திங்கள், 3 மார்ச், 2025

தஞ்சையில் தனி வட்டாட்சியராக பணியாற்றி விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை மீட்டு தர வேண்டும். தனித் தாசில்தாரின் மனைவி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் தனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது கண்ணீர் மல்க புகார்.

தஞ்சையில் தனி வட்டாட்சியராக பணியாற்றி விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை மீட்டு தர வேண்டும். தனித் தாசில்தாரின் மனைவி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் தனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது கண்ணீர் மல்க புகார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தஞ்சையில் தனி வட்டாட்சியராக பணியாற்றி விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை மீட்டு தர வேண்டும். தனித் தாசில்தாரின் மனைவி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் தனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது கண்ணீர் மல்க புகார். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமித்ரா. இவருக்கும் அவரது உறவினரின் மகன் செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. ஜெயமித்ராவின் கணவரான செந்தில்குமார் முத்திரைத்துறை தனி வட்டாட்சியராக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் தற்பொழுது ஜெயமித்ரா 7 மாத கர்ப்பிணி ஆகவும் இருந்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த செந்தில்குமார் வேகத்தடையில் தூக்கி வீசப்பட்டதில் கழுத்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏழு மதத்தை கர்ப்பிணியாக உள்ள ஜெயமித்ரா தற்பொழுது தனது தாய் வீட்டில் உள்ள நிலையில் கணவரின் விபத்து குறித்து தகவல் அறிந்து மதுரை சென்று விசாரித்தபோது, அரசு துறை அதிகாரியான தனது கணவரின் அரசு பலன்கள் அனைத்தும் தங்கை மற்றும் தங்கையின் கணவர் ஆகியோருக்கு சென்று அடைய வேண்டும் என்பதற்காக அவரது ஏடிஎம் கார்டு மற்றும் அவரது மாத ஊதியத்தையும் தனக்கு வழங்காமல் அபகரித்து தனது கணவரின் அரசு பலன்கள் அனைத்தையும் அபகரிக்க முயற்சிப்பதாக கண்ணீர் மல்க சேலம் மாவட்ட ஆட்சியர் திருமதி பிருந்தா தேவி அவர்களிடம் புகார் மனு அளித்தார்.
 இதுகுறித்து ஜெயமித்ரா நம்மிடையே கூறுகையில் தனது கணவரின் தங்கை ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் செந்தில்வேல் இருவரும் தான் மூன்று லட்சம் ரூபாய் செலவழித்து தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று குற்றம் சாட்டிய அவர் தங்களது நான் எந்த வரதட்சணையும் கொடுக்கவில்லை தற்பொழுது நீ வரதட்சணையாக 25 லட்சம் ரூபாய் பணமும் உன்னுடைய நகைகள் ஐந்து சவரன் மற்றும் தனது கணவரின் கார் எடுத்துக் கொண்டு வந்தால் உன் கணவரை பார்க்க விடுவேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இல்லையெனில் கணவரை பார்க்கவே விடமாட்டோம் என மிரட்டி வருகிறார்கள் என்று தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் கண்ணீர் மல்க தெரிவித்தார். 
மேலும் தனது கணவர் தங்கையின் கணவர் செந்தில்வேல் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும் அந்த அதிகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து தாங்கள் எங்கு புகார் மனு கொடுத்தாலும் தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை எனவே தாயுளம் கொண்ட சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தனது கணவரை தன்னிடம் மீட்டு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக முதலமைச்சரின் 72 ஆவது பிறந்தநாள் விழா... பரிசு பொருள் தீர்ந்த பிறகும் வந்த பொதுமக்களுக்கு அதற்கான தொகையை வழங்கி மகிழ்ச்சியை ஏற்படுத்திய திமுக ஒன்றிய செயலாளர்.

