கேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன் பாளையம். எம்.ஜி.ஆர்.நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர்-ஈரோடுரோடு, தொட்டிபா ளையம், சிந்தன்குட்டை, அணைக்கட்டு, ரயில்நகர், அம்பிகைநகர் மற்றும் ஜீவாநகர்.

ஈரோடு முத்தாம்பாளையம் வீட்டு வசதி வாரியம் - 1, 4, 5, 6, 7, 8 துணை மின் நிலையம்:-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அன்னை நகர், பாலாஜி கார்டன், நல்லியம்பாளையம், பாலாஜி ஆர்கேட், சுத்தானந்தா ஆர்ச், லட்சுமி நகர், ஓடைமேடு, தெற்குபள்ளம், ஸ்ரீகார்டன், சிவன் நகர், டீ.ஆர்.கார்டன், லட்சுமி கார்டன் மற்றும் சரவணா நகர்.

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி துணை மின் நிலையம்:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அத்தாணி டவுன், கைகாட்டி பிரிவு, தம்பங்கரடு, கொண்டையம்பாளையம், நகலூர், முனியப்பம்பாளையம், அத்தாணி, பெரும்பள்ளம், குண்டு மூப்பனூர், வீரனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கன்பாளையம், கேத்தநாயக்கன்பாளையம், டி.ஆர்.காலனி, இந்திரா நகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், பெருமாள்கோவில் புதூர், குப்பாண்டம்பாளையம் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் அருகே காரில் சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு: டிரைவர் கைது

அந்தியூர் அருகே காரில் சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு: டிரைவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சமையல் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே சமையல் வேலைக்கு சென்று விட்டு இரவு 11 மணி அளவில் அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
அப்போது தனது சொந்த ஊரான வெள்ளித்திருப்பூருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். ஆனால் நேரம் கடந்து விட்டதால் பேருந்துகள் இல்லாத காரணத்தினால் தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து வெள்ளித்திருப்பூருக்கு செல்வதற்கு வாகன செய்து வருமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர் அவருக்கு தெரிந்த கார் டிரைவர் அலாவுதீன் என்பவரிடம் பேசி தனது உறவுக்கார பெண்ணை வெள்ளித்திருப்பூர் பகுதியில் கொண்டு சென்று விடுமாறு கூறி அதற்கான வாடகை தொகையை கூகுல் பே மூலம் செலுத்தினர். இதை தொடர்ந்து அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து அலாவுதீன் அந்த பெண்ணை காரில் ஏற்றி கொண்டு வெள்ளித்திருப்பூருக்கு சென்றார்.

கார் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தது. இடையில் அலாவுதீனின் நண்பர் பிரகாஷ் என்பவரும் காரில் ஏறி உடன்செ ன்றுள்ளார். இதை தொடர்ந்து அந்த கார் அந்தியூர் அடுத்த பெரியேரி பகுதியில் சென்ற போது கார் பழுது என கூறி காரை நிறுத்தினர். தொடர்ந்து அலாவுதீன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் அந்த பெண்ணிடம். பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டு சத்தம் போட்டார். இது குறித்து தனது உறவினரிடம் கூறி விடுவேன் என கூறினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் காரில் அழைத்து கொண்டு வெள்ளிதிருப்பூர் அருகே அவரின் வீட்டுக்கு சிறிது தூரக்கு முன்பாகவே இறக்கி விட்டு இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்து விட்டு அவர்கள் தலைமறை வாகி விட்டனர்.

இதையடுத்து மறு நாள் காலையில் அந்த பெண் இது குறித்து அவரது உறவினருக்கு தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து கொண்டு அந்தியூர் போலீஸ் நிலையம் சென்றார். இதுகுறித்து அந்த பெண் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் அலாவுதீன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அலாவூதீன் போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தார். போலீசார் அலாவுதீனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை (டிச.8) மின்தடை

ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை (டிச.8) மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை (டிச.8) ஞாயிற்றுக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

ஈரோடு துணை மின் நிலையத்துக்கு உட்பட ஆட்சியர் அலுவலக மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (டிச.8) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதனால், ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
ஈரோடு துணை மின் நிலைய ஆட்சியர் அலுவலக மின்பாதை:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- குமலன்குட்டை பேருந்து நிறுத்தம், கம்பர் வீதி, அவ்வையார் வீதி, பாலக்காடு, வீரமாமுனிவர் வீதி,பெருந்துறை சாலை, புதிய டீச்சர்ஸ் காலனி, வி.ஐ.பி., காலனி, பாரதிதாசன் வீதி, ராணா லட்சுமணன் நகர், திரு.வி.க., வீதி, டீச்சர்ஸ் காலனி மற்றும் ஈ.பி.காலனி 1, 2,3 ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.