வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு விழா. SDCBA தலைவர் இமயவர்மபன் மாண்பமை பொருந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு நேரில் அழைப்பு.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு விழா. SDCBA தலைவர் இமயவர்மபன் மாண்பமை பொருந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு நேரில் அழைப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு விழா. SDCBA தலைவர்  இமயவர்மபன் மாண்பமை பொருந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி  அவர்களுக்கு நேரில் அழைப்பு.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு சேலத்தில் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புகள் அனைத்தும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் தலைமையிலான நிர்வாகிகள் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி உட்பட சார்பு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ்களை கொடுத்து வரவேற்று வருகின்றனர். 
இந்த நிலையில் SDCBA தலைவர் இமயவர்மன் தலைமையில், சங்க நிர்வாகிகள் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு .சதாசிவம் அவர்களை அவர் இல்லத்தில் நேரில் சந்தித்து, சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழாவிற்க்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் குற்றவியல் சங்கத்தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமையில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி , மாண்பமை பொருந்திய  திரு.மகாதேவன் அவர்களை சங்கத்திற்கு பக்க துனையாக இருக்கும் நல்ல உள்ளத்தின் உதவியுடன் திருச்சியில் சந்தித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா நிகழ்ச்சிக்கு  அழைப்பு விடுத்தனர்.  போற்றுதலுக்குரிய மாண்பமை பொருந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. மகாதேவன் அவர்களும் பொன்விழா ஆண்டில் கலந்து கொள்வதாக  உறுதியளித்தார். அப்போது சங்க செயலாளர் முருகன், பொருளாளர் கண்ணன்,  துனைச்செயலாளர் இரத்தினவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர் சோழன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஈரோடு போலீஸ்காரர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

ஈரோடு போலீஸ்காரர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருபவர் பார்த்திபன் (வயது 33). இவர் அங்குள்ள ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டுவிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டதால் வெளி மாவட்ட போலீசார் உள்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், ஈரோட்டில் இருந்து பார்த்திபனும் கோவை சென்று, ஆலாந்துறை அருகே உள்ள மத்வராயபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அவர் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே, சம்பவத்தன்று போலீஸ்காரர் பார்த்திபன் திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனே, அவரை அருகில் இருந்த போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பார்த்திபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பார்த்திபனின் மாமியாருக்கு இதய கோளாறு இருந்ததாக தெரிகிறது. குடும்பத்தை பார்க்கவும், மாமியாரின் மருத்துவ சிகிச்சைக்கு செல்லவும் பார்த்திபன் விடுப்பு கேட்டு இருந்ததாக தெரிகிறது.

ஆனால், விடுப்பு கிடைக்காமல் கோவையில் 3 நாள் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி கார் வசதி அறிமுகம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி கார் வசதி அறிமுகம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை கொண்டு செல்ல போதிய வசதி இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணை அவருடைய மகள் தூக்கிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் நோயாளிகளை கொண்டு செல்ல போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக, தனியார் நிறுவனம் மூலம் பேட்டரி கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்லலாம். நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவு, பிற வார்டுகள், புதிய கட்டிடத்தில் சிகிச்சை அறைகளுக்கும் அழைத்து செல்ல இந்த வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. நடந்து செல்ல இயலாத நோயாளிகள், அவருடன் வரும் ஒருவரும் அனுமதிக்கப்படுவர். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி அருகே வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

கோபி அருகே வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் அருகே உள்ள சந்திராபுரம் தோட்டத்தில் ஒரு வீட்டில் குடியிருந்து வருபவர் பரமேஸ்வரன். விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 64). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணம் ஆகி டி.என். பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி சென்னிமலையில் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். பரமேஸ்வரன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். சரஸ்வதி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது , அதிகாலை 3.30 மணியளவில் சரஸ்வதி வீட்டிற்குள் நுழைந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சரஸ்வதி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றார்.

பின்னர் அந்த நபர் திடீரென சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலிக்கொடியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால், திடுக்கிட்டு எழுந்த சரஸ்வதி திருடன், திருடன் என கத்தினார். அவரது சத்தம் கேட்டு விழித்த பரமேஸ்வரன் திருடனை பிடிக்க ஓடினார். ஆனால் அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு: மொடக்குறிச்சி அருகே சாமிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ரூ.13 ஆயிரத்துக்கு ஏலம்

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே சாமிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ரூ.13 ஆயிரத்துக்கு ஏலம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள விளக்கேத்தியில் புகழ்பெற்ற ஸ்ரீ பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி சாமிக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம், நாணயம் போன்றவை ஏலத்தில் விடுவது வழக்கம்.

