ஞாயிறு, 19 ஜனவரி, 2025

ஈரோட்டில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோட்டில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி இன்று சூரியம்பாளையம் பகுதி அன்னை சத்யா நகர் பகுதி சுற்றுப்புறங்களில் உள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 அப்போது வேட்பாளர் சந்திரகுமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அவருடன், மஜக மாநில துணை செயலாளர் ஈரோடு எச்சான்,  மாவட்ட செயலாளர் ஜாவித் பஜல், மாவட்ட அவை தலைவர் முஹமது ஹாரிஸ், தேர்தல் பணிக்குழு திலீப் குமார், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அமீன் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோபி அருகே பவானி ஆற்றில் குளிக்கும்போது மாயமான பட்டதாரி சடலமாக மீட்பு

கோபி அருகே பவானி ஆற்றில் குளிக்கும்போது மாயமான பட்டதாரி சடலமாக மீட்பு

திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி கூத்தம்பாளையம் பிரிவை சேர்ந்த ரவி மகன் யோகேஸ்வரன் (வயது 27). பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்தார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றுக்கு நண்பர்களுடன் யோகேஸ்வரன் நேற்று குளிக்க வந்துள்ளார்.
அப்போது, ஆற்றில் குளித்து கொண்டு இருந்த யோகேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். நண்பர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், அங்கு இருந்தோர் கோபி தீயணைப்பு நிலையம், பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு, வந்த கோபி தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை வரை தேடியும் யோகேஸ்வரன் கிடைக்கவில்லை. பின்னர், இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை மீண்டும் நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தொடங்கினர்.

அப்போது, குளிக்க சென்ற இடத்தின் அருகே வண்ணாந்துறை என்ற இடத்தில் யோகேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். இதை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி அருகே 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

கோபி அருகே 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). எலக்ட்ரீசியன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 30). இவர்களுக்கு காவியா (வயது 13), அட்சயா (வயது 10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
காவியா அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி 8ம் வகுப்பு படித்து வருகிறார். அட்சயா பெற்றோருடன் தங்கி கோபியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அட்சயா மனவேதனை அடைந்து வந்ததாக தெரிகிறது. நேற்று மஞ்சுளா வேலைக்கு சென்ற பின்பு வீட்டில் இருந்த அட்சயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், வேலை முடிந்து வீடு திரும்பிய மஞ்சுளா மகளை காணாமல் தேடவே, வீட்டின் உள் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து ஜன்னலை திறந்து பார்த்த போது தான் மகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் வீட்டின் மேல் ஏறி கூரையை பிரித்து உள்ளே இறங்கி அட்சயாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முழுவதும் உள்ள பஞ்சமி மற்றும் ஏடி கண்டிஷன் நிலங்களை பராமரிக்க தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு  ஊழியர்கள் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழக முழுவதும் உள்ள பஞ்சமி மற்றும் ஏடி கண்டிஷன் நிலங்களை பராமரிக்க தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு ஊழியர்கள் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

 
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக முழுவதும் உள்ள பஞ்சமி மற்றும் ஏடி கண்டிஷன் நிலங்களை பராமரிக்க தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு  ஊழியர்கள் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு  ஊழியர்கள் கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சின்ன திருப்பதி பகுதியில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், தமிழகம் முழவதும் உள்ள பஞ்சமி மற்றும் ஏ.டி கன்டிசன் நிலங்கள் சுமார் 1 லட்சம் எக்டர் மேலாக உள்ள நிலங்களை மாவட்டம் வாரியாக அட்டவனை படுத்தி தனி வாரியம் ( AD condition Land Board ) முஸ்லிம் வக்ஃப் போர்ட் போல  அமைக்க தமிழக அரசை வலியுறுத்துகின்றோம், தமிழகம் முழவமும் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளபல  லட்ச கணக்கான பஞ்சமி மற்றும் A.D condition நிரங்களை உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நல துறை அதிகாரிகள், வட்டாச்சியர் மற்றும் காவல் துறை ஒத்துழைப்போடு மீட்டெடுக்க வேண்டும்.
அந்த நிலங்களை A.D condition Board வசம் ஒப்படைக்க வேண்டும் மற்றும்
இந்த பல லட்சம் ஏக்கர் நிலங்களை  A.D condition Land Board மூலம் பாதுகாத்திடவும்,  இந்த நிலங்களை குத்தகை விட்டு அதன் வருமானத்தை பட்டியலின ஏழை மாணவர்களுக்கு  நிதி உதவி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராமன், 
ராஷ்ரிய ஜனதா தல், கருணாநிதி, 
அரசு போக்குவரத்து, ரவிணந்திரன்
கூட்டு நடவடிக்கை குழு, கார்த்தி
PWD, பரணுராமன்
LIC மற்றும் குமுதா, லட்சுமி
மகளிர் விடுதலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சனி, 18 ஜனவரி, 2025

சேலம் சண்முகா மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி 25 ஆம் ஆண்டு விழா. 1999  முதல் 2025-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

சேலம் சண்முகா மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி 25 ஆம் ஆண்டு விழா. 1999 முதல் 2025-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் சண்முகா மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி 25 ஆம் ஆண்டு விழா. 1999  முதல் 2025-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு. 

சேலம் சண்முகா மருத்துவமனை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் கல்லூரி கூட்ட அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரியதர்ஷினி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த இந்த வெள்ளி விழா நிகழ்விற்கு, சண்முகா மருத்துவமனையில் சி.இ.ஓ. டாக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். விழாவில், கல்லூரியில் பணியாற்றிய இயன்முறை மருத்துவ பிரிவு துறை தலைவராக இருந்த டாக்டர் செந்தில் மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் முருகவேல் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கொரோனா காலகட்டத்தின் போது உயிரிழந்த பழைய மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட இந்த வெள்ளிவிழா நிகழ்வின் போது, கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2025 தற்போதைய காலகட்டம் வரை கல்வி பயின்று வரும் மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தொடக்கம் முதல் தற்போது வரை பயின்று வரும் மாணவ மாணவிகள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் மாணவ மாணவியரும் காணொளி காட்சி மூலமாக தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து சிறந்த மாணவ மாணவிகளுக்கும் சிறந்த பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது கௌரவிக்கப்பட்டது. 
இந்த விழாவில் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் முன்னாள் மாணவ மாணவிகள் தற்போதைய மாணவ மாணவிகள் என ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை (ஜன.20) திங்கட்கிழமை மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவர்களுக்கான சின்னமும் உடனடியாக ஒதுக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கி, கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்தது.

இத்தொகுதியில், போட்டியிடுவதற்காக 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று (ஜன.18ம் தேதி) வேட்புமனு பரிசீலனையின் முடிவில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கீ.சீதாலட்சுமி உள்பட 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை (ஜன.20ம் தேதி) திங்கட்கிழமை கடைசி நாளாகும். எனவே வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் நாளை மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாளை மாலை தேர்தல் களத்தில் போட்டியிடக் கூடியவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்கான, ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மரு.மனிஷ்.என் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.