புதன், 26 பிப்ரவரி, 2025

பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி இல்ல திருமண விழா. புதுவை முதல்வர் ரங்கசாமி மணமக்களுக்கு வாழ்த்து.

பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி இல்ல திருமண விழா. புதுவை முதல்வர் ரங்கசாமி மணமக்களுக்கு வாழ்த்து.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி இல்ல திருமண விழா. புதுவை முதல்வர் ரங்கசாமி மணமக்களுக்கு வாழ்த்து. 

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், முன்னாள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான ஜி கே மணி அவர்களின் இல்லத் திருமண விழா சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரைப்பட பிரபலங்கள் என ஏராளமான நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர். இந்த நிலையில் என் ஆர் காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி மாநில முதலமைச்சருமான ரங்கசாமி இன்று மணமக்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். புதுவை மாநில முதல்வர் மிகவும் எளிமையானவர் என்பது அனைவரும் அறிந்ததே அதன் அடிப்படையில், மணமக்களை வாழ்த்திய புதுவை முதல்வர் திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது சொந்த பந்தங்களுக்கு இடையே அமர்ந்து மதிய உணவினை அருந்தி மகிழ்ந்தார்.
உணவருந்தி விட்டு வெளியே வந்த புதுவை முதல்வரிடம் ஏராளமானோர் செல்பி எடுக்க ஆர்வம் காட்டியது திருமண மண்டபத்தில் சிறிது நேரம் ஒரு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

வேங்கை வயல் விவகாரத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சேலத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேங்கை வயல் விவகாரத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சேலத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வேங்கை வயல் விவகாரத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சேலத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். 

வேங்கை வயலில் குடிநீரில் மனித மலம் கலந்த விவகாரம். விஸ்வரூபம் இடத்தில் சனி பகாலமாக அனைத்து கட்சியினராலும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்களே இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்ததை எடுத்து அனைத்து கட்சியினரும் தமிழக காவல்துறையின் விசாரணையில் இருந்து சிபிசிஐடி மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தற்பொழுது வரை நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம், அடுத்த கட்டமாக சிபிசிஐடி விசாரணையிலும் தங்களுக்கு நம்பிக்கை இல்லாதது உறுதியாகி உள்ளது என்பதால் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆத்தூர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணன், நல்ல தம்பி தங்கதுரை காசி விஸ்வநாதன் கருப்பசாமி பிரகாஷ் மல்லூர் பூபாலன் காந்தி லோகநாதன் புரட்சி கோவிந்த் மற்றும் மொய்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் பரணி மாரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும் ஆணவக் கொலை என தனி சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரியும் தலித் இன மக்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதோடு மட்டுமல்லாமல், வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி வசம் உள்ள இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் தலித் மக்களுக்கு எதிரான விசாரணையின் தீர்ப்பு வரும் பட்சத்தில் மிகக் கடுமையான அளவில் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ராஜு உட்பட கெங்கவள்ளி ஆத்தூர் ஏற்காடு மேட்டூர் சேலம் ஓமலூர் சங்ககிரி எடப்பாடி மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

மாநகராட்சி மன்ற கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம். மக்கள் மீது வரியை அள்ளிக் குவித்து விட்டு பற்றாக்குறை பட்ஜெட் உருவாக்கியுள்ளதாக கூறி  அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

மாநகராட்சி மன்ற கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம். மக்கள் மீது வரியை அள்ளிக் குவித்து விட்டு பற்றாக்குறை பட்ஜெட் உருவாக்கியுள்ளதாக கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மாநகராட்சி மன்ற கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம். மக்கள் மீது வரியை அள்ளிக் குவித்து விட்டு பற்றாக்குறை பட்ஜெட் உருவாக்கியுள்ளதாக கூறி  அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு. 

சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற. இந்த கூட்டத்தில் துணை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாத இடங்களிலும் கூட அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறினார். அப்போது அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து நண்பகல் 2025 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் அடங்கி நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சி கொறடா கே சி செல்வராஜ் கூறுகையில், 
இது ஒரு காகித பூ பட்ஜெட் என்றும் மக்களுக்கு பயன்படாத பட்ஜெட் என்றும் எதிர்பார்க்கும் வருவாயை தான் தான் மேயர் பேசுகிறாரே தவிர கடந்த கால பட்ஜெட்டை காப்பியடித்து தற்பொழுது அப்படியே வெளியிடப்பட்டுள்ளது என்றார். சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், மாநகராட்சி அறிகையில் பொதுமக்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத திட்டங்களும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்களின் மீது அதிகப்படியான வரச்சுமை சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று பெரிய திட்டங்கள் மூலம் மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாயை முடக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக மாமன்ற உறுப்பினர்களின் செயலை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்றத்திற்கு உள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சேலம் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையினை கிழித்திருந்து விட்டு மாநகராட்சியின் நிதிநிலை கூட்டத்தை புறக்கணித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது.
ரூ.15.90 லட்சம் கையாடல் வழக்கு: கோபி கூட்டுறவு சங்க செயலாளருக்கு 5 ஆண்டு சிறை

ரூ.15.90 லட்சம் கையாடல் வழக்கு: கோபி கூட்டுறவு சங்க செயலாளருக்கு 5 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம் கோபியில் கோபிசெட்டிப்பாளையம் கூட்டுறவு கட்டுமான சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜி.கே.வெங்கடேசன் என்பவர் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இங்கு பல்வேறு முறைகேடு மற்றும் பணம் கையாடல் நடப்பதாக ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து கடந்த 21-4-2009 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சங்க செயலாளர் வெங்கடேசனிடம் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 76 இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, அந்த பணத்தை சங்கத்தின் பல்வேறு உறுப்பினர்களின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து, அவர்களுக்கு தெரியாமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் வைப்புத்தொகையில் இருந்து கடன் பெற்றதாக கோப்புகள் தயார் செய்து, அவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான, வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ராமச்சந்திரன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட பிரிவு வாரியாக தீர்ப்பு அளித்தார்.

அதன்படி, 3 பிரிவுகளை சேர்த்து ஒரு ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம், 5 பிரிவுகளுக்கு 2 ஆண்டு ஜெயில் ரூ.5 ஆயிரம் அபராதம், 2 பிரிவுகளுக்கு 2 ஆண்டு ஜெயில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன்படி, மொத்தம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க தலைமை நீதிபதி எஸ்.ராமச்சந்திரன் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதா ஆஜரானார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தூய்மை பணி தீவிரம்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தூய்மை பணி தீவிரம்

ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிற்கிணங்க, மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இன்று (பிப்.25ம் தேதி) முதல் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களில் குழு தூய்மை பணி தலா 60 பணியாளர்களை கொண்டு இன்று (25ம் தேதி) முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் மண்டலத்திற்கு 2 வார்டுகள் என்ற அடிப்படையில் வாரத்திற்கு 8 வார்டுகள் சுத்தம் செய்யப்படுகிறது.

இந்த பணி 60 வார்டுகளிலும் மேற்கொள்ளும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, 24, 30, 36, 52 ஆகிய வார்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஈரோடு மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதாரத்தை ஊக்குவிப்பது, நோய் பரவுவதை குறைப்பது, சுத்தமான சூழலை பராமரிப்பது, சுகாதார நிலையை மேம்படுத்துவது என்பதன் அடிப்படையில் குழு தூய்மைப் பணி செய்யப்படுகிறது.

பொதுமக்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வீட்டிற்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். மேலும், தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை வியாபாரிகளும், மக்களும் தவிர்க்க வேண்டும்.

குப்பைகளை தெருவில் வீசுவதை தவிர்த்து நகரம் சுத்தமாக வைத்துகொள்ள மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளார்.
மும்மொழி கல்வி கொள்கையை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

மும்மொழி கல்வி கொள்கையை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையைக் கண்டித்து ஈரோட்டில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்த்து தி.மு.க.வினர் தமிழக முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு காந்திஜி ரோடு ஜவான் பவன் அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி, தமிழ்நாடு மாணவர் இயக்க கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மாநகர் திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம், ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ் , மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு, பொ.இராமச்சந்திரன், தலைமை பேச்சாளர் இளையகோபால், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரளைராசு, மாநகர மாணவரணி அமைப்பாளர் என்.ஸ்ரீதர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: இன்று விடுமுறை எடுத்து கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்!

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: இன்று விடுமுறை எடுத்து கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்!

ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ) சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினை சேர்ந்த அரசு ஊழியர்கள் தரையில் அமர்ந்தபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று விடுமுறை எடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.