இதனை தொடர்ந்து, இந்தாண்டு நடைபெற்ற மகாசிவராத்திரி பண்டிகையையொட்டி பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோவிலில் ஈஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சாமிக்கு சிவராத்திரி அன்று பயன்படுத்திய எலுமிச்சை பழம், சாமி நெற்றியில் வைக்கப்பட்ட வெள்ளி நாணயம், கையில் போடப்பட்ட வெள்ளி மோதிரம் ஆகியவை ஏலத்தில் விடப்பட்டது. 

இதில், தங்கராஜ் என்பவர் ஒரு எலுமிச்சை பழத்தை 13 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், மொடக்குறிச்சியை சேர்ந்த ரவிக்குமார், பானுபிரியா தம்பதியினர் வெள்ளி நாணயத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கும், இதே போன்று வெள்ளி மோதிரத்தை அறச்சலூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் 43 ஆயிரத்து 100 ரூபாயும் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர்.

இதற்கு, முன்னதாக சாமிக்கு பயன்படுத்திய மூன்று பொருட்களையும் ஏலத்தில் எடுக்க ஆரம்ப விலையில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு பொருட்களை ஏலத்தில் எடுத்து சாமியை வணங்கி சென்றனர். ஏலத்தில் எடுக்கப்படும் பொருட்களை வீட்டில் சாமி அறை, தொழில் செய்யும் இடம் ஆகியவற்றில் வைக்கும் போது வீட்டில் ஐஸ்வரியம் கூடும், ஆரோக்கியம் அதிகரிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சேலம் ஜான்சன் நகர் மூன்றாவது கிழக்கு தெரு அங்காளம்மன் கோவில் விவகாரம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மேல் முறையீடு செய்ய திட்டம்.

சேலம் ஜான்சன் நகர் மூன்றாவது கிழக்கு தெரு அங்காளம்மன் கோவில் விவகாரம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மேல் முறையீடு செய்ய திட்டம்.

  
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஜான்சன் நகர் மூன்றாவது கிழக்கு தெரு அங்காளம்மன் கோவில் விவகாரம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மேல் முறையீடு செய்ய திட்டம். 

சேலம் மாநகரம் ஜான்சன் பேட்டையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளம்மன் ஆலயம் 3-வது கிழக்குத் தெருவில் உள்ளதுஉள்ளது. விழா நடப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் இந்திராணி ஆகிய இரண்டு தரப்பினர் இடையே கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிரச்சனை இருந்து வருகிறது. 
பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை கோவிலை திறந்து விழா நடத்திக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் பிரகாஷ் என்பவர் தரப்பிற்கு  அனுமதி அளித்திருந்தது. ஆனால் காவல்துறையினர், வட்டாட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை உதாசீனப்படுத்தி மாசி திருவிழாவிற்காக நேற்று முன்தினம் அதாவது 26 ஆம் தேதி திறக்காமல் 27 - ஆம் தேதி 
சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது, பிரகாஷ் தரப்பினர் கோவிலை திறக்க விடாமல் தடுத்ததால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனை அடுத்து மனுதாரர் பிரகாஷ் தரப்பினருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் இன்று அதிகாலை காவல்துறையினர் கோவிலை திறந்ததோடு மட்டுமல்லாமல், வலுக்கட்டாயமாக ஒவ்வொருவரின் இல்லத்திற்கும் சென்று வழிபாடு நடத்த அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து மனுதாரர் பிரகாஷ் தரப்பினர் கூறுகையில், மகா சிவராத்திரி பூஜைக்காக அன்றைய தினம் காலை திறக்கப்பட வேண்டிய கோவில் திறக்கப்படாமல் இன்று காலை அதாவது 28ஆம் தேதி தங்களுக்கு தெரியாமல் திறந்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்த செயலாகவும் இதனால் தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் கோவிலை திறந்து உள்ளனர் என்று குற்றம் சாட்டிய அவர்கள், விழாவின் முக்கிய நிகழ்வான சிவராத்திரி பூஜை அதனை தொடர்ந்து மயான கொள்ளை இவை அனைத்துமே முடிந்த பிறகு இன்று சிறந்தது எந்த விதத்தில் நியாயம் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும் மாறாக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவலகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். 
திருவிழாவை முடிந்த பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் விழாமல் முடிந்த பிறகு கோவிலை திறந்ததுடன் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தது வேடிக்கையாக இருந்தது.