செவ்வாய், 31 டிசம்பர், 2024

ஈரோடு: சிவகிரியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளிவந்து கிடந்த ரூ.39 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த பெண்

ஈரோடு: சிவகிரியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளிவந்து கிடந்த ரூ.39 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த பெண்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனை சாலையில் அரசுமை வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் கவிராஜ் என்பவர் பணம் எடுக்க முயன்றுள்ளார். பின்னர், பணம் வரவில்லை என்று நினைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து, சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி கரட்டான்காட்டுப்புதூரைச் சேர்ந் தவர் ஈஸ்வரி (வயது 39) என்பவர் அந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வந்த நிலையில் ரூ.39 ஆயிரத்து 500 ரூபாய் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், அந்த பணத்தை சிவகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து, போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி, கவிராஜை வரவழைத்து பணத்தை ஒப்படைத்தனர். மேலும், பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஈஸ்வரியை போலீசார் வாழ்த்தி பாராட்டினர்.
இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவதூறாக பேசி இழிவு படுத்திய விவகாரம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவதூறாக பேசி இழிவு படுத்திய விவகாரம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவதூறாக பேசி இழிவு படுத்திய விவகாரம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். 

இந்திய திருநாட்டின் சட்ட மாமேதை, புரட்சியாளர், பாபா சாஹிப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசி இழிவு படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு சற்றும் ஓய்ந்த பாடில்லை என்றே கூறலாம். மத்திய உள்துறை அமைச்சர் அமீத்சாவை பல்வேறு கோணங்களிலும் இழிவு படுத்தியும் அவமானப்படுத்தியும் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாள்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணமே உள்ளன. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய கோரி தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் சார்பில் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட  கண்டன ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
ஆதித்தமிழர் பேரவை மத்திய மாவட்ட செயலாளர் ஏ டி ஆர் சந்திரன், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, தமிழ் தேச மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மாரியப்பன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் அருண் சோரி கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்ட மாமேதையை நாடாளுமன்றத்தில் இழிவு படுத்திய அமித் ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரியும், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அமித்ஷாவிற்கு துணை போகும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மத்திய பாஜக அரசு அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யும் வரை தங்களை போன்று நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறும் என்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பை கொஞ்சம் கூட செவிசாய்க்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்ற திமிரையே காட்டுகிறது என்று ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் அருண் சோரி குற்றம் சாட்டினார்.
பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கண்டன  நிர்வாகிகள் ஆனந்தி காவேரி விஸ்வநாதன் இம்தியாஸ்கான் வின்சென்ட் ஷேக் முகமது ராவண பிரபு ராஜேஸ்வரி மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 30 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணத்தை இனி ஆன்லைனில் செலுத்தலாம்

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணத்தை இனி ஆன்லைனில் செலுத்தலாம்

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சி.டி., ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து உடல் நிலவரத்தை தெரிந்து கொள்ள அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும்பாலோனோர் அரசு மருத்துவமனைகளையே நாடி வருகின்றனர்.

ஏனெனில், அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுக்க கட்டணமாக ஒரு பகுதிக்கு ரூ.500-ம், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500-ம் வசூலிக்கப்படுகிறது. முன்பெல்லாம் அனைவரும் பணத்தை கையில் எடுத்து வருவார்கள்.

ஆனால் கூகுள் பே, பேடிஎம் என வந்தபிறகு அனைவரும் கியூஆர் கோடு மூலமே பணத்தை செலுத்த விரும்புகின்றனர். இதனால், மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கையில் பணம் கொண்டு வருவதில்லை.

இங்கு பரிசோதனை கட்டணம் பணமாக வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் ஏடிஎம் மையங்களையும், இல்லாதவர்கள் கைப்பேசி வங்கி இருப்பில் உள்ள பணத்தை எப்படியாவது படமாக பெற உதவியை நாடும் நிலையே தொடர்ந்தது.

இதனைக் கருத்தில், கொண்டு தமிழகத்தில் உள்ள அரசு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்களில் பரிசோதனை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. இதற்காக, சிடி ஸ்கேன் பிரிவில் கட்டணங்கள் செலுத்தும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்ய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்த சுவைப்பிங் மிஷின் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனைக்கு வருபவர்கள் எளிதாக கட்டணங்களை செலுத்தி சிரமம் இன்றி பரிசோதனை எடுத்துச் செல்ல முடியும் என்று சிடி ஸ்கேன் பிரிவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டு நிலத்தை தொடர்ந்து அபகரித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள். உயர் ஜாதியினருக்கு பஞ்சாயத்து நிர்வாகம் துணை போவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குற்றச்சாட்டு.

சேலம் அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டு நிலத்தை தொடர்ந்து அபகரித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள். உயர் ஜாதியினருக்கு பஞ்சாயத்து நிர்வாகம் துணை போவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குற்றச்சாட்டு.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சேலம் அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டு நிலத்தை தொடர்ந்து அபகரித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள். உயர் ஜாதியினருக்கு பஞ்சாயத்து நிர்வாகம் துணை போவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குற்றச்சாட்டு. 

