புதன், 11 டிசம்பர், 2024

வணிகர்களின் மீது வரிச் சுமைகளை உயர்த்தி வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில மற்றும் சேலம் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வணிகர்களின் மீது வரிச் சுமைகளை உயர்த்தி வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில மற்றும் சேலம் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வணிகர்களின் மீது வரிச் சுமைகளை உயர்த்தி வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில மற்றும் சேலம் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் சேலம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் தமிழகம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தின் சார்பில் சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் கே பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் வர்கீஸ் இளையபெருமாள் சந்திரதாசன் செல்வகுமார் திருமுருகன் தங்கவேல் ராஜேந்திரன் பொன்னுசாமி சுந்தர்ராஜ் அருண் பெனின் ஜாக்சன் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கடைகளில் வாடகை மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், சேலம் மாநகராட்சி வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி பழமடங்கு உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் மற்றும் மாநில அரசு கொண்டுவந்துள்ள ஆண்டுதோறும் ஆறு சதவிகிதம் கூடுதல் சொத்து வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்களுக்கு குப்பை வரி வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட ஆரம்ஸ கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ் கே பெரியசாமி செய்தியாளர்களிடம் ஒரு கையில் இது தங்களுடைய முதற்கட்ட போராட்டம் என்றும் இனிவரும் காலங்களிலும் தங்களது போராட்டம் தொடரும் என்று கூறிய அவர் அடுத்த கட்டமாக தங்களது கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் அதோடு மட்டுமல்லாமல் சேலம் மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்காத பட்சத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிக்கும் போராட்டத்தினை சேலம் மாவட்டம் முன்னின்று நடத்தும் என்றும் தெரிவித்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓமலூர் நகர மளிகை வியாபாரிகள் மற்றும் செருப்பு வியாபாரிகள் சங்க துணை செயலாளர் ஷாஜகான் உட்பட சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வர்த்தக வணிக தொழிற்சங்க நிர்வாகிகள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 10 டிசம்பர், 2024

கணவர் அவரது சகோதரர்கள் சுப்ரமணி,  மணிகண்டன் மற்றும் அவர்களது பெற்றோர் லட்ச கணக்கில் பணம் கேட்டு நாள்தோறும் துன்புறுத்துவதாக பெண் குற்றச்சாட்டு. அவர்கள் மீது  குடும்ப வன்முறை ( Domestic Women Harassment ) சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி வழங்கி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் தனது 8 மாத குழந்தையுடன்  சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார்....

கணவர் அவரது சகோதரர்கள் சுப்ரமணி, மணிகண்டன் மற்றும் அவர்களது பெற்றோர் லட்ச கணக்கில் பணம் கேட்டு நாள்தோறும் துன்புறுத்துவதாக பெண் குற்றச்சாட்டு. அவர்கள் மீது குடும்ப வன்முறை ( Domestic Women Harassment ) சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி வழங்கி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் தனது 8 மாத குழந்தையுடன் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

கணவர் அவரது சகோதரர்கள் சுப்ரமணி,  மணிகண்டன் மற்றும் அவர்களது பெற்றோர் லட்ச கணக்கில் பணம் கேட்டு நாள்தோறும் துன்புறுத்துவதாக பெண் குற்றச்சாட்டு. அவர்கள் மீது  குடும்ப வன்முறை ( Domestic Women Harassment ) சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 
நீதி வழங்கி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் தனது 8 மாத குழந்தையுடன்  சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார்....

