செவ்வாய், 15 ஏப்ரல், 2025

ஈரோட்டில் 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் முத்துசாமி வழங்கினார்!

ஈரோட்டில் 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் முத்துசாமி வழங்கினார்!

ஈரோட்டில் 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (ஏப்ரல் 14) வழங்கினார்.

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் சமத்துவ நாள் விழா நேற்று (ஏப்ரல் 14) நடைபெற்றது. இந்த விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள். தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருந்தாளுநர் போட்டி தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்!

மருந்தாளுநர் போட்டி தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்!

மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் போட்டித் தேர்வுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் பணிக்காலியிட (Pharmacist) போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.

இப்பணிக்காலியிடத்திற்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இவ்விணையவழிப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமிருப்பின் தங்களது விவரங்களை https://forms.gle/HMwR3ajGGmYNxWTr9 என்ற கூகுள் ஃபார்ம் லிங்கில் பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
சிறு கனிமங்கள் மீதான நில வரியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக முழுவதும் கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சிறு கனிமங்கள் மீதான நில வரியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக முழுவதும் கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சேலம்.  
S.K. சுரேஷ் பாபு.

சிறு கனிமங்கள் மீதான நில வரியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக முழுவதும் கிரசர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்

 தமிழகத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கிரஷர் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறு கனிமங்களின் மீது நிலவரி விதிக்கப்பட்டுள்ளதால் கனிமத்தின் மீதான வரி 180 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எம்சன் மற்றும் ஜல்லி உற்பத்தியாளர்கள் வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி பலமுறை அரசுக்கு வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காததால் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 
இது தொடர்பாக சேலம் மாவட்டத்தில் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழக அரசின் இந்த வரி உயர்வாள் சல்லி மற்றும் எம்சன் ஒரு யூனிட் ஒரு யூனிட்டுக்கு மேலும் 1500 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இதனால் அரசு மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள்  மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாக நேரிடும் என தெரிவித்தனர். கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழகம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகும் எனவும்,  200 முதல் 300 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

சட்ட மாமேதையின் 134-வது பிறந்தநாளில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் அண்ணல் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் உறுதிமொழி ஏற்றும் மரியாதை.

சட்ட மாமேதையின் 134-வது பிறந்தநாளில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் அண்ணல் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் உறுதிமொழி ஏற்றும் மரியாதை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சட்ட மாமேதையின் 134-வது பிறந்தநாளில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் அண்ணல் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் உறுதிமொழி ஏற்றும் மரியாதை.

என் உரிமை என்பது நான் பிறக்கும் போதே என்னோடு வந்தது. அந்த உரிமையை மதிக்காத எந்ந ஒரு அமைப்பிலும் நான் இருக்கப்போவதில்லை என்று தனது மத்திய அமைச்சர் பதவியை கூட துச்சமென தூக்கி எறிந்த பாபாசாகிப் அண்ணல் அம்பேத்காரின் 134-வது பிறந்த நாளன்று தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் நாகா. அரவிந்தன், புரட்சியாளரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆதரவாளர்கள் என திரளானோர கலந்து கொண்டனர்.
சேலம் தாரமங்கலம் அருகே அமைக்கப்பட்டுள்ள எம் சாண்ட் மணல் சேமிப்புக்களங்கால் 1500 மணல் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு. எம் சாண்ட் சேமிப்புக் கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து மனு வழங்கப்பதற்காக வந்திருந்தனர். சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் கண்ணையன் சந்திரன் பழனிசாமி மற்றும் செல்வம் உட்பட ஏராளமான அளித்திருந்த புகார் மனுவில், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த சங்கத்தில் தாரமங்கலத்தைச் சார்ந்த இரண்டு சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கடந்த ஒன்றரை வருடங்களாக மணல் குவாரிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதை பயன்படுத்தி 2000 ரூபாய்க்கு விற்ற எம் சாண்டை கிரஷர் உரிமையாளர்கள் எம்சாண்ட் மணலை 5000 ரூபாய்க்கும் பிசென்ட் மணலை 6 ஆயிரம் ரூபாய்க்கும் வொர்க்கின்றனர். தீவட்டி பட்டியில் சூர்யா ப்ளூ மெட்டல் கிரஷர் நடத்திவரும் டி பி எஸ் சேகர் என்பவர் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் ஹோண்டா கம்பெனிக்கு அருகில் எம் சாண்ட் சேமிப்புக் கிடங்கு அமைத்துள்ளார். தாரமங்கலத்தில் சுமார் 1500 லாரி மற்றும் மஸ்தான் உரிமையாளர்கள் எம்சாண்ட் ஜல்லி சப்ளை செய்து குடும்ப ஜீவனம் செய்து வருகிறார்கள். மேற்கண்ட இடத்தில் நாங்கள் நேரடியாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறியதாகவும் ஆனால் அதன் உரிமையாளர் தங்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுகிறார் என்றும் இதனால் எங்களது வாழ்வாதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். எனவே சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எங்கள் மீது கருணை கூர்ந்து சூர்யா ப்ளூ மெட்டல்ஸ் கிரஷர் உரிமையாளர் டி பி எஸ் சேகர் அமைத்திருக்கும் எம் சாண்ட் சேமிப்பு கலங்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டுமானாலும் எங்களுக்கு குறையும் மிரட்டல் விடுத்த டி பி எஸ் சேகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கி உதவி புரியுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனதில் குறிப்பிட்டிருந்தனர்.
சேலம் அருகே 1.84 ஏக்கர் நிலம் போலியாவணன் மூலம் பத்திர பதிவு செய்து அபகரிப்பு. நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர பாதிக்கப்பட்டவர் கோரிக்கை.