தமிழக முதலமைச்சரின் 72 ஆவது பிறந்தநாள் விழா... பரிசு பொருள் தீர்ந்த பிறகும் வந்த பொதுமக்களுக்கு அதற்கான தொகையை வழங்கி மகிழ்ச்சியை ஏற்படுத்திய திமுக ஒன்றிய செயலாளர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முதலமைச்சரின் 72 ஆவது பிறந்தநாள் விழா... பரிசு பொருள் தீர்ந்த பிறகும் வந்த பொதுமக்களுக்கு அதற்கான தொகையை வழங்கி மகிழ்ச்சியை ஏற்படுத்திய திமுக ஒன்றிய செயலாளர். 

திராவிட மாடலின் நாயகரும், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அந்த கட்சியினரால் ஏழை எளியவர்களுக்கு நல உதவிகளை வழங்கி எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி 500 ஏழை எளியவர்களுக்கு பித்தளையால் ஆன குத்துவிளக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் உடையாபட்டி மாரியம்மன் கோவில் திடல் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் மற்றும்  சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு பித்தளையால் ஆன குத்துவிளக்குகளை வழங்கி பாராட்ட தெரிவித்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த நிர்ணயிக்கப்பட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில் குத்து விளக்கு தீர்ந்த நிலையில், சற்றும் தயங்காத சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் குத்துவிளக்கு உண்டான தொகையினை எஞ்சியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்வு விழாவில் கலந்து கொண்ட அனைவரிடையயும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.

ஞாயிறு, 2 மார்ச், 2025

பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மனைவி உயிரிழந்தார். கணவன், மகன் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா சின்னகாவூர் பி.என்.பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45). இவருடைய மனைவி வனிதா (41). மகன் பிரசித். இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அம்மாபேட்டை- அந்தியூர் சாலையில் பூனாச்சி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் வனிதா படுகாயம் அடைந்தார். சிவகுமார், அவருடைய மகன் பிரசித் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வனிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், படுகாயமடைந்த சிவகுமார், பிரசித் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை: மரக்கிளையை முறித்து தின்றது

அந்தியூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை: மரக்கிளையை முறித்து தின்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள மலைக்கிராமம் துருசனாம்பாளையம். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தின் வழியாக மைசூர் சாலை செல்கிறது.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை நேற்று மைசூர் ரோட்டுக்கு வந்தது. பின்னர் சாலையோரம் இருந்த மரத்தின் கிளையை முறித்து காட்டு யானை தின்றது.

இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களு டைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி கொண்டனர். மேலும் சிலர் தங்களுடைய செல்போனில் காட்டு யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

சிறிது நேரம் வரை மரக்கிளையை தின்று கொண்டிருந்த யானை பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற ஈரோடு ஆணையாளருக்கு வாழ்த்து

மயிலாடுதுறை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற ஈரோடு ஆணையாளருக்கு வாழ்த்து

மயிலாடுதுறை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற ஈரோடு ஆணையாளருக்கு மேயர் நாகரத்தினம் வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பு வகித்து வந்த எச்.எஸ்.ஸ்ரீகாந்த் பதவி உயர்வு பெற்று மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, நேற்று ஈரோடு மாநகராட்சியில் அவருக்கு வாழ்த்து கூறும் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம் மலர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதுபோல், மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
சென்னிமலை அருகே வீடு புகுந்து வனச்சரக அலுவலரின் தாயிடம் மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகை பறிப்பு

சென்னிமலை அருகே வீடு புகுந்து வனச்சரக அலுவலரின் தாயிடம் மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகை பறிப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள 1010 நெசவாளர் காலனி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு சந்தனமர கிடங்கில் வனச்சரக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் ஜெயமணி (வயது 75). இவர் 1010 நெசவாளர் காலனியில் உள்ள வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மதியம் ஜெயமணி வீட்டை திறந்து வைத்தபடி படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் ஜெயமணி முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பராமரிப்பு பணி: ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

பராமரிப்பு பணி: ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக, ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் வரதநல்லூரில் உள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளது. எனவே 3ம் தேதி (திங்கட்கிழமை) வரை குடிநீர் வினியோக பணிகள் பாதிக்கப்படும்.

பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பராமரிப்பு பணி முடிந்ததும் உடனடியாக சீரான குடிநீர் வினியோகம் தொடங்கும். தற்போது ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.