சேலம் ஜாகிர் அம்மா பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு துறை அதிகாரியின் மகள் ஹரிணி இவருக்கும், ஏற்காட்டைச் சேர்ந்த மணி என்பவரது மகன் சந்திர சந்திரகுமார் ஆகியோருக்கும்   கடந்த செப்டம்பர் மாதம் 2022 முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இருவருக்கும் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஹரிணியின் கணவர்  மற்றும் அவரது குடும்பத்தார் நன்கு கவனித்து வந்த நிலையில், கணவர் சந்திரகுமார் அவர்கள் அவரது  சகோதரர் சுப்ரமணி மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு  அவர்களின் தூண்டுதலின் பெயரில் மனைவி ஹரிணியை பல வகையில்  கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் துன்புறுத்தலையும் கனவால் ஏற்படும் தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஹரிணி தனது குடும்பத்தாருடன் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவியை அணுகி உள்ளனர். அதன் பேரில் பாதிக்கப்பட்ட பெண் ஹரிணி சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். 
அந்த மனுவில் தனது கணவர் சந்திரகுமார், அவரது சகோதரர் சுப்ரமணியும் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் தொழில் செய்ய கட்டாயபடுத்தியும், சொல்லமுடியாத அளவிற்கு  தொல்லை கொடுத்ததால் சில லட்சங்கள் எனது பெற்றோர் அவர்களுக்கு கொடுத்துள்ளனர் என்றும், பிறகு சேலம் செட்டிசாவடியில் வீடு கட்ட ஆரம்பித்த எனது கணவர் சந்திரகுமார் அதற்கு பல லட்சம் என் பெற்றோரிடம் வாங்கி கொடுக்க மிரட்டியும், அடித்து துன்புறுத்தியும் என்னை  எனது பெற்றோர் வீட்டிற்கு துரத்திவிட்டார் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் என்  பெற்றோரும் வீடு கட்ட 7 லட்சம் ரூபாய் வரை அவர்களுக்கு  கொடுத்து எனது வாழ்க்கையை பாதுகாத்தனர் என்றும் அந்த வீடு வேலை முடிந்தும் அந்த வீட்டில் குடி போகலாம் என்று கூறி பல லட்சம் பெற்ற எனது கணவர் சந்திரகுமார்  வீடு வேலை  முடிந்தும் என்னை அதில் குடி வைக்காமல் அவரது சகோதரர்  சுப்ரமணி, மணிகண்டன் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் மீண்டும் பல லட்சம் என் பெற்றோரிடம் வாங்கி வர அடித்து துன்புறுத்தி குடும்ப வன் கொடுமை செய்தும் வருகின்றார் என்று குறிப்பிட்ட அந்த மனுவில், கடந்த 18 மாதங்களாக எனது  கணவரை தூண்டிவிட்டு பணம், நகை வாங்கி தர சொல்லி மிக கேவலமாக துன்புறுத்தியும், வன்கொடுமை செய்ய நேரடியாக அச்சுறுத்தி வரும் சுப்ரமணி, மணிகண்டன் மற்றும் கணவரின் பெற்றோர் ஆகியோரை கைது செய்து முறையாக  விசாரித்து அவர்கள் மீது பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டபடி நடவடிக்கை எடுத்து தனது 8 மாத குழந்தைக்கும் சட்ட பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் ஹரிணி தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
அதுமட்டுமில்லாமல் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தனக்கும், எனது 8 மாத குழந்தைக்கும் ஏற்படும் உயிர் இழப்பு ஏனைய அத்தனை இழப்பிற்கும்  சுப்ரமணி, மணிகண்டன் மற்றும் எனது கணவரே பொறுப்பாக  இருப்பதால், சமூக  நீதி வழங்கிடகோரி  இந்த புகார் மனுவை அளிக்கின்றேன் கண்ணீர் மல்க குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் மனு சென்னையில் உள்ள பெண்கள் ஆணையத்திற்கும்,  சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கையை குழு ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர் அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியரிடம் 5½ சவரன் தங்க தாலிக்கொடி பறிப்பு

அந்தியூர் அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியரிடம் 5½ சவரன் தங்க தாலிக்கொடி பறிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் காளிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரேமலதா (வயது 52). இவர், குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று (டிச.9) மதியம் தனது இருசக்கர வாகனத்தில் குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெள்ளித்திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது, குருவரெட்டியூர் - வெள்ளித்திருப்பூர் சாலையில் மன்னாதீசுவரன் கோயில் அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் 4 பேர் பிரேமலதாவின் கழுத்தில் இருந்த ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 5½ சவரன் தங்க தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதில், காயமடைந்த அவர் வெள்ளித்திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர், அவர் கணவருடன் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.  

