வெள்ளி, 28 மார்ச், 2025

ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜாதா பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜாதா பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.ஜவகர் சிபிசிஐடி வடக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக திருப்பூர் சட்டம்- ஒழுங்கு ஆணையாளராக பணியாற்றி வந்த ஏ.சுஜாதா நியமிக்கப்பட்டார். இவர், இன்று (மார்ச் 28) ஈரோடு மாவட்டத்தின் 30வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சுஜாதாவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் பஞ்சாப் முதல்வரை கண்டித்து சேலத்தில் தமிழக இயற்கை விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் பஞ்சாப் முதல்வரை கண்டித்து சேலத்தில் தமிழக இயற்கை விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் பஞ்சாப் முதல்வரை கண்டித்து சேலத்தில் தமிழக இயற்கை விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம். 

சேலம கோட்டைமைதானத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சம்யுத் த கிசான் மோர்சா அரசியல் சார்பற்றது ( skM)NP விவசாயிகள் சங்கம்சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொண்டலாம்பட்டி எம்தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகளை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்து அச்சுறுத்தி வரும் முதலமைச்சர் பகவத் தாமான் அரசைவன்மையாக கண்டிக்கிறோம் நிபந்தனின்றி விடுதலை செய்திடு, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் கொண்டுவர வேண்டியும், எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரை உடனே நிறைவேற்று, 120 நாட்கள் கடந்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடரும் ஜக் ஜித்சிங்டல்  லெவால் உயிரை காப்பாற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்லமுத்து உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்  கொண்டனர்.

வியாழன், 27 மார்ச், 2025

சேலத்தைச் சேர்ந்த வேங்கை அய்யனார் என்ற தொழிலதிபர் தயாரித்து நடித்துள்ள வெட்டு திரைப்படம் இன்று வெளியானது. திரையரங்கு முன்பு தயாரிப்பாளரின் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்.

சேலத்தைச் சேர்ந்த வேங்கை அய்யனார் என்ற தொழிலதிபர் தயாரித்து நடித்துள்ள வெட்டு திரைப்படம் இன்று வெளியானது. திரையரங்கு முன்பு தயாரிப்பாளரின் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தைச் சேர்ந்த வேங்கை அய்யனார் என்ற தொழிலதிபர் தயாரித்து நடித்துள்ள வெட்டு திரைப்படம் இன்று வெளியானது. திரையரங்கு முன்பு தயாரிப்பாளரின் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம். 

சேலம் மாவட்டம் மல்லுரை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் வேங்கை அய்யனார். இவர் ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பில் அறிமுக நாயகனாக ராக்கின் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வந்து உள்ள வெட்டு திரைப்படம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஐந்து தியேட்டரில் வெளியானது. இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளரும் புதுமுக நாயகனும் திரையரங்கிற்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த சேலம் வேங்கை அய்யனார் ஆதரவாளர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவையும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த வேங்கை அய்யனார் ரசிகர்களுடன் திரையரங்கினுள் சென்று தான் இயக்கிய திரைப்படத்தை பார்த்து ரசித்தார். இதன் காரணமாக 5 திரையரங்க பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹண்ட்லூம் டெக்னாலஜி 65 ஆவது ஆண்டு விளையாட்டு விழா. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு.

சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹண்ட்லூம் டெக்னாலஜி 65 ஆவது ஆண்டு விளையாட்டு விழா. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி 65 ஆவது ஆண்டு விளையாட்டு விழா. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு. 

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி கல்லூரியில் 65 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் டாக்டர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சரவணா மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் பிரபாகரன் தர்மேந்திரா லோகேஷ் பி டெக் துணைத் தலைவர் பாலாஜி மற்றும் உடற்கல்வி இயக்குனர் வடிவேல் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 1500 மீட்டர் 800 மீட்டர் 400 மீட்டர் 100 மீட்டர் குண்டு எறிதல் வட்டி எறிதல் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 
முன்னதாக ஐஏஎஸ் டி விளையாட்டு மாணாக்கர்கள் ஓட்டமாக வந்து விளையாட்டு ஜோதியினை ஏற்றி வைத்தனர் தொடர்ந்து விளையாட்டு விழாவிற்கான உறுதி மொழியும் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். ரிஜிஸ்டர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. திடீர் ஆய்வு

கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. திடீர் ஆய்வு

கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்கு மார் நேற்று திடீரென வந்தார். பின்னர் அவர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முக்கிய திருட்டு வழக்குகள் மற்றும் கொலை வழக்குகள் குறித்தும், கண்டுபி டிக்க முடியாத வழக்குகள் குறித்தும் கேட்டு அறிந்தார். மேலும் அங்கிருந்த பதிவேடுக ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கோபி போலீஸ் துணை சூப்பி ரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
ஈரோட்டில் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் கைதி தப்பி ஓட்டம்

ஈரோட்டில் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் கைதி தப்பி ஓட்டம்

கர்நாடகா மாநிலம் பெங்களூர், ரிங் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகன் ரோபிகான் (வயது 35). இவரை செல்போன் டவர் ஒயர்களை துண்டித்து திருடிய புகாரில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு போலீசார் கைது செய்தனர்.
பின்னர், மருத்துவ பரிசோதனைக்கு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர். பின் ஈரோடு விரைவு நீதிமன்றம்-1ல் ஆஜர்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 7ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பெருந்துறை கிளை சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். வழியில் பெருந்துறை - ஈரோடு சாலையில் உள்ள ஒரு கடையில் ரோபிகானை சாப்பிட வைத்துள்ளனர்.

அப்போது, கை கழுவ சென்ற ரோபிகான் தப்பி ஓடிவிட்டார். இதனால் பதறிப்போன போலீசார், பெருந்துறை பகுதியில் பல்வேறு இடங்களிலும் ரோபிகானை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து, ரோபிகானை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார், தப்பி ஓடிய ரோபிகானை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் ஈரோடு, பெருந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 27) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, அருகாமையில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள், பந்தல், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பு சுவர்களை அமைத்தல், மருத்துவ குழுகள், தீத்தடுப்பு வாகனம் ஏற்பாடு செய்தல், தடையில்லா மின்சார வசதி, தரைதளத்தினை தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, திருவிழா நல்ல முறையில் நடைபெற ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் இரா.மேனகா, உதவி ஆணையர் சுகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் முத்தரசு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.