சனி, 14 டிசம்பர், 2024

தமிழ்நாடு உழவர் பேரிய மாநாடு குறித்து சேலத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி ஆலோசனை.....

தமிழ்நாடு உழவர் பேரிய மாநாடு குறித்து சேலத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி ஆலோசனை.....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழ்நாடு உழவர் பேரிய மாநாடு குறித்து சேலத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி ஆலோசனை.....

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சேலம் புதிய பஸ் நிலையம் சௌடாம்பிகா  ஓட்டலில் நடைபெற்றது. கட்சியின் கௌரவ தலைவர்  ஜி.கே மணி,அவர்கள் கலந்துகொண்டு 21- 12- 2024 அன்று திருவண்ணாமலை யில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரிக்க மாநாடு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில,மாவட்ட,பகுதி ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்,  அனைவரிடமும் விவாதித்து ஆலோசனை வழங்கினார். 
இதில் மாநகர மாவட்ட செயலாளர்,இரா அருள் எம். எல்.ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் சதாசிவம் எம்.எல். ஏ  மாநில வன்னியர் சங்க செயலாளர் மு கார்த்தி, மாநகர மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம், வடக்கு மாவட்ட செயலாளர், நாராயணன் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட உழவர் பேரைக்க  தலைவர் செந்தில்,  மாவட்ட தலைவர்கள் டாக்டர் மாணிக்கம், பச்சமுத்து, சிவராமன், முத்துசாமி,மாநில செயற்குழு உறுப்பினர் கே.சி ஆறுமுகம்,மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்
.பி சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட அமைப்பு தலைவர்  வக்கீல் குமார், மாநில மாணவர் சங்க செயலாளர் விஜய் ராஜா, மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிச‌.14) சனிக்கிழமை காலை 10.12 மணிக்கு உடல் நலக்குறைவால் சென்னை கிண்டி மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனைடுத்து, அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு, கோவி.செழியன், மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு டிச.16ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு டிச.16ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. கால்நடை வளர்ப்பில், கோமாரி நோய் என்பது விவசாயிகளுக்கு, பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக, பசு மற்றும் எருமைகளை கால் மற்றும் வாய் நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.
இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும். அதனால் கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) 100% தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி 2024-25ஆம் ஆண்டில் டிச.16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன.20ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்கள், வருவாய் கிராமங்கள். பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி 111 குழுக்கள் அமைத்து 3,08,500 கால்நடைகளுக்கு தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக, ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின், கால்நடை நோய் புலனாய்வு பிரிவில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் 3,08,500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு கோமாரி நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.