திங்கள், 9 டிசம்பர், 2024

இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியம் |மாமல்லபுரத்தில் நடந்த 90ஸ் நாஸ்டால்ஜியா 2024

இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியம் |மாமல்லபுரத்தில் நடந்த 90ஸ் நாஸ்டால்ஜியா 2024


இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியம் | 90ஸ் நாஸ்டால்ஜியா 2024  மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியக் கூறுகள் என்பதில் நம்பிக்கை கொண்ட மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் மனவளப் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் காக்கும் முயற்சி முகாம் - எம்எம்சி 90ஸ் நாஸ்டால்ஜியா 2024  மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 

முகாமின் முதல் நாள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகைபுரிந்த முன்னாள் மாணவர்களுக்கு, மாமல்லபுரத்தின் அடையாளமான சங்கு மாலை அணிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையான பறையிசை வரவேற்பும் அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் 1990ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் அணிவகுப்பு ஊர்வலமும், கிராமியக் கலை, மருத்துவர் கனகப்ரியா, கவிதாஃபென் ஆகியோரது தொடக்க விழா நடனங்களும் அரங்கேற்றப்பட்டது. பிறகு, முன்னாள் மாணவர்களின் கருத்து பகிர்வு, மருத்துவர் யு.பி. சீனிவாசன் இசைநிகழ்ச்சி என மனநலம் காக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முகாமின் இரண்டாவது நாள், மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பங்குபெற்ற இசை சிகிச்சை, சிறப்பு பட்டிமன்றம், சிரிப்பு சிகிச்சை, அழிந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை ஊக்குவிக்கும் ‘நண்பேன்டா’, சாதகப் பறவைகளின் மெல்லிசை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. 

முகாமின் மூன்றாவது நாள், அதிகாலையில் மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு பிரபல யோகா பயிற்றுனர் அபிராமி சிறப்பு யோகா பயிற்சி வழங்கினார். பின்னர் பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி நடத்தி மரக்கன்றுகள் நட்டனர்.

ஐம்பது வயது கடந்த மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் மற்றும் நிதி நிர்வாகம் குறித்த வல்லுனர்களின் கருத்தரங்கோடு மூன்று நாள்கள் முகாமினை மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நிறைவு செய்தனர்.
அந்தியூர் அருகே ஹெல்மெட் அணிந்திருந்தும் லாரி மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு

அந்தியூர் அருகே ஹெல்மெட் அணிந்திருந்தும் லாரி மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). இவர் தாளவாடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் சேலம் மத்திய புலன் விசாரணை அமைப்பின் பவானி சரக விசாரணை அலுவலராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று (டிச.9) அவர் பர்கூரில் இருந்து அந்தியூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்தியூரை அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி, சிவக்குமாரின் வந்த இருசக்கர வாகனத்தின் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சிவக்குமார் அணிந்திருந்த தலைக்கவசம் உடைந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சோளகம்பேட்டை காலனி தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைக்கவசம் அணிந்திருந்தும் விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.11) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.11) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டம் ஈரோடு வில்லரசம்பட்டி, கோபி மற்றும் சத்தி தொப்பம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.11) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பாரதியார் நகர், வீரப்பம்பாளையம் பைபாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னை சத்யா நகர், முதலிதோட்டம், மல்லி நகர், ஈ.பி.பி.நகர், கந்தையன்தோட்டம், வி.ஜி.பி.நகர், தென்றல் நகர், பொன்னி நகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகர், ரோஜா நகர், அருள்வேலன் நகர், எல்.வி.ஆர்.காலனி, பழையபாளையம், குமலன்குட்டை, பாரி நகர், செல்வம் நகர், கீதா நகர், கணபதி நகர், முருகேசன் நகர், இந்திராகாந்தி நகர், இந்து நகர், எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம் மற்றும்வில்லரசம்பட்டி சன் கார்டன்.

கோபி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கோபி பேருந்து நிலைய பகுதிகள், பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம், குறவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சைகோபி மற்றும் உடையாம்பாளையம்.

சத்தியமங்கலம் தொப்பம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஆலாம்பாளையம், தொட்டம்பாளையம், எரங்காட்டூர், கோடேபாளையம், கரிதொட்டம்பாளையம், நால்ரோடு, தொப்பம்பாளையம் மற்றும் முடுக்கன்துறை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னப்புலியூர் குண்டுசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 69). இவர் தனக்கு சொந்தமான இட பிரச்சினை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்து வந்து உள்ளார். மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி திடீரென தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பெட்ரோலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.