ஞாயிறு, 22 டிசம்பர், 2024

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஏற்பாட்டில் சிறப்பு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்.

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஏற்பாட்டில் சிறப்பு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஏற்பாட்டில் சிறப்பு இலவச மருத்துவ சிகிச்சை முகாம். 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி 19 ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட தர்மநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருளுடன் இணைந்து சேலம் அம்மணி மருத்துவமனை நிர்வாகம் ஆகிய ஒரு இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் ஆகியவை நடைபெற்றது. 19 ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட தர்ம நகர் பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் இந்த மருத்துவ முகாமில் தர்மநகர் மட்டுமா தன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட 
இந்த மருத்துவ முகாம்களில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் இசிஜி பரிசோதனை மற்றும் வயதுக்கு ஏற்ற உணவு முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 
தர்ம நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்ற இந்த மருத்துவ முகாமில், கட்சி நிர்வாகிகள் ஈஸ்வரன் செந்தில்குமார் அசார் கலீல் சிவகுமார் செல்வம் சுரேஷ் பிரபு மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக தொழில் துறை அமைச்சரிடம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கோரிக்கை கடிதம்.

தமிழக தொழில் துறை அமைச்சரிடம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கோரிக்கை கடிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக தொழில் துறை அமைச்சரிடம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கோரிக்கை கடிதம். 

அந்த கடிதத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரிலே சேலம் மேற்கு தொகுதியில் ஜவுளி தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் அதற்கான இடம் சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மாமாங்கம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையில படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் சிறு அளவில் கூட துவங்கப்படவில்லை. இதனால் இந்த ஜவுளிர் தொழில் பூங்காவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஜவுளி தொழில் செய்பவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். ஆகவே பணிகளை முழுமையாக விரைந்து செய்து முடித்து சேலம் மாவட்டத்தில்  சாயப்பட்டறை கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து காத்திட கேட்டுக்கொள்கிறேன். மேலும் சேலம் நியோ டைட்டில் பார்க் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தாலும், இன்னும் நிறைய நிறுவனங்கள் தொழில் துவங்கவில்லை. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விரைவில் அனைத்து நிறுவனங்களும் தொழில் துவங்க அறிவுறுத்தப்பட கேட்டுக்கொள்கிறேன். 
மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த தகுதியான இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்பதாக அந்த கடிதத்தில் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரோட்டில் குழந்தையை ஆபத்தான முறையில் நிற்க வைத்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற தாய்

ஈரோட்டில் குழந்தையை ஆபத்தான முறையில் நிற்க வைத்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற தாய்

ஈரோட்டில் தாய் தனது குழந்தையை ஆபத்தான முறையில் நிற்க வைத்து இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் விபத்துகளானது அதிகரித்த வண்ணம் காணப்பட்டு வருகிறது. மேலும், இதில் சிறுவர்கள் பலரும் ஆபத்தான முறையில் பெற்றோர்கள் ஏற்றி செல்லும் பொழுது விபத்துக்குள்ளாகும் காட்சிகளும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வ.உ.சி., பூங்கா சாலையில், பெண் ஒருவர் தனது ஆண் குழந்தையை பள்ளி முடிந்த பின் இருசக்கர வாகனத்தில் நிற்க வைத்தபடி ஆபத்தான முறையில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதுபோன்று, குழந்தைகளை கவனக்குறைவாக அழைத்துச் செல்லும் பெற்றோர்களால் விபத்துக்கள் ஏற்பட்டு அசம்பாவிதம் நேரிடுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

பெண் ஒருவர் தனது குழந்தையை ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஈரோடு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்த காரால் பரபரப்பு

ஈரோடு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்த காரால் பரபரப்பு

ஈரோடு செங்கோடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவரின் வீடு சாலையோரம் அமைந்துள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் ரேவதி, அவரது தாயார், ரேவதியின் 2 மகள்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் அந்த வழியாச் சென்ற சொகுசு கார் திடீரென தறிகெட்டு ஓடி ரேவதி வீட்டின் முன் பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி அவரது வீட்டு முன் பகுதியில் இருந்த செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு சைக்கிள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திடீரென கார் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ரேவதி வெளியே வந்து பார்த்த போது தனது வீட்டின் முன் பகுதியில் கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காருக்குள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் சிக்கி காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் காரில் இருந்த நபர் ஈரோடு சக்திநகர் பகுதியைச் சேர்ந்த வருண் (24) என்பதும், மதுபோதையில் காரை இயக்கியது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனி, 21 டிசம்பர், 2024

ஈரோட்டில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஈரோட்டில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஈரோடு ஜின்னா வீதியை சேர்ந்தவர் காதர்மொய்தீன் (வயது 48). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவர், நேற்று முன்தினம் (டிச.20) இரவு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (டிச.21) நள்ளிரவு 2.30 மணி அளவில் திடீரென அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த காதர்மொய்தீனிடம் தெரிவித்தனர்.

உடனே அவர் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஆட்டோ முழுவதுமாக எரிந்து நாசமானது. ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தீயணைப்பு வீரர்களுக்கு தெரியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நள்ளிரவில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தியூர் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் கைது

அந்தியூர் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் கைது

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து அந்தியூருக்கு புகையிலை பொருட்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை பர்கூர் சோதனைச்சாவடி முன் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தனர். இதில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 90 பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கார் ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி சக்தி விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 42) என்பதும், இவர் அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மாற்று பேருந்து ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து காருடன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள 80 லட்சம் இஸ்லாமியர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: ஈரோட்டில் திரைப்பட இயக்குநர் பழ.கருப்பையா பேச்சு

தமிழகத்தில் உள்ள 80 லட்சம் இஸ்லாமியர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: ஈரோட்டில் திரைப்பட இயக்குநர் பழ.கருப்பையா பேச்சு

ஈரோடு மரப்பாலத்தில், ஈரோடு மாவட்ட முஸ்லிம் அசோசியேசன் மீலாதுன் நபி விழா மற்றும் அல்லா வடிவமைத்த அழகிய சமூகம் நூல் வெளியீட்டு விழா முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் ஏ.அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் சிந்தனை பேரவை த.ஸ்டாலின் குணசேகரன், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நிறுவனர்
சி.எம்.என்.சலீம், அல்லா வடிவமைத்த அழகிய சமூகம் என்ற நூலை எழுதிய திரைப்பட இயக்குனர் பழ.கருப்பையா உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த விழா கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பழ.கருப்பையா பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, தன்னிறைவு தற்சார்பு சமூகமான இஸ்லாமிய சமூகத்தில் உள்ள நீங்கள் தமிழகத்தில் 80 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளீர்கள்.

இந்த 80 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்களும் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என வீட்டில் இருந்து கொண்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்கின்ற 30 கோடி இஸ்லாமியர்களும் உங்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.
 ஆகவே மத்திய அரசு கொண்டு வருகின்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்ப்பதற்கு முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 80 லட்சம் இஸ்லாமியர்கள் வருகின்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், அதேபோல் மாவட்ட தலைநகரங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 80 லட்சம் இஸ்லாமியர்களும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும், அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என பழ.கருப்பையா பேசினார்.