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெய்க்காரப்பட்டி கிராமம். இங்குள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி நெருக்கென உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கும், தகனமூக்குவதற்கும்  என அந்த பகுதியில் 5.50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசின் வரைபடங்கள் தற்பொழுதும் தெரிவிக்கிறது. 
இதனிடையே அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சார்ந்து ராமு செல்வம் மற்றும் ராஜு உள்ளிட்டோர் மயானத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட மொத்த நிலத்தில் சுமார் 2.50 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் பெரியார் நகரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு அதனை போலி பட்டாவையும் தயார் செய்து மேற்படி அந்த இடத்தை அளப்பதற்காக இன்று நில அளவையர்கள் உட்பட வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு காவல்துறை பாதுகாப்புடன் வந்து சுடுகாட்டு நிலத்தை அளந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பெரிய புத்தூர் பெரியார் நகரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி அறிவுறுத்தலின் பேரில், எதிர்ப்பு தெரிவித்ததோடு அதிகாரிகளின் பணியை தடுத்ததாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இங்கு இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தாழ்த்தப்பட்டவர்களிடம் தெரிவித்துவிட்டு அந்த நீதிமன்ற உத்தரவையும் அவர்களிடம் காட்டாமல் திரும்பச் சென்றுள்ளனர். ஏற்கனவே 2 அரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்த்து கொடுத்த பஞ்சாயத்து நிர்வாகம் மீதமுள்ள நிலத்தையும் அவர்களுக்கு வழங்க முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்களில் மாயவன் என்பவர் கூறுகையில் பெரியார் நகர் மக்களுக்கு என அப்பொழுதே ஐந்தரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வரைபடங்கள் அனைத்தும் உள்ள நிலையில் ஏற்கனவே இரண்டரை ஏக்கர் நிலம் உயர் ஜாதினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்றும் இது குறித்து கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பல கட்ட போராட்டங்கள் மேற்கொண்டு வருவதாகவும் இது சம்பந்தமாக வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியரிடம் புகார் மனு குறித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் இதுபோன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது ஒரு புறம் இருக்க சம்பந்தப்பட்ட நெய்க்காரப்பட்டி ஊராட்சி மன்ற கிளர்க்கு சுந்தரம் இது போன்ற உயர் ஜாதியினருக்கு துணையாக இருப்பது வேதனை கூறியது என்று குற்றச்சாட்டையும் முன் வைத்தார். கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சுடுகாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தில் இரண்டு கோவில்கள் உள்ள காரணத்தினால் இன்னும் முழுமையாக உயர் ஜாதியினரால் ஆக்கிரமிப்பு செய்ய முடியவில்லை என்றும் அந்த கோவில் இருக்கும் காரணத்திற்காக அதனை கை வைக்காமல் உள்ளனர் என்று குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்தி சுடுகாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க தவறும் பட்சத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதோடு இந்த பகுதியை சார்ந்த அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தை உயர் ஜாதினர் தொடர்ந்து அரசு துறை அதிகாரிகள் அரசியல் பின்புலம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்படுமேயானால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை சார்ந்தவர்களை எதிர்வரும் காலங்களில் எங்கு கொண்டு அடக்கம் செய்வது எங்கு தகனம் ஊட்டுவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது தற்போது பாதிக்கப்பட்டுள்ள அந்த பெரியார் நகர் பகுதி வாசி பொதுமக்களின் ஒட்டுமொத்த வேதனையாகவே உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்: 1,972 மாணவிகள் பயன்; ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்: 1,972 மாணவிகள் பயன்; ஆட்சியர் தகவல்

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 19 கல்லூரிகளைச் சேர்ந்த 1,972 மாணவிகள் பயனடைவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று (டிச.30) தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி காமராஜர் அரங்கில் நடைபெற்ற விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதுமைப் பெண் திட்ட விரிவாக்க மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.


பின்னர், அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 15,739 மாணவியர்களும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 13,837 மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் முதலில் அரசுப்பள்ளிகளில் பயின்ற பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும். மாணவிகள் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஒரு குடும்பத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் அனைத்து பெண் குழந்தைகளும் இத்திட்டத்தில் பயனடையலாம்.

தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவிகள் முதல் பட்டப்படிப்பினை முடிக்கும் வரை மாணவிகளின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.1,000 நேரடியாக பற்று வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, 79 கல்லூரிகளில் பயிலும் 1,972 மாணவியர்கள் பயன்பெறுகின்றனர்.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவது, அவர்களின் மேற்படிப்பிற்கு மட்டுமல்லாமல், குழந்தை திருமணத்தை தடுக்கவும் ஏதுவாக அமைகின்றது.

மேலும், பொதுமக்கள் குழந்தை திருமணம் குறித்து தெரிய வந்தால் 8903167788 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.3,000 வழங்கப்படும். மேலும் 1098 என்ற கட்டணமில்லா எண்ணிலும் குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை பெற்றுக் கொண்ட பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி ஆரோக்கிய மேரிஸ், அல்அமீன் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஆயிஷா ஷமனா, ஈரோடு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி கவிபாரதி, சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயிலும் மாணவி மோகனபிரியா, வேளாளர் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி புனிதா உள்ளிட்ட மாணவியர்கள் தங்களது மேற்படிப்பிற்கு மாதம் ரூ.1,000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

ஈரோட்டில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியானப் பாறை அருகே அமைக்கப்பட்ட 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி திறந்து வைத்தார்.

இந்தச் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வெள்ளி விழா டிச.30ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (டிச.30) கலந்து கொண்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கலைமாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஜன.8ல் துவக்கம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஜன.8ல் துவக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் (டிஎன்பிஎஸ்சி) தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஜன.8ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது https://forms.gle/3FNSWCaHj9CKRqwW6 என்ற கூகுள் ஃபார்ம் லிங்கில் வரும் ஜன.6ம் தேதிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண்/பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 94990 55943 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.