சேலம் மாவட்டம் ஓமலூர் பவளத்தானூர் பகுதியை சார்ந்தவர்கள் சண்முகம் கருப்பாயி அம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு தெச விளக்கு கிராமத்தில் 1.84 ஏக்க நிலம் உள்ளது. இந்த நிலம் தற்பொழுதும் கருப்பாயி அம்மாள் அனுபவத்தில் உள்ளது. இந்த நிலையில் கார்த்திக் மற்றும் முருகன் என்ற இருவர் தாரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதியில் போலி ஆவணம் பதிவு செய்து நிலத்தை அபகரித்ததோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நிலத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து செய்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கருப்பாயம்மாள் மிகுந்த மன உளைச்சலும் மன வேதனையும் அடைந்து அடைந்ததோடு மட்டுமல்லாமல் மிகுந்த உடல் நல பாதிப்புக்கும் உள்ளாகி உள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட இருவரிடமும் கேட்டபோது இந்த நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என்றும் மேல் நடவடிக்கை எடுக்க முயற்சித்தால் தனது குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனை எடுத்து பாதிக்கப்பட்ட கருப்பாயம்மாள் தனது உறவினர்களுடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக வந்திருந்தார். அந்த மனுவில் போலி  ஆவணங்கள் மூலம் தனக்கு சொந்தமான 1.84 ஏக்கர் நிலத்தை போலி பத்திர பதிவு செய்து அதனை வெறுக்க முயற்சித்த கார்த்திக் மற்றும் முருகன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திங்கள், 14 ஏப்ரல், 2025

சோனா கல்வி நிறுவனங்களில் பிரமாண்ட விளையாட்டு விழா 2025

சோனா கல்வி நிறுவனங்களில் பிரமாண்ட விளையாட்டு விழா 2025

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சோனா கல்வி நிறுவனங்களில் பிரமாண்ட விளையாட்டு விழா 2025

சேலம் தியாகராஜர் பாலிடெக்னீக் சோனா தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது. சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா தலைமை வகித்தார். முன்னதாக கல்லூரியின் விளையாட்டு துறை இயக்குனர்கள் சௌந்தராஜன், ஸ்ரீதரன், அனிதா ஆகியோர் இந்த ஆண்டிற்கான விளையாட்டு அறிக்கையை சமர்பித்தனர். விழாவில் முதன்மை விருந்தினராக இந்திய தேசிய கபடி அணியின் முன்னாள் உறுப்பினர் கணேசன், மற்றும் தமிழ்நாடு காவல் துறை துணை காவல் ஆய்வாளர் துர்காதேவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  
இதனைத் தொடர்ந்து சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா மற்றும்  சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
மண்டல, மாநில, அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான பழுதூக்குதல், சதுரங்கம், கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், பிரிவுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சூழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியில் பணிப்புரியும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 
இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் இயக்குனர் வீ.கார்த்திகேயன், முதல்வர்கள் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜீ.எம்.காதர்நவாஷ், ஏ.கனகராஜ்  மற்றும் இ.ஜெ.கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை விளையாட்டு துறை இயக்குனர்கள், சௌந்தராஜன், ஸ்ரீதரன், அனிதா உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.