செவ்வாய், 24 டிசம்பர், 2024

ஈரோட்டில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனைப்படி வன்னியர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு, உச்ச நீதிமன்றம் தரவுகளின் அடிப்படையில் வழங்கலாம் என தீர்ப்பு வழங்கி 1000 நாட்களாகியும் இந்நாள் வரை உள் இட ஒதுக்கீட வழங்காததை கண்டித்து பெரியார் நினைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாநகர் மாவட்ட பா.ம.க. சார்பில் எஸ்.ஆர்.ராஜூ தலைமையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன்னியர்களுக்கு தொடர்ந்து துரோகம் அழித்துவரும் திமுக அரசின் மெத்தன போக்கை கைவிட வேண்டும் என்றும், இதே போல் தொடர்ந்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாவிட்டால் மாபெரும் போராட்டங்கள் வாயிலாக பெற வேண்டிய சூழல் ஏற்படும் என்று வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பிரபு,மாவட்ட பொருளாளர் அய்யம்மாள், மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ் எல் பரமசிவம் எம்பி வெங்கடாசலம் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் மொய்தீன்,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் மாவட்ட தலைவர் பெருமாள் இளைஞர் சங்க செயலாளர் தம்பிதுரை தலைவர் தினேஷ் குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி,மாவட்டத் துணைச் செயலாளர்கள் முருகன், மூர்த்தி செவன் அப் செல்வராஜ், கணேசன்,மாவட்ட அமைப்பு செயலாளர் இந்த ராஜேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமனோர் இதில் கலந்து கொண்டனர்.

திங்கள், 23 டிசம்பர், 2024

தீர்ப்பளித்து 1000 ஆவது நாளில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து சேலத்தில் பாமக சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்.

தீர்ப்பளித்து 1000 ஆவது நாளில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து சேலத்தில் பாமக சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தீர்ப்பளித்து 1000 ஆவது நாளில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து சேலத்தில் பாமக சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம். 

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 ஆவது நாளில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் இன்று நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் இராமதாஸ்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 
கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கதிர் இராசரத்தினம், பசுமைத்தாயகர் மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் மற்றும் மாணவரணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மேல் முறையிட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு, போதிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி வழங்கியது. 
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 ஆவது நாள் ஆகியும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சம்பந்தமாக 2024 டிசம்பர் 24 ஆம் நாளுடன் 1000 நாட்கள் ஆகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்பொழுது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்தது பெருந் துரோகம் என்று ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. அது மட்டுமில்லாமல் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எடுப்பினர். 
சேலத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் இராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை தங்களது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாவட்ட பொறுப்பாளர்கள் பகுதி ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தலைவர்கள், டிவிஷன் பொறுப்பாளர்கள் என மாவட்ட முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றங்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 86 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 378 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 86 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 378 பேர் கைது

சென்னை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைமை இயக்குநர் சீமா மற்றும் காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் ஆகியோர் உத்தரவுப்படி, கோவை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி, ஈரோடு சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோரது மேற்பார்வையில் ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காவல் ஆய்வாளர் சுதா தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினார், மேனகா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை மட்டும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 378 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 86 ஆயிரத்து 606 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 105 இருசக்கர வாகனங்கள், 34 நான்கு சக்கர வாகனங்கள் என 139 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடத்தல் வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து 51 லட்சத்து 41 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் 129 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.23) திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக ஈரோடு வைரபாளையத்தைச் சேர்ந்த சின்னம்மா (வயது 80) என்ற மூதாட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்தார்.

அப்போது, அவர் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் மூதாட்டியிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, போலீசார் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், இவருக்கு 2 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், நீதிமன்ற வழக்கும் எதிர் தரப்பினருக்கு சாதகமாக வந்து விட்டது என கூறி தற்போது வாழ்வாதாரம் இல்லை என கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, மூதாட்டியை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (டிச.23) வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 340 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தாட்கோ சார்பில் பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜ்னா திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் வீதம் ரூ.15.60 லட்சம் மதிப்பில் கறவை மாடு வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6.50 லட்சம் மதிப்பில் மானியத்தொகையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியரக (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், தாட்கோ மேலாளர் அர்ஜூன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை: ஈரோட்டில் இருந்து 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகை: ஈரோட்டில் இருந்து 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:- 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி, திருநெல்வேலி, நாகர்கோயில், தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி அங்கேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கார் மக்கள் இயக்கம் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி அங்கேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கார் மக்கள் இயக்கம் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி அங்கேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கார் மக்கள் இயக்கம் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அம் மனுவில்  கூறியிருப்பதாவது, சேலம் மாநகரம், பழைய  சூரமங்கலத்தில் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை அரசு நிதி உதவி பெறும் பள்ளியாகவும், 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுயநிதி மேல்நிலைப்பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி நல்ல ஒழுக்கத்தையும், நல்ல தேர்ச்சி விதிதத்தையும் கொடுத்து வருகிறது. அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கென சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பு இருந்தது.இதில் 3.5 ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் இருந்தது. நீர் ஆதாரத்திற்க்கான மூன்று கிணறுகளும் அந்த நிலத்தில் இருந்தது.பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனத்திற்கு பள்ளி நிர்வாகம் கல்வித் துறைக்கு தகவல் சொல்லாமல் விலைக்கு விற்று விட்டனர். தற்போது அந்த விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது அதே ரியல் எஸ்டேட் நிறுவனம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியை விலைக்கு வாங்கி சட்டத்திற்கு புறம்பாக முன்னறிவிப்பு செய்யாமல் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளியை இடித்து வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் முயற்சியில் பள்ளி நிர்வாகமும், ரியல் எஸ்டேட்  நிறுவனமும் முயன்று வருகின்றது. 
இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் மூன்று மாதத்தில் பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்தி மாணவர்களின் கல்வியை பாதிப்படைய செய்து கொண்டிருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆகவே மாணவர்கள் நலன் கருதி அப்பள்ளி  தொடர்ந்து அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்குமாறும் அப்பள்ளியை சட்டத்திற்கு புறம்பாக சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வித்துறைக்கும் தகவல் சொல்லாமல் விற்பனை செய்த பள்ளி நிர்வாகத்தின் மீதும்,சட்டத்திற்கு புறம்பாக விலைக்கு வாங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும், சட்டத்துக்கு புறம்பாக பத்திர பதிவு செய்த சூரமங்கலம் மேற்கு பத்திர பதிவு  அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அப்பள்ளியை அரசே ஏற்று நடத்துமாறும் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பிலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை கூறும் போது,
மாணவர்கள் நலன் கருதி அப் பள்ளி தொடர்ந்து அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சட்டத்திற்கு புறம்பாக பள்ளியை விற்பனை செய்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 26.12.2024 வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு சூரமங்கலத்தை அடுத்த புது ரோடு ரவுண்டானா அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் முன்னணி தலைவர்களும், அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும்  கலந்து கொள்கிறார்கள் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது அம்பேத்கார் மக்கள் இயக்கம் நிர்வாகிகளும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் உடன் இருந்தனர்.