வியாழன், 3 ஏப்ரல், 2025

சேலம் ஏற்காட்டில் தொடரும் மழை. மலைப்பாதையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு. சுற்றுலா பயணிகள் கடும் அவதி.

சேலம் ஏற்காட்டில் தொடரும் மழை. மலைப்பாதையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு. சுற்றுலா பயணிகள் கடும் அவதி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஏற்காட்டில் தொடரும் மழை. மலைப்பாதையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு. சுற்றுலா பயணிகள் கடும் அவதி.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் எட்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக மலைப்பாதையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் வரைந்து வந்து  மலைப்பாதையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதன் காரணமாக ஏற்காட்டிற்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகள் பெரிதும் நிம்மதி அடைந்தனர் என்றால் அது மிகை அல்ல. 
கந்த சஷ்டியை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி அருள்மிகு பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்.

கந்த சஷ்டியை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி அருள்மிகு பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கந்த சஷ்டியை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி அருள்மிகு பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம். 

தமிழ் கடவுள் ஆன முருக பக்தர்கள் மாதந்தோறும் சஷ்டி அன்று விரதம் இருந்து பழனி உள்ளிட்ட எம்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டு வருவது வழக்கம். அதன்படி இன்று சஷ்டி என்பதால் முருக பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு அருகாமையில் உள்ள சிவாலயங்களுக்கும் தனிப்பட்ட முறையில் உள்ள முருகன் ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று காலை ஆறு மணிக்கு திருக்கோவில்  நடை திறக்கப்பட்டு மூலவரான இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு பால் இளநீர் சந்தனம் மஞ்சள் மற்றும் திருமஞ்சனம் உள்ளிட்ட மங்களப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கோவில் நிறுவனர் பாபு சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் இந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளை மேற்கொண்டனர். பின்னர் எம்பெருமான் தமிழ் கடவுள் ஆன ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளில் பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான முருகபக்தர்கள் கலந்து கொண்டு பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணியின் அருள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்ட பக்தகோடிகளுக்கு திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

புதன், 2 ஏப்ரல், 2025

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தை!

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள், மான்கள், யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகிறது..
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி வெளியேறியது. பின்னர் சிறுத்தைப்புலி திம்பம் மலைப்பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள சாலையோர தடுப்பு சுவரில் சுற்றித்திரிந்தது.

அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தையை நேரில் பார்த்து அச்சமடைந்தனர். இதனால் வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்திக்கொண்டு, வாகனங்களில் இருந்தபடியே சிறுத்தைப்புலியை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, சிறிது தூரம் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது. இந்த காட்சி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி ரூ.35 லட்சம் மோசடி: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி ரூ.35 லட்சம் மோசடி: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

ஈரோடு மாவட்டம் கிளியம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் , நேற்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நான் முள்ளாம்பரப்பு பகுதியில் டி.வி. எலக்ட்ரானிக்ஸ் பழுது நீக்கும் மையம் 11 ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன். இதற்காக கடந்த 2017-ம் ஆண்டில் ஜிஎஸ்டி எண் பெற்றேன்.

இதைத்தொடர்ந்து, ஏற்பட்ட இழப்பு காரணமாக தொழிலை நடத்த முடியாமல் 2021ம் ஆண்டு தனது நிறுவனத்தை மூடி விட்டு வேறு வேலைக்கு சென்று விட்டேன். மேலும், ஜிஎஸ்டி எண்ணை ரத்து செய்யுமாறு ஆடிட்டர் மூலம் அப்போதே விண்ணப்பம் செய்தேன்.

இந்த நிலையில், வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஜிஎஸ்டி நிலுவை தொகையாக ரூ.35 லட்சம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் எனக்கு நோட்டீஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தேன்.

அப்போது, 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 5 மாதங்களில் ஜவுளி, பிளாஸ்டிக், இரும்பு வணிகம் என 6 நிறுவனங்களில் தனது ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி ரூ.1 கோடியே 80 லட்சம் அளவிற்கு வணிகம் நடந்திருப்பது தெரியவந்தது.

ஜிஎஸ்டி கணக்கின் பயனாளர் பெயர், கடவுச்சொல். இ மெயில், அதற்கான செல்போன் இணைப்பு எண் என அனைத்தும் ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் பயன்படுத்தி வந்ததும், ஜிஎஸ்டி ரத்து செய்ய அவர் மூலம் விண்ணப்பித்த போது, மோசடியாக அந்த எண்ணை, 6 நிறுவனங்களுக்கு அவர் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